கலா: குருநகர், கிளிநொச்சி, பண்டிவிரிச்சான், மன்னார், மண்டபம், சென்னை, ஸ்ருட்கார்ட், போ இப்படியாக அலையும் நாடோடி.தற்காலிக முகவரி :ஒல்நே சு புவா
சிவராசா: பத்துவருடங்களாக விசாவற்றவரும், கலாவின் கணவரும், இரண்டு குழந்தைகளின் தந்தையும்.
“அப்பா, உங்கண்டை பத்துறோன் வந்து நிக்கிறானப்பா!”
“திற,திற”
“சிவராசா!சவாப்பா!”
“பொன்சூர் மிசியூ!”
“ரிகோல்பா!”
“பியர் குடிக்கிறீர்களா?”
நோ!நோ!வா தபியே!, டெபேஸ்துவா!”
“நான் வரயில்லை!வரமாட்டேன்!வேலை செய்த காசு இருந்தா கணக்குப்பாத்துத் தந்துவிட்டுப்போ!”
“இஞ்சைபார்!உனக்கு விசா இல்லை!இதோடை நாலுபேற்ரை விசா மாத்திப்போட்டாய்! இப்பசெய்யிற விசாக்காறனுக்கு மாதம் நூறு ஈரோ குடுக்கிறனி எண்டு சொல்லி சம்பளத்திலை நூறு ஈரோ கூட்டித்தரச் சொல்லிக்கேட்டு கூட்டித் தந்தனான்!”
“நான் உன்னட்டை இப்ப ஏதாவது கேட்டனானோ? நான் வரயில்லை!கணக்கை முடி!”
“இதுக்கு முதல் ஆரோ ஒரு வையூவின்ரை விசாவைக் கொண்டு வந்தாய்!அந்தக் கிறிமினல் ஆறுவருசம் உள்ளுக்கை இருந்துவிட்டு வந்திருக்கு!பொலிஸ்தேடி கடையுக்கை வருகுது!”
“அந்தப் பிரச்சனை எப்பவோ முடிஞ்சுதே!”
“பர்ல்பா நம்போத்துக்குவா! பலத் எல்லாம் அப்பிடியே கிடக்கு!கடையிலை ஒருத்தரும் இல்லை, டெப்பேஸ்துவா!”
“உன்னைமாதிரி ஒரு கேவலங்கெட்ட பத்திரோனை பிரான்சிலை நான் காணயில்லை!”
“அந்த பியரைக்கொண்டுவா!”
********
“அந்தப் பூவல் எடுத்துச் சாப்பிடுற மனிசி கேட்டுது; முந்தி கபே எல்லாம் குப்பையில போடுவீங்கள், இப்ப ஏன் போடுறயில்லை எண்டு!எலி கடிச்சுப் போட்டுபோற போமாஸ் எல்லாம் நிறையக் கொட்டுறீங்கள்! அதைச் சாப்பிடலாந்தானே எண்டு!எங்கண்டை வாழ்க்கை எலியிலையும் கேவலமாப் போட்டுது!எண்டு அந்த மனிசிக்குச் சொன்னன்!”
“அப்பா!உங்களைவிட்டா எனக்கும் பிள்ளையளுக்கும் ஆரப்பா இருக்கினம்? ஏனப்பா உப்பிடி இருக்கிறீங்கள்!”
“கலா!அம்மா சொல்லுவா; பசித்தார் பொழுதும் போம்!போம்!பாலோடன்னம் புசித்தார் பொழுதும் போம்!போம்!”
“வேலை முடிஞ்சா நேரத்தோடை வீட்டை வாங்கோப்பா!புத்தகம் வாங்க எண்டு நிக்காமை!ஆரோ இயக்கத்துக்கு எதிரா கதைச்சுப்போட்டானாம் எண்டு அடிபட்டவங்களாம்! ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு இருக்கவேண்டிக்கிடக்கு!”
இருபத்தைஞ்சு வருசக் கிறெடிற்றிலை வீடு வாங்கிறீங்கள்!வீடு உங்கண்டை எண்டு நினைச்சா உங்கண்டை, பாங்கின்றை எண்டு நினைச்சா பாங்கின்றை !இருபத்தைஞ்சு வருசம் வீடு ஆற்ரை?
“கலா! அம்மா பாடுவா, பிள்ளைக்குப் பொன்னால் எழுத்தாணி!பட்டோலைப் புத்தகங்கள்!பெரியமாமா கொண்டருவார், பெரிய பட்டணச் சேலைகளும்!சின்ன மாமா கொண்டருவார், சின்னப் பட்டணச் சேலைகளும்!ஆசை மாமா கொண்டருவார்,ஆறு பட்டணச் சேலைகளும்!………….கலா! அம்மாவுக்கு என்னவோ நடக்கப்போகுது!”
( முதலாம் அங்கம் முடியலாயிற்று)
நாடகத்தைவிட படங்கள் நல்லா இருக்கு.
இணைய நாடகம் எண்டுபோட்டா மொழியில கவனமாயிருக்கிறது நல்லது. இணைய வாசகர் பிரெஞ்சு மொழி தெரிஞ்சாகக்களில்லையே. இல்லாட்டி கொமனா ஒரு புது மொழியஉருவாக்க மண்டையப்பிச்சிருக்கலாம்.
வன்னிமோதலில் புலிகளுக்கு பாரிய இழப்பு!
நிரையாக அடுக்கிவிட்ட உடல்களின் மேலே நின்று மகிழ்ச்சி கொண்டாடுகிறோம். எவ்வளவு விவகாரமாகிவிட்டோம் நாம்.
புலியின் தோல்வியைும் ராணுவத்தின் வெற்றியையும் எந்தவித கேள்வி பின்நோக்கற்று ஏற்றுக்கொள்கிறோம். மகிழ்சின்றோம் எங்களை இவ்விதம் ஆக்கியது புலிதான். ஆனாலும் அதற்கும் அப்பால்போய் அடுக்கிவிட்ட உடல்கள்மேலே நின்று மகிழ்ச்சிகொண்டாடுவது எங்களின் மனவிகாரத்தையே காட்டுகிறது. எச்சரிக்கை கொள்ளவேண்டிய இடம்!!!!!
எல்லாருக்கும் விழங்கிற மாதிரி இருந்தால் இன்னும் நல்லது