சத்தியக் கடதாசியின் வருகையினால்…….
என் னிதயம்
உண்மையின் ஒளிப்பிரதி
மையம் கொண்டு செல்வதனால்……
-சர்ஜுன் அஹமட்-
இலங்கைச்சூழல் மனித வாழ்வுக்கு மிகவும் அச்சுறுத்தலாகவுள்ளது.அரசாங்கமோ விடுதலைப்புலிகளோ மக்களின் நலன்களில் அக்கறை கொள்வதைவிட்டும் விலகி வெகு நாட்களாயிற்று.இந்நிலையில் அரசாங்கத்தின் கிழக்கு வெற்றிக் கொண்டாட்டங்கள் வெறும் கேலிக்கூத்து மட்டுமே என்கிறார் ஜிஃப்ரி.
குறிப்பாக கிழக்கு வெற்றியினால் கிழக்கு மக்களுக்க எந்த நன்மையும் கிடைக்கவில்லை அதிலும் முஸ்லிம்களுக்கு இது எந்த நன்மையையும் தரவில்லை என்பதையும் இக்கவிதை சொல்கிறது.
தோழமையுடன் தமயந்தி, பானுபாரதி,
மிகப் ^பரவலாகவே உயிர் மெய் பற்றிய அறிமுகம் சர்வதேசமெங்கும் இருக்கிறது. சென்ற மாத தினமுரசில் நோர்வேயின் ஆயுத விற்பனை, சமாதானம் பற்றிய கட்டுரை மீள் பிரசுரமாகியிருந்தது. பார்த்தீர்களா?
_ சுகன்_
அப்படியா நண்பா…? மிக்க மகிழ்ச்சி. தினமுரசு எங்களுக்குக் கிடைப்பதேயில்லை. நாம் நோர்வேயின் ஓரு குக்கிராமத்தில் வாழ்கிறோம். இங்கு திரளிமீனே கிடைப்பதில்லையாம் தினமுரசு எப்படிக் கிடைக்கும்? முடிந்தால் உனது தொடர்பைப் பயன்படுத்தி எமக்குமொரு பிரதி அனுப்பிவை பார்ப்போம். “உயிர்மெய் பற்றிய அறிமுகம் சர்வதேசமெங்கும் இருக்கிறது” என்கிறாய் அப்படி எதையும் நாம் உணரவில்லை. மனுஷ்ய புத்திரனால் தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் உயிர்மை என்னும் சஞ்சிகையையும் உயிர்மெய் சஞ்சிகையையும் போட்டுக் குழப்புகிறாயென நினைக்கிறேன். அது வேறு இது வேறு. அது அவர்கள்> இது நாங்கள். உனது கவண் எங்கே இலக்குப் பார்க்கிறதென்று நாம் மிகத் தெளிவாகவே அறிவோம் தோழா. உனது இலக்குப் பிழை. நாம் பங்குனியென்று பருப்பதுமில்லை சித்திரையென்று சிறுப்பதுமில்லை. உனக்கு அனுப்பி வைத்த 3 உயிர்மெய் இதழ்கள் தொடர்பாக நாம் கேள்வி எழுப்பினால் நீ ஏனடா தோழா ஊரானை ஓணானாய் இழுக்கிறாய். அடே சுகா… உன்னைப்போல் நையாண்டியும் நளினமும் வாழ்வாய்க் கொண்ட சமூகத்திலிருந்துதானே கண்ணா நாமும் வந்தோம். பேந்தேனடா இப்படியொரு நயிந்தைத் தனமான எழுத்து. நீ உயிர்மெய்க்கு எழுது. சகல சுதந்திரமும் உனக்கு உண்டு. உனது கலகம்> கட்டுடைப்பு எது வேண்டுமானாலும் எழுது. எத்தனை பக்கம் வேண்டுமானாலும் எழுது. நான்காவது இதழ் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அத்தோடு முடிந்தால் “தீண்டத்தகாதவன்” 20புத்தகம் அனுப்பிவை. (அதற்குரியது சிந்தாமல் சிதறாமல் வந்து சேரும்) முடிந்தால் தொலைபேசி எடு. மீண்டும் ஒன்றை மட்டும் சொல்லி முடிக்க்கிறோம்> நாம் கையில் வைத்திருப்பது போராயுதம். அதை எந்த விலைஞராலும் வாங்க முடியாது. “உயிர்மெய்” இது உயிர் இருக்கும்வரை நான்கு பக்கத்திலேனும் தன்நிலை சிதையாது வந்தே தீரும். “உயிர்மெய்” 17வருடக் கருக்கூட்டலின்பின் பிரசவமாயிருக்கிறது. அதன் பிறப்பைக் கொச்சைப் படுத்தாதே. சமூகக்கடமை உனக்கும் இருக்கிறது என்ற மெய்மை உனக்கு இருக்குமானால் உயிர்மெய்க்கும் எழுது.
-தோழமையுடன் பானுபாரதியுடன் தமயந்தி-
ஒரே இலக்கியக் கிளுகிளுப்பா இருக்கு…
//குறிப்பாக கிழக்கு வெற்றியினால் கிழக்கு மக்களுக்க எந்த நன்மையும் கிடைக்கவில்லை அதிலும் முஸ்லிம்களுக்கு இது எந்த நன்மையையும் தரவில்லை என்பதையும் இக்கவிதை சொல்கிறது….//
இது கவிதை பாடித்தெரிய வேண்டியதொன்றல்ல. காலங்காலமாக தெரிந்த்த உண்மை. ஈழத்து சின்னக் குழந்தை கூடச்சொல்லும். ஆனால் சிலர் கவிதையாய் அழவேண்டி இருக்கிறது. அதற்கு சிலரோ விழுந்தடித்து விளக்கம் சொல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்களும் என்ன செய்ய, இரண்டுபக்கமும் ஆடினால் கவிதையும் விளக்கமும் தான் கைகொடுக்கும் என நினைக்கிறார்கள் போல்.
இல்லை என்பதுதான் உண்மை!!!!
ரூபனுக்கு முதலில் கவிதை பற்றி நான் வகுப்பெடுக்க வேண்டியிருக்கிறது.ஆனால் அந்த நாசகார வேலையை நான் இங்கு செய்யப்போவதில்லை.
ரூபன் கவிதை என்பது காதுகுடைந்து எறிகிற கோழிச்சிறகல்ல அது வாழ்வை திறக்கும் வலுவுள்ள வனப்புள்ள ஒரு சாவி
நீங்கள் நினைக்கிறீர்கள் பெண்ணும் ஆணும் சேர்ந்து கட்டிப்பிடித்து காமரசம் வழியப் பேசி ஆளால் மாறி மாறி ஏதேதோவெல்லாம் செஞ்சி பரவசப்படுவதை எழுதித் தொலைப்பதுதான் கவிதை என்று.
ஆனால் நாங்கள் அப்படியல்ல நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மண் போரும் குருதியும் நிறைந்தது.இந்த மண்ணில் வாழும் கவிஞர்கள் மண்ணுக்கும் மண்டைக்கும் தொடர்பில்லாமல் காமத்தையும் பாலியலையும் எழுத வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.
பலஸ்தீனக்கவிஞர் மஹ்மூத் தர்வீஸின் வரிகளை உங்களுக்கு ஞாபக மூட்டுகிறேன்.
எழுத்தளர்களுக்கு வார்தைகளை நன்றாக
வளைக்கத் தெரியும்
ஆனால் இரத்தம் பெருகும் மண்ணில்
சொற்பெருக்கு எதற்கு
வார்த்தை ஜாலங்கள் எதற்கு
எங்கள் சொற்கள் எளிமையானவை
எங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளைப்போல.
எங்கே தப்பிச்செல்லப்போகிறீரர்கள் ஜிப்ரி? இலங்கையின் அரசியல் சூழல் கிழக்கில் மட்டுமல்ல நாடு முழுவதும்தான் மனித வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நீங்கள் எங்கே போய் தப்பக்கப் போகிறீர்கள்?
சொல்லுங்கள் நானும் கூட வந்துவிடுகிறேன்.
எஸ்.எம்.நெளபர்.
அரசியல் மக்கழுக்காக என்கிறார்கள்?இது சரியா என்று இன்று பல இலங்கையர் எண்ணுகின்றனர்.நண்பா உனது கவிதையைப்பார்த்தல் சில சமயம் விடை விளங்கக்கூடும்.
/**ரூபனுக்கு முதலில் கவிதை பற்றி நான் வகுப்பெடுக்க வேண்டியிருக்கிறது.ஆனால் அந்த நாசகார வேலையை நான் இங்கு செய்யப்போவதில்லை.*//
நன்றி, பலபேர் எனக்கு வகுப்பெடுத்து களைத்து விட்டனர்!
/**ரூபன் கவிதை என்பது காதுகுடைந்து எறிகிற கோழிச்சிறகல்ல அது வாழ்வை திறக்கும் வலுவுள்ள வனப்புள்ள ஒரு சாவி***//
இதைத்தான் நீங்கள் மேலே குறைகூறிய ‘காமரச’ கவிஞர்களும் சொல்கின்றனர். நீங்களும் இல்லை என்று சொல்லி ‘வனப்புள்ள’ என்றும் முரண்படுகிறீர்கள் (கவிதைக்கு முரண் அழகோ???)
/***நீங்கள் நினைக்கிறீர்கள் பெண்ணும் ஆணும் சேர்ந்து கட்டிப்பிடித்து காமரசம் வழியப் பேசி …****//
நான் நினைப்பதை கூறும் வல்லமை உங்களுக்கு உண்டென்றால் சந்தோசமே!
/**** காமத்தையும் பாலியலையும் எழுத வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.****//
எங்கே எதிர்பார்த்தேன் என காட்டுங்கள், தயவுசெய்து, இறைஞ்சுகிறேன் கவிஞரே!!!
/****பலஸ்தீனக்கவிஞர் மஹ்மூத் தர்வீஸின் வரிகளை உங்களுக்கு ஞாபக மூட்டுகிறேன்.****/
ஐயா , இப்படித்தான் பாலஸ்தீனம், செஞ்சீனம், ரஷ்யா என்றெல்லாம் கவிதை காட்டினார்கள். ஆனால் எமது தோழர் யாசிர் அரபாத் அவர்கள் கிளிண்டன் , எஹுட் பராக் உடன் காம்ப் டேவிட் வாசலில் ‘சில்மிசம்’ பண்ணியதை (யார் முதலில் உள்ளே போவதென்று- முதலிரவு சீன் மாதிரி) வேதனையுடன் பார்த்தோம்.
ஒருவேளை காமரச கவிதை போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ?? தர்வீஸின் கவிதை காட்டுகிறீர்கள்,நன்றி மறந்தேனும் தலிஸ்மா என்று எழுதிவிடாதீர்கள்!!!
//**ஆனால் இரத்தம் பெருகும் மண்ணில்
சொற்பெருக்கு எதற்கு
வார்த்தை ஜாலங்கள் எதற்கு
எங்கள் சொற்கள் எளிமையானவை***//
அவ்வாறாயின் ஏன் நீங்கள் ஜிஃப்ரியின் கவிதைக்கு விளக்க உரை எழுத வேண்டி வந்தது. அவர் வார்த்தைகள் எளிமையற்றவையா??நண்பா பாலஸ்தீன கவிஞனையும் பாலையூர் கவிஞனையும் ஒப்பிட்டு பாலையூர் கவிஞன் கவிதைக்கு விளக்கம் எழுதி எனக்கு அடிப்பது மாதிரி அடிக்கிறீர்கள். நல்ல பிளான் தான்.
காமரசக் கவிஞர்களும் அப்படிச்சொன்னார்கள் என்பதற்காக நாங்களும் அவர்களும் ஒன்றா?
சொற்களை விடுங்கள் செயலைப்பாருங்கள்.எங்களது கவிதைத்தளம் வேறு அவர்களது வேறு.
கிழக்கு வெற்றியின் உண்மை நிலை குறித்து ஜிஃப்ரியால் எழுத முடிந்தது அதனால்தான்.
உங்கள் காமரசக் கவிஞர்கள் எவரும் அது குறித்து எழுதவில்லையே ஏன்?
கிழக்கு வெற்றி மக்களின் பாலியல் செயற்பாட்டில் ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்குமானால் அவர்களும் களத்தில் இறங்கியிருப்பார்கள் போல.
நீங்கள் நினைப்பதெல்லாம் கண்டுபிடிப்பதற்கு ஒன்றும் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை.
ஏற்கனவே முரண்வெளி என்றொரு இணையத்தில் ஜிஃப்ரியின் கட்டுரைகள் காமரச நோக்கிலும் இந்துத்துவ நோக்கிலும் பின் நவீன முலாம் பூசிக்கொண்டு விமர்சிக்கப்பட்டிருந்தன.
அந்த விமர்சனப்பாணிதான் உங்களிடத்திலும் விளங்குகிறது.ஆகவே உங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்புகள் அப்படித்ததான் அமையும் என்று எல்லோரும் யூகித்துச் சொல்லிவிடலாம்.
என்ன ரூபன் உங்களுக்கு டி.வி யில் செய்தி பார்க்கும் பழக்கமிருந்தால் அதை இப்படியா சொல்வது. அரபாத்தின் சில்மிசத்தை நீங்கள் டி.வி.யில் பார்த்ததுக்கும் தர்வீஸின் கவிதைக்கும் என்ன தொடர்பு?
பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை அவர் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்.
அவரும் சேர்ந்து துரோகமிழைத்தது போலல்லவா நீங்கள் சொல்கிறீர்கள்.
தஸ்லிமா நஸ்ரினை ஏன் இங்கு குறிப்பிடுகிறீர்கள்?
அவரை உங்களைப் போன்றவர்கள் கொண்டாடுவதன் அரசியலை நாங்கள் புரிந்து கண நாளாயிற்று.
நான் எழுதியது ஜிஃப்ரியின் கவிதைக்கான விளக்கவுரையல்ல எனது கருத்து.உங்களைப் போன்றவர்களால் கருத்தகள் விளக்கவுரைகளாக விளங்கிக்கொள்ளப்பட்டு கேலி செய்யப்படுமானால் திரு.ஷோபா சக்தி அவர்கள் கொமன்ட்ஸ் எனும் பகுதியை சத்திய கடதாசிலிருந்து நீக்கிவிடுவது சுகம்.
பாலையூர் கவிஞனுக்கு நான் ஏன் அடிக்க வேண்டும்?
அவரோடும் அவரது கவிதைகளோடும் நீண்ட உறவுகளை வைத்திருப்பவன் நான்.உங்களது கருத்துக்ளை நான் எதிர்கொள்வதும் அவரது கருத்துகளினதும் உதவியோடுதான்.அப்படியிருக்க உங்களுக்கு அடிப்பது போன்று அவருக்கு அடிக்கிற வம்புத்தனங்களெல்லாம் எனக்கெதற்கு?
‘நவீன மனிதனின் தலைவிதி அரசியல் மொழியினாலேயே எழுதப்படுகிறது’ என்றார் ஒரு சிந்தனையாளர்.கவிதைகளின் தலைவிதியும் அரசியல் மொழியினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.இதைத்தான் ஜிஃப்ரியின் எல்லாக்கவிதைகளிலும் காண்கிறேன்.
ஜிஃப்ரியின் கவிதையில் சொற்களைத்தான் பார்க்க முடிகிறது. செயலை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
கவிதையில் தேடிப்பார்த்தாலும் ஒரே ஒரு செயல் தான் தெரிகிறது ‘மெளனமாக தப்பிச்செல்வது”!
Moving the goal post என ஆங்கிலத்தில் இதைத்தான் சொல்வார்கள்.
முதலில் கவிதைக்கு விளக்கம் தேவையில்லை என்றீர்கள். பின்னர் அதை நீங்களே எழுதினீர்கள். கேட்கப்போக வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை என்றீர்கள் அதிலேயே ‘வனப்புள்ள’ என்று ஜாலம் விட்டீர்கள். பின்னர் அதை கேட்கப்போக சொற்களை விடுங்கள் செயலை பாருங்கள் என்கிறீர்கள். இனி எங்கே goal post ஐ நகர்த்தப்போகிறீர்கள்????
/**கிழக்கு வெற்றியின் உண்மை நிலை குறித்து ஜிஃப்ரியால் எழுத முடிந்தது அதனால்தான்.**/
எனது முதலாவது பின்னூட்டதினை கவனமாக வாசிக்கவும். கீழே தருகிறேன். காமக்கவி , கள்ளக்கவி என் திசை திருப்பல் வேண்டாம் தோழரே!
(..இது கவிதை பாடித்தெரிய வேண்டியதொன்றல்ல. காலங்காலமாக தெரிந்த்த உண்மை. ஈழத்து சின்னக் குழந்தை கூடச்சொல்லும். ஆனால் சிலர் கவிதையாய் அழவேண்டி இருக்கிறது. அதற்கு சிலரோ விழுந்தடித்து விளக்கம் சொல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்களும் என்ன செய்ய, இரண்டுபக்கமும் ஆடினால் கவிதையும் விளக்கமும் தான் கைகொடுக்கும் என நினைக்கிறார்கள் போல்.
இல்லை என்பதுதான் உண்மை!!!! )
/***நீங்கள் நினைப்பதெல்லாம் கண்டுபிடிப்பதற்கு ஒன்றும் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை.***/
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!
/****ஏற்கனவே முரண்வெளி என்றொரு இணையத்தில் ஜிஃப்ரியின் கட்டுரைகள் காமரச நோக்கிலும் இந்துத்துவ நோக்கிலும் பின் நவீன முலாம் பூசிக்கொண்டு விமர்சிக்கப்பட்டிருந்தன.
அந்த விமர்சனப்பாணிதான் உங்களிடத்திலும் விளங்குகிறது.ஆகவே உங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்புகள் அப்படித்ததான் அமையும் என்று எல்லோரும் யூகித்துச் சொல்லிவிடலாம்.****//
அட..அட…அடடா!!! சத்தியக்கடதாசியே போதும். முரண்வெளி ஒரு இணையத்தளமா? நான் ஐரோப்பாவில் வெளிவரும் சிறுபத்திரிகை என நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதுக்குள்ள என்னையும் இழுக்கிறீர்கள்!!!
/*****அரபாத்தின் சில்மிசத்தை நீங்கள் டி.வி.யில் பார்த்ததுக்கும் தர்வீஸின் கவிதைக்கும் என்ன தொடர்பு?***//
கிழக்கு விடுதலைக்கும் மஹ்மூத் தர்வீஸுக்கும் உள்ள தொடர்புதான். கவிதை தேவையில்லை குழந்தைக்கே விளங்கும் என்பதற்கு ‘கோழிச்சிறகு’, ‘வனப்புள்ள திறப்பு’ ,’காமக்கவி’ என்பதற்கும் என்ன தொடர்பு தோழரே?
/***பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை அவர் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்***/
பாலஸ்தீன குழந்தையை கேளுங்கள். அதற்கு கவிதை தேவையில்லை என சொல்லும்.
/**தஸ்லிமா நஸ்ரினை ஏன் இங்கு குறிப்பிடுகிறீர்கள்?**//
/****அவரை உங்களைப் போன்றவர்கள் கொண்டாடுவதன் அரசியலை நாங்கள் புரிந்து கண நாளாயிற்று.**//
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!
/***நான் எழுதியது ஜிஃப்ரியின் கவிதைக்கான விளக்கவுரையல்ல எனது கருத்து.***//
/…இந்நிலையில் அரசாங்கத்தின் கிழக்கு வெற்றிக் கொண்டாட்டங்கள் வெறும் கேலிக்கூத்து மட்டுமே என்கிறார் ஜிஃப்ரி……/
இது கருத்தா? இல்லை விளக்கமா??? சொல்லுங்கள் ,எனக்கு தமிழறிவு குறைவு. காமக்கவிகளுடன் கரகாட்டம் ஆடியதால் வந்த வினை!!!
/****உங்களைப் போன்றவர்களால் கருத்தகள் விளக்கவுரைகளாக விளங்கிக்கொள்ளப்பட்டு கேலி செய்யப்படுமானால் திரு.ஷோபா சக்தி அவர்கள் கொமன்ட்ஸ் எனும் பகுதியை சத்திய கடதாசிலிருந்து நீக்கிவிடுவது சுகம்.***/
ஏனையா சோபாவை இழுக்கிறீர்கள். இப்படித்தான் சின்ன வயசில் பயமுறுத்துவார்கள். சாமி கண்ணுக்குள்ள குத்தும், குளப்படிவிட்டால் பொலிஸ்காரன் வருவான் என்று. பிறகு ஆமிகாரன் வரேக்க பயமுறுத்தினவைதான் முதல் ஓடினவையள் எண்டது வேறகதை!!!!
/*****பாலையூர் கவிஞனுக்கு நான் ஏன் அடிக்க வேண்டும்?***/
பின்ன ஏன் அவரது கவிதைக்கு விளக்க உரை எழுதி வம்பில மாட்டினியள்??? சும்மா ஜோக் தான், கோவிக்காதயுங்கோ!!!
/…காமரசக்கவிஞர்களை வம்புக்கிழுத்தது யார்?…/
கவிதை பற்றிய உங்கள் எதிர்பார்ப்புக்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தினால் அதுக்கு காமரசக்கவிஞர்களை வம்புக்கிழுத்தல் என்று அர்த்தமா? என்னோடு மோதுவதற்கு காமரசக்கவிஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறீர்கள் ரூபன்.போங்கள் நீங்கள் பலே…பலே…கில்லாடிதான்.
/…ஜிஃப்ரியின் கவிதையில் சொற்களைத்தான் பார்க்க முடிகிறது. செயலை நீங்கள் தான் சொல்ல வேண்டும்…/
ரூபனுக்கு புரிதலில் சிக்கலிருக்கிறது என நினைக்கிறேன்./..எனக்கு தமிழறிவு குறைவு../ என அவரே ஒத்துக்கொள்வதனால் சந்தேகத்திற்கு இடமின்றி அது உறுதியாகிவிட்டது.
சொல்லும் செயலும் என நான் இங்கு குறிப்பிட்டது கவிஞர்களின் கவிதை பற்றிய அபிப்ராயத்தையும் பின் அவர்களின் அபிப்ராயத்துக்கு ஏற்றாற்போல கவிதை செயற்பாடு உண்டா? என்ற கருத்தில்தான்.ரூபன் உங்களுக்கு விளங்காவிட்டால் தம்ழறிவு உள்ளவர்கள் யாராவது இருந்தால் கேட்டு தெளிவு பெறுங்கள்.
/…இது கவிதை பாடித்தெரிய வேண்டியதொன்றல்ல. காலங்காலமாக தெரிந்த்த உண்மை. ஈழத்து சின்னக் குழந்தை கூடச்சொல்லும். ஆனால் சிலர் கவிதையாய் அழவேண்டி இருக்கிறது…/ அப்படியானால் ரூபன் ஒன்று செய்யுங்கள் எதைப்பற்றி கவிதை எழுத வேண்டும் எதைப்பற்றி எழுதக்கூடாது என்று பேசாமல் பட்டியலொன்றைத்தயாரித்து கவிஞர்களுக்கு மட்டுமாவது விநியோகித்து விடுங்கள்.இப்படியான சர்ச்சைகளை தவிர்க்கலாமல்லவா?
/…பாலஸ்தீன குழந்தையை கேளுங்கள். அதற்கு கவிதை தேவையில்லை என சொல்லும்../
அமெரிக்க கவிஞர் ஷாமெல் ஒரு தடவை அமெரிக்க ‘ஜனநாயகவாதிகளை’ப்பார்த்துச் சொன்னார் “அவர்கள் கவிஞர்களுக்குப் பயப்படுகிறார்கள் உண்மைகளைக்கண்டு பயப்படுகிறார்கள்”
பாலஸ்தீனத்தில் குழந்தைகளுக்கு வேண்டுமானால் கவிதை தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் தர்வீஸின் கவிதைகள் இன்று பலஸ்தீனப்பிரச்சினையை உலக அரங்குக்கு எடுத்துச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளன.
இவரது கவிதைகளை இஸ்ரேவிய அரசு பாடப்புத்தகத்தில் சேர்ப்பதற்கு தொடந்து எதிர்ப்புக்காட்டி வருகிறது.
குழந்தைகளுக்கும் உபயோகமில்லாத கவிதை வல்லரசுகளால் எதிர்க்கப்படுகிறதேன்றால்…
ரூபனும் அதை எதிர்கிகிறாரென்றால் அவருக்கும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இலங்கை அரசுக்கும் ஏதும் கள்ளத்தொடர்புகள் இருக்குமோ?
கவிஞர்களே ஜாக்கிறதை!!!
ரூபன் புஷ்ஷையும் எஹூட் ஒல்மட்டையும் மஹிந்தவையும் அழைத்துக்கொண்டு வரப்போகிறார்!!!
இரக்கப்படுவதற்கு நீங்களிருக்கும் போது நான் குhபப்படக்கூடாதா?
இது மனித உரிமை
இரக்கப்படுவதற்கான உரிமை அல்லது கோபப்படுவதற்கான உரிமை ரூபன் அனுபவியுங்கள் அனுபவியுங்கள் இது ஜனநாhயக உலகம்.
/..இது கருத்தா? இல்லை விளக்கமா??? சொல்லுங்கள் இஎனக்கு தமிழறிவு குறைவு. காமக்கவிகளுடன் கரகாட்டம் ஆடியதால் வந்த வினை!!!../
கருத்து எது விளக்கமெது என அறிய உங்களுக்கு தமிழ் அறிவு குறைவானதாக இருப்பதனால் யாரேனும் தமிழ் பேராசிரியர்களை நாடவும்.
-தாரிக் நிப்றாஸ்-
/****அமெரிக்க கவிஞர் ஷாமெல் ஒரு தடவை அமெரிக்க ‘ஜனநாயகவாதிகளை’ப்பார்த்துச் சொன்னார் “அவர்கள் கவிஞர்களுக்குப் பயப்படுகிறார்கள் உண்மைகளைக்கண்டு பயப்படுகிறார்கள்”*****//
பாலையூர் கவிஞன் ஜிஃரியில் ஆரம்பித்து பாலஸ்தீனம் போய் இன்று அமெரிக்க கவி ஷாமெல் என்று வருகிறீர்கள். Moving the goal post !!!!
/***பாலஸ்தீனத்தில் குழந்தைகளுக்கு வேண்டுமானால் கவிதை தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் தர்வீஸின் கவிதைகள் இன்று பலஸ்தீனப்பிரச்சினையை உலக அரங்குக்கு எடுத்துச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளன.***//
எடுத்துச்சொல்வதில் வெற்றி பெற்றுள்ளன??? பரவாயில்லை , ஆம் என்றே வைத்துக்கொண்டாலும் பாலஸ்தீனியர்களின் பிரச்சனை தீர்ந்ததா? ஈடாக இஸ்ரேல்லிய கவிகளும் தமது அகதிவாழ்க்கையையும் இஸ்ரேலின் தேவையையும் கவிபாடியிருப்பார்கள் தேடிப்பாருங்கள்.
/***இவரது கவிதைகளை இஸ்ரேவிய அரசு பாடப்புத்தகத்தில் சேர்ப்பதற்கு தொடந்து எதிர்ப்புக்காட்டி வருகிறது.***//
பாடப்புத்தகத்தை விடுங்கள் கடையில் விலைக்கு விற்க பிரசுரிக்கவே ‘ஃப்த்வா’ விடும் கோஷ்டிகளும் இருக்கிறன!!!
/****குழந்தைகளுக்கும் உபயோகமில்லாத கவிதை வல்லரசுகளால் எதிர்க்கப்படுகிறதேன்றால்…
ரூபனும் அதை எதிர்கிகிறாரென்றால் அவருக்கும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இலங்கை அரசுக்கும் ஏதும் கள்ளத்தொடர்புகள் இருக்குமோ?***//
அடேங்கப்பா! புல்லரிக்குது கவிதைப்பிரியரே உங்களால் மட்டும் இவ்வாறெல்லாம் ‘சரியாக’ ஊகிக்க முடிகிறது?
அமெரிக்காவின், மத்திய அமெரிக்க புரட்சியாளர்களுக்கு எதிரான (central american countர்-insurgency) யுத்தியை இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கெதிரான யுத்தத்தில கையாண்டு மெருகூட்டி இஸ்ரேல் துணையுடன் கிழக்கில் நடைமுறைப்படுத்த ‘கைகொடுத்த’ கூட்டம் கண்ணுக்கு முன்னே நின்ற போது கவிபாடியவர்கள் , உலகக்கவிகளின் பிரியர்கள், சொல்கிறார்கள். எல்லோரும் திரண்டுவந்து கேளுங்கள் இஸ்ரேலுடனான எனது கள்ளத்தொடர்பை!!!!!!!
/***கவிஞர்களே ஜாக்கிறதை!!!
ரூபன் புஷ்ஷையும் எஹூட் ஒல்மட்டையும் மஹிந்தவையும் அழைத்துக்கொண்டு வரப்போகிறார்!!!****/
பயம் வேண்டாம் கவிஞர்களே அவ்வாறு வந்தாலும் நான் வெளிப்படையாகவே வருவேன். இஸ்ரேலுடன் கூடி அமெரிக்க போருத்தியை உங்கள் மண்ணில் திணிக்கமாட்டேன்.
முக்கியமாக கவிஞர்களுக்கு கவிபாடியதற்கே ‘ஃபத்வா’ விடமாட்டேன்!!!!!!!
ஜிப்ரியின் வரிகளுக்கு இவ்வளவு …………. அதிகம்தான்.
/***இரக்கப்படுவதற்கு நீங்களிருக்கும் போது நான் குhபப்படக்கூடாதா?
இது மனித உரிமை
இரக்கப்படுவதற்கான உரிமை அல்லது கோபப்படுவதற்கான உரிமை***//
உண்மைதான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் பாலஸ்தீனக்கவிக்கு இரக்கமும் பங்காளக் கவிக்கு கோபமும், தர்வீஸுக்கு தண்ணீரும் தலிஸ்மாவுக்கு தணலும் காட்டுகிறீர்களே. ஜனநாயகம் தான்
அனுபவியுங்கள் அனுபவியுங்கள் இது ஜனநாhயக உலகம்.
நான் சொன்ன ஜனநாயகமல்ல உங்கள் அமெரிக்க கவி ஷாமெல் சொன்ன “ஜனநாயகம்”.
//..எடுத்துச்சொல்வதில் வெற்றி பெற்றுள்ளன??? பரவாயில்லை இ ஆம் என்றே வைத்துக்கொண்டாலும் பாலஸ்தீனியர்களின் பிரச்சனை தீர்ந்ததா?..//
ஐயா கவிதை எழுதுவது பிரச்சனையை தீர்ப்பதற்கா? பலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்தை மேற்கு ஊடகங்கள் பயங்கரவாதமாக சித்திரித்துக் கொண்டிருக்கின்றன்.இந்த சித்தரிப்பு மக்களின் பிரச்சினைகளுக்கு திர்வு கிடைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தாதா? தர்வீஸின் கவிதைகள் இன்று மேற்கில் அதிக மக்களை சென்றடைந்துள்ளது.லண்டனில் அவரது கவி அரங்குக்கு அதிக மக்கள் பிரசன்னமாகின்றனர்.எனவே ஒரு மக்கள் திரளின் பிரச்சினை சரியான அங்கிகாரம் பெற்றபின்னரே தீர்வு நோக்கி நகரும்.
கவிதை பிரச்சினைக்குத்தீர்வுகள் வழங்கவேண்டும் என எதிர்பார்ப்பது அறிவுடைமையாகாது நண்பரே!!!
//..பாடப்புத்தகத்தை விடுங்கள் கடையில் விலைக்கு விற்க பிரசுரிக்கவே ‘ஃப்த்வா’ விடும் கோஷ்டிகளும் இருக்கிறன!!!..//
‘மூவிங் த கோல் போஸ்ட்…!!!
//…பயம் வேண்டாம் கவிஞர்களே அவ்வாறு வந்தாலும் நான் வெளிப்படையாகவே வருவேன். இஸ்ரேலுடன் கூடி அமெரிக்க போருத்தியை உங்கள் மண்ணில் திணிக்கமாட்டேன்…//
‘ப்ரொமிஸ்…’
//…நான் சொன்ன ஜனநாயகமல்ல உங்கள் அமெரிக்க கவி ஷாமெல் சொன்ன “ஜனநாயகம்…//
தண்ணீர் சுடும் நெருப்பு குளிரும் என்றால் அது கவிதை இது விளங்குகிறதா ஆருயிர்தோழரே…!!!
/****ஐயா கவிதை எழுதுவது பிரச்சனையை தீர்ப்பதற்கா? ***//
விருது பெறுவதற்கே அது உபயோகப்படுத்தப்படுகிறது என தெரிகிறது. ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!
/***இந்த சித்தரிப்பு மக்களின் பிரச்சினைகளுக்கு திர்வு கிடைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தாதா? தர்வீஸின் கவிதைகள் இன்று மேற்கில் அதிக மக்களை சென்றடைந்துள்ளது.***//
ஏன் மேற்குலக நாடுகள் தான் சிக்கல் கொடுக்கின்றன என்றால், மத்திய கிழக்கு செல்வந்த நாடுகள் எங்கே ? தனியாக மேற்குலகை குறசொல்வது சரியாகாது.
/***லண்டனில் அவரது கவி அரங்குக்கு அதிக மக்கள் பிரசன்னமாகின்றனர்.***//
பின்னர் வீட்டுக்குப்போய் படுத்து தூங்குவார்கள்…. லண்டனில் அதிக மக்கள் பிரசன்னமாகின்றனர், மொஸ்கோவில் நடுங்கும் குளிரில் கூடுகின்றனர், பரிஸில் பாதையோரமே இடமில்லாமலிருந்தது. இதையெல்லாம் கேட்டு கேட்டு அலுத்து விட்டது…
/***எனவே ஒரு மக்கள் திரளின் பிரச்சினை சரியான அங்கிகாரம் பெற்றபின்னரே தீர்வு நோக்கி நகரும்.****//
இன்னும் பாலஸ்தீனர் போராட்டம் மக்கள் அங்கீகாரம் பெறவில்லை என்கிறீர்களா???
/****கவிதை பிரச்சினைக்குத்தீர்வுகள் வழங்கவேண்டும் என எதிர்பார்ப்பது அறிவுடைமையாகாது நண்பரே!!!***//
நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் இந்த விவாதமே ஆரம்பித்தது என்பதனை எனது முதலாவது பின்னூட்டம் காட்டும்.
கவிஞரே ‘மெளனமாக தப்பிச்செல்வேன்’ என தப்பிச்செல்லும் தீர்வை வைத்திருந்தேரே!!!
எனது கேள்வியெல்லாம் எதற்காக தப்பிச்செல்லும் தீர்வை கவிதை பாடி அதற்கு மற்றவர் விளக்கமும் அளிக்க வேண்டுமென்பது தான்.
கவிதை பாடியது உங்களது ‘கவித்துவத்தை ‘ மேடையேற்றவும் விளக்கம் சொன்னது உங்களது ‘உலகக்கவிகள்’, ‘ஜனநாயகம்’ பற்றிய மேதமையை அறிவிக்கத்தான் மற்றும்படி எதுவும் கிடையாது என்றால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
Moving the goal post க்கு விளக்கம் எனது முதல் பின்னூட்டத்தில் உண்டு. ஜனநாயகம் ஆளுக்காள் வேறுபடும் என்பதை அமெரிக்க ஷாமெல் கவிதை மேற்கோள் காட்டியபோதே புரிந்திருந்தால் நல்லது. இதையே தான் ‘ஜனநாயக’ வாதிகளும் ஷாமெலுக்கு கூறியிருப்பர் என நினைக்கிறேன்.
/**தண்ணீர் சுடும் நெருப்பு குளிரும் என்றால் அது கவிதை இது விளங்குகிறதா ஆருயிர்தோழரே…!!! ***//
தண்ணீர் சுடும் நெருப்பு குளிரும் என்று 2ம் , 3ம் வகுப்பில் படித்த ஞாபகம். மற்றும் சின்னக்குழந்தைக்கும் தெரிந்தவிடயம்.
இது கவிதை என்றால், நான் மூன்றாம் வகுப்பிலேயே கவிஞாகிவிட்டேன் என்று சொல்லலாம்.
ruupan, vaazththukkaL!
jiffry, where the hell is ur response to our post abt ur essay (muunraavathu manithan). ?
u thing u fight against a coalacaust!!! a piss off boi! First, u shud make urself clean.
ரூபன் சில நாட்களாக இணையத்தொடர்புகள் அற்றிருந்தேன்.இப்போது நமது விவாதத்துக்கு வருவோம்.
///…விருது பெறுவதற்கே அது உபயோகப்படுத்தப்படுகிறது என தெரிகிறது. ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!…//
ஆமப்பா.. விருதுகளால் நமது கவிஞர்களின் வீடுகள் நிரம்பிக்கிடக்கின்றன!!!
இ ங்கு கவிஞர்களுக்கு கொடுக்கப்படும் விருது என்ன தெரியுமா?
சந்தேகமின்றி மரணம்தான்.. அண்மையில் இ ப்படி விருது வழ ங்கி இ ங்கு கெளரவிக்கப்பட்டவர் கவிஞர் எஸ்போஸ் …
நல்ல விருது!!நல்ல விருது!!!
///…பின்னர் வீட்டுக்குப்போய் படுத்து தூங்குவார்கள்…///
விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் விபரீதமாக சிந்திப்பதிலிருந்தும் தடுக்கலாமல்லவா?
///…இன்னும் பாலஸ்தீனர் போராட்டம் மக்கள் அங்கீகாரம் பெறவில்லை என்கிறீர்களா???…///
என்ன உழறுகிறீர்கள் நண்பரே !!!
///…எனது கேள்வியெல்லாம் எதற்காக தப்பிச்செல்லும் தீர்வை கவிதை பாடி அதற்கு மற்றவர் விளக்கமும் அளிக்க வேண்டுமென்பது தான்…///
இ தை நேரத்தோட சொல்லக் கூடாதா? இ துதான் உங்கள் பிரச்சினை என்றால் கவிதைக்குள்ளேயே அதக்கு விடை இருக்குது. கவிதையை மீண்மடும் ஒருதடவை நன்றாக வாசியுங்கள் நண்பரே…
ஹரிக்கு>
எனது மூன்றாவது மனிதன் கட்டுரைககளுக்கு நீங்கள் முரண்வெளில் எழுதி இருந்த விமர்சனங்களை உங்களது கருத்துச்சொல்லும் சுதந்திரமாக மட்டுமே பார்க்கிறேன்.
பின்-நவீன முலாம் பூசிக்கொண்ட இந்துத்துவ மற்றும் முதலாளித்துவ விமர்சன முறையது.
ஒரு ஆக்கபுர்வமான உரையாடல் கலாசாரத்தை உருவாக்கப்போவதாக கதைவிட்டுக்கொண்டு ஒரு விதண்டாவாத கலாசாரத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
உண்மை இப்படி இருக்க இதுக்கெல்லாம் பதில் எழுதுவதால் யாருக்கு என்னதான் நடந்து விடப்போகிறது!!1
அதுக்கு பதில் எழுதுவதை விட எனது பாடக்குறிப்புகளைப்படித்து பரீட்சையை நன்றாக எழுதினால் எனக்கு கிளாஸ் கிடைக்கும்.
/****இ ங்கு கவிஞர்களுக்கு கொடுக்கப்படும் விருது என்ன தெரியுமா?
சந்தேகமின்றி மரணம்தான்.. ***//
ஒருவகையில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இங்குமட்டுமல்ல பங்காளதேசிலும் , இரானிலும், பாகிஸ்தானிலும் கூட அவ்வாறுதான். ஆனால் ஒரு வேறுபாடு இங்கே அரசாங்கம் ‘தமிழ்’ கவிதைக்கு கொல்லும் விருது! அங்கே (ஈரரன், வங்கத்தில்) எதற்கென்று உங்களுக்கு தெரிந்தது தானே.
அது மட்டுமல்ல ஈரானில் விட்ட ‘ஃபத்வாவுக்கு’ பாகிஸ்தானில் கொல்வார்கள். இப்போது ஹொலண்டிலும் கொல்கிறார்கள்!!!!
/***அண்மையில் இ ப்படி விருது வழ ங்கி இ ங்கு கெளரவிக்கப்பட்டவர் கவிஞர் எஸ்போஸ் …
நல்ல விருது!!நல்ல விருது!!!***//
அப்போது கூட ‘நிறைய’ கவிதைகள் எழுதியிருந்தனர், படித்திருந்தேன்!!!!!
/***விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் விபரீதமாக சிந்திப்பதிலிருந்தும் தடுக்கலாமல்லவா?****/
அனால் இதையே ‘மக்கள் கூடுகிறார்கள்’, ‘மழையில் நனைகிறார்கள்’, ‘கடும் பனியிலும் கால் கடுக்க காவல் இருக்கிறார்கள்’ என்று கதை விடும் போதுதான் சிக்கலே வருகிறது.
/*****///…இன்னும் பாலஸ்தீனர் போராட்டம் மக்கள் அங்கீகாரம் பெறவில்லை என்கிறீர்களா???…///
என்ன உழறுகிறீர்கள் நண்பரே !!!*****//
நான் உழறவில்லை, உங்கள் பின்னூட்டத்தில்
“……எனவே ஒரு மக்கள் திரளின் பிரச்சினை சரியான அங்கிகாரம் பெற்றபின்னரே தீர்வு நோக்கி நகரும்….”
எனவும் பாலஸ்தீனக்கவி அதற்காக மேற்கில் கவிபாடுகிறார்கள் எனவும் சொல்லியிருந்தீர்கள். வாசித்தபோதுதான் எனக்கு பாலஸ்தீனர் போராட்டம் மக்கள் அங்கீகாரம் பெறவில்லையோ என்ற ஐயப்பாடு தோன்றியது.

நேரத்தோடேயே சொல்லியிருந்தேன். எனது முதலாவது பின்னூட்டமே அது தானே. பின்னூட்டத்தைனை மீண்டும் ஒருமுறை வாசிக்கவும் எனவும் கேட்டிருந்தேனே. வாசிக்காமல் ‘கோல் போஸ்ற்றை மூவ்’ பண்ணிக்கொண்டிருந்தீர்கள்.
///…“……எனவே ஒரு மக்கள் திரளின் பிரச்சினை சரியான அங்கிகாரம் பெற்றபின்னரே தீர்வு நோக்கி நகரும்….”
எனவும் பாலஸ்தீனக்கவி அதற்காக மேற்கில் கவிபாடுகிறார்கள் எனவும் சொல்லியிருந்தீர்கள். வாசித்தபோதுதான் எனக்கு பாலஸ்தீனர் போராட்டம் மக்கள் அங்கீகாரம் பெறவில்லையோ என்ற ஐயப்பாடு தோன்றியது..//
அந்த கூற்றை இப்படித்தானா புரிந்து கொண்டீர்கள்? எதையும் உங்களுக்குச் சாதகமாக புரிந்து கொள்வதில் நீங்கள் கில்லாடி..
மேற்கில் பலஸ்தீனப்பிரச்சினை திரிவு படுத்தப்பட்டு பயங்கரவாத பிரச்சினையாக மக்களைச்சென்றடையும் போது மக்களுக்கு அதனை சரியான அர்த்தத்தில் தெளிவுபடுத்த வேண்டாமா?
இதைச்சொன்னபோது நீங்களோ வேறு அர்த்தம் கற்பிக்கிறீர்கள்.ஓ..மறந்து விட்டேன் உங்களுக்குத்தமிழ் அறிவு குறைவு இல்லையா?
//..நேரத்தோடேயே சொல்லியிருந்தேன். எனது முதலாவது பின்னூட்டமே அது தானே. பின்னூட்டத்தைனை மீண்டும் ஒருமுறை வாசிக்கவும் எனவும் கேட்டிருந்தேனே. வாசிக்காமல் ‘கோல் போஸ்ற்றை மூவ்’ பண்ணிக்கொண்டிருந்தீர்கள்..//
ஆனால் உங்கள் முதலாவது பின்னூட்டம் அப்படி அமையவில்லை.இதுவெல்லாம் கவிதை பாடித்தெரிய வேண்டியதல்ல குழந்தைக்கே தெரியும் என்பதாகத்தான் இருந்தது.உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் பாருங்கள்
///..//குறிப்பாக கிழக்கு வெற்றியினால் கிழக்கு மக்களுக்க எந்த நன்மையும் கிடைக்கவில்லை அதிலும் முஸ்லிம்களுக்கு இது எந்த நன்மையையும் தரவில்லை என்பதையும் இக்கவிதை சொல்கிறது….//
இது கவிதை பாடித்தெரிய வேண்டியதொன்றல்ல. காலங்காலமாக தெரிந்த்த உண்மை. ஈழத்து சின்னக் குழந்தை கூடச்சொல்லும். ஆனால் சிலர் கவிதையாய் அழவேண்டி இருக்கிறது. அதற்கு சிலரோ விழுந்தடித்து விளக்கம் சொல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்களும் என்ன செய்யஇ இரண்டுபக்கமும் ஆடினால் கவிதையும் விளக்கமும் தான் கைகொடுக்கும் என நினைக்கிறார்கள் போல்.
இல்லை என்பதுதான் உண்மை!!!! ..//
விவாதத்துக்கு பொய் அழகோ!!??
///…இங்குமட்டுமல்ல பங்காளதேசிலும் இ இரானிலும்இ பாகிஸ்தானிலும் கூட அவ்வாறுதான். ஆனால் ஒரு வேறுபாடு இங்கே அரசாங்கம் ‘தமிழ்’ கவிதைக்கு கொல்லும் விருது! அங்கே (ஈரரன்இ வங்கத்தில்) எதற்கென்று உங்களுக்கு தெரிந்தது தானே.
அது மட்டுமல்ல ஈரானில் விட்ட ‘ஃபத்வாவுக்கு’ பாகிஸ்தானில் கொல்வார்கள். இப்போது ஹொலண்டிலும் கொல்கிறார்கள்!!!!.
..///
இதையெல்லாம் தெரிந்து கொண்டுதானா நாங்கள் விருதுகளுக்காக எழுதகிறோம் என்று கதை விடுகிறீர்கள். ஒருவேளை அவர்கள் விருதுகளுக்காக எழுதுகிறார்களோ?
///…ஒருவகையில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இங்குமட்டுமல்ல பங்காளதேசிலும் இ இரானிலும்இ பாகிஸ்தானிலும் கூட அவ்வாறுதான். ஆனால் ஒரு வேறுபாடு இங்கே அரசாங்கம் ‘தமிழ்’ கவிதைக்கு கொல்லும் விருது! அங்கே (ஈரரன்இ வங்கத்தில்) எதற்கென்று உங்களுக்கு தெரிந்தது தானே.
அது மட்டுமல்ல ஈரானில் விட்ட ‘ஃபத்வாவுக்கு’ பாகிஸ்தானில் கொல்வார்கள். இப்போது ஹொலண்டிலும் கொல்கிறார்கள்!!!!..//
கருத்துக்களை கருத்துக்களின் தளத்திலேயே சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்தும்.வன்முறை அவசியமற்ற இடங்களில் அதைப்பிரயோகிப்பதை மறுத்தேயாகவேண்டும்.ஆனால் ‘ஃபத்வா’ மீது உங்களுக்கிருக்கும் அளவற்ற கோபம் எதன் விளைவு என்பதனை நாங்கள் நன்கறிந்தவர்களாகவுள்ளோம்.
/****மேற்கில் பலஸ்தீனப்பிரச்சினை திரிவு படுத்தப்பட்டு பயங்கரவாத பிரச்சினையாக மக்களைச்சென்றடையும் போது மக்களுக்கு அதனை சரியான அர்த்தத்தில் தெளிவுபடுத்த வேண்டாமா?
****//
அது கவிதை பாடி செய்யமுடியாது. ஏனென்றால் கவிதைக்கு ‘விளக்கமும்’ சொல்ல வேண்டியிருக்கிறது. பாலையூருக்கே தேவைப்பட்டது ,பாலஸ்தீனம் எங்கே?? எவ்வளவு கவி பாடி முடித்துவிட்டனர். கவிதை சுய பார்வைக்கு கட்டுப்பட்டது. அதனால்தான் ‘சரியான அர்த்தம்’ கிடைக்காது என்கிறேன்.
ஒருவேளை மேற்குலகம் கவிஞர்களை தலைவர்களாக தெரிவு செய்தால் நடக்குமோ?
/****ஆனால் உங்கள் முதலாவது பின்னூட்டம் அப்படி அமையவில்லை.இதுவெல்லாம் கவிதை பாடித்தெரிய வேண்டியதல்ல குழந்தைக்கே தெரியும் என்பதாகத்தான் இருந்தது.உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் பாருங்கள்****//
மீண்டும் அதைத்தான் சொல்கிறேன். ‘மெளனமாக தப்பிச்செல்ல’ கவிதை தேவையில்லை. அதற்கு விளக்கமும் தேவையில்லை!
tharique nibras said this on September 19th, 2007 at 8:22 am

தெரியாமல் எழுதுகிறீர்கள் என ஏற்றுக்கொள்கிறேன்! அத்துடன் இதெல்லாம் தெரியாமல் மேற்குலக மக்களுக்கு ‘சரியான அர்த்தத்தை’ கற்றுக்கொடுக்க நினைக்கும் உங்கள் முயற்சி வாழ்க!
tharique nibras said this on September 19th, 2007 at 8:27 am
/****கருத்துக்களை கருத்துக்களின் தளத்திலேயே சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்தும்.வன்முறை அவசியமற்ற இடங்களில் அதைப்பிரயோகிப்பதை மறுத்தேயாகவேண்டும்.ஆனால் ‘ஃபத்வா’ மீது உங்களுக்கிருக்கும் அளவற்ற கோபம் எதன் விளைவு என்பதனை நாங்கள் நன்கறிந்தவர்களாகவுள்ளோம். ……
….குறிப்பாக கிழக்கு வெற்றியினால் கிழக்கு மக்களுக்க எந்த நன்மையும் கிடைக்கவில்லை அதிலும் முஸ்லிம்களுக்கு இது எந்த நன்மையையும் தரவில்லை என்பதையும் இக்கவிதை சொல்கிறது….//
“கிழக்கு வெற்றி” யின்மீது உங்களுக்கிருக்கும் அளவற்ற கோபம் எதன் விளைவு என்பதை நன்கறிந்தவர்களாக உள்ளேன் என்றால் கோபிக்க மாட்டீர்களே ?
//…அது கவிதை பாடி செய்யமுடியாது. ஏனென்றால் கவிதைக்கு ‘விளக்கமும்’ சொல்ல வேண்டியிருக்கிறது. பாலையூருக்கே தேவைப்பட்டது இபாலஸ்தீனம் எங்கே?? எவ்வளவு கவி பாடி முடித்துவிட்டனர். கவிதை சுய பார்வைக்கு கட்டுப்பட்டது. அதனால்தான் ‘சரியான அர்த்தம்’ கிடைக்காது என்கிறேன்…//
மீண்டும் சொல்கிறேன் அது விளக்கமில்லை கருத்து.
//…தெரியாமல் எழுதுகிறீர்கள் என ஏற்றுக்கொள்கிறேன்! அத்துடன் இதெல்லாம் தெரியாமல் மேற்குலக மக்களுக்கு ‘சரியான அர்த்தத்தை’ கற்றுக்கொடுக்க நினைக்கும் உங்கள் முயற்சி வாழ்க!..//
எதைத் தெரியாமல் குழப்..பமா இருக்கே!!!
/****இது எந்த நன்மையையும் தரவில்லை என்பதையும் இக்கவிதை சொல்கிறது….//
ஒரு கூற்றுக்கு விளக்கம் எவ்வாறு எழுதுவது என 4, 5 ம் வகுப்புகளிலும் 10ம் வகுப்பில் ‘கவிதை நயம்’ கற்றபோதும்
தமிழிலக்கணம் கற்றபோதும் வெளியே காக்கைகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்துவிட்டேன் மன்னிக்கவும். எனது தமிழிலக்கண ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்
கவிஞரே இக்கவிதைக்கு நிபாஸ் எழுதிய “கருத்து” தவிர்ந்து வேறேதாவது ‘கருத்து’ம் உண்டா என அறியத்தரவும். வேறேதாவது ‘உட்கருத்து’ இருக்குமோ?
பாலையூர்க்கவிஞரே மெளனம் ஏன்?
ஒருவேளை இரண்டாம் உலகச் சூழலில் சிறுப்பான்மை புறக்கணிப்புநிகழ்வது ஒருவகை இயல்புதான் போல
எல்லோரும் முன்னேறிவிடுகிறார்கள் ஒருசிலரின் கதறலில்

கிழக்கின் உதயம் வெற்றியின் குறியீடல்ல. தீயன கழிதலின் மகிழ்ச்சி. மிகுதியும் கழிய இறைவனைப்பிரார்த்திப்போம். திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை.

-றகீபா-
புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள். புலவர்களுக்குள் சச்சரவு தேவைதான்.அதுவே சண்டையாக மாறிவிடக்கூடாது!
/***காமரசக் கவிஞர்களும் அப்படிச்சொன்னார்கள் என்பதற்காக நாங்களும் அவர்களும் ஒன்றா?***/
ஒப்பிட்டது நானல்ல நீங்களே!!!
காமரச கவிஞர்களை வம்புக்கிளுத்தது யார்?
/***சொற்களை விடுங்கள் செயலைப்பாருங்கள்.***//
ஜிஃப்ரியின் கவிதையில் சொற்களைத்தான் பார்க்க முடிகிறது. செயலை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
கவிதையில் தேடிப்பார்த்தாலும் ஒரே ஒரு செயல் தான் தெரிகிறது ‘மெளனமாக தப்பிச்செல்வது”!
Moving the goal post என ஆங்கிலத்தில் இதைத்தான் சொல்வார்கள்.
முதலில் கவிதைக்கு விளக்கம் தேவையில்லை என்றீர்கள். பின்னர் அதை நீங்களே எழுதினீர்கள். கேட்கப்போக வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை என்றீர்கள் அதிலேயே ‘வனப்புள்ள’ என்று ஜாலம் விட்டீர்கள். பின்னர் அதை கேட்கப்போக சொற்களை விடுங்கள் செயலை பாருங்கள் என்கிறீர்கள். இனி எங்கே goal post ஐ நகர்த்தப்போகிறீர்கள்????
/**கிழக்கு வெற்றியின் உண்மை நிலை குறித்து ஜிஃப்ரியால் எழுத முடிந்தது அதனால்தான்.**/
எனது முதலாவது பின்னூட்டதினை கவனமாக வாசிக்கவும். கீழே தருகிறேன். காமக்கவி , கள்ளக்கவி என் திசை திருப்பல் வேண்டாம் தோழரே!
(..இது கவிதை பாடித்தெரிய வேண்டியதொன்றல்ல. காலங்காலமாக தெரிந்த்த உண்மை. ஈழத்து சின்னக் குழந்தை கூடச்சொல்லும். ஆனால் சிலர் கவிதையாய் அழவேண்டி இருக்கிறது. அதற்கு சிலரோ விழுந்தடித்து விளக்கம் சொல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்களும் என்ன செய்ய, இரண்டுபக்கமும் ஆடினால் கவிதையும் விளக்கமும் தான் கைகொடுக்கும் என நினைக்கிறார்கள் போல்.
இல்லை என்பதுதான் உண்மை!!!! )
/***நீங்கள் நினைப்பதெல்லாம் கண்டுபிடிப்பதற்கு ஒன்றும் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை.***/
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!
/****ஏற்கனவே முரண்வெளி என்றொரு இணையத்தில் ஜிஃப்ரியின் கட்டுரைகள் காமரச நோக்கிலும் இந்துத்துவ நோக்கிலும் பின் நவீன முலாம் பூசிக்கொண்டு விமர்சிக்கப்பட்டிருந்தன.
அந்த விமர்சனப்பாணிதான் உங்களிடத்திலும் விளங்குகிறது.ஆகவே உங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்புகள் அப்படித்ததான் அமையும் என்று எல்லோரும் யூகித்துச் சொல்லிவிடலாம்.****//
அட..அட…அடடா!!! சத்தியக்கடதாசியே போதும். முரண்வெளி ஒரு இணையத்தளமா? நான் ஐரோப்பாவில் வெளிவரும் சிறுபத்திரிகை என நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதுக்குள்ள என்னையும் இழுக்கிறீர்கள்!!!
/*****அரபாத்தின் சில்மிசத்தை நீங்கள் டி.வி.யில் பார்த்ததுக்கும் தர்வீஸின் கவிதைக்கும் என்ன தொடர்பு?***//
கிழக்கு விடுதலைக்கும் மஹ்மூத் தர்வீஸுக்கும் உள்ள தொடர்புதான். கவிதை தேவையில்லை குழந்தைக்கே விளங்கும் என்பதற்கு ‘கோழிச்சிறகு’, ‘வனப்புள்ள திறப்பு’ ,’காமக்கவி’ என்பதற்கும் என்ன தொடர்பு தோழரே?
/***பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை அவர் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்***/
பாலஸ்தீன குழந்தையை கேளுங்கள். அதற்கு கவிதை தேவையில்லை என சொல்லும்.
/**தஸ்லிமா நஸ்ரினை ஏன் இங்கு குறிப்பிடுகிறீர்கள்?**//
நீங்களும் தலிஸ்மா நஸ்ரினை சொன்னால் கோபப்படும் ஆளா? ஊருக்கு உபதேசம் (சமத்துவம், சகோதரத்துவம்) உனக்கல்லடி மகளே!!!
/****அவரை உங்களைப் போன்றவர்கள் கொண்டாடுவதன் அரசியலை நாங்கள் புரிந்து கண நாளாயிற்று.**//
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!
/***நான் எழுதியது ஜிஃப்ரியின் கவிதைக்கான விளக்கவுரையல்ல எனது கருத்து.***//
/…இந்நிலையில் அரசாங்கத்தின் கிழக்கு வெற்றிக் கொண்டாட்டங்கள் வெறும் கேலிக்கூத்து மட்டுமே என்கிறார் ஜிஃப்ரி……/
இது கருத்தா? இல்லை விளக்கமா??? சொல்லுங்கள் ,எனக்கு தமிழறிவு குறைவு. காமக்கவிகளுடன் கரகாட்டம் ஆடியதால் வந்த வினை!!!
/****உங்களைப் போன்றவர்களால் கருத்தகள் விளக்கவுரைகளாக விளங்கிக்கொள்ளப்பட்டு கேலி செய்யப்படுமானால் திரு.ஷோபா சக்தி அவர்கள் கொமன்ட்ஸ் எனும் பகுதியை சத்திய கடதாசிலிருந்து நீக்கிவிடுவது சுகம்.***/
ஏனையா சோபாவை இழுக்கிறீர்கள். இப்படித்தான் சின்ன வயசில் பயமுறுத்துவார்கள். சாமி கண்ணுக்குள்ள குத்தும், குளப்படிவிட்டால் பொலிஸ்காரன் வருவான் என்று. பிறகு ஆமிகாரன் வரேக்க பயமுறுத்தினவைதான் முதல் ஓடினவையள் எண்டது வேறகதை!!!!
/*****பாலையூர் கவிஞனுக்கு நான் ஏன் அடிக்க வேண்டும்?***/
பின்ன ஏன் அவரது கவிதைக்கு விளக்க உரை எழுதி வம்பில மாட்டினியள்??? சும்மா ஜோக் தான், கோவிக்காதயுங்கோ!!!
/…காமரசக்கவிஞர்களை வம்புக்கிழுத்தது யார்?…/
கவிதை பற்றிய உங்கள் எதிர்பார்ப்புக்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தினால் அதுக்கு காமரசக்கவிஞர்களை வம்புக்கிழுத்தல் என்று அர்த்தமா? என்னோடு மோதுவதற்கு காமரசக்கவிஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறீர்கள் ரூபன்.போங்கள் நீங்கள் பலே…பலே…கில்லாடிதான்.
/…ஜிஃப்ரியின் கவிதையில் சொற்களைத்தான் பார்க்க முடிகிறது. செயலை நீங்கள் தான் சொல்ல வேண்டும்…/
ரூபனுக்கு புரிதலில் சிக்கலிருக்கிறது என நினைக்கிறேன்./..எனக்கு தமிழறிவு குறைவு../ என அவரே ஒத்துக்கொள்வதனால் சந்தேகத்திற்கு இடமின்றி அது உறுதியாகிவிட்டது.
சொல்லும் செயலும் என நான் இங்கு குறிப்பிட்டது கவிஞர்களின் கவிதை பற்றிய அபிப்ராயத்தையும் பின் அவர்களின் அபிப்ராயத்துக்கு ஏற்றாற்போல கவிதை செயற்பாடு உண்டா? என்ற கருத்தில்தான்.ரூபன் உங்களுக்கு விளங்காவிட்டால் தம்ழறிவு உள்ளவர்கள் யாராவது இருந்தால் கேட்டு தெளிவு பெறுங்கள்.
/…இது கவிதை பாடித்தெரிய வேண்டியதொன்றல்ல. காலங்காலமாக தெரிந்த்த உண்மை. ஈழத்து சின்னக் குழந்தை கூடச்சொல்லும். ஆனால் சிலர் கவிதையாய் அழவேண்டி இருக்கிறது…/ அப்படியானால் ரூபன் ஒன்று செய்யுங்கள் எதைப்பற்றி கவிதை எழுத வேண்டும் எதைப்பற்றி எழுதக்கூடாது என்று பேசாமல் பட்டியலொன்றைத்தயாரித்து கவிஞர்களுக்கு மட்டுமாவது விநியோகித்து விடுங்கள்.இப்படியான சர்ச்சைகளை தவிர்க்கலாமல்லவா?
/…பாலஸ்தீன குழந்தையை கேளுங்கள். அதற்கு கவிதை தேவையில்லை என சொல்லும்../
அமெரிக்க கவிஞர் ஷாமெல் ஒரு தடவை அமெரிக்க ‘ஜனநாயகவாதிகளை’ப்பார்த்துச் சொன்னார் “அவர்கள் கவிஞர்களுக்குப் பயப்படுகிறார்கள் உண்மைகளைக்கண்டு பயப்படுகிறார்கள்”
பாலஸ்தீனத்தில் குழந்தைகளுக்கு வேண்டுமானால் கவிதை தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் தர்வீஸின் கவிதைகள் இன்று பலஸ்தீனப்பிரச்சினையை உலக அரங்குக்கு எடுத்துச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளன.
இவரது கவிதைகளை இஸ்ரேவிய அரசு பாடப்புத்தகத்தில் சேர்ப்பதற்கு தொடந்து எதிர்ப்புக்காட்டி வருகிறது.
குழந்தைகளுக்கும் உபயோகமில்லாத கவிதை வல்லரசுகளால் எதிர்க்கப்படுகிறதேன்றால்…
ரூபனும் அதை எதிர்கிகிறாரென்றால் அவருக்கும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இலங்கை அரசுக்கும் ஏதும் கள்ளத்தொடர்புகள் இருக்குமோ?
கவிஞர்களே ஜாக்கிறதை!!!
ரூபன் புஷ்ஷையும் எஹூட் ஒல்மட்டையும் மஹிந்தவையும் அழைத்துக்கொண்டு வரப்போகிறார்!!!
/..நீங்களும் தலிஸ்மா நஸ்ரினை சொன்னால் கோபப்படும் ஆளா?../
இரக்கப்படுவதற்கு நீங்களிருக்கும் போது நான் குhபப்படக்கூடாதா?
இது மனித உரிமை
இரக்கப்படுவதற்கான உரிமை அல்லது கோபப்படுவதற்கான உரிமை ரூபன் அனுபவியுங்கள் அனுபவியுங்கள் இது ஜனநாhயக உலகம்.
/..இது கருத்தா? இல்லை விளக்கமா??? சொல்லுங்கள் இஎனக்கு தமிழறிவு குறைவு. காமக்கவிகளுடன் கரகாட்டம் ஆடியதால் வந்த வினை!!!../
கருத்து எது விளக்கமெது என அறிய உங்களுக்கு தமிழ் அறிவு குறைவானதாக இருப்பதனால் யாரேனும் தமிழ் பேராசிரியர்களை நாடவும்.
-தாரிக் நிப்றாஸ்-
/****அமெரிக்க கவிஞர் ஷாமெல் ஒரு தடவை அமெரிக்க ‘ஜனநாயகவாதிகளை’ப்பார்த்துச் சொன்னார் “அவர்கள் கவிஞர்களுக்குப் பயப்படுகிறார்கள் உண்மைகளைக்கண்டு பயப்படுகிறார்கள்”*****//
பாலையூர் கவிஞன் ஜிஃரியில் ஆரம்பித்து பாலஸ்தீனம் போய் இன்று அமெரிக்க கவி ஷாமெல் என்று வருகிறீர்கள். Moving the goal post !!!!
/***பாலஸ்தீனத்தில் குழந்தைகளுக்கு வேண்டுமானால் கவிதை தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் தர்வீஸின் கவிதைகள் இன்று பலஸ்தீனப்பிரச்சினையை உலக அரங்குக்கு எடுத்துச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளன.***//
எடுத்துச்சொல்வதில் வெற்றி பெற்றுள்ளன??? பரவாயில்லை , ஆம் என்றே வைத்துக்கொண்டாலும் பாலஸ்தீனியர்களின் பிரச்சனை தீர்ந்ததா? ஈடாக இஸ்ரேல்லிய கவிகளும் தமது அகதிவாழ்க்கையையும் இஸ்ரேலின் தேவையையும் கவிபாடியிருப்பார்கள் தேடிப்பாருங்கள்.
/***இவரது கவிதைகளை இஸ்ரேவிய அரசு பாடப்புத்தகத்தில் சேர்ப்பதற்கு தொடந்து எதிர்ப்புக்காட்டி வருகிறது.***//
பாடப்புத்தகத்தை விடுங்கள் கடையில் விலைக்கு விற்க பிரசுரிக்கவே ‘ஃப்த்வா’ விடும் கோஷ்டிகளும் இருக்கிறன!!!
/****குழந்தைகளுக்கும் உபயோகமில்லாத கவிதை வல்லரசுகளால் எதிர்க்கப்படுகிறதேன்றால்…
ரூபனும் அதை எதிர்கிகிறாரென்றால் அவருக்கும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இலங்கை அரசுக்கும் ஏதும் கள்ளத்தொடர்புகள் இருக்குமோ?***//
அடேங்கப்பா! புல்லரிக்குது கவிதைப்பிரியரே உங்களால் மட்டும் இவ்வாறெல்லாம் ‘சரியாக’ ஊகிக்க முடிகிறது?
அமெரிக்காவின், மத்திய அமெரிக்க புரட்சியாளர்களுக்கு எதிரான (central american countர்-insurgency) யுத்தியை இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கெதிரான யுத்தத்தில கையாண்டு மெருகூட்டி இஸ்ரேல் துணையுடன் கிழக்கில் நடைமுறைப்படுத்த ‘கைகொடுத்த’ கூட்டம் கண்ணுக்கு முன்னே நின்ற போது கவிபாடியவர்கள் , உலகக்கவிகளின் பிரியர்கள், சொல்கிறார்கள். எல்லோரும் திரண்டுவந்து கேளுங்கள் இஸ்ரேலுடனான எனது கள்ளத்தொடர்பை!!!!!!!
/***கவிஞர்களே ஜாக்கிறதை!!!
ரூபன் புஷ்ஷையும் எஹூட் ஒல்மட்டையும் மஹிந்தவையும் அழைத்துக்கொண்டு வரப்போகிறார்!!!****/
பயம் வேண்டாம் கவிஞர்களே அவ்வாறு வந்தாலும் நான் வெளிப்படையாகவே வருவேன். இஸ்ரேலுடன் கூடி அமெரிக்க போருத்தியை உங்கள் மண்ணில் திணிக்கமாட்டேன்.
முக்கியமாக கவிஞர்களுக்கு கவிபாடியதற்கே ‘ஃபத்வா’ விடமாட்டேன்!!!!!!!
ஜிப்ரியின் வரிகளுக்கு இவ்வளவு …………. அதிகம்தான்.
/***இரக்கப்படுவதற்கு நீங்களிருக்கும் போது நான் குhபப்படக்கூடாதா?
இது மனித உரிமை
இரக்கப்படுவதற்கான உரிமை அல்லது கோபப்படுவதற்கான உரிமை***//
உண்மைதான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் பாலஸ்தீனக்கவிக்கு இரக்கமும் பங்காளக் கவிக்கு கோபமும், தர்வீஸுக்கு தண்ணீரும் தலிஸ்மாவுக்கு தணலும் காட்டுகிறீர்களே. ஜனநாயகம் தான்
அனுபவியுங்கள் அனுபவியுங்கள் இது ஜனநாhயக உலகம்.
நான் சொன்ன ஜனநாயகமல்ல உங்கள் அமெரிக்க கவி ஷாமெல் சொன்ன “ஜனநாயகம்”.
//..எடுத்துச்சொல்வதில் வெற்றி பெற்றுள்ளன??? பரவாயில்லை இ ஆம் என்றே வைத்துக்கொண்டாலும் பாலஸ்தீனியர்களின் பிரச்சனை தீர்ந்ததா?..//
ஐயா கவிதை எழுதுவது பிரச்சனையை தீர்ப்பதற்கா? பலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்தை மேற்கு ஊடகங்கள் பயங்கரவாதமாக சித்திரித்துக் கொண்டிருக்கின்றன்.இந்த சித்தரிப்பு மக்களின் பிரச்சினைகளுக்கு திர்வு கிடைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தாதா? தர்வீஸின் கவிதைகள் இன்று மேற்கில் அதிக மக்களை சென்றடைந்துள்ளது.லண்டனில் அவரது கவி அரங்குக்கு அதிக மக்கள் பிரசன்னமாகின்றனர்.எனவே ஒரு மக்கள் திரளின் பிரச்சினை சரியான அங்கிகாரம் பெற்றபின்னரே தீர்வு நோக்கி நகரும்.
கவிதை பிரச்சினைக்குத்தீர்வுகள் வழங்கவேண்டும் என எதிர்பார்ப்பது அறிவுடைமையாகாது நண்பரே!!!
//..பாடப்புத்தகத்தை விடுங்கள் கடையில் விலைக்கு விற்க பிரசுரிக்கவே ‘ஃப்த்வா’ விடும் கோஷ்டிகளும் இருக்கிறன!!!..//
‘மூவிங் த கோல் போஸ்ட்…!!!
//…பயம் வேண்டாம் கவிஞர்களே அவ்வாறு வந்தாலும் நான் வெளிப்படையாகவே வருவேன். இஸ்ரேலுடன் கூடி அமெரிக்க போருத்தியை உங்கள் மண்ணில் திணிக்கமாட்டேன்…//
‘ப்ரொமிஸ்…’
//…நான் சொன்ன ஜனநாயகமல்ல உங்கள் அமெரிக்க கவி ஷாமெல் சொன்ன “ஜனநாயகம்…//
உண்மைதான் ஜனநாயகம் ஆளுக்காள் வேறுபடுகிறது இல்லையா…?
///..பாலஸ்தீனக்கவிக்கு இரக்கமும் பங்காளக் கவிக்கு கோபமும்இ தர்வீஸுக்கு தண்ணீரும் தலிஸ்மாவுக்கு தணலும் காட்டுகிறீர்களே.. .//
ஜிஃப்ரிக்கு நீங்கள் காட்டியது என்ன தணலா தண்ணீரா?