நூல் விமர்சன அரங்கு

அறிவித்தல்கள்

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி நடத்தும் நூல் விமர்சன அரங்கு:

 

இலங்கையில் சாதிய முறையின் தோற்றம், அதன் இயங்குதிசை, தாழ்த்தப்பட்ட மக்களின் சாதியத்திற்கெதரான போராட்டத்தின் நீண்ட வரலாறு, சாதியப் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு, தமிழ்த் தேசியமும் சாதியமும் என விரிந்த தளத்தில் வெகுஜனன் (சி.கா. செந்திவேல்) இராவணா (ந.இரவீந்திரன்) இணைந்து எழுதிய வரலாற்று ஆய்வு நூலின் செழுமைப்படுத்தப்பட்ட புதிய பதிப்பு:

 

“இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்”

 

தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவரும், சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் முன்னோடிகளில் ஒருவரும், இலங்கைப் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இலங்கைத் தலித் மக்களின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியுமான மறைந்த தோழர். எம்.சி. சுப்பிரமணியத்தின் வாழ்வையும் பணியையும் ஆளுமையையும் சித்திரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு

 

“எம். சி : ஒரு சமூக விடுதலைப் போராளி”

 

வரலாற்றைப் போல சிறந்த ஆசான் வேறில்லை. சமகாலத் தலித் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்குக் கடந்தகால தலித் மக்களின் போராட்ட வரலாறு குறிந்தும், முன்னோடித் தலித் தலைவர்கள் குறித்தும் ஆழமான வாசிப்பும் கூர்மையான விமர்சனப் பார்வையும் நமக்கு அவசியமானவை. சாதியொழிப்பில் அக்கறையுள்ள தோழர்கள் அனைவரையும் விமர்சன அரங்கில் கலந்துகொள்ளுமாறும் தொடரும் கலந்துரையாடலில் பங்கெடுக்குமாறும் அழைக்கிறோம்.

 

இடம்: சபாலிங்கம் அரங்

குGrges les Gonesse

Alee jules ferry

நாள்: 21 செப்டெம்பர் 2008 ஞாயிறு பி.ப 2 மணியிலிருந்து 7 மணிவரை

தொடருந்து வழித்தடம்: RER D, தரிப்பு:Sarcelles

 

கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்!

-பாபா சாகேப் அம்பேத்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *