கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன்

கடிதங்கள்

வ.ஐ.ச.ஜெயபாலன்


ர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்க்கிறோம் என்கிற அறிக்கை தொடர்பான கையொப்ப பட்டியலில் இருந்து எனக்கு கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன். அதன் அர்த்தம் எனது அனுமதி இல்லாமல் என்னுடைய பெயர் இணைக்கப் பட்டுள்ளது என்பதல்ல. என்னிடம் பேசி அனுமதி பெற்றுத்தான் சோபாசக்தி என்னுடைய கையொப்பத்தை இணைத்தார். இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மெல்ல மெல்ல உயிர்க்கவும் சுதந்திரமான கலை இலக்கிய மாநாடுகள் நடத்தவும் உரிமை¨ உள்லவர்கள். ஆனால் அத்தகைய மாநாடுகளின் அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்ப் பட்டதல்ல.

தமிழ் பேசும் மக்களான ஈழத் தமிழர்கள் முஸ்லிம்கள் மலையக தமிழர்களின் மையம் புலம் பெயர்ந்த நாடுகளல்ல இலங்கைத் தீவு என்பதில் எனக்கும் சோபா சக்திக்கும் ஒத்த கருத்தே உள்ளது. ஈழத் தமிழரது இறைமை அடிப்படையில் புலம் பெயர்ந்த தமிழர்களது கையிலல்ல தாய் மண்ணில் வாழும் மக்களது கையில் மட்டுமே உள்ளது என்பதுதான் எனது உறுதியான நிலைபாடு. அவர்களது வாழ்வு மீண்டும் அந்த மண்ணில் முழுமையாக உயிர்க்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஈழத்து தமிழ் பேசும் மக்களது கலை இலக்கிய சமூக அரசியல் நடவடிக்கைகள் இலங்கைத் உயிர்த்தெழுவதை இடம் பெறுவதை நான் எப்பவும் ஆதரிப்பேன். குறிப்பாக ஒடுக்குதலுக்கும் போர்குற்றத்துக்கும் ஆளாகி நலிந்த தமிழரது வாழ்வு முழுமையாக உயிர்த்தெழ வேண்டும் சகல கலை இலக்கிய மற்றும் சமூக அரசியல் நடவடிக்கைகள் மக்கள் வழும் புலத்தில் மீண்டும் துளிர்க்க வேண்டும். இந்த அடிப்படையில் எழுத்தாளர் மாநாடு ஒன்று இலங்கைத் தீவில் நடைபெறுவதை நான் எதிர்க்க முடியாது. ஆனால் மக்களுக்கெதிரான போர்குற்றங்கள் நிகழ்ந்த காலக்கட்டத்தின்பின் இடம் பெறும் ஒரு எழுத்தாலர் மாநாடு சுதந்திரமான எழுத்தாளர்களின் சுதந்தரமான ஒன்றுகூடலாக இடம் பெற்றால் மட்டுமே நான் அதனை ஆதரிப்பேன் வரவேற்ப்பேன். அதுபற்றி இப்பவே என்னால் சாதகமாகவோ பாதகமாகவோ ஊகிக்க முடியவில்லை. என்னுடைய மதிப்புக்குரிய எழுத்தாள தோழர்கள் பலர் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். என்னைப் போன்றவர்களை வளர்த்த தோழர்களுள் ஒருவரான டோமினிக் ஜீவா மாநாட்டு பக்கத்தில் இருக்கிறார். என்னுடைய வேறு சில தோழர்கள் மாநாட்டை அரசியல் நோக்கம் பற்றிய கேழ்விகளோடு எதிர்க்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை விவாதங்கள் மூலம் அணுகும் மனோபாவம் இன்மைதான் எமது கடந்த கால இன்னல்களுக்கு அடிப்படையாகும். நாம் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நினைக்க விரக்தியாக உள்ளது. இரண்டு பக்கத்திலும் கலை இலக்கியம் சம்பந்தப் படாத உள்நோக்கம் உள்ளவர்களது ஊடுருவல் உள்ளதாகவும் சொல்லப் படுகிறது.


இனவெறி அரசின் போர்குற்றங்களுக்கும் வழிதவறிய நடவடிக்கைகளாலும் பாதிக்கப் பட்ட நம் மக்கள் மீழ் உயிர்தெழும் காலம் இது. இக் கட்டத்தில் குறுங்குழுவாத அணுகுமுறை எமக்கு உகந்ததல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஆனாலும் உருவாக வேண்டிய கூடிய பட்ச ஐக்கிய முன்னணிச் சூழல் என்பது ஒருபோதும் அரசியல் சரணாகதியல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும்.
இரு தரப்பிலும் எழுத்தாளர்களல்லாத அரசியல் வாதிகள் வைக்கும் உள்நோக்கமுள்ள அரசியல் விவாதங்களை நான் ஆதரிக்கவில்லை.

மேற்படி அறிக்கையில் மாநாட்டு அமைப்பாளர்கள் முன்வைத்திருக்கும் 12 அம்ச முன்னோக்குகளும் ம்கச் சரியானவை என்கிற கூற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசிடம் எழுத்தாளர்களுக்கான சலுகைகளுக்கு கையேந்துகிறது இன்றைய முன் உரிமையல்ல. அரசியல் கைதிகளாகவும் போர்க் கைதிகளாகவும் உள்ள புதுவை இரத்தினதுரை போன்ற கலைஞர்களை விடுதலை செய். அகதிகளாகவும் ஏதிலிகளாகவும் உள்ள கலைஞர்களதும் மக்களதும் வாழ்வுரிமைகளை பறிக்காதே என்கிற கோரிக்கைகளைத்தான் இன்று முன்னிலைப் படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

மேலும் மாநாடுபற்றி எங்கள் எங்கள் விவாதத்தை நாம் வைப் பதற்குள்ள உரிமையைப் போலவே முன்னணி எழுத்தாளர் எஸ்.பொன்னுதுரைக்கும் குமுதம் றிப்போட்டர் புதிய ஜனநாயகம் போன்ற பத்திரிகைகளுக்கும் மாநாடு தொடர்பான எதிர் விவாதங்களை முன் வைக்க உரிமை உள்ளது. அதனை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம் என்கிற நிலைபடு எனக்கு உடன்பாடானதல்ல..

இந்த மாநாட்டை நிராகரிக்கக் கோரி வெளியிடப் படுகிற அறிக்கைகள் வாதத்துக்குரியவை. அவற்றை விவாதத்துக்கு உட்படுத்துவதற்க்குப் பதிலாக நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம் என்கிற கூற்றும் எனக்கு உடன்பாடில்லை.

இரண்டு தரப்பினரும் ஊகங்களின் அடிப்படையில் இயங்குவதாகத் தெரிகிறது. போரினாலும் போரின் வெற்றி தோல்வியாலும் நமது வாழ்வு நொருக்கப் பட்டுக் கிடக்கும் இந்த சூழலில் அவசியமான பரந்து பட்ட ஐக்கிய முன்னணிக்கு எதிரான குறுங்குழு வாதங்கள் இத்தகைய ஊகங்கள் முன் முடிவுகளின் அடிப்படையாக மேலோங்குவது துயரம் தருகிறது. நான் உண்மைக்கான அவகாசம் வளங்கப் படுவதையே விரும்புகிறேன். தயவுடன் எனது பெயரை பட்டியலில் இருந்து அகற்றி விடுங்கள்.

உண்மையுடன்
வ.ஐ.ச.ஜெயபாலன்கலைஞன்

2 thoughts on “கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன்

  1. V.I.S Jeyapalan is a cutting edge salesman. A merchant who is still selling ice to eskimos. His interview by shobasakthy ( Published in this web and in lumbini) is a complete fabricated fiction. (The LTTE never wanted to waste a bullet on him, yet V.I.S.J claimed his life was under threat by the LTTE)V.I.S.J wanted to be polite to shobasakthy who staged VISJ’s farce in his web. So earlier agreed to sign, then withdrew.VISJ is not a clown but a chameleon with the IQ of Rasputin.

    Natchathran Chev-Inthian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *