இன்மை

அறிவித்தல்கள்

கலை இலக்கியத்தை புரிதலுக்காக வகைப்படுத்தும் வரலாறு மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு பகுதி. தேர்வு – வகைப்படுத்தல் என்பன தவிர்க்க முடியாத இயங்கியல். சுதந்திரம் என்பது தனித்தியங்குதலாக பரவலாக அறியப்பட்டு விளங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆழமான பார்வையில் – அறிதலில் அனைத்து நுணுக்கங்களையும் இணைத்துத் தெரிவை ஏற்படுத்துவது எல்லா நேரமும் சாத்தியமில்லை.

இவ்வகை அறிதலின் சிக்கல் இயலாமையின் காரணமாக பெரிதுபடுகிறது என்ற மேலோட்டமான பார்வை தவறு. நுணுக்கமான வெவ்வேறு உண்மைகளின் தனிப்பட்ட பண்புகள் தலைதூக்கி நிற்கும் கட்டுமானத்தை அப்படியே உள்வாங்குவதன் சாத்தியப்பாடு பற்றி பேசுவதைவிட அந்த சாத்தியப்பாட்டின் மூலம் – அவ்வாறான அறிதலின் மூலம் நாம் முன்வைக்கும் தெரிவு என்ன? அதன்மூலம் தெளிவு ஏற்படுத்துவது சாத்தியமா?

இயங்கியல்முறை அறிதல் இதற்கு மாறாக இருப்பதன் காரணம் இந்தச் சிக்கல்தான். அறிதலுக்கு பின்னால் இருக்கும் தேவையை விட்டு அறிதலைப் பற்றி அலட்டுவதே இப்படியான குழப்பங்களுக்கு இட்டுச்செல்கிறது. அறிதலுக்குப் பின்னியங்கும் வரலாற்றுத் தொடரை புதைத்ததின் மூலம் சமகால வசனங்களை “நவீனமயப்படுத்தி” ஒட்டுமொத்த சனங்களினதும் மூளையில் மிதிக்க நினைக்கிறார்கள். “நவீனமயமாக்கல்” என்பதன் மூலம் நாம் குறிப்பிடுவது விற்பனை முறையை. பிரார்த்தனை இதற்கு பொருத்தமான சொல்லாக இருக்கலாம். ஏன் என்றால் இந்த அறிதல் முறை விஞ்ஞான பூர்வமானதல்ல. மாறாக உணர்தல் வகைப்பட்டது. பெரும்பான்மையை குறிவைத்து இயங்கும் இந்த முறைக்கு பின்னிருக்கும் அரசியலை பிய்த்து தள்ள வேண்டிய கட்டாய மாற்று அரசியலை நாம் செய்தே ஆவோம்.

இதன் காரணமாகத்தான் அனைத்து கேள்விகளுக்கும் இடமளித்து சமகால கட்டுமானத்தை குறிவைத்துத் தாக்க எண்ணம். தத்துவார்த்தத் தடால்புடல்களோடு நின்றுவிடப்போவதில்லை எமது போர். ஒவ்வொரு நிமிடமும் துன்பத்துக்கும் சுரண்டலுக்கும் உட்படும் பெரும்பான்மை மனித குலத்தின் சார்பில் எமது பிரகடனம் ஒதுக்குவார் ஒடுக்குவார் பிடரியில் விழும்படி இயங்கும். வெட்கம், மானம், ரோசமின்றி ஆதிக்கக் கட்டுமானத்தின் கதையாடல்களையும் கதாநாயகர்களையும் உங்கள்முன் நிறுத்தி விசாரிப்புக்கு உட்படுத்துவோம்.

அடக்குமுறைக்கு எதிராக அடிபட அல்லது குறைந்தபடசம் அதுபற்றிக் கேள்விகள் வைக்கும் அனைவரையும் வரவேற்கிறது ‘இன்மை‘. அய்ரோப்பிய- தமிழகத் தோழர்களின் கூட்டுழைப்பில் 2007 ஓகஸ்ட் முதல் வெளிவரயிருக்கிறது ‘இன்மை’ சிற்றிதழ்.

தொடர்புகளுக்கு:

senan : [email protected] or [email protected]
Jayapalan : [email protected]
A. Marx : [email protected]

12 thoughts on “இன்மை

  1. அறிமுகமே விளங்கவில்லை. நீங்கள் சொன்னமாதிரி “தத்துவார்த்தத் தடால்புடல்களோ” ????
    மற்றது இப்படித்தான் ‘தோழர்களின்’ இயக்க நோட்டீசுகளும் கதைகளும் ஆரம்பத்தில் இருந்தது. காலம் போகப்போகத்தான் தெரிந்தது எல்லோரும் ஒரே குட்டை தான் என்று.

  2. இப்படி ஒரு சஞ்சிகை என்றதும் கேலியும் கிண்டலுமே மேலெழுகிறது! யார் செய்த குற்றம் இது?

  3. மக்களுக்கு புரியாதபடி பேசினா சரியெனடறாகுமோ? தமிழ் அழகான மொழி. அத சாக்காட்டித்தான் உங்கட புத்தகம் வருமின்னா அத நாம படிக்காம விடுவம். ணஎன்ன சொல்றீகன்னு கொஞ்சம் மொழிபெயர்த்தாவது போடலாமே.

  4. மொழி மூலம் எதையும் உறுதியாக சொல்லிவிட இயலாது என்கிற விசயத்தைச் சொல்வதற்கு நாம் மொழியையே பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே முன்னிற்றலின் இயங்காவியலில் இருந்து தப்பித்து நின்று பேச வேண்டுமெனில் வேண்டுமென்றே ஒரு ‘புரியாத மொழியை’ –acommunicative strategy யைப் பின்நவீன நிலைச் சிந்தனையாளர்கள் கைக்கொள்ள வேண்டியுள்ளது.

    அ. மார்க்ஸ்
    ஒரு தேவதூதனின் வருகை;காக காத்திருப்பது போல நீதிக்காகவும் சனநாயகத்திற்காகவும் காத்திருப்போம்.
    கறுப்பு 2002

  5. பரதநாட்டியகலையானது புனிதமானதும் பலகட்டுப்பாடுகளையும் கொண்டது ஆனால் இப்போது நிலைமைமாறி புலிப்பாடல்களுக்கு பரதநாட்டியகலையின் முகபாவனை அசைவுகளை மாற்றி புலிகளின் பயங்கரவாத அசைவுகளான துப்பாக்கியால் சுடுவதுபோலவும் வாளால் வெட்டுவதுபோலவும் கோபத்துடன் பாய்ந்து சென்று தாக்குவதுபோலவும் இந்த சிறுமிகளுக்கு பரதக்கலை மூலம் பயங்கரவாதத்தை வளர்க்கிறார்கள். பரதக்கலை பயில தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் அவதானமாக இருப்பது நல்லது.
    நன்றி : தேனீ

    அட பரதேசிப்பன்னாடைங்களா! புலி செய்தா எல்லாத்தையும் எதிர்க்கவேணுமா! ஆரோ ஒண்டு விளக்கங்கெட்டது எழுதிப்போட்டுது எண்டதுக்காக அத போடவேணுமா?
    புலி – பாசிசம் தான் ஆள கொல்லிதான் – ஆனா புலி எதிர் மோசமா அல்லே போய்க்கொண்டிருக்கு.
    ஜனநாயகம் பேசிறது வேற. துவக்கு தூக்கிச்சுட வக்கில்லாததால ஜனநாயகம் பேசிறது வேற. ஜனநாயக விரும்பிகள் இந்த துல்லியமான வேறுபாட்டை இனங்கண்டு கைகோர்க்கிறது இண்டைக்கு மிக அவசியம்.

  6. /பயங்கரவாத அசைவுகளான துப்பாக்கியால் சுடுவதுபோலவும் வாளால் வெட்டுவதுபோலவும் கோபத்துடன் பாய்ந்து சென்று தாக்குவதுபோலவும் இந்த சிறுமிகளுக்கு பரதக்கலை மூலம் பயங்கரவாதத்தை வளர்க்கிறார்கள்…..////

    ஓமோம் … தனித்த வனத்தில் அழுத்தி எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா என்று கண்ணனை அழைத்து முகபாவம் காட்டேக்க வராத கோபம். ராவணனை மூர்க்கமான அரக்கன் எண்டு சொல்லேக்க வராத கோபம் … குட்டி மணியை சிங்களவன் அடிக்கேக்க அவன்ர தோல்ல செருப்பு தைப்பம் எண்டு சொல்லி முகபாவம் காட்டேக்க வராத கோபம்.. நந்தனாரை ‘ஒளிப்பிழம்பாக’ மாற்றேக்க வ்ராத கோபம் இந்தப்பரதேசிக்கூட்டத்துக்கு புலி-எதிப்பில வந்து கொப்பளிக்குது.
    இப்பவாத விளங்கி பம்மாத்த்தை நிப்பாட்டுங்கோ!
    இதில ‘துல்லியமான’ வேறுபாடு எண்டு அடுத்த பம்மாத்து வேற!

  7. உதயாவின் கருத்தை வரவேற்கிறேன்.
    ஜனநாயகம் பேசிற பலா துவக்குத்தூக்கிச்சுட வக்கில்லாததால் தான் பேசுகிறார்கள். இவாகள் கையில் துவக்கும் அதற்குரியபலமும் இருந்தால் புலி ஓரு மூலைக்குள். இன்று புலி முந்திக்கொண்டது. அவ்வளவே.

  8. ரூபத்தின்ர மண்டேக்க புலி படமெடுத்தாடுது.
    எதைசொல்லியும் ஏறப்போறதில்லை.
    ஆறறையாலும் பிள்ளையள பலிகுடுக்காம தான் போய்சாகிறது உசிதம்.

  9. இண்டைக்கு பாருங்கோ இந்த ‘துல்லியமான வேறுபாட்டை இனங்கண்டு’ டக்ளசும் கருணாவும் கைகோத்திருக்கினம் எண்டு அறிக்கை படிச்சன் பாருங்கோ! என்ன சொன்னாலும் முதல் நாள் சுடுபட்டு அடுத்த நாள் ஜனநாயகத்துக்கு கைகோப்பதில புலி/ஸ்ரீலங்காவை முந்திப்போட்டினம் ஈ.பி.டி.பி காறர்!

  10. “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழுவில் செல்வம் அடைக்கலநாதன் (தலைவர்இ தமிழீழ விடுதலை இயக்கம்)இ சுரேஸ் பிரேமச்சந்திரன் (செயலாளர் நாயகம்இ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி)இ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தலைவர்இ தமிழ்க் காங்கிரஸ்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான சர்வதேச ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்”

    வைகறை குறிப்பிடும் இந்தச் செய்தியில் உண்மையில்லாமல் இல்லை. ஏனெனில் இரா. சம்பந்தனின் தலைவர் அ. அமிர்தலிங்கம்இ அடைக்கலநாதனின் தலைவர் சிறிசபாரட்ணம்இ சுரேஸ் பிரேமச்சந்திரனின் தலைவர் பத்மநாபா ஆகியோரை புலிகளே கொலை செய்தனர் என்பது உலகம் அறிந்த உண்மை.

    ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைவரும்இ தந்தையுமான குமார் பொன்னம்பலத்தை இலங்கை அரசின் ஏஜண்டுகளே கொலை செய்ததாக புலிகள் பிரச்சாரம் செய்து வந்ததுடன்இ புலிகளின் தலைவர் பிரபாகரன் குமாருக்கு ‘மாமனிதர்’ பட்டமும் வழங்கி கௌரவித்திருந்தார்.

    இந்தச் சூழலில் வைகறையின் “தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொல்லப்பட்டவர்கள்” என்ற தகவலின்படி குமார் பொன்னம்பலத்தை புலிகளே கொலை செய்துள்ளார்கள் என்ற விடயம் இப்பொழுது அம்பலத்துக்கு வந்துள்ளது. புலிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஆதரவாளர்களால் நடாத்தப்படும் ஒரு பத்திரிகையில் ஆதாரமில்லாமல் இவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டிருக்கும் சாத்தியமில்லை.

    நன்றி : தேனீ.
    என்னவிதமான மொண்ணத்தனமான ஆய்வுகள்.
    இந்த இன்மைகளுககாகவாவது இன்மை வரட்டும்.

  11. இன்மை வெளிவந்து விட்டதா?
    நெட் முகவரியை தயவுசெய்து தந்துதவவும்.
    இன்மை பார்க்க ஆவலாயுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *