நியோகா: ஏப்ரல் 2-ம் தேதி

அறிவித்தல்கள் கட்டுரைகள்

 நியோகா என்பது பண்டைய இந்துச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஓர் உறவுமுறை. இந்து தர்மமான மனுஸ்மிருதியில் இம்முறை குறித்துச் சட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தை பெற முடியாத கணவனைக் கொண்ட அல்லது கணவனை இழந்த பெண்ணொருத்தி வேறொரு ஆடவனோடு கூடிக் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலே இம்முறை. மகாபாரதத்திலே திருதிராட்டினன், பாண்டு, கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் எல்லோருமே இம்முறையிலேயே பிறக்கிறார்கள்.

இந்த நியோகா முறையின் முக்கிய நிபந்தனைகள் எதுவெனில் பெண் மூன்று தடவைகள் மட்டுமே அந்த ஆடவனோடு கூட முடியும். நான்காவது முறை உறவுகொள்வது தடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குழந்தை பெறுவதை மட்டும் கருதியே இந்த நியோகா உறவு நடக்கவேண்டும். இந்த உறவில் காமமோ காதலோ இருக்கக்கூடாது.

இந்த இரண்டு நிபந்தனைகளும் எவ்வளவு அநீதியானவை, கேலிக்கிடமானவை என்பதை முன்னிறுத்தி இந்தியில் சுரேந்திர வர்மா எழுதிய ‘சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை’ என்ற நாடகம் (தமிழில் வி.சரோஜா) துல்லியமான பெண்ணியப் பிரதி.

எழுத்து, நாடகம், குறும்படங்கள் மூலம் அறியப்பட்ட சுமதியின் சிறுகதையொன்றே ‘நியோகா’விற்கான மூலம். திரைப்படப் பிரதியை சுமதியும் நானும் இணைந்து எழுதியிருக்கிறோம். சுமதியே  இயக்கியுமிருக்கிறார். இலங்கையில் தொடங்கி கனடாவில் தொடரும் கதைக்களம்.

நியோகா திரைப்படம் லுமியர் திரைப்பட விழா, லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டும் ஜகார்த்தா பெண்கள் சர்வதேசத் திரைப்பட விழாவில் சொர்ண விருது பெற்றும் தனது பயணத்தைத் தொடக்கியுள்ளது. வரும் ஏப்ரல் 2-ம் தேதி மாலை 4.30 மணிக்கு டொரோண்டோ YORK திரையரங்கில் (115 York Blvd)  கனடா ப்ரீமியர்.

நானும் வருகிறேன். திரையரங்கில் சந்திப்போம் தோழர்களே!

Uyirppu Women Arts Presents

Produced by Vishnu Balaram
Written by Sumathy Balaram & Shoba Sakthi
Directed by Sumathy Balaram

Key Casts:Tharshini Varapragasam as Malar Rasaiah Rasarathnam as Malar’s Father
Manonmany Rukmani as Malar’s Mother Sumu Sathi as Thushi
Parthi Puvan as Jeeva Vaishnavie Gnanasaravanapavan as Anu
Stenson Arul as Naren

Supporting Cast:
Kasturi Arulanantham – Anojan Palarajah – Ahara Athitha – Kelly Hashemi – Kory Fulton
Melinchi Muthan – Nadarajah Muralitharan – Mahindan Rasaiah- Indra Balaganeshamoorthy – Chackarawarthy- Sinnaiah Ramalingam – Vishal Balaram – Thisan Sivaravinthiran – Vicky Kirupa

Key Crew:
Assistant Director Thamilini Jothilingam
Cinematography Sabesan Jeyarajasingam
Assistant Cinematographer Krishna Murali
Assistant Cinematographer Ruban
Sound Director Ramesh Selvarajah
Art Director Sugantham Subramaniyam
Editing Ramesh Selvarajah
Music Ramesh Selvarajah & Vishnu Balaram
Makeup Nira Pararajah
Costume Thano Parathan
Flyer Photography Digi Karuna/ Sarvesan Thiraviam/ Ruban Cam
Flyer design Digi Karuna/Ravi Ponnudurai
Still Photography Ruban Cam
Line Supervisor – 1 Yalini Jothilingam
Line Supervisor – 2 Shirley Saminathan
Male Voice Sudhar

Programming Description: 

FORMS: Narrative, Fiction, Feature
GENRES: Drama, Independent, War, Culture
DATE OF COMPLELTION: March 2015
COUNTRY OF PRODUCTION: Canada

Print Source:

Sumathy Balaram – email [email protected] Tel: + 1 647 500 3496

Synopsis:

“Niyoga” is a gripping story of Malar, a middle-aged Tamil woman, a political refugee who fled Sri Lanka during the civil war. It revolves around a fractured immigrant family, people left behind, especially a woman, without choice, without voice, and without a future. Malar’s marriage to Ranjan, a young radical journalist only lasted three days when unknown men abducted him. He joined the ever-growing list of missing persons who voiced for human rights in the country. In fear of their own lives, Malar and family move to Canada and settle in the suburbs of Toronto. Conventional Tamil family values continues Malar’s brother, Jeeva freely goes to school, gets a degree, finds a job in Toronto, and chose to marry the girl he loves. While Malar is expected to wait for her disappeared husband under the wings of her parents and brother. Two decades pass slowly and Malar lives as a shadow in her own house without a voice of her own. She adores plants and nature and her only happiness in life is gardening and walks in the park. In search of her missing husband, her mother seeks out astrologists to predict Malar’s future and her husband’s possible return while her father exhausts his attempts to contact the local and international human rights organisations. Things take a radical turn when three young men come into Malar’s life: a young astrologist, a stalker, and a family friend, Naren. Will she come out of the familial fences and assert a new self or will she be buried under her own shadows forever?

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *