மற்றுமொரு நாளில்
வடகிழக்கில் தென்கிழக்கில் மேற்கில்
மூன்றுமுறை பல்லிசொல்ல
உறவினர்கள் மரணம் எனவுரைக்கும்
வருட பஞ்சாங்கம் வந்துபோனது
தொடுவானம் தெரியாத அடைத்த இருளில்
திசையும் தெரியவில்லை
துக்க வரவுரைக்கும் காகமும் இங்கில்லை
மயில் வெள்ளையாடை தாமரைப்பூ
நீரோற்பலம்
கனவினிற்காண
புதிய பஞ்சாங்கம் வாங்கியாயிற்று
கனவுவர மறுக்கிறது
(தாயகம்)
1:உங்களுக்கு சுவிஸோ பரிஸோ பிடிச்சிருக்கு!:
அது சொர்க்கமெல்லோ!
2:நீ கனோன் ரியாட்சியை நம்பாதே!அவள் உனக்கு விசா எடுத்துத் தரமாட்டாள்!அவள் உப்பிடி நிறைய சிறீலங்கனைச் சுத்தியிருக்கிறாள்!
தங்கள் வலை பற்றிய விபரம் எதுவும் தமி்ழ் மணத்தில் தெரியவில்லை. யூனிகோட் கொண்டு எழுதுங்கள். போட்டோசாப்பில் செய்திருப்பதால் படைப்புகள் படிக்க முடிகிறது. பாராட்டுக்கள்.
இராஜ தந்திர தூதுவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் உயர் மட்ட விஷேட சந்திப்பு
21 January 2009
இன்று (20.01.2009) கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் மேற்படி விஷேட உயர் மட்டச் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் 43 வெளிநாட்டு இராஜதந்திரத் தூதுவர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் அமெரிக்கா, அயர்லாந்து, சைப்பிரஸ், றோமானியா, மாட்றிட், வேர்சிலோனா, ஸ்ரேல், ஜெருசலம், துருக்கி, அவுஸ்ரேலியா, ஜப்பான், சிலி, கொல்கத்தா, பஹைறன், லிஸ்வன், ஜேர்மன், சிலி, கொங்கொங், காம்வேர்க், நியூசிலாந்து, கொலம்பியா, ஹங்கேரி, பிரேசில், பெலரஷ், கிறீஸ், ரஷ்யா, ஐஸ்லாந்து, பாகிஸ்தான், சேர்வியா, பிஜி ஐலண்ட், ஒஸ்ரியா, ஹவாய் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்து இஇலங்கையில் கிழக்கு மாகாண சபையினுடைய இயக்கம் மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இராஜ தந்திர தூதுவர்களின் கேள்விக்குப் பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், கிழக்கு மாகாணம் இலங்கையில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட போரினாலும் ஏனைய இயற்கை அனர்த்தங்களாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட ஓர் மாகாணமாகும். இம் மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களுக்ம் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஓர் சூழலை உருவாக்குவதற்காகவே எமது மாகாண சபை அரசு உழைத்துக் கொண்டிருக்கின்றது. அதில் கணிசமான அளவு வெற்றி கண்டு வருகின்றது. அத்தோடு எமது மக்களுக்கான அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் எடுத்து அதனை எமது மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன் எனவும் குறிப்பிட்டார். மேலும் குறிப்பிடுகையில் நீங்கள் எமது மாகாணத்தை நேரடியாகப் பார்வையிட்டமைக்கும் எமது மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டில் ஆர்வம் காட்டுவதற்கும் எமது மாகாண மக்கள் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
இதில் கலந்து கொண்ட இராஜ தந்திரத் தூதுவர்கள் கிழக்கு மாகாணசபையினுடைய இயக்கம் மற்றும் முதலமைச்சரின் தீர்க்க தரிசனமான முன்னேற்ற செயல் வடிவங்களுக்கும் தாம் நன்றியினைத் தெரிவிப்பதோடு கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒன்றாக வாழ்வதற்குரிய வழி வகைகளை தமது நாட்டிற்குச் சென்று தமது அரசிடம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்கள். இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் வீ.பி.பாலசிங்கம், முதலமைச்சரின் செயலாளர் எஸ.மாமாங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தோழமையுடன் அனைவருக்கும்,
தோழர் பராவின் முதலாவது ஆண்டு நினைவு ஒன்றுகூடலொன்று ஏப்ரல் மாதம் 5ம் திகதி பிற்பகல் 3 மணியிலிருந்து 9 மணிவரை லண்:டனில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்ககள் பின்னர் அறிவிக்கப்படும்.