கவிதை: சுகன்

கட்டுரைகள்

தியற்புதமான ஓவியமொன்றை என்னை முன்னிலைப்படுத்தி
எதிரி வரைகின்றான்

வேகமாய் ஓடி இளைத்து மூச்சுவாங்கி நின்று நிதானித்து
நடந்து களைத்து ஊர்ந்து முடியாது இயக்கமிழந்து
வீழ்ந்து கிடக்கையில் எதிரி வந்து ஆதரவோடு பற்றுகிறான்

எனது தஞ்சக்கேட்டை அவன் எப்போதுமே சுட்டிக்காட்டியவனல்ல
என்னோடு அவன் எப்போதும் பேசியதுமில்லை
நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமில்லை
நாம் ஒருவருக்கொருவர் கண்ணிற்குத் தெரியாத எதிரிகளுமல்லர்

ஒரு துரும்பாகக்கூட மதிக்காத அவன் கைகளைத் தட்டிவிடுகிறேன்
இம்மியளவும் பிசகாது இவ்விடத்திற்தான் நான் வீழ்ந்துகிடப்பேன்
இவ்விடத்திற்குத்தான் நான் வந்துசேர்வேன்
இந்தக்கோலத்திற்தான் நான் வந்துசேர்வேனென
எதிரி எனது தஞ்சக்கேட்டை இப்போதும் சுட்டிக்காட்டவில்லை
ஆனால் நான் அவன் அப்படிச்சொல்லவேண்டுமென எதிர்பார்த்தேன்
அவனைக் காறித்துப்புவதற்கு எனக்கு ஆயிரங்காரணங்கள் இருக்கின்றன

என்னை உதாசீனப்படுத்த அவன் ஒருபோதும் முயல்வதில்லை
எனது நேர்மையான எதிரி என்னை முன்னிலைப்படுத்தி
அதியற்புதமான ஓவியமொன்றை வரைகிறான்

(தோழர் பரா அவர்களின் முதலாண்டு நினைவாக-)

6 thoughts on “கவிதை: சுகன்

  1. அற்புதமான இடுகை. ஆழமான கவிதை. பேரழிவும் பேருவாழ்வும் ஒரே நாணயத்தின் மறுபக்கங்கள். பார்பவனும் பார்வையும் மட்டும் வேறு.

  2. அன்பு சுகன், இது வெறும் கவிதை மட்டுமல்ல. பாசறைவயப்பட்ட பழஞ் சமூகத்தை காட்டுமிராண்டிகள் என்று கடிந்துகொள்ளும் நாம் இன்று “நாகரிகமான எதிரி”களை உணர்கின்ற ஒரு சொல்லணிச் சூழல்(rhetorical situation) குறித்த ஒரு அறிக்கை(statement). “ridicule” என்ற பிரஞ்சுப் படம் பார்த்திருக்கிறீர்களா?

  3. இல்லையே மோனிகா!
    பெயரைச் சுவரொட்டிகளில் வாசித்ததாக நினைவு.

  4. சுகன்,
    உங்கள் கவிதை அற்புதம். இதைப் போல் ஒரு கவிதையை நான் வாசித்ததே இல்லை.
    ஆமா, கவிஞர் சுகன் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். முதுகு சொறிதல், முதுகு சொறிதல் எண்டு சொல்கின்றார்களே.. அப்படி என்றால் என்ன?

    மோனிக்கா,
    சுகன் புதிய பாசறைக்கு வந்து புதிய சொல்லணியால் சுழட்டி அடிக்கின்றார் என்று நீங்கள் கூறுவதில் உள்ள உண்மையை யார் தான் மறைக்க முடியும். ஆனால், அவர் எதிரி என்பது அவருக்குச் சூப்புத்தடி தராத பொடியன் தான் என்பதையும் யார் தான் மறைக்க முடியும். மோனிக்கா, சுகன் எனக்குச் சொல்லித்தராத இரகசியத்தை நீங்கள் எனக்குக் கூறுவீர்களா? முதுகு சொறிதல், முதுகு சொறிதல் எண்டு சொல்கின்றார்களே.. அப்படி என்றால் என்ன?

  5. முதுகு சொறிதல் முதுகு சொறிதல் என்றால்
    அது தான் அநேகமாக எல்லாமட்டங்களிலும் நடக்கும்.
    அது ஒருவகை ஊடல்.
    அது ஒருவகை காதல்.
    அது ஒருவகை நட்பு.
    அது ஒருவகை பாசம்.
    மரதன் நீங்கள் ஏன் வயித்தெரிச்சல் படுகிறியள்.
    விரும்பினா ஆருக்கும் கிட்டவா நிண்டு நீங்களும் முதுக காட்டுங்கோவன்.

  6. அன்பு திருநா,
    நமக்கு அரசியலில், சமூகம் என்fரு வரும் போது காதல் சார்ந்து சிந்திக்க வராது.
    நாம் யாருக்கும் முதுகு சொரிவதும் இல்லை.
    நமக்கு யாரும் முதுகு சொரிவதை அனுமதித்ததுமில்லை. அனுமதிக்கப் போவதுமில்லை.
    திருநா,
    சோப்பு போடுவது, சோப்பு போடுவது எண்டு சொல்கின்றார்களே. அப்படி என்றால் என்ன?

Comments are closed.