களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை

யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிக் கிராமத்தில் பிறந்த புஷ்பராணி, ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கியவர். தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவு அமைப்பாளராக இருந்தவர். ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்ட வரலாறில் முதலாவதாகச் சிறைக்குச் சென்ற  இரு பெண் போராளிகளில் ஒருவர். புஷ்பராணி எழுதி, இம்மாதம் ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கும்  அகாலம் : ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள் நூலுக்கு கவிஞர் கருணாகரன் அளித்திருக்கும் […]

Continue Reading

வெள்ளைக்கொடி விவகாரம்

தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (லண்டன்) நடத்தும் நிகழ்வில் ‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணன் உரையாற்ற அழைக்கப்பட்டிருப்பது குறித்துப் பல்வேறுவிதமான கருத்துகள் தோழர்களால் Facebook லும் மின்னஞ்சல்களிலும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இது குறித்து எனது கருத்துகளையும் தோழர்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் குறுங்கட்டுரையின் நோக்கம். “நாங்கள் மாற்று செயற்பாட்டாளர்களுமல்ல, மாற்று உரையாடல்களை நடத்துவது தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் நோக்கமும் இல்லை ” எனத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் த.மொ.ச.செயற்பாட்டகம், ‘பல தரப்புகளும் பேசுவதற்குக் களம் அமைத்துக் கொடுப்பதே நோக்கம்’ என்று வெளிப்படையாக […]

Continue Reading

Warscapes in conversation with Shobasakthi

Warscapes: Do give us some political and personal context with regards to your novel Traitor. Shobasakthi: On July 25, 1983, the Sri Lankan government planned and killed thirty-five Tamil political prisoners at Welikade Prison, with eighteen other Tamil prisoners slaughtered a couple of days later.  The prison authorities were thoroughly complicit in the massacre even though […]

Continue Reading

கசகறணம்: பதிலும் எதிர்வினைகளும்

‘வல்லினம்’ இணைய இதழில் விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவல் குறித்துக் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்விக்கு நான் அளித்த பதில் பல தோழர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியிருக்கின்றது. தோழர்களின் பல்வேறு எதிர்வினைகள் Face bookல் பதிவு செய்யப்பட்ட தருணத்தில் நான் இந்தியாவில் இருந்ததால் என்னால் அந்த விவாதத்தில் பங்கெடுத்து எனது தரப்பை முன்வைக்க முடியாமல் போயிற்று. இப்போது பிரான்ஸ் திரும்பிவிட்டேன். தோழர்களின் எதிர்வினைகள் குறித்து இப்போது பேசிவிடலாம். தோழர்களின் பல்வேறு எதிர்வினைகள் வெவ்வேறு முகப் புத்தகங்களின் திரிகளிலே காணக் கிடைக்கின்றன. […]

Continue Reading

கப்டன்

மனுவேல் பொன்ராசாசாவிற்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்றோராம் வருடம் ஜனவரி மாதம் ‘கப்டன்’ பட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது. அந்தச் சம்பவம் பின்வருமாறு நிகழலாயிற்று: ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூறாம் வருடம் ஜுன் மாதம் யாழ்ப்பாணக் கோட்டை விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. கோட்டைக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர்கள் சிக்கியிருந்தார்கள். கோட்டைக்கான அனைத்து வழங்கல்களும் புலிகளால் துண்டிக்கப்பட்டன. சிறியரகக் ‘கிரேன்’களின் உதவியுடன் புலிகள் கோட்டை மதில்களில் ஏற முயன்றுகொண்டேயிருந்தார்கள். கடலிலிருந்து கோட்டைக்குள் படகில் செல்வதற்கான இரகசிய வழியொன்றுமிருந்தது. புலிகள் அந்த வழியால் […]

Continue Reading

யுத்தகால கவிதைகள்

யுத்தகாலத்தின் ஈழத்துக் கவிதைகள் உணர்ச்சி மயமானவை, அரசியல் தத்துவார்த்த ஆழமற்றவை என்கிற விமர்சனம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? யுத்தகால ஈழக் கவிதைகளின் தோற்றுவாய்க் காலமாக 1980களின் ஆரம்பத்தை நாம் குறித்துக்கொள்ளலாம். 1981ல் எம்.ஏ. நுஃமான் – முருகையன் மொழிபெயர்ப்பில் ‘பாலஸ்தீனக் கவிதைகள்‘ நூல் வெளியாகி பெருத்த அதிர்வுகளை உருவாக்குகிறது. இந்தக் காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான ஈழத்துக் கவிதைகள் பாலஸ்தீனக் கவிதைகளை அடியொற்றியும், அந்த மொழிபெயர்ப்பு மொழிநடையை உள்வாங்கியும் உருவாகின்றன. ‘பீனிக்ஸ்‘ பறவையைப் படிமமாக வைத்துமட்டும் நூறு கவிதைகள் […]

Continue Reading