-ஷோபாசக்தி
இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்கள் அண்மையில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் கைதுகளைக் கண்டித்தும் தமிழக அரசின் கருத்துச் சுதந்திர மறுப்பு எதோச்சதிகாரத்தைக் கடுமையாகச் சாடியும் வலைப்பதிவுகளில் தோழர்கள் எழுதிக் குவித்துள்ள கட்டுரைகளைப் படிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நீண்ட நாட்களாகவே பேசியும் எழுதியும் வருபவன் என்ற முறையில் உள்ளபடியே எனது கண்கள் பனிக்கின்றன. இந்த வலைப் பதிவாளர்களல்லவா எனது தோழர்கள் எனத் திரும்பத் திரும்ப எனது உதடுகள் முணுமுணுக்கின்றன.
“நீ சொல்லும் கருத்தில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை, ஆனாலும் அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக் கொடுத்துப் போராடவும் நான் தயார்” என்ற வோல்தயரின் புகழ்பெற்ற கூற்றை வெறுமனே வீம்புக்கு உச்சரிப்பவர்களில் நானும் ஒருவனல்ல. அந்தக் கூற்றை நான் முற்று முழுதாக விசுவாசிப்பவன். இந்திய அரசு, இலங்கை அரசு, அமெரிக்க அரசு என எது குறித்தும் எவர் வேண்டுமானாலும் தமது கருத்துகளைக் கூறலாம். அது ஆதரவாகவும் இருக்கலாம் அல்லது எதிராகவும் இருக்கலாம், எதுவாகவும் இருக்கலாம். அதைச் சொல்வதற்கு சாமான்யர்களுக்கும் தடையற்ற சுதந்திரம் வேண்டும். இதற்குப் பெயர்தான் முழுமையான கருத்துச் சுதந்திரம். அந்தக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படும் போது தடைமீறலும், உருவப்பொம்மை எரிப்புகளும் காலணியால் மூஞ்சிக்கு எறிதலும் மக்கள் திரளின் இயல்பான போராட்ட வடிவங்களே! அவை அறம் சார்ந்த நெறிகளே!
விடுதலைப் புலிகளையும் தமிழ்த் தேசிய வெறியையும் நிராகரிப்பவன் என்ற முறையில் நான் சீமான் உள்ளிட்டவர்கள் மீதான எனது விமரிசனத்தை ஏற்கனவே வைத்துள்ளேன். அதே வேளையில் கொளத்தூர் மணி போன்ற திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் பார்ப்பன எதிர்ப்பு, சாதியொழிப்பு, சமூகநீதிக்கான போராட்டம் போன்ற சீரிய அரசியல் பங்களிப்புகளை நாம் மறந்துவிட இயலாது. பார்ப்பனிய ஊடகங்களும் காங்கிரஸ் கட்சியினரும் இந்தக் கைதுகளை நியாயப்படுத்துவதன் பின்னணியில் அவர்களின் பாரம்பரியத் திராவிட இயக்க எதிர்ப்பும் ஒரு ஊக்கியாகச் செயற்படுவதையும் நாம் கவனிக்கலாம். உண்மையில் கொளத்தூர் மணி, சீமான் போன்றவர்கள் அரசியல் அதிகாரங்களற்ற சாதாரணர்கள். புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் பால் தக்கரேயையோ மருத்துவர் இராமதாஸையோ இப்படிக் கைதுபண்ணிவிட இந்திய அரசால் முடியுமா? இந்திய ‘ஒருமைப்பாட்டுக்கு’ பங்கம் விளைவிப்பவர்களைக் கைது செய்வதென்றால் நம்பர்1 பயங்கரவாதி நரேந்திர மோடியையல்லவா முதலில் கைதுசெய்ய வேண்டும்.
சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் கைதுக்காக இந்தச் சிலிர்ப்புச் சிலிர்ப்பவர்கள் இந்தியா முழுவதும் காலவரையற்றுச் சிறைகளில் வாடும் அல்லது ‘என்கவுண்டர்’களில் சுட்டுத்தள்ளப்படும் நக்ஸ்பாரிகள் குறித்தோ இஸ்லாமியர்கள் குறித்தோ காஷ்மீரிகள் குறித்தோ ஏன் எதுவும் பேசுவதில்லை என்றொரு கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வி தருக்கத்துக்குப் பொருந்துமேயொழிய நடைமுறைக்கு உதவாது. தீபெத் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்காதவர்கள் ஈராக் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்கக் கூடாது, திண்ணியம் கொடுமை குறித்துப் பேசாதவர்கள் கயர்லாஞ்சிக் கொடுமைகள் குறித்துப் பேசக் கூடாது என்றெல்லாம் நாம் சொல்ல முடியுமா என்ன. குறிப்பிட்ட இந்த அநீதியைக் கண்டித்தாவது பேசுகிறார்களே என்று நாம் அவர்களை ஆதரிப்பதும் அவர்களோடு இணைந்து நாமும் குறிப்பிட்ட அநீதியைக் கண்டிப்பதும்தானே சரியாயிருக்க முடியும். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிற அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் என நாம் அவர்களிடம் கோர முடியும். குறிப்பிட்ட விடயத்தில் வெளிப்படும் அவர்களின் சனநாயக் குரலும் போராட்டப் பண்பும் உலகம் தழுவிய பார்வையாக விரிவடைய வேண்டும் என நாம் வேண்டிக்கொள்ள முடியும்.
முக்கியமாக சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் கைதுகளுக்காகக் கொந்தளிப்பவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக அல்லது அனுதாபிகளாயிருப்பதால் இந்தத் திடீர்க் கருத்துச் சுதந்திர போராளிகளுக்கு, கருத்துச் சுதந்திரத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள பொருந்தாத் தொடர்பு குறித்து இங்கே சற்று விளக்கவதும் பொருத்தமானதே. “தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க, தூங்காது செய்யும் வினை” என்கிறது தமிழ்மறை.
தமிழக அரசால் கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கு இம்முறை பிணை மறுக்கப்பட்டிருப்பினும் அடுத்தடுத்த தவணைகளில் அவர்கள் வெளியே வருவார்கள். கொளத்தூர் மணி வருவது தாமதமாக வாய்ப்புகளிருப்பினும் அவரும் வெளியே வருவார் என்பது நிச்சயம். இவர்கள் மீதான விசாரணைகள் நடந்தாலும் அது நீதிமன்றங்களில் பகிரங்கமாக நடத்தப்படும். இவர்களுக்குத் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்வதற்கும் தங்களுக்கென வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படும். “மாங்குயில் கூவிடும் பூங்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” எனச் சிறைச்சாலையைப் பூஞ்சோலையாக உருவகித்துச் சீமானும் மணியும் தாரளமாகப் பாடலாம். அப்படிப் பாடுவதுதான் திராவிட இயக்க மரபு. அப்படிப் பாட வாய்ப்புக் கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் மரபு.
ஆனால் தோழர்களே புலிகளால் கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன? விஜிதரன் எங்கே? தில்லை எங்கே? தீப்பொறி கோவிந்தன் எங்கே முருகநேசன் எங்கே? மத்தியாஸ் எங்கே? சின்ன மெண்டிஸ் எங்கே? பதுமன் எங்கே? கையில் மாற்றுடைகளுடன் அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டுவாயிலில் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற மாத்தையா எங்கே? புலிகளின் சிறையில் ஒரே இரவில் அருணாவால் கொல்லப்பட்ட அய்ம்பத்தெட்டு உயிர்களுக்கும் வகையென்ன? பதிலென்ன? இப்படியாகப் புலிகளால் அவர்களின் சிறையில் சாகடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களுக்கான நீதியை நாம் யாரிடம் கோருவது? இங்கே மாத்தையாவின் அரசியலுக்கோ சின்ன மெண்டிஸின் அரசியலுக்கோ வக்காலத்து வாங்குவதல்ல எனது நோக்கம். புலிகள் தங்களால் கைதுசெய்யப்படுபவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைச் சொல்லவே மேலுள்ளவர்களை உதாரணம் காட்ட நேரிட்டது. பல்கலைக் கழக மாணவனாகட்டும் தங்கள் இயக்கத்தின் பிரதித் தலைவராகட்டும் எல்லா முரண்களையும் புலிகள் கொலைகளாலேயே தீர்த்து வைத்தார்கள். புலிகளின் இராச்சியத்திலே சவக்குழிதான் நீதிமன்றம். துப்பாக்கிச் சனியன்தான் நீதிபதி.
இன்று சீமானின் குரலும் கொளத்தூர் மணியின் குரலும் நசுக்கப்பட்டுவிட்டதாகத் துடிக்கிறோமே! அவர்களின் கருத்துச் சுதந்திர உரிமை பறிக்கப்பட்டுவிட்டதாகப் பதறுகிறோமே, இதே பதற்றமும் துடிப்பும் கொதிப்பும் புலிகளால் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களின் விசயத்திலும் நமக்கு இருக்க வேண்டுமல்லவா. தமக்கு உவப்பில்லாத கருத்துகளைச் சொன்னதால் புலிகளால் கொல்லப்பட்ட அறிவுஜீவிகளுக்கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மாற்று இயக்கப் போராளிகளும் மிதவாதக் கட்சித் தலைவர்களுக்கும் கணக்கில்லையே! விஜயானந்தன், விமலேஸ்வரன், ராஜினி திரணகம, அ.அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், சின்னபாலா, அதிபர் இராசதுரை என்று எத்தனையோ மனிதர்களின் மாற்றுக் குரல்களை புலிகளால் துப்பாக்கியால் நிறுத்தியிருக்கிறார்கள். தொழிற்சங்கங்கங்கள், சாதி ஒழிப்பு அமைப்புகள் இடதுசாரிக்கட்சிகள் என எல்லாவகையான மாற்று அரசியல் இயக்கங்களும் புலிகளால் தடைசெய்யப்பட்டுள்ளன. புலிகளின் இந்தக் கருத்துச் சுதந்திர மறுப்பு ஈழத்தைத் தாண்டிப் புகலிடங்களுக்கும் பரவியது. சரிநிகர், தினமுரசு பத்திரிகைகள் புகலிட நாடுகளில் தடைசெய்யப்பட்டன. தொழிலாளர் பாதை, செந்தாமரை, மனிதம், தாயகம் போன்ற பல மாற்றுக் கருத்துப் பத்தரிகைகள் மிரட்டப்பட்டன. பத்திரிகையாளர்கள் தெருக்களில் வைத்துத் தாக்கப்பட்டார்கள்.
இம்முறை சீமான் கைது செய்யப்பட்டபோது ஆயிரம் முறை கைதாவதற்குத் தான் தயாராயிருப்பதாக அவர் முழங்கினார். செல்வியும் சீமானைப் போல கலைத்துறை சார்ந்தவர்தான். அவர் நாடக இயக்குனர், நடிகை மற்றும் கவிஞர். கவிதைக்கான சர்வதேச விருதான PEN விருதைப் பெற்றவர். புலிகளுக்கு மாற்றான கருத்துகளை அவர் பேசியதால் அவர் புலிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் சீமானைப்போல “ஆயிரம் தடவைகள் சிறை செல்லவும் தயார்” என்று அவர் சொல்வதற்கு வாய்ப்புகள் ஏதுமிருக்கவில்லை. ஏனெனில் புலிகள் அவரை ஒரு தடவைதான் கைது செய்தார்கள், அப்படியே கொன்று புதைத்துவிட்டார்கள்.
நாங்கள் தமிழக அரசின் கைதுகளைக் கண்டிக்கிறோம். சீமான், கொளத்தூர் மணி ஆகியோரின் கைதால் கவலையுற்றிருக்கும் தோழர்களின் துயரில் நாங்களும் பங்கெடுக்கிறோம். புலிகளிடம் ஆயிரக்கணக்கானவர்களைப் பலி கொடுத்துவிட்ட துயரிலும் இனியும் பறிகொடுக்கப்போகும் பதற்றத்திலுமிருக்கும் எங்கள் உணர்வுகளிலும் பங்கெடுக்குமாறு அந்தத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம். புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்கு எதிராக இந்தத் தோழர்கள் வருங்காலங்களிலாவது குரல் கொடுக்க வேண்டுமென விரும்புகிறோம். இதன் முலம்தான் கருத்துச் சுதந்திரம் மீதான அவர்களது வேட்கை முழுமை பெறுமென வலியுறுத்தவும் விரும்புகிறோம்.
இரு பின்குறிப்புகள்:
1. சிறைச்சாலை, பூஞ்சோலை என்பதெல்லாம் சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் விவகாரங்களில் சாத்தியமானது. ஆனால் அப்சல் குரு போன்ற எண்ணற்றவர்களுக்கு இந்திய அரசு சட்டபூர்வமான உதவிகளைக் கூட மறுத்திருக்கிறது என்ற புரிதலுடனேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.
2. புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைப் படிக்கும் ஒருவர் கொடுப்புக்குள் ஓர் ஏளனப் புன்னகையுடன் ‘துரோகிகள் கொல்லப்படத்தான் வேண்டும்’ என முணுமுணுப்பாரானால் அவருக்குக் கருத்துச் சுதந்திரம், வன்முறை எதிர்ப்பு, மணதண்டனை ஒழிப்புக் குறித்தெல்லாம் பேச எந்த யோக்கியதையும் கிடையாது என்பதை ஒருகணம் மனதில் நிறுத்திக்கொண்டு விட்ட இடத்திலிருந்து அவர் புன்னகையைத் தொடராலாம்.
புலிகளிடம் ஆயிரக்கணக்கானவர்களைப் பலி கொடுத்துவிட்ட துயரிலும் இனியும் பறிகொடுக்கப்போகும் பதற்றத்திலுமிருக்கும் உங்கள் உணர்வுகளிலும் நாமும் பங்கெடுக்கிறோம்.
எல்லாம் சரிதான்,
இதை நீங்கள் சொல்வதைத்தான் ஏற்க முடியவில்லை
-வே. மணியரசன்
புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைப் படிக்கும் ஒருவர் கொடுப்புக்குள் ஓர் ஏளனப் புன்னகையுடன் ‘துரோகிகள் கொல்லப்படத்தான் வேண்டும்’ என முணுமுணுப்பாரானால் அவருக்குக் கருத்துச் சுதந்திரம்இ வன்முறை எதிர்ப்புஇ மணதண்டனை ஒழிப்புக் குறித்தெல்லாம் பேச எந்த யோக்கியதையும் கிடையாது என்பதை ஒருகணம் மனதில் நிறுத்திக்கொண்டு விட்ட இடத்திலிருந்து அவர் புன்னகையைத் தொடராலாம்.”
மேற்படி குறிப்பு மட்டும் ஓகே. மற்றும்படி அவனனவன் வயிறுவளக்க வழிபண்ணுறாங்கள். அவங்களுக்கு போய் கருத்துச்சொல்லிக்கொண்டு…
இந்தியா ஒரு அரசாங்கம்.அத்துடன் அது தன்னை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறுகிறது.அத்துடன் அங்கு சட்டத்தின் பேரால் ஆட்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது.அதனுடன் ஒரு விடுதலைக்காக போராடுவதாக கூறப்படும் இயக்கத்தை எப்படி ஒப்பிட்டு எழுத தோன்றிற்று?இது உங்கள் அரசியல் அறியாமையே காட்டுவதாக இருக்கிறது.அத்துடன் இந்தியாவை மறைமுகமாக நியாயப்படுத்த முனைகிறதோ என்ற ஜயப்பாட்டை தோற்றுவிக்கின்றது.எமக்கு புலிகளைவிட மிகப்பெரிய எதிரி இந்தியாவே என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்.
முகில்
ஆக எங்களுக்கு புலி எதிரிதான்
உலகின் அனைத்துப் புரட்சிகர போராட்ட வரலாறுகளில் நடைபெற்ற நீதியற்ற படுகொலைகள் சார்ந்து ஒரு முழமையான கட்டுரையை முன்வைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். அதுதான் பிரச்சாரத் தொனியற்ற அறிவியல் நேர்மையைக் கொண்டிருக்க முடியும்.
துரதிஸ்ர வசமாக அனைத்துப் புரட்சிகர வரலாற்றிலும் போராட்ட வரலாற்றிலும் நீதியற்ற படுகொலைகள் எனும் கறை படிந்தே கிடக்கிறது. ஒக்டோபர் புரட்சியின்போது நடைபெற்ற நீதியற்ற படுகொலைகள் பற்றிவிபரங்கள் இப்போதுதான் வெளிவர ஆரம்பிக்கின்றன. அறியப்படாதவைகள் இன்னும் ஏராளம். போரட்டங்கள் என்றால் ஏதோ கடவுள் வழிபாடென்றும் அதில் எந்த நீதியும் மீறப்பட முடியாதென்பதும் குழந்தைத் தனமான விவாதம். இது ஒரு பிரச்சாரத்திற்கு மட்டுமே ஒத்துவரும.
வரலாற்றினூடான ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு இது தெளிவாகவே புரியும்.
ஜனநாயக ரீதியாக நிறுவப்பட்ட அரசுகளின் பயங்கரவாதத்தையும் அவற்றின் அநீதித் தண்டனைகள் பற்றியும் ஒரு கட்டுரையை விரிவாக எழுதலாம். ஒரு வரலாற்றாசிரியன் வாழ்க்கை முழுவதும் எழுதுவதற்கான விடயங்கள் இது சம்பந்தமாக உண்டு.
ஆனால் புலியெதிர்ப்பை மட்டும் நோக்கமாகக் கொண்டியங்கும் சிந்தனைத் தளத்தில் முழுமையான அறிவுசார்ந்த ஒரு நீதிப்பார்வையை எதிர்பார்க்க முடியாதுள்ளது என்பது ஒரு வகையில் கவலைக்குரிய விடயமே.
அறிவிற்கு முரண்பட்ட புலியெதிர்ப்பு அரசியலில் எதிர்க்கப்படும் விடயமே எதிர்க்கும் கருவியாகவும் பரிமாணம் பெற்றிருப்பது இங்கு வெள்ளிடை மலை.
இன்றைய ஒட்டுமொத்த உலகின் கொடூர முகத்தை ஏதோ ஒரு இடத்தில் மட்டும் சுட்டிக்காட்டுவதன் அரசியலோ அன்றில் உளவியலோ சந்தேகத்திற்குரியதாகிறது.
கருத்துச் சுதந்திரம் பற்றிப் பிரலாபம் செய்பவர்களுக்கும் விளப்பரபக் கம்பனி நடத்துபவர்களுக்மிமையில் ஒரு தீர்க்கமான ஒற்றுமையுண்மடு.
விளப்பரத்தின் உள்ளீடுகள் பற்றியோ அலல்து அதன் அறம் பற்றியோ கம்பனிகள் அக்கறைப்பட்டுக்கொள்வதில்லை. காரணம் விளப்பரக்கம்பனிகளின் நோக்கம் அதுவல்ல.
செயலாற்றல் தளமும் கருத்தியல் தளமும் வேறுவேறானவை. கருத்தியல் பலவேளைகளில் செயலாற்றல் தளத்திற்கு முற்றிலும் அந்தியப்பட்டிருந்ததை வரலாறு காட்டி நிற்கிறது.
அறிவியல் என்பது ஒரு விடயம் சார்ந்து முழுமையான பார்வை முடிந்தளவில் முன்வைப்பதுவே. துண்டு துண்டான சம்பவங்களை துண்டாடக் கூடாத இடத்தில் துண்டாடி பொருத்தமற்ற இடத்தில் ஒட்டிவிட்டு இதுவே புத்திசாலித் தனமென்று மார்தட்டிக்கொளவதில் ஒரு குழந்தைத் தனம் மட்டுமே வெளிப்பாடடைய முடியும்.
சோபாசக்தி அவர்கள் எழுதிய இரண்டு அரசியல் கட்டுரைகளையும் படிப்பவர்களுக்கு இந்தியஅரசு தொடர்பாக ஒரு மறைமுகமான ஆதரவு உள்ளதோ என்ற ஜயப்பாட்டை தோற்றுவிக்கிறது.எனவே சோபாசக்தி அவர்கள் தயவு செய்து இந்திய அரசு தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சோபாசக்தி! நீர் கருத்துச்சுதந்திரத்தை நீண்ட காலமாகவே பேசியும் எழுதியும் வருகினறவன் என்ற வாக்கியங்களைப் பார்த்தபொழுதும் வோலதயரின் கூற்றுக்களை விசுவாசிப்பவன்; சுவாசிப்பவன் எனபதைப் படித்தபொழுதும் எனக்கும் நெஞ்சு திக்கென்றாகிவிட்டது! நீர் அரசின் காலில் மண்டியிட்டுள்ள ஐனநாயக நீரோட்டக்காரர்களுடனும். கருணா பிளளையான் போன்றவர்கள். அவர்களின் புலம்பெயர் பிரதிநிதிகளுடன் கூடி குடித்து கும்மாளம் அடிப்பீர்! அவர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளும் நடத்துவீர்! பின்பு அவர்களுக்கெதிராக அழகான இலக்கிய வார்த்தைகளில் பக்கம் பக்கமாக கட்டுரைகளும் வடிப்பீர்! இத என்னே அரசியல்! நீர் அரசியல்ரீதியாக அசல் ரொட்சிசவாதி. ரொட்சிசவாதிகள் விலாங்கு போன்றவர்கள். விலாங்கு பாம்புக்கும் மீனுக்கும் தலை வாலை மாறி மாறி காட்டும். அதுவே உமது கடந்தகால சமகால வரலாறு! இதை நான் மலசலகூட சிவரில்எழுதவில்லை!
“உலகின் அனைத்துப் புரட்சிகர போராட்ட வரலாறுகளில் நடைபெற்ற நீதியற்ற படுகொலைகள் சார்ந்து ஒரு முழமையான கட்டுரையை முன்வைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். அதுதான் பிரச்சாரத் தொனியற்ற அறிவியல் நேர்மையைக் கொண்டிருக்க முடியும்.”
சமகால கொலைகளுக்கு நியாயம் தேடும் குரூரம் இது. போரளிக்குழுக்கள் கடவுள்ளல்ல என்றால் அது தனிமனிதன் சோபாசக்திக்கும் பொருந்தக்கூடியதே. கருத்ததுகளில் உள்ள தவறுகளை சுட்டி விமர்சியுங்கள். அதுவே அறிவியல் அறம்.
அறிவிற்கு முரண்பட்ட புலியெதிர்ப்பு அரசியலில் எதிர்க்கப்படும் விடயமே எதிர்க்கும் கருவியாகவும் பரிமாணம் பெற்றிருப்பது இங்கு வெள்ளிடை மலை.
இன்றைய ஒட்டுமொத்த உலகின் கொடூர முகத்தை ஏதோ ஒரு இடத்தில் மட்டும் சுட்டிக்காட்டுவதன் அரசியலோ அன்றில் உளவியலோ சந்தேகத்திற்குரியதாகிறது.
கருத்துச் சுதந்திரம் பற்றிப் பிரலாபம் செய்பவர்களுக்கும் விளப்பரபக் கம்பனி நடத்துபவர்களுக்மிமையில் ஒரு தீர்க்கமான ஒற்றுமையுண்மடு
உங்களின் கருத்துகள் மிக சாpயாக இருக்கிறது. இங்கே புலிகளின் பின்னால் பிழைப்பை நடந்திக்கொண்டு மகக்ளின் அன்றாட பிர்ச்சனைகளில் தலையிடாமல் வாய்சவடால் அடிக்கும் சீமான் தனது நிலை மாற்றிக்ககொள்ளவேணடும்.
ஐயனீர்!
இன்றுவரை கிழக்கு> வடக்கில் யாழ்> வன்னி என்று எத்தனை மோசமான அநியாயங்களை மக்கள் அனுபவிக்கிறார்கள். போடப்படும் குண்டுகளால் துடித்துப்போகும் ஒரு குழந்தைக்காகக் கூட பரிந்துபேச முனையாத உங்கள் உணர்வு சீமான் போன்றவர்களின் பேச்சுக்கெல்லாம் துடித்தெழுவதன் மர்மம் என்னவோ? எல்லாக் கட்டுரைகளிலும் மிஞ்சிப்போனால் ஒரு வரி இரு வரியில் மட்டும் அரச பயங்கரவாதத்தை தொட்டுச் செல்லும் உங்கள் நடுநிலைமை அ. மார்க்ஸ புகழ்வது பொல சொல்லி வேலையில்லை.
சோபா ஓர் இந்திய சிங்கள கைக்கூலி.இலங்கையில் இருந்து மக்களை திரட்டி போராடமல் பிரான்ஸ் ல் ஒளிந்த்து கொண்டு குரைக்கும் நாய்.பின் நவீனத்துவம் என்ற பெயரில் சீரழிவு கலாச்சரத்துக்கு வித்திடும் ஒரு இழிவு சிந்த்தனையாளன்.
நாச்சியார்
பச்சிளங்குழந்தையள பந்தாடுறது இலங்கை அரசு மட்டுமல்ல. சீமான்களுந்தான். பிஞ்சுகளை பணயக்கைதியளா வைச்சு புலியள் ஆடுற தற்காப்பு யுத்தத்துக்கு கொடிபிடிக்கவேண்டம் எண்டு முதல்ல சீமான்களுக்கு படிப்பியுங்கோ
நடுநிலமை எண்டு ஒணடு இலலையெண்டு படிச்சனாங்கள். நாங்கள் புலியளுக்கு எதிர். விரும்பினா வசதியா நாங்கள் அரசுக்கு ஆதரவெண்டு மாத்திப்போடுங்கோ
சோபா எனது பின்னூட்டம் எங்கே..? இது தான் உனது கருத்துரிமையா.? உன்னை தப்பிக்க விட்டது தான் புலிகள் செய்த வரலாற்றுத் தவறு…
எல்லோரின் பார்வையும் விடுதலைப் புலிகளை நோக்கி சுட்டுவிரல் நீட்டி பழி சுமத்துவதுதான். சரி அது அவர்கள் கருத்து சுதந்திரம். விட்டு விடுகிறேன். இன்றைய ஆனந்தசங்கரி, டக்ளஸ், கருணா, பிள்ளையான் எல்லோரும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம், ஜனநாயாக(?) நீரோட்டத்துக்குள் கலந்துவிட்டோம், என்கிறார்களே இன்றும் நேற்றும் வன்னியில் துடிக்க துடிக்க கொன்ற இயந்திரக் கழுகின் தாக்குதலை கண்டித்து ஒரு அறிக்கை விட்டார்களா? சீச்சீ அறிக்கை விட்டவர் ஆனந்தசங்கரி. தனக்கு வடக்கு மாநில பதவி எதுவும் கிடைக்கல் என்ற வெப்பியாரத்தில் டக்ளஸ் செய்யும் கொடுமைகளை கண்டித்துத்தான் அறிக்கை. வி.பு இல்லாவிட்டல் இந்தளவிற்கு இலங்கையில் தமிழரை தொலைத்து இருப்பார்கள். இன்று வி.பு செய்வதை அவர்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் செய்வார். வே.பி இல்லாவிட்டால் இன்னொருவர் வந்திருப்பார். இதுதான் நியதி. எதையும் எவரும் தேடிப்போகவில்லை. இன்று நடப்பது எல்லாம் எம்மீது திணிக்கப்பட்ட ஒன்றே. இது இவர்கள் இல்லாவிட்டல் இன்னொருவர் செய்திருப்பார். செய்வார்.
உங்களைப்போலவே நானும் சொல்கிறேன். வி.பு வை நீங்கள் 100% எதிர்த்தால் நான் அவர்களை 1000% ஆதரிப்பேன்.
இங்கே “விசரன்”, ” நாச்சியார்” கருத்துக்களை மனதார ஆதரிக்கிறேன்.
//கொங்கு தமிழன் – சோபா ஓர் இந்திய சிங்கள கைக்கூலி.இலங்கையில் இருந்து மக்களை திரட்டி போராடமல் பிரான்ஸ் ல் ஒளிந்த்து கொண்டு குரைக்கும் நாய்.//
அப்படியானால் வெளிநாட்டில் உள்ள புலி வீரர் எல்லாம் இலங்கையில் இருந்து மக்களை திரட்டி போராடமல் வெளிநாட்டில் ஒளிந்த்து கொண்டு குரைக்கும் நாய்கள்.
சோபா நீங்கள் என்ன அவ்வளவுக்கு பலவீனமானவரா? கொங்குதமிழன் எங்கேெ எனது பின்னூட்டம்என்று விட உணர்ச்சிவசப்படுகிறீர்கள்.
தயவுசெய்து உதுபோன்றவற்றை தவிருங்கள்!
அவர்கள் வீணேசொறிகிறார்கள்..
தடித்த வார்த்தைகளை பயன் படுத்தியதுக்கு மன்னிக்கவும்..!நாம் உணர்வுகளால் வழிநடத்த படுகிறோம்.
சத்தியகடதாசியின் நீண்ட கால வாசகன்.அதன் வெளியீடுகள் அனைத்தயும் வாசித்தவன்..
கிளிநொச்சி நகர் அரசகட்டுப்பாட்டினுள் வீழ்ந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். எங்களை இவ்விதம் தலைகீழாக்கியது புலிகள்தான் என்றால் மானமுள்ள விசர் நாச்சியார் ஒத்துக்கொள்வார்களா? ஒன்றல்ல ஆயரம் தடவை சொல்கிறோம் ‘உங்களுக்கு நாங்கள் துரோகிகளாக இருப்பதையிட்டு பெருமைதான்
புலிகளை ஆதரிப்பது அல்லது புலிகளை எதிர்ப்பது என்பது ஒருபுறமிருக்க தழிழர்களின் நாளைய வாழ்க்கைக்கு எது உகந்தது என்பதைப் பற்றியதான ஒரு ஆய்வுதான் அவசியமானது.
சோபாசக்தி போன்றவர்கள் தமது தீவிர தமிழ் எதிர்ப்புப் பின்னணியிலிருந்துதான் அனைத்து விடயங்களிலும் தீரப்பை வழங்குகிறாரகள்.
சோபாசகத்தியின் சிறுகதைகள் அவரின் நாவல்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் வகையில் அவர் ஒரு தீவிர தமிழ் எதிர்ப்புவாதியென்பது தெளிவாகப் புலனாகிறது. (அவ்வாறிருக்கும் உரிமை அவருக்குண்டென்பதை உறுதிப்படுத்த உயிரையும் கொடுத்தல் தகும்).
ஆகவே தனது தமிழெதிர்ப்பைத்தான் அவர் புலியெதிர்ப்பாக மாற்றியிருக்கிறார் என்பதை முதலில் புரிந்து கொண்டால் எல்லாக் குழப்பங்களுக்குமாக விடையும் கிடைத்து விடும்.
ஆனால் ஆவர் ஏன் தமிழெதிர்ப்பு வாதயாக மாறினார் என்பதைப்ப்றியதான கேள்வி சிறிது அவசரமானதென்றே நினைக்கிறேன். அவர் இன்னமும் எழுதிக்குவித்தபின்தான் இக்கேள்விக்கான பதிலைக் சரியான முறையில் கணக்கிடமுடியும்.
இப்போதைக்கு அவர் ஒரு தீவிர தமிழ் எதிர்ப்புவாதி என்பதை மனதில் வைத்து அவரின் கருத்தாடல்களை உள்வாங்கிக்கொண்டாலே போதுமானது.
இல்லாவிடடால் அவரின் அரசியற்பொறியில் விழுந்துவிடவேண்டிவரும்.
அ.மாக்ஸ்ஸைப் பொறுத்தவரையிலும் முக்கியமாக அவர் ஒரு சிறந்த வாசிப்பாளர். எந்த விடயத்தையும் தலைகீழாகவும் புரட்டிப்போட்டு நிறுவி விடக்கூடிய அறிவாற்றல் அவரிடம் உண்டு.
ஆகவே அ.மாக்ஸ் – சோபா உறவு ‘புரட்சிகர-அறிவியல்’ சார்ந்தது என்பதை மனதிருத்தி விடயங்களைக் காணுதலே நல்லது.
தழிழர்களின் நாளைய வாழ்க்கைக்கு எது உகந்தது என்று யோசிக்குமுன் 25வருடங்களாக தமிழர் தலைமையாக இருந்து புலி கிழித்ததென்ன என் சோசிக்கிறது நல்லது. இவ்வளவ அழிவையும் தந்த புலி இல்லாட்டித்தான் இதுக்குமேல என்ன வந்திடப்போகிறது?
புலி இருந்தபோது அழவைையும் கொலையையும் சிலரின் வயிறு வழளந்ததையும் தான் கண்டோம். இனி சிலவேளை ஏதாவது நல்லமாற்றமும் வரலாம். வராது போனாலும் இதைவிட கெட்டுப்போக இனி என்ன இருக்கிறது.
hands off visaran,,, u r correct
sobha dont use periyar,,, hitlerin varisugal ayyavai payanpatuthuvathai nangal virumpuvathillai
உன் கருதது சுதந்திரம் ஒரு மயிருக்கும் ஆகாது ஷொபா சக்தி.ஒரு இயக்கட்தை முன்னெடுட்டு செல்லும்போது ,ஒவ்வொருவருடய கருதுக்கும் செவிமடுதுக்கொன்டு இருக்கமுடியது.
சோபா, பதுமனை எங்கே கைது செய்தது? ஊகக்கதைகளில் இருட்டில் பதிவிடவேண்டாம். முருகநேசன் இன் அரசியல் என்ன? எத்தனையாயிரம் சிறுவர், இளைஞர்களை கட்டாய பயிற்சிக்கு பிடித்த தேசிய இராணுவ பொறுப்பாளருக்கு சமூகத்தில் என்ன தண்டனை? கோவிந்தன் – கேசவன் தீப்பொறி அரசியலை விட அவர் பிடிக்கப்படும் போது என்.எல்.எவ்.டி யின் தாட்டுவைத்த ஆயுதங்களுடன் கோண்டாவிலில் பிடிக்கப்பட்டார் பாருங்கோ. மாத்தையா கைதுக்கு பல இரகசியங்கள் உள்ளது புலிகள் எப்போதும் மாத்தையா கைது தொடர்பில் முழுமையான விபரம் எதுவும் சொல்லவில்லை. அதைவிட புலிகள் ஒரு இராணுவ அமைப்பு அதன் உள்வீட்டு இரகசியங்கள் சார்ந்தது.உமக்கு 4வருடம் தான் புலி பற்றி தெரியும் . செல்வி கைதுக்கு காரணமிருக்கு…
After Rajiv Gandhi’s assasination, we are slightly hesitant in whole heartedly supporting the tigers and these types of arguments are still confusing us.
ஒரு விடுதலை குழுவிர்கு இது சத்தியமா?பிரபா செய்யவிட்டால் மாத்தயா பிரபாவை கொன்ரிருப்பர், அப்ப நிங்க என்ன செய்திருப்பிங்க
புலிகளும் பிரபாகரனும் இதுவரை செய்தது எல்லாம் சரி என்றால் சிங்கள அரசாங்கமும் செய்ததெல்லாம் சரிஎன்று ஆகுகின்றது. கொங்குதமிழன் போன்று புலிகளும் புலிஆதரவாளர்களும் இயற்கைக்கு விரோதமானவர்கள். சாதாரண பகுத்தறிவான மனிதர்கள் முன்பக்கம் தான் தேடுவார்கள் .ஆனால் கொங்குதமிழன் போன்றவர்கள் பின்பக்கம் தேடுகின்றார்கள். இவர்களால் ஈழத்தமிழர்களின் போராட்டம் 25 வருடங்கள் பின் தள்ளப்பட்டது மட்டும்ல்லாமல் எவ்வளவு மக்கள் உயிரிழந்துள்ளார்கள். எவ்வளவு சொத்தழிவு ஏற்பட்டுள்ளது. இறுதியில் புலிகள் இன்று சேடமிழுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.