அறிவிப்பு:

அறிவித்தல்கள்

‘தலைகீழ்’

தந்தை பெரியாரின் 35வது நினைவேந்தல்

 



நாள்: ஞாயிறு 28 டிசம்பர் பி.ப. 2 மணியிலிருந்து 8 மணிவரை.

இடம்: Salle De Recontre,Rue Jean francois, 95140 Garges Les Gonesse

 வழித்தடம்: RER D, Garges Sarcelles – Bus: 133

.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்;. இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்”

தலைமை: விஜி

உரைவீச்சுகள்

திராவிட இயக்கமும் சினிமாவும்: அருந்ததி

பெரியாரின் பெண் விடுதலை: நிர்மலா

பெரியார் என்ற பத்திரிகையாளர்: என்.சரவணன்

கலகக்காரத் தோழர் பெரியார்: அசுரா

‘பறை’, ‘உயிர்மெய்’ சிற்றிதழ்கள் குறித்த திறனாய்வு: பௌசர்

பெரியார் நினைவுப் பேருரை: ஷோபாசக்தி

கூட்டு விவாதம்: ‘வெங்காயத் தேசியம்’
விவாத ஒருங்கிணைப்பு: தேவதாசன்

அனைவரும் வருக

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
மின்னஞ்சல்: [email protected] தொலைபேசி: 06 61 80 36 90, 06 60 36 88 04

 

“பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே ஈடேற வழி” – பெரியார் ஈ.வெ.ரா.

10 thoughts on “அறிவிப்பு:

  1. கூட்டுக்கலவி ஒன்றும் ‘இழி’செயல் அல்ல. பகிடி செய்வதற்கு உரிய பொருளுமல்ல. பத்துவருடத்திற்க முந்திய சுகனின் கூட்டுக்கலவி இன்னும் புயலைக்கிளப்பிய படிதான் இருக்கிறது.
    இந்த இடத்தில் சுகன் முக்கியபடைப்பாளிதான்.
    சுகன் அவர்களிடம் ஒரு கேள்வி.
    கூட்டுக்கலவி கதையை நீங்கள் எழுதவேண்டியிருந்ததன் தேவை என்ன? எப்படி அந்த கருவைத் தேர்ந்தெடுத்தீர்கள்? அந்தக்கதை புகலிட இலக்கியசூழலில் ஏற்படுத்திவரும் தாக்கம் பற்றி பத்துவருடங்களின் பின் இன்று என்ன நினைக்கிறீர்கள்?

    பெரியாரின் இந்நினைவேந்தல் தருணத்தில் பகுத்தறிவை வளர்த்துக்கொள்வது பெரியாருக்கு கவுரவம் தருதலே!

  2. ‘தலைகீழ்’ கூட்டம் பற்றி ‘பின்னூட்டம்’ ‘தலித்நெற்’ ஆகிய இணையத்தளங்களின் அறிவிப்புகளில் ஈபில் கோபுரம் உயாந்து எழுந்து நிற்கிறது.ஈபிலின் குறியீடு பிரான்சின் தலை நகரைக்குறிப்பது மட்டுமல்லவே.பெரியாரின் நினைவுக்கூட்டத்திற்கு இச்சின்னத்தின் துணை தேவையில்லை என்பது எனது அபிப்பிராயம்.தலித்முன்னணியினர் இதைக்கவனத்திலெடுத்து தவிர்க்கும்படி வேண்டுவார்களா?

  3. நான் தலித்முன்னணி என எழுதியதை ‘இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ என்பதாக திருத்தவும்.
    நன்றி

  4. அன்புடன் வசந்த்!
    சமீபத்தில் அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன்,
    கூட்டுக்கலவியின் ஆரம்பக்காலக்கட்டத்தில் இருந்தபோது எழுதிய மிகச்சாதாரணமான கதையது.இப்போது பார்க்கும்போது மோசமான குப்பைக்கதை.
    கதைக்கான காரணங்களை நமது மரபு தேடுவதில்லை.அது ஒரு நல்ல மரபு.
    அதன் அடியாகப் பிறந்ததுதான் “கதையாம் கதையாம் காரணமாம் காரணத்தில் ஒரு பூரணமாம்”
    தெணியானின் கதைகளைப் படித்திருக்கிறீர்களா?
    போர்க்கால இலக்கியம்..போர்க்கால இலக்கியம் என்று இரண்டாயிரத்தில் ஒரு இலக்கியப்போக்கு அடையாளப்படுத்தப்பட்டது.நாமும் மிகவும் ஆவலோடு அதன் வரவை எதிர்பார்த்தோம்.தற்போது அதுபற்றிய பேச்சையும் காணோம்,போர்க்காலம் தொடர்கிறது..ஆனால் அத் தனித்த இலக்கியவகையை உச்சத்திற்கு வளர்த்தெடுத்திருக்கவேண்டும்.
    தலித் இலக்கியத்தை ஏற்றுக்கொளாதவர்களுக்கு ஒரு ஆறுதலாகவும் தற்காலிகமாகவேனும் ஆசுவாசத்தை அளிப்பதாக அது இருந்தது.பேராசிரியர் சிவத்தம்பி அதில் கையை நனைத்திருக்கவேண்டும்.நனைத்தாரா துடைத்தாரா..!
    யாழ் பல்கலையை ஏதோவெல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறார்கள் !
    என்னருமை யாழ்ப்பாணமே!!!!!!

  5. “பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே ஈடேற வழி” – பெரியார் ஈ.வெ.ரா.
    நண்பர்களே!
    தாங்கள் வெளியிட்டு பெரியாரின் மேற்குறிப்பிட்ட மேற்கோள்…
    மிகப் பொருத்தமானது இக் காலத்திற்கும்….
    எக் காலத்திற்கும்…
    எனது கேள்வி என்னவெனில்…
    பெரியாரின் கருத்துக்களுக்காக கதைக்கும் வாதாடும்…
    நம்மில் எத்தனை பேர்…
    நமது மொழியுடனான அடையாளத்தையும் பற்றையும்…
    நமது சாதியுடனான அடையாளத்தையும் பற்றையும்…
    நமது மதத்துடனான அடையளத்தையும் பற்றையும்…
    நமது தேசத்துடனான அடையாளத்தையும் பற்றையும்…
    பிரக்ஞைபூர்வமாக கடந்துள்ளளோம்?????
    பிரக்ஞைபூர்வமாக கடப்பதற்குத் தயார்???????
    இவ்வாறு கடப்பது என்பது …
    பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதால் மட்டும் நடைபெற்றுவிடாது…
    வேண்டுமெனில் இது முதற்படியாக இருக்கலாம்…
    ஆனால் நாம் அதையும் கடந்து செல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம் என்றால் மிகையல்ல…
    ஏனனில் மேற்குறிப்பிட்ட…
    மொழி மதம் சாதி தேசம் பால்…அடையாளங்கள்…
    நமது இரத்தங்களில் மட்டுமல்ல…
    எலும்பு மச்சைகளிலும் ஆழமாக வேருண்டியுள்ளது…
    இதை வேருடன் பிடுங்கி எறிவதற்கு…
    நம்மிடம் இருக்கும் ஒரே கருவி …வழி…
    பிரக்ஞை மட்டுமே…
    ஒவ்வொரு கணமும் பிரக்ஞையுடன் வாழ்வதே…
    இந்த அடையாளங்களை கடப்பதற்கான வழி…
    முடியுமா என முயன்று பாருங்கள்…
    நானறிந்த வரை…புரிந்த வரை….
    நமது எழுத்துக்களில் பேச்சுக்களில் இருக்கும் தெளிவு புரிவு…
    நமக்குள் இல்லை…
    நமது இரத்தங்களில் இல்லை…
    ஆகவே நண்பர்களே….
    உண்மையிலையே நாம் இக் கட்டுப்பாடுகளிலிருந்து வெளிவர விரும்புகின்றோமாயின்…
    நம்மை நாம் முதலில் மாற்ற வேண்டும்…
    இதற்கு எத்தனை பேர் தயார்????????
    நன்றி
    மீராபராதி
    http://AWAKENINGAWARENESS.org

  6. சுகன்-
    கூட்டுக்கலவி அந்தக்கதை புகலிட இலக்கியசூழலில் ஏற்படுத்திவரும் தாக்கம் பற்றி பத்துவருடங்களின் பின் இன்று என்ன நினைக்கிறீர்கள்?

    கூட்டுக்கலவி அசிங்கம் விசவாயு என்று சொல்லித்திரிகிறவர்களால் ஏன் கூட்டுக்கலவியை விட்டுத்தொலைக்கமுடியவில்லை?

  7. ஓரு அரசியல் சூதாட்டத்தின் நடுவே நின்று கொண்டு // உன்னையே நீ அறிவாய் )) உன்னைத்திருத்திக் கொள் உலகம் தானாகத் திருத்தும் போன்ற புகழ் பெற்ற விசிலடீக்கான்n குஞ்சுத் தத்துவங்களை போற்றி வாழம் மீராபாரதியான என்னுயிர்த் தோழனே இத்தனைகால அரசியல் சூதாட்டத்தில் கற்றுக்கொண்ட பட்டறிவு இவ்வளவும்தானா ?? கொஞகமாவது வெட்கப்படு!!!

  8. நண்பரே!
    வெட்கப்படவேண்டியது நான் மட்டுமல்ல…
    நாம் அளனவரும்…
    நமது அறியாமையை நினைத்து…
    நாம் கற்றது கடுகளவு என்பதை…
    நாம அறியாதது…
    வெட்கப்படவேண்டியத நான் மட்டுமல்ல…
    நாம் அனைவரும்…
    என்னை திருத்துக்கொள்வதல்ல…
    என்னை அறிந்து கொள்வதே முதல் முக்கியமானது…
    என்னை அறிந்து கொள்ளாது…
    எப்படி திருத்துவதாம் நண்பரே…
    நண்பரே…
    எனக்கு ஒன்றும் தொpயாது …
    என்று கூறுவதில்…
    எனக்கு எந்த வெட்கமும் இல்லை…
    நன்றி…

  9. நண்பரே!!!
    நீர் கூறியபடி…
    இன்று நடைபெறும் அரசியல் சூதாட்டத்திற்கு…
    நாம் அனைவரும் பொருப்பு…
    அதற்காக நாம வெட்கப்படவேண்டும்…
    நமது அறியாமை…
    நம்மை அறியாமை…
    இன்றைய சூதாட்டத்திற்கு காரணம்…
    என்பதை அறியாமைக்காக…
    நாம் வெட்கப்படவேண்டும்…
    வெட்கப்டுவோமாக!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *