கருத்தரங்கம்

அறிவித்தல்கள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்
நடத்தும்

இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை
சிறப்புக் கருத்தரங்கம்

17.8.2009, திங்கள்கிழமை மாலை 6 மணி
ராஜா அண்ணாமலை மன்றம்
பாரிமுனை, சென்னை – 1.

லங்கையில் LTTE உடனான போர் முடிந்துவிட்டது என ராஜபக்ஷே அரசு கூறினாலும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டம் தொடர்கிறது. வாழ்நாள் முழுவதும் பதுங்கு குழிகளில் ஒடுங்கி வாழ்ந்த அப்பாவித் தமிழர்கள் இன்றும் மரணத்தின் விளிம்பில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான ‘வதை’ முகாம்களில்தான்…. சர்வதேச செஞ்சிலுவைசங்கம் கூட நுழைய முடியாத அகதி முகாம்களில்தான்.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட மூன்று லட்சம் தமிழ் மக்கள் ஏற்கனவே வாழ்ந்த பகுதிக்கு 180 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என இலங்கை அரசு உறுதியளித்தது, ஓடிவிட்டன 75 நாட்கள். இன்னும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகக் கூடத் தெரியவில்லை.

இது ஒருபுறம் இருக்க முகாம்களில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு வாடி வதங்குகிறார்கள். அவர்களின் வாழ்நிலையை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்கள் உட்பட எவரையும் அனுமதிக்காதது உலகுக்கு உண்மை தெரியாமல் மூடி மறக்கும் இலங்கை அரசின் தந்திரமாகவேபடுகிறது.

எனவே..
° தமிழர்கள் தங்கியிருக்கும் முகாம்களின் உண்மை நிலையைக் கண்டு உலகுக்குச் சொல்ல செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகளை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.

°தற்காலிக முகாம்களில், ஐ.நா சபையின் அகதிகள் மறுவாழ்வு அமைப்பு பரிந்துரைத்துள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.

°முகாம்களில் அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்கள் ஏற்கனவே அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு – உரிய பாதுகாப்புடன், ஒப்புகொண்ட காலக்கெடுவுக்குள் அனுப்பி வைக்கப்படவேண்டும்.

°அனைத்திற்கும் மேலாக தமிழ் மக்கள் சம உரிமைகளோடும் சம வாய்ப்புகளோடும் கவுரவத்தோடும் வாழ அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்து அமல்படுத்த வேண்டும்.

° மேற்குறிப்பிட்டவற்றை விரைந்து செய்து முடிக்க இந்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும்.

நிகழ்வுகள்

வரவேற்பு:
நா.வே.அருள்
செயலாளர்

முன்னிலை:
சந்துரு
செயலாளர் – காஞ்சிபுரம்

து. மகேந்திரன்
செயலாளர் – திருவள்ளூர்

தலைமை:
அருணன்
மாநிலத் தலைவர்

சிறப்புரை:
அ. சவுந்தரராசன்
பொதுச்செயலாளர் – சிஐடியு

ச. தமிழ்ச்செல்வன்
மாநிலப் பொதுச்செயலாளர்

சிகரம் ச. செந்தில்நாதன்
மாநில துணைத்தலைவர்

இரா.தெ.முத்து
மாநிலப் பொருளாளர்

நன்றியுரை:
கி. அன்பரசன்
செயலாளர் – தென் சென்னை

தங்களின் ஆதரவும் பங்கேற்பும் அவசியம்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
வடசென்னை– தென்சென்னை -திருவள்ளூர் –காஞ்சிபுரம் மாவட்டக் குழுக்கள்