கூடி அழுத குரல்!

மூத்த ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹாரிசன் எழுதிய மதிப்புமிகு நூலான Still Counting the Dead (தமிழில் – ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் – காலச்சுவடு வெளியீடு) இப்போது மலையாளத்தில் சுனில் குமார், ஷஹர்பானு.சி.பி, அப்துல் கபீர் மூவராலும் மொழிபெயர்க்கப்பட்டு ஸம்கியயில் தீராத்த மரணங்கள் என்ற தலைப்போடு OTHER BOOKS வெளியீடாக வந்திருக்கிறது. மலையாள மொழிபெயர்ப்புக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரையின் தமிழ் வடிவம் இங்கே. முன்னுரை மொழிபெயர்ப்பு: ஏ.கெ. ரியாஸ் முகமது. இலங்கையில் நடைபெற்ற கொடிய யுத்தத்தால் […]

Continue Reading

கற்பனையே செய்யமுடியாத விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாக இருக்கிறது

18.12.2024 – ஆனந்த விகடன் இதழில் வெளியாகிய எனது நேர்காணல். நேர்கண்டவர்: நா.கதிர்வேலன் இன்றைக்கும் ஷோபாசக்தி, ஈழ இலக்கியத்தின் முக்கியமான முகம். அவரைத் தவிர்த்துவிட்டு நாம் இலக்கிய வகைமைகளை யோசிக்க முடியாது. புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகள், இன ஒடுக்குமுறைகள் என இதயத்தைப் பிசையும் மொழி இவருடையது. நவீனத் தமிழுக்கும் ஒளிரும் கலை நம்பிக்கை ஷோபா. இப்போது நடிகராக தமிழ் மட்டுமல்லாது, ஹாலிவுட்டிலும் களைகட்டுகிறார். எந்த அணியிலும் சேராத, கூச்சலிடாத அவரது போக்கு அரிதினும் அரிது. சிறந்த கலைஞனுக்கான […]

Continue Reading

கண்ணன்.எம் அவர்களின் மேலான கவனத்திற்கு!

51-வது இலக்கியச் சந்திப்புக் கதைமலர் ‘இமிழ்’ தொகுப்புக்கு கடந்த வாரயிறுதியில் யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் விமர்சனக் கூட்டங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. இரண்டு கூட்டங்களிலும் உரையாற்றிய விமர்சகர்கள் அனைவருமே தொகுப்பை முழுமையாகப் படித்துவிட்டு விரிவாக உரையாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. இமிழ் தொகுக்கப்பட்ட முறை குறித்து நேர்மறையான, எதிர்மறையான இரண்டு வகை விமர்சனங்களுமே முன்வைக்கப்பட்டன. இதுவரை உலகத்தில் வெளிவந்துள்ள எல்லாத் தொகுப்புகளையும் போலவே இமிழிலும் விடுபடல்கள் உள்ளன. கதைத் தேர்வுகளைப் பொறுத்தவரை, நான் முன்பே விளக்கியிருப்பதைப் போன்று கதைகளைத் தேர்வு செய்யாமல் எழுத்தாளர்களையே […]

Continue Reading

மரச் சிற்பம்

பாரிஸ் நகரத்தில் இந்த வருடம் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறித்துத் தினப் பத்திரிகையிலிருந்த தலைப்புச் செய்தியை மீறியும் எடுத்த எடுப்பிலேயே இன்னொரு செய்தி எனது கண்களை இழுத்தது. கண்கள் அந்தச் செய்தியை வாசிக்கும்போது, எனக்குக் கிட்டத்தட்டச் சித்தம் கலங்கிவிட்டது என்றே சொல்லலாம். நான் அந்தச் செய்தியை நம்ப முடியாமல் மூன்று தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்தேன். பிரான்ஸில் இப்போது படு வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டிருக்கும் தேசியவாதக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “எமது தந்தையர் நாடு […]

Continue Reading

இமிழ் : எழுத்தாளர்கள் தேர்வும் தொகுப்பும்

51-வது இலக்கியச் சந்திப்புக் கதைமலரான ‘இமிழ்’ குறித்தும், தொகுப்பில் எழுதியிருக்கும் எழுத்தாளர்களைக் குறித்தும் மார்ச் 21-ம் தேதி, சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, தொகுப்புக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்த முறைமை குறித்துக் கேள்விகளும் விமர்சனங்களும் முகநூலில் பரவலாக வைக்கப்பட்டன. மலருக்கான கதைகளைக் கோரி ஏன் ‘பொது அறிவித்தல்’ கொடுக்கவில்லை என்பதும் அடிக்கடி எழுப்பப்பட்ட கேள்வியாக இருந்தது. தொகுப்பில் இடம்பெற்ற இருபத்தைந்து எழுத்தாளர்களையும் தேர்வு செய்தவர்கள் என்ற முறையில் தர்மு பிரசாத்தும் நானும், பத்தொன்பது உறுப்பினர்களைக் கொண்ட 51-வது இலக்கியச் […]

Continue Reading

இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்

I do not agree with a word that you say, but I will defend to the death your right. -Voltaire ‘இமிழ்’ கதைமலரில் யதார்த்தனின் கதை இடம்பெற்றது, ‘இமிழ்’ விமர்சனக் கூட்டத்தில் எழுத்தாளர் கிரிசாந் கலந்துகொள்வது ஆகியவை குறித்து முகநூலில் மதுரன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு நான் அளித்தல் பதில் இங்கே: இலக்கியச் சந்திப்பில் என் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்திருந்தேன். இங்கே இன்னும் சற்று விரிவாக: 1. யதார்த்தன் […]

Continue Reading

சித்திரப்பேழை

‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது. சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் […]

Continue Reading