கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

2014 ஜனவரி 3-4ம் தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையும் பெண்கள் சந்திப்பும் (சென்னை) இணைந்து நடந்திய பெண்ணிய உரையாடல்கள் அரங்கு நிகழ்ந்தேறியது. இருநாட்களும் காலை 9 மணி – மாலை 4 மணிவரை வரையறுக்கப்பட்ட பங்கேற்பாளர்களிற்காக நிகழ்ந்த அந்த அரங்கு, இருநாட்களும் மாலை 5 மணி – 6.30 மணிவரை அனைவருக்குமான பொது அரங்காக அமைக்கப்பட்டிருந்தது. பொது அரங்குக்கான அழைப்புகள் இணையங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அனைவரையும் அழைக்கிறோம் என அழைப்பிதழில் குறிப்புமிருந்தது. 3ம் தேதி […]

Continue Reading

என்னே ஒரு வீழ்ச்சி !

சென்னைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கு – வெள்ளை வேன் கதைகள் படக்குழுவின் இடையீடு – ஊடறு இணையம்  – குறித்த பிரச்சினைகளைப் பின்குறிப்பாகக் கொண்டு ‘கருத்தரங்க அறிக்கை’ வெளியாகியிருக்கிறது. முன்னதாக வெளியாகிய இதுகுறித்த லீனாவின் பதிவுகளையும் அரங்கிலிருந்த வேறுபலரின் பதிவுகளையும் கருத்தரங்க அறிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இவற்றிற்கிடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. சில விடுபடல்கள் மட்டுமே இருக்கலாம் எனத் தோன்றுகிறது. பிரச்சினையை நோக்கும் கோணங்கள் வேறாயிருக்கும்போது  இத்தகைய விடுபடல்கள் ஏற்படுவது வழமையே. ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வுகளில் இவ்வாறு இடையீடு செய்வதும் […]

Continue Reading

மாலதி மைத்ரி தன்னெஞ்சறிய பொய்யுரைக்கிறார்

–எதிர்வினை: ஷோபாசக்தி நவம்பர் மாத வல்லினம் கேள்வி – பதில் பகுதியில் கவிஞர் மாலதி மைத்ரி அவர்கள் தனது பதிலொன்றில் இவ்வாறு கூறியிருந்தார்: “ஷோபாசக்தி அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர். இலங்கையில் புலிகளால் தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றை திரித்துக் கொண்டிருப்பவர். புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசும் காங்கிரஸ், சி.பி.எம், சுப்பிரமணியசாமி, சோ, என்.ராம் நிலைப்பாடுதான் இவர்களின் அரசியல் நிலைப்பாடு […]

Continue Reading

வெள்ளை வேன் கதைகளும் வேடிக்கை மனிதர்களும்

இயக்குனர் லீனா மணிமேகலையினது பதினோராவது ஆவணப்படம் ‘வெள்ளை வேன் கதைகள்’. தமிழகத்திலிருக்கும் ஈழத்து அகதிகளையும் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களையும் மையமாக வைத்து அவர் இயக்கிய ‘செங்கடல்’ படத்தைத் தொடர்ந்து இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதையும், வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்வதையும் அவரது புதிய ஆவணப்படம் பாதிக்கப்பட்ட ஏழு சாட்சியங்கள் வழியாகப் பேசுகின்றது. 13.11.2013 அன்று,  இந்த இரண்டு மணிநேர ஆவணப்படம் முழுமையாக லண்டனில் பொதுமக்களிற்கு காட்சிப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து 14.11.2013ல் இந்த ஆவணப்படத்திலிருந்து 12 நிமிடக் காட்சித் […]

Continue Reading

கச்சாமி

கண்டி நகரத்திலிருந்து வடமேற்காக நாற்பது கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்த புராதன புத்த விகாரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நானும் கெய்லாவும் வெளியே வந்தபோது எங்களையே பார்த்துக்கொண்டு இரண்டு பொலிஸ்காரர்கள் வீதியில் நிற்பதைக் கண்டேன். நானும் கெய்லாவும் செருப்புகளை அணிந்துகொண்டு வீதிக்கு வந்தபோது, வீதியில் சனங்களும் கூடிநின்று எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவொரு மிகச் சிறிய நகரம். புத்த விகாரையைச் சுற்றியே அந்த நகரம் அமைந்திருந்தது. விகாரையின் முன்னால் ஏழெட்டுக் கடைகள் இருந்தன. அந்தப் பொலிஸ்காரர்கள் இருவரும் ஏதோ காரியமாகத்தான் எங்களையே […]

Continue Reading

வீடென்பது பேறு

முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் : இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் ‘ஹேர்ண்’ நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர அடக்குமுறைகள் நிலவிய […]

Continue Reading