திசநாயகத்தை விடுதலை செய்!

இலங்கை அரசே! தமிழர்கள் வாழ்வுரிமைக்காக பாடுபட்ட பத்திரிகையாளர் ஜே.எஸ். திசநாயகத்தை விடுதலை செய்! பத்திரிகை சுதந்திர பாதுகாப்புக் கூட்டம் நாள்: செப்டம்பர் 8, 2009, செவ்வாய் காலை 10 மணி இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், அரசினர் ஓமந்தூரார் தோட்டம், சென்னை – 2 பங்கேற்பு : திரு. இரா.ஜவஹர், மூத்த பத்திரிகையாளர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், தமுஎகச திரு. பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம் திரு. ஆர். மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்கம் […]

Continue Reading

கருத்தரங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் நடத்தும் இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை சிறப்புக் கருத்தரங்கம் 17.8.2009, திங்கள்கிழமை மாலை 6 மணி ராஜா அண்ணாமலை மன்றம் பாரிமுனை, சென்னை – 1. இலங்கையில் LTTE உடனான போர் முடிந்துவிட்டது என ராஜபக்ஷே அரசு கூறினாலும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டம் தொடர்கிறது. வாழ்நாள் முழுவதும் பதுங்கு குழிகளில் ஒடுங்கி வாழ்ந்த அப்பாவித் தமிழர்கள் இன்றும் மரணத்தின் விளிம்பில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான ‘வதை’ முகாம்களில்தான்…. சர்வதேச செஞ்சிலுவைசங்கம் […]

Continue Reading

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல் – 2

இடம்: AICUF அரங்கம் – சென்னை நாள்: 26 ஜுன் 2009 வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது. பன்முக வாசிப்பு: பெயல் மணக்கும் போது /தொகுப்பாளர்: அ.மங்கை வ.ஐ.ச ஜெயபாலன் எனக்கு கவிதை முகம்/ அனார் செல்மா பிரியதர்சன் சூரியன் தனித்தலையும் […]

Continue Reading

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ முன்னெடுக்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி, தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது சாதி, இனம், மொழி, மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும் பண்டம், சந்தை, போர், மரணம் என்னும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என […]

Continue Reading

புதிய சிறுகதைத் தொகுப்பு

“ஒவ்வொரு கொலை விழும்போதும், ஒவ்வொரு குண்டுவீச்சு நிகழும்போதும், ஒரு பட்டினிச்சாவு நிகழும்போதும், நாடுகடத்தல் உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு அகதியைக் காணும்போதும் அவர்கள் குற்ற உணர்வுகளில் மூழ்கடிக்கப்படுகிறார்கள். அந்தக் குற்ற உணர்வே அவர்களை எழுத இடைவிடாமல் தூண்டிக்கொண்டிருக்கிறது. இந்தக் குற்ற உணர்வு அவர்களின் மரணம்வரை அவர்களைக் கைவிடாதிருக்கட்டும்!” திரு. முடுலிங்க (அநிச்ச), விலங்குப் பண்ணை (பவளமல்லி) , Cross Fire ( காலம்), ரம்ழான் (புதுவிசை), குண்டு டயானா (தீராநதி) , எம்.ஜி.ஆர். கொலைவழக்கு (எதுவரை), பரபாஸ் (காலம்), […]

Continue Reading

பன்னாட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: மெமோரியல் ஹால் நாள்: 08-04-2009 நேரம்: மாலை 3-6 மணி தோழர்களே! இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்தக் கோரியும் தமிழ்ப் பகுதிகளிலிருந்து படைகளை திரும்பப் பெற கோரியும் பன்னாட்டு அளவில் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். சர்வதேச அளவில் நமக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி பாசிச இலங்கை அரசு குறித்தும் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்தும் உலக அளவிலான மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் இயக்கங்கள், ஜனநாயக சக்திகள், […]

Continue Reading

நினைவு ஒன்றுகூடல்

05.04.2009 ஞாயிறு மதியம் 2.30 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை Wanstead Quaker Meeting House Bush Road London E11 3AU nearest tube : Leytonstone – Central Line ° நினைவு வெளியில் தோழர் பரா மாற்றுக்கருத்தும் எதிர்ப்பு இலக்கியமும் ° சிறுபான்மையினர் உரிமைகள், ஐனநாயகம், எதிர்காலம் தோழர் பரா நினைவு கலந்துரையாடல்  ° என் கமராவின் வழியே… அறிமுகம் : தமயந்தி ஒளியின் மொழியில் நாடகம் ° Twisted Things  […]

Continue Reading