எழுச்சி

சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் தருமலிங்கத்திற்கு இந்தப் புரட்டாதி வந்தால் சரியாக நாற்பத்தேழு வயது. இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் புகழ்பெற்ற தொழிற்சாலையொன்றில் கடைநிலைத் தொழிலாளியாகப் பணி செய்கிறார். பிரான்ஸுக்கு வந்து பதின்மூன்று வருடங்களாகின்றன. பிறந்து வளர்ந்ததற்கு இதுவரை அவர் விமானத்தில் ஏறியதில்லை. பதினைந்து வருடங்களிற்கு முன்பு தருமலிங்கத்திற்கும் காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த அசோகமலருக்கும் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலில் கல்யாணம் நடந்தது. அந்தக் காலத்திலேயே அய்ந்து இலட்சம் ரூபாய்கள் ரொக்கமும் […]

Continue Reading

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

கிழக்கு இலங்கையின் சிற்றூர் ஒன்றில் 1982-ல் பிறந்த ஸர்மிளா ஸெய்யித் ‘சிறகு முளைந்த பெண்’ என்ற  கவிதைத் தொகுப்பு ஊடாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தனது தடத்தைப் பதித்தவர். தொடர்சியாக, புனைவுப் பிரதிகளை மட்டுமல்லாமல் அ-புனைவுப் பிரதிகளையும் அவர் முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பதாண்டு கால ஈழப் போருக்குப் பின்னான காலத்தில், போரின் காயங்களோடும் வடுக்களோடு அலைந்துறும் மாந்தர்களையும் இலங்கையின் இனத்துவப் பிரச்சினைப்பாடுகளையும் மையமாக வைத்து ஸர்மிளா ஸெய்யித் எழுதிய நாவலான ‘உம்மத்’  இந்த வருடத்தின் தொடக்கத்தில் […]

Continue Reading

அதிதீவிரவாதம் சிறுபிள்ளைக் கோளாறு

இயக்குனர் பிரசன்ன விதானகேயின் புதிய திரைப்படமான ‘ஒப நத்துவ ஒப எக்க’ (With you Without you ) தாஸ்தயேவ்ஸ்கி 1876-ல் எழுதிய A Gentle Creature என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. போருக்குப் பின்னான இலங்கையில் தத்தளிக்கும் இனத்துவ உறவுகளைச் சித்திரிக்கும் இந்தத் திரைப்படம் சர்வதேசப் பரப்பில் மிகுந்த கவனத்தைப் பெற்று மதிப்புக்குரிய விருதுகளையும் வென்றிருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவின் முக்கியமான ஆறு நகரங்களில் பதினேழு திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. சென்னையில் திரையிடப்பட்ட பி.வி.ஆர். […]

Continue Reading

நான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன்

வன்னிக் காடுகளின் புதல்வி தமிழ்க்கவி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருபது வருடங்களாகப் பல்வேறு துறைகளிலும் இயங்கியவர். கடைசிவரை புலிகளுடன் களத்தில் இருந்தவர். தமிழீழ சட்டக் கல்லூரியில் கற்றுத் தேறிய சட்டவாளர். புலிகள் இயக்கத்தின்  நட்சத்திர மேடைப் பேச்சாளர். ‘புலிகளின் குரல்’ வானொலி, ‘தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி’ ஆகியவற்றில் முதன்மையான நிகழ்ச்சித் தயாரிப்பாளர். சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, நாட்டாரியல், நடிப்பு, இசை, ஒலி – ஒளிப்பதிவு, மொழிபெயர்ப்பு எனக் கலையின் வெவ்வேறு பரிமாணங்களையும் வசப்படுத்திக்கொண்டவர். இவ்வருடத்தின் […]

Continue Reading

வல்லிய காணூடகத்தை கலையாகப் பார்க்காமல் வேவாரமாகப் பார்க்கிறார்கள்

நேர்காணல் – மு. ஹரிகிருஷ்ணன் அதாகப்பட்டது பிரபஞ்சத்தில் மாசுமருவற்றதும், கலப்படமற்றதும், கேட்கின்ற பேரைப் பண்படுத்தக் கூடியதுமான இசையைப் போலவே மனதுக்குள் ஊடுருவிப் பேசுகின்ற இந்த சூத்திரதாரியை நான் மூன்றாம் ஜாமமொன்றில் காண நேரிட்டது. கொங்குச் சீமையின் சிறு கிராமமாம் ஏர்வாடியில் நடந்த கூத்துக் கலைவிழாவுக்குச் சென்றிருந்தேன். சுத்துப்பட்டுக் கிராமத்து மக்கள் , நாட்டார் கலை உபாசகர்கள், பிறகு நாஞ்சில் நாடன், பொதியவெற்பன், செ.ரவீந்திரன் என மூத்த எழுத்தாளிகளிலிருந்து லீனா மணிமேகலை, சந்திரா, இசையென இளவட்டங்கள்வரை; சிறுகோயிலின் முன்னிருந்த […]

Continue Reading

தங்கரேகை

புனிதவதி ரீச்சருக்குக் காதுகள் கொஞ்சம் மந்தம் எனச் சொல்லி ஆரம்பித்தான் கதைசொல்லி. புனிதவதியைத் தேடி வந்திருந்த விடுதலைப் புலிகள் சொன்னது அவருக்குச் சரியாகக் கேட்கவில்லை. எனினும் வந்திருந்த இருவரையும் பார்த்து ‘வாருங்கள்‘ என்பதுபோலத் தலையாட்டிச் சிரித்தவாறே அவர்களை வரவேற்றுவிட்டு, முற்றத்தில் இருந்த இரண்டு ப்ளாஸ்டிக் நாற்காலிகளைக் காட்டி வந்தவர்களை உட்காரச் சொன்னார் புனிதவதி. வந்தவர்கள் புனிதவதி ரீச்சரை உட்காருமாறு சொல்ல, எதுவும் பேசாமல் புனிதவதி தலையை ஆட்டிவிட்டு முற்றத்து மண்ணில் மெல்ல உட்கார்ந்துகொண்டார். புலிகள் நாற்காலியில் உட்காரத் […]

Continue Reading

புலம்பெயர்ந்தவர்களை முன்நிறுத்தி நான் தோற்கடிக்கப்பட்டேன்

இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட் மலையகத்தில் 1987-ல் பிறந்தவர். அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், மக்கள் போராட்ட இயக்கம், காணமற்போனவர்களைத் தேடிக் கண்டறியும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றில் தீவிரமாக இயங்கியவர். சம உரிமை இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இப்போது ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) செயற்படுகிறார். குறுகிய காலத்திற்குள் பலதளங்களிலும் செயற்பட்ட பழ. ரிச்சர்ட்டைப் போலவே அவரது நேர்காணலும் பலதளங்களிலும் விரிகின்றது. ஒளிவு மறைவின்றி அவர் மனம் திறந்து பேசுவது […]

Continue Reading