நியோகா: ஏப்ரல் 2-ம் தேதி

 நியோகா என்பது பண்டைய இந்துச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஓர் உறவுமுறை. இந்து தர்மமான மனுஸ்மிருதியில் இம்முறை குறித்துச் சட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தை பெற முடியாத கணவனைக் கொண்ட அல்லது கணவனை இழந்த பெண்ணொருத்தி வேறொரு ஆடவனோடு கூடிக் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலே இம்முறை. மகாபாரதத்திலே திருதிராட்டினன், பாண்டு, கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் எல்லோருமே இம்முறையிலேயே பிறக்கிறார்கள். இந்த நியோகா முறையின் முக்கிய நிபந்தனைகள் எதுவெனில் பெண் மூன்று தடவைகள் மட்டுமே அந்த ஆடவனோடு கூட முடியும். நான்காவது முறை உறவுகொள்வது […]

Continue Reading

அஞ்சலி: மங்கையற்கரசி அமிர்தலிங்கம்

ஈழத் தமிழ்த் தேசிய அரசியலில் உரத்து எழுந்த முதலாவது பெண்குரல் மங்கையற்கரசி அவர்களுடையது.  சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம், காலிமுகத்  திடல் போராட்டம் தொடங்கித் தமிழரசுக் கட்சி நடத்திய அத்தனை போராட்டங்களிலும் முன்னணியில் நின்றவரவர்.  அவரது கையால் அன்னமிடப்படாத  போராளிக் குழுக்களின் தலைவர்களோ ஆரம்பகாலப் போராளிகளோ அநேகமாக எவருமிலர் என்பது வரலாறு. தனது கணவர் அ. அமிர்தலிங்கத்தை அரசியலில் நிழலாகத் தொடர்ந்தவர். துணைவரோடு இணைந்து சிறைக்கும் சென்றவர்.  அமிர்தலிங்கம் புலிகளால் கொலை செய்யப்பட்ட அன்றே மங்கையற்கரசியும் உளவியல்ரீதியாகக் […]

Continue Reading

வரலாற்றுப் பார்வைகள் எனப்படுபவை வெறுப்பிற்கானவை

நேர்காணல்: லஷ்மி மணிவண்ணன். தென் தமிழகத்தின் பனங்கொட்டான் விளை கிராமத்தில் 23- 11-1969-ல் பிறந்த லஷ்மி மணிவண்ணன் வெளிவந்துகொண்டிருக்கும் வலிய இலக்கியச் சிற்றிதழ் ‘சிலேட்’டினது ஆசிரியர். புனைகதை, கவிதை, பத்தி எழுத்துகள், அரசியல் கட்டுரைகள், களச் செயற்பாடுகள் எனப் பல்வேறு தளங்களில் ஓய்வின்றித் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ‘சுந்தர ராமசாமியில்லாவிட்டால் என் எழுத்தும் பயணமும் வாழ்வும் இத்திசையிலிருந்திருக்காது’ என அறிவிக்கும் லஷ்மி மணிவண்ணன் இலக்கிய வெளியில் நடத்தும் பயணம் தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்டது. ஓம் சக்தி ஓம் பராசக்தி, வெள்ளைப்பல்லி […]

Continue Reading

வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்

2009 ஜனவரி ‘த சண்டே இந்தியன்’ இதழில் ‘தைப்பொங்கல் அனைத்துத் தமிழர்களின் விழா கிடையாது, அதுவொரு இந்து மதப் பண்டிகையே’ என நான் ஒரு கட்டுரை எழுதியபோது பெரியளவில் எதிர்வினைகள் ஏதும் எழவில்லை. இம்முறை பொங்கலையொட்டி அதே கருத்தை நான் சமூக வலைத்தளங்களில் சொன்னபோது கன்னா பின்னாவென்று எதிர்வினைகள் கிளம்பலாயின. வழமைபோலவே ‘இது தமிழர்களைக் கூறுபோடும் முயற்சி’ என்றும் பல எதிர்வினையாளர்கள் சொல்லத் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் ஆங்காங்கே கிளம்பும் ‘முப்பாட்டன் முருகன்’ போன்ற தமிழ்த்துவ எழுச்சிகள் இந்த […]

Continue Reading

எனக்கு யுத்தத்தைத் தெரியும்

பாரிஸிலிருந்து வெளியாகும் ஆக்காட்டி (யூலை -ஓகஸ்ட் 2015) இதழுக்காக நேர்கண்டவர்கள் : நெற்கொழுதாசன், தர்மு பிரசாத். விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்து வந்த நீங்கள், ‘தீபன்’ திரைப்படத்தில் முள்ளிவாய்க்காலிலிருந்து தப்பி வந்த புலிப்போராளியாக நடித்த காட்சிகளில் எவ்விதமான மனநிலையிலிருந்தீர்கள்? விடுதலைப் புலிகள் மீதான என்னுடைய அரசியல் விமர்சனத்தை நீங்கள் ‘புலி எதிர்ப்பு’ அல்லது ‘வெறுப்பு’ என்பதாகக் குறுக்கிக்கொள்ளக் கூடாது. புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் யார்? என்னுடைய தோழர்களும் மாமன், மச்சான்களும் என் ஊரவர்களும் என் சனங்களும்தானே. விடுதலைப் […]

Continue Reading

என் அரசியலில் இருந்தே எனது கதைகள் பிறக்கின்றன

சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன் தி இந்து தமிழ் : July 2015 கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் இலக்கியப்பரப்பில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு நிகழ்வு ஷோபா சக்தி. ஈழத்தமிழர் போராட்டம் பெற்றெடுத்த குழந்தை என்று ஷோபா சக்தியை நிச்சயமாகக் கூறலாம். இவர் முன்னணிக் கதாபாத்திரம் ஏற்று நடித்த, அகதிகள் படும் துயரத்தைப் பேசும் பிரெஞ்சுத் திரைப்படமான ‘தீபன்’, கான் திரைப்படவிழாவில் தங்கப்பனை விருதும் பெற்றுள்ளது…சமீபத்தில் சென்னை வந்த அவரிடம் தி இந்து தமிழ் நாளிதழுக்காக எடுக்கப்பட்ட நேர்காணலின் […]

Continue Reading

அப்பையா

(பாரிஸில் , 04 சனவரி 2015-ல் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி நடத்திய ‘எஸ்.பொ. நிழலில் சிந்திக்கும் தினத்தில்‘ நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்.) இந்த நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் தோழர்களே, நினைவுரைகளையும் ஆய்வுரைகளையும் நிகழ்த்திய தோழர்களே, நண்பர்களே உங்கள் அனைவரையும் பணிவுடன் வணங்குகின்றேன். ஆறுமுகம் சண்முகம் பொன்னுத்துரை என்ற எஸ்.பொ. அவர்கள் ஈழ இலக்கியத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியப் பரப்பிலும் மிக முதன்மையான எழுத்தாளுமை என்பதில் யாருக்கும் அய்யப்பாடு இருக்க […]

Continue Reading