இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் 2007, ஒக்டோபர் 20-21 களில் பாரிஸில் நடாத்தப்பட்ட முதலாவது தலித் மாநாட்டின் தொடர்ச்சியாக இலங்கை தலித் மக்களின் எதிர்கால சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றம் கருதிய வேலைத்திட்டங்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் இரண்டாவது தலித் மாநாடு 2008, பெப்ரவரி 16 – 17 களில் லண்டனில் நடத்தப்படவுள்ளது.
இலங்கையில் தமிழினம் அருகி வரும் வேளையில் இது போன்ற ‘தலித்’ என்று இனம்பிரித்தல் அவசியமோ எனத்தோன்றுகிறது!.
ஒன்றுபட்டு முன்னேறுவோமே.
தலித் மகாநாடுகள் மிகவும் முக்கியம் ஆனால் இலங்கையில் உள்ள தலித்துகளுக்கு இது சம்பந்தமாக என்ன பிரயோசனம் கிடைக்கப்போகிறது என்று எனக்கு தெளிவாக புரியவில்லை. உடனடியான மாற்றம் ஏற்படுமா? இதற்கெல்லாம் பதில்வேண்டியது முக்கியம் என்று எனக்கு படுகிறது. சரியென்று நான் நினைக்கிறேன்.
இளைய அப்துல்லாஹ்
http://thamizachi.blogspot.com/2008/01/blog-post_3024.html
பெரியாரியம், தலீத்தியம் பேசும் எந்த ஈழத்து தமிழனையும் நம்பிவிடாதீர்கள்..
மன்னிக்கவும்,
இங்கே ஈழத்து தமிழன் என்று குறிப்பிடுவதற்கு காரணம்
வேறு. ஈழத்து தமிழர்கள் சாராசரி குடும்ப வாழ்க்கையில்
இருப்பவர்களை குறிப்பிடவில்லை. அரசியல்
நோக்கத்திற்காக பொது வாழ்க்கையிலும்,
இலக்கியத்துறையில் இருக்கும் தேசத்துரோகிகளைப்
பற்றி குறிப்பிடுகின்றேன்.
தமிழ்நாட்டில் மட்டும் என்ன நடக்கிறது? இங்கேயும் தலீத்தும், பெரியாரியமும் அரசியலுக்கு மட்டும்தானே! ஆனால் தமிழ்நாட்டு சூழல் வேறு, ஈழத்து சூழல் வேறு.
பாரீசில் வெற்றிகரமாக முதலாவது தலீத் மாநாட்டை நடத்தி முடித்து விட்டார்களாம். பிப்ரவரி மாதம் லண்டனில் 2 -ஆவது தலீத் மாநாடு நடக்கப் போகிறதாம். தமிழ்நாட்டை சேர்ந்த அ.மார்க்ஸ் வரபோகிறாராம்.
அய்யா மார்க்ஸ் அவர்களே! கொஞ்சம் அவதானமாயிருங்கள்.
அனுபவம் பேசுகிறது, புரிந்து கொண்டீர்களா?
singam on February 1, 2008 8:13 pm தலித் முண்னணி இலங்கைவாழ் தலித் மக்களுக்கு சேவை செய்வதற்கு அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இதுவரை இலங்கை தலித் மக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருப்பதாக நாம் அறியவில்லை. இவ் முண்னணியைச் சேர்ந்தவாகள் … பிரபல்யப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இவர்களின் நோக்கம் இதுதான்போலும்.
சென்ற ஒக்டோபர் பாரிசில் நடைபெற்ற தலித் மாகநாட்டிற்கு 2491 யூரோக்கள் செலவளிக்கப்பட்டதாகவும் தாம் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் முண்னணியின் வடு சஞ்சிகை கூறுகிறது. இப்போது நாலு மாதங்களுக்குள் அடுத்த மநாட்டை லண்டனில் கூட்டுகின்றார்கள். இம் மநாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து இருவரும் இலங்கையிலிருந்து ஒருவரும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் போக்குவரத்துக்காக குறைந்தது மூவாயிரம் யூரோக்கள் தேவைப்படும் இதர செலவுகளான மண்டபம் உணவு உட்பட ஏனைய செலவகளுக்கு குறைந்தது மூவாயிரம் யூரோக்கள் தேவைப்படும். மொத்தமாக இந்த மகாநாட்டிற்கு குறைந்தது ஆறாயிரம் யூரோக்கள் செலவளிக்கப்படுகின்றது. சரி எம்முள் எழும் கேள்விகள்
1. பொருளாதார நெருக்கடியில் இருக்கும் முண்னணி இவ்வளவு பணத்தை செலவளித்து இரண்டாவது மநாட்டை இவ்வளவு விரைவாக நடாத்த வேண்டிய அவசியம் என்ன?
2. இரண்டு மகாநாட்டு செலவுகளையும் கூட்டும் போது 8491 யூரோக்கள் வருகின்றது. உண்மையில் தலித் முண்னணிக்கு இலங்கை தலித் மக்கள் மேல் அக்கறை இருந்திருப்பின் இப்பணத்தில் சிறிதளவையாவது அந்த மக்களின் மேம்பாடடிற்கு பயன்படுத்தியிருக்க முடியும். இப்பணத்தின் இலங்கைப் பெறுமதி 1,273,650 ரூபாக்கள். வெறுமனமே மநாட்டை நடத்தி தங்களுக்கு ஒளிவட்டங்களையும் பிரமுகர் தகுதியையும் ஏற்படுத்தி கொள்வதற்கு பதிலாக இப் பணத்தை கொண்டு எம் தலித் மக்களுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்க முடியும்.
பாரிசில் நடந்த மநாட்டில்கூட எந்த ஆக்கபூர்வமான விசயங்களும் கதைக்கப்படவில்லை. கதைக்க முற்பட்டவர்களுக்குக்கூட நேரம் ஒதுக்கப்படவில்லை. …. இலங்கைத் தலித் மக்களுக்கு குரல்கொடுப்பதாக பூச்சாண்டி காட்டும் இவர்கள் எங்கிருந்து ஆக்களை அழைக்கின்றார்கள் பாருங்கள். இதன் பின் யோசிப்போம் இவாகள் யாரென்று?
தாழ்த்த பட்டோரின் அடையாளமான நாடார் சமூகம் பஞ்சமருக்கு ( பச்சை தமிழருக்கு ) சமூக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவர்களை நாடார் உறவின் முறையாக அறிவிக்க வேண்டும். இதுவே பெருவாரியான நாடார் மக்களின் விருப்பம்.
நாடார் சமூகம் உடனடியாக பள்ளர், பாராயர், நாவிதர், வண்ணார், சக்கிலியாறை நாடாராக அறிவிக்க வேண்டும்.