” நாம் ஒருபோதும் பெயரளவிலான ஜனநாயகத்தை வழிபடுபவர்களாக இல்லை. இதன் பொருள் நாம் எப்போதும் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் வடிவிலிருந்து, சமூக உட்கருவைப் பிரித்துப் பார்த்திருக்கிறோம். பெயரளவில் சமத்துவம், சுதந்திரம் என்னும் இனிய மேற்பூச்சின் கீழ் உள்ள சுதந்திரமின்மை, சமத்துவமின்மை என்னும் கசப்பான பகுதியினை நாம் எப்போதும் வெளிப்படுத்தியது அந்த இனிய மேற்பூச்சினை புறக்கணிப்பதற்காகவல்ல. மாறாக மேற்பூச்சில் திருப்தி அடைந்துவிடாமல் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்துப் புதிய சமூக உள்ளடக்கங்களை நிரப்ப வேண்டுமென உழைக்கும் வர்க்கத்திற்கு உணர்த்துவதற்காகவே. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் பாட்டாளிவர்க்கம் செய்யவேண்டிய வரலாற்றுப்பணி, முதலாளித்துவ ஜனநாயகத்தின் இடத்தில் சோசலிச ஜனநாயகத்தை நிறுவுவதேயன்றி ஜனநாயகத்தையே ஒழித்துவிடுவதல்ல.”
– ரோஸா லக்ஸம்பேர்க்
எதிர்வரும் ஏப்ரல் 22ம் நாள் பிரான்ஸின் அதிபரைத் தேர்வு செய்வதற்கான முதலாம் சுற்றுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. களத்தில் இருக்கும் பன்னிரெண்டு வேட்பாளர்களில் உலகமயமாக்கல் எதிர்ப்புப் போராளியும் விவசாயிகளின் தலைவருமான ஜோஸே புவே, த்ரொஸ்கியக் கட்சியான LCRன் பெசன்செனோ, கம்யூனிஸ்ட் கட்சியின் மரி ஜோர்ஜ் புபே, மற்றும் தொழிலாளர் போராட்டக் கட்சி, பசுமைக்கட்சி வேட்பாளர்கள் கருத்துக் கணிப்புகளில் தலா இரண்டு வீதத்திற்கும் குறைவான ஆதரவையே பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் UMPயின் வேட்பாளரான வலதுசாரி நிக்கோலா சார்க்கோஸியை சோஸலிசக் கட்சியின் வேட்பாளரான செகோலென் ரோயாலால் மட்டுமே வீழ்த்த முடியும்.
இப்போதைய தேர்தல் கருத்துக் கணிப்புகளின்படி சார்க்கோஸிக்கு அடுத்த நிலையில் முறையே செகோலென் ரோயாலும் வலதுசாரி தாராளவாதியுமான UDFன் பிரான்சுவா பேய்ரூவும் FNன் இனவெறியன் ஜோன் மரி லூபென்னும் இருக்கிறார்கள். செகோலென் ரோயாலுக்கும் இனவாதி லூபென்னுக்குமிடையே ஆதரவு விகிதம் மூன்று வீதத்தால் மட்டுமே வித்தியாசப்படுகிறது. முதலாவது சுற்றில் செகோலென் ரோயால் தோல்வியைத் தழுவினால் இரண்டாவது சுற்றுக்கு முந்தைய அதிபர் தேர்தலைப்போலவே இனவாதி லூபென் முன்னேற வாய்ப்பிருக்கின்றது.
செகோலென் ரோயால் ஒன்றும் சமூக சனநாயகவாதி கிடையாது. அவர் தொழிலாளர்களுக்கோ அகதிகளுக்கோ வதிவிட அனுமதியற்றவர்களிற்கோ தனது தேர்தல் வாக்குறுதிகளில் எந்த நம்பிக்கையை அளிக்கவுமில்லை. அவர் பிரஞ்சு முதலாளி வர்க்கத்தின் ஆதரவாளராயும் உலகமயமாக்கலின் ஆதரவாளராயுமிருக்கிறார். வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை அவரின் கொள்கைகளும் ஆளும் UMPயின் கொள்கைகளும் ஒரேவகையானவையே. சோசலிஸக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் மக்களுக்குப் புதிய உரிமைகளையும் சலுகைகளையும் கொடுப்பார்களோ இல்லையோ ஆனால் ஏற்கனவேயிருக்கும் சமூகநல உரிமைகளையும் உதவிகளையும் வெட்டித்தள்ள மாட்டார்கள் என்ற பொதுமக்களின் நம்பிக்கையை அவர்கள் இந்தத் தடவையும் காப்பாற்றுவார்கள் என்று நம்புவதற்கான ஆதாரங்களும் மிகக் குறைவாகத்தானுள்ளன. ஏனெனில் வாய்க்கு வாய் வலிமையான பிரான்ஸ் என்று பேசும் செகோலென் ரோயால் நாட்டின் வேலையின்மை, வதிவிடமின்மை அகதிகள், குடியேற்றவாசிகள் குறித்தெல்லாம் வெறும் கோஷங்களுக்கு அப்பால் எந்த ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்தையும் முன்வைத்துத் தேர்தலில் நிற்கவில்லை.
எனவே செகோலென் ரோயாலின் வெற்றி இந்தத் தேர்தலில் நமக்கும் பிரான்சுக்கும் முக்கியமானது என்று சொல்வதைக்காட்டிலும் சார்க்கோஸியின் தோல்வி நமக்கும் பிரான்சுக்கும் நன்மையைத் தரும் என்று சொல்லதே சரியாகயிருக்கும்.
UMPயின் வேட்பாளர் சார்க்கோஸியின் குரல் ஒரு காட்டுமிராண்டி இனவாதியின் குரல் போலவே இந்தத் தேர்தலில் ஒலிக்கிறது. உண்மையில் இம்முறை சார்க்கோஸி, இனவாதி ஜோன் மரி லூபென்னின் அரசியலைத் தன் கைகளில் எடுத்திருக்கிறார்.
சார்க்கோஸி குடியேற்றவாசிகள் மற்றும் தேசிய அடையாளங்கள் ஆகியவற்றுக்காக ஒரு சிறப்பு அமைச்சகத்தை நிறுவப்போவதாகவும் அதன் மூலம் பிரான்ஸில் வெளிநாட்டவர் குடியேறுவதைக் கடுமையாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். அவர் தனது தேர்தற் பிரச்சாரங்களில் புலம்பெயர்ந்தவர்கள் மீதும் அகதிகள் மீதும் அப்பட்டமான வெறுப்பை உமிழ்கிறார்.
“சட்டவிரோதமாகப் பிரான்ஸில் நுழையும் ஒரு நபர் ஒரு பிரஞ்சுக்காரருக்குரிய உரிமைகளைத் தானும் எதிர்பார்க்கக் கூடாது. ஆவணங்களற்ற (Sans Papiers) புலம்பெயர்ந்தவர்கள் வீடுகளில் வசிப்பதற்கான உரிமைகளைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள். பிரான்ஸில் சட்டபூர்வமாக வாழ்ந்துவரும் ஒரு புலம்பெயர்ந்தவர் அவரின் குடும்பத்திற்குப் பிரஞ்சு மொழி பேசத் தெரிந்தாலன்றி அக்குடும்பத்தை பிரான்சுக்கு அழைத்துவரக் கூடாது. முக்கியமாக அவருடைய வருமானத்தைக் கொண்டு அவரால் அக்குடும்பத்தைக் காப்பாற்ற முடியாவிடில் அவர் தனது குடும்பத்தினரை பிரான்சுக்கு அழைக்க முடியாது. நான் ஆட்சியைக் கைப்பற்றினால் இவற்றைச் சட்டமாக்க விரும்புகிறேன்” என்கிறார் சார்க்கோஸி.
“பிரான்ஸில் எக்காரணம் கொண்டும் கலாசார வித்தியாசங்கள் ஏற்றக்கொள்ள முடியாதவை, அனைத்து வெளிநாட்டினர்களும் பிரஞ்சுக் கலாசாரத்துக்குள் கரைந்துவிட வேண்டும்” எனக் கொக்கரிக்கும் சார்க்கோஸி “பிரான்சுக்கு வெளிநாட்டிலிருந்து அகதிகள் தேவையில்லை, பிரான்சுக்கு வெளிநாட்டிலிருந்து கல்வி கற்ற தொழில் நிபுணர்களே தேவைப்படுகிறார்கள்” என்கிறார்.
சார்க்கோஸி வலுவான பிரான்ஸைக் கட்டியெழுப்பத் தான் தொழிலாளர்களுடைய உரிமைகளை மட்டுப்படுத்தப் போவதாகவும் வேலை நேரத்தை அதிகரிக்கப் போவதாகவும் பகிரங்கமாகவே கூறிவருகிறார். பிரான்ஸின் அய்ந்தாவது குடியரசின் வரலாற்றிலேயே இத்தகையதொரு இனவாதியும் அதிவலதுசாரியுமான ஒருவர் அதிபர் பதவியை நெருங்கியதில்லை.
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்று நாம் முழக்கம் எழுப்புவதற்கான தருணம் இதுவல்ல. பிரான்ஸில் இதுவரை எந்த இடதுசாரிக் கட்சியும் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளவுமில்லை. சார்க்கோஸியின் மூலம் தொழிலாளர்களுக்கும் அகதிகளுக்கும் நெருங்கிவரும் பேராபத்தை இடதுசாரிகள் உணர்ந்தேயிருக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் 9 – 10ம் தேதிகளில் Ile Saint Denisல் கொம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர கொம்யூனிஸ்ட் கழகம், தொழிற் சங்கங்கள், அனார்கிஸ்டுகள், உலகமயமாக்கல் எதிர்ப்புப் போராளிகள், பசுமைக் கட்சியினர், சோஸலிசக் கட்சியினர் ஒரு பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவதற்காக நடத்திய மாநாட்டில் உடன்பாடு எதையும் எட்டமுடியாமல் போனாலும் செகோலொன் ரோயால் முதற் சுற்றில் வெற்றி பெற்றால் இரண்டாவது சுற்றில் இந்தக் கட்சிகள் சார்க்கோஸிக்கு எதிராக நிச்சயம் செகோலென் ரோயாலையே ஆதரிப்பார்கள்.
வாக்குரிமை பெற்ற தமிழ் மக்களை எதிர்வரும் தேர்தலில் சோஸலிசக் கட்சியின் வேட்பாளர் செகோலென் ரோயாலையே ஆதரிக்குமாறு கேட்கிறோம். செகோலோன் ரோயாலின் வெற்றி உங்களின் வெற்றியல்ல! ஆனால் நிக்கொலா சார்க்கோஸியின் வெற்றி உங்களின் தோல்வி!
எளிமையான சுருக்கமான பார்வை.
தலைப்புத்தான் கேலிக்குரியதாகின்றது.
இருந்தாலும் மொழிதொpயாத எங்களுக்கு பயன்மிக்க குறிப்புக்கள்.
பிரான்சில புலியின்ட ஆக்கள் யாரும் ஜனாதிபதியா வாரதுக்கு சான்ஸ் இல்லையோ? எங்கட ஆட்கள் 80 ஆயிரம் பேர் அங்க இருக்கினமாமே. அப்பிடியே சொலிட்றா அவ்வளவு வோட்டையும் எடுக்கிற டெக்னிக்குகள் (வெருட்டல்>ஆள்மாறாட்டம்-(இந்த டெக்னிக்கில தானே அங்க போனவை)அங்கயும் செல்லும் தானே? வே.பி. உம் சு.ப.வும் சொன்னா மாறி நடக்க முடியுமோ? அடுத்த ஜனாதிபதி பிரான்ஸில தமிழன் தான் எண்டு நம்பவைக்கிறது என்ன பெரிய கயிட்டமோ? வேணுமெண்டால் பாலகுமாரையும் இளம்பரிதியையும் ஈழவேந்தனையும் எடுப்பிக்குறதுதானே கம்பெயினிங்குக்கு. இலக்கியகாரரை சரிக்கட்ட சிவத்தம்பி போதும். பிளேனால வந்து 4 கிரனெட் வீசி வித்தை காட்டின எங்கட பெடியலுக்கு பிரான்ஸ் ஜூஜூபி எண்டுதான் நம்புறன். அருமந்த சாண்ஸ். பங்கர்சாமிக்கு ஐடியா குடுக்க பாலா அண்ணை இல்லாத குறை இப்பதான் விளங்குது.ச்சீ…இப்ப யார் மதிஉரைஞ்சுரதோ தெரியேல்லை. விழுவான் தலைவரை கவிழ்க்க போறான்.
ஒரு பேயை தோற்க்கடிக்க மற்றொரு பிசாசை வெல்லப்பண்ணப்போறியள். சிங்களப்பேரினவாதம் தமிழ்த்தேசியம் இதிலை எது பேய் எது பிசாசு எண்டும் நிங்கள் தானுங்கோ சொல்லவேணும்
அது சரி மித்திhன் ஐயா ஆண்ட 2 கால ஆட்;ச்சியின்ரை சோசலிசம்தான் சுகன் அடி வாங்கினதும் எங்கட பொடியள் வேலைமுடிஞ்சு இரவு வீட்டை போக கூட்டு சேரிறதும் எண்டதை ஏனுங்கோ எழுதேலை. பல இரவுகளின் பிந்திய சம்பவங்கள் பலருக்கு தெரிவதில்லை சோபாசத்தியின்ரை செல் போன் போலை.
எங்கடை நாட்டிலை நாட்டுக்கெண்டு சொல்லி நாட்டை நாசமாக்கினம நாலும் தெரிஞச நாலுபேர். பாரத மணித்திருநாடு பெற்றெடுத்த இஸ்லாமும் இந்துவும மதம் புடிச்சு பலியெடுக்குது இதுவும் தம் மதமுடைய நாட்டுக்காம்.அங்கை ஈராக்கிலை சுருட்ட வந்தவனை விட்டிட்டு அவை மூண்டு பேர் சுறிட்டிக்கொண்டு சுடு சுடெண்டு சுட்டுத்தள்ளினம் இதுகும் நாட்டுக்காம் ஐரோப்பா அமரிக்கா எல்லாம் ஆளுமை செலுத்தும் யூதரும் மத்திய கிழக்கு முழுக்க மண்ணும் மண்ணுக்கை எண்ணையும் வைச்சிருக்கும் பாலஸ்தீனத்தாரும் குண்டுக்கை குண்டைப்போட்டு சாகினம. இதுகும் நாட்டுக்காம்.
இதெல்லாத்தையும் விட பிரான்சிலை தமது நாடு தமது மக்கள் அந்த மக்களின் முன்னேற்றம் அந்த முன்னேற்றத்திற்க்கு தடையானவற்றை சனநாக வளியில் களைய முயற்ச்சிப்போம் எனக்கூறும் சாக்கொசியும் வலிமையான பிரான்ஸ் எனக்கூறும செகோலென் றோயாலும் வலது சாரிய வளிவந்த கறான்சுவா பெய்ரூவும் ஒரு தேர்தலுக்காக தெரிவிக்கும் கருத்துக்கள் பெரிசாப்போச்சு உங்களுக்கு. தீவிர வலதுசாரி என வர்ணிக்கப்படும் லீ பென் கூட இனவாதம் பேசினாலும் இன வெறிச்செயலபாடுகளில் ஈடுபட்டதாக தகவல்கள் இல்லை. இப்ப ஏழு வருச சிராக் சாக்கொசி ஆட்ச்சியிலை என்ன பெரிய இன வெறியை கண்டனியள்.ஒரு வேளை புலிகளை புடிச்சதை இன வெறி எண்ணிறியளோ தெரியேலை………………
உள்ளதுக்கை வள்ளிசு தேடிறியள் போலை….சர்வதேசியம்……தாரளமயமாதல்………உலகமயமாக்கல்……….எல்லாம் சொல்லிறியள் எங்கடை ஊத்தையளை துடைக்க என்ன செய்யப்போறியள்?
எழுதிறது…..அதை ஒட்டிறது……நாலு பேர் கூடிறது………குண்டியை துடைச்சுக் கொண்டு போறது……உதெல்லாம் இருப்பைத்தான் துப்பரவாக்கும் சமூகத்தை…..பாரெல்லாம் பரந்து வாழும் தமிழன் பாவப்பட்ட தமிழனைய்யா………..
மோசஸ்
ஆர்.எம்.இ ல் சீவிப்பவர்களுக்களின் நியாயம் நமக்குச் சரிவராதுங்கோ. நாம கஸ்ரப்பட்டு உழைச்சு உங்களுக்குத் தாரவாக்க முடியாதுங்கோ.
நீங்க என்னதான் சொன்னாலும் நமக்குச் சார்க்கோசிதான் சரிவருமங்கோ.
இந்தச் செய்தியை நீங்க போட மாட்டீங்கெண்டும் தெரியுமுங்கோ.
நன்றியுங்கோ.
“நாடிழந்த அகதியின் முன்னால் இருக்கும் படிகள் யாவும் செங்குத்தானவை”என்றான் தாந்தே. வெள்ளைக்காறர்களுக்கு சும்மா கிடைக்கிற எல்லாம் வெளிநாட்டவர்களுக்கு தலையால நடந்தாலும் கிடைக்கிறது கஸ்டம். ப்ரென்ச் மற்றும் புகலிட நாடுகளில் எவ்வளவுதான் நீங்கள் கடின உழைப்பாளர்களாக இருந்தாலும் நாலுவீடு வாங்கினாலும் அதன் அரசியலுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டவர், ‘எத்ரோன்சே’ அவ்வளவுதான்.15.11.1948ல் மலையக மக்களின் பிரசாஉரிமையைப் பறித்த அரசியல் நிலைமையே நாம் ஒவ்வொருநாளும் எதிர்கொள்வது. வன்னித் தமிழர்களின் இலங்கைப் பிரசாஉரிமையைப் பறித்து தனது அடையாள அட்டையை வினியோகித்த கோமாளியின் அரசியல் இங்கு செல்லாது. ஒருவர் நூறுவீதம் கொம்யூனிஸ்டாக இருந்தாலென்ன, இருநூறுவீதம் ஜனநாயகவாதியாக இருந்தாலென்ன இங்கு நாமெல்லோரும் வெளிநாட்டவர் அவ்வளவுதான். புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒலிவியே பெசன்சனோ தான் ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் விசா, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் வீடு என்று சொல்லுகிறார்,பசுமைக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் கட்சி என நாலு பதினெட்டு கட்சிகள் போட்டியிட்டாலும் வெளிநாட்டவர் பிரச்சனை வேறு பரிமாணங்களைக்கொண்டது. சென்ற முறையைப்போல் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் முதற்சுற்றீலேயே வெளிநாட்டவர்களுக்குச்சாதகமான அல்லது எதிரில்லாத நிலையை நிறுவியாகவேண்டும்; வலதுசாரிக்கும் இடதுசாரிக்கும் உள்ள வித்தியாசம் ஒன்று இரண்டு வீதம்தான் , அந்தவீதம் வெளிநாட்டவர்களால்தான் தீர்மானிக்கப்படப்போகிறது. அது சோசலிசக் கட்சிக்கு வாக்களிப்பதன்மூலமே கட்டியிருக்கும் கோவணமும் உருவப்படாமல் காப்பாற்றமுடியும்!
-சுகன்
தம்பி சுகன் வசதிக்குவாச்சமாதிரி அலட்டக்கூடாது.ஆழமாக பிரெஞசு அரசியலுக்க போகமுடியேல்ல எண்டு சொல்லுங்கோ பரவாயில்லை. அதுக்காக முதற்சுற்றிலேயே சோசலிசக்கட்சிக்கு வாக்களிக்கவேணும் என்று சொல்வது உங்களையே நீங்கள் மறுதலிப்பதுபோல. வெல்லமுடியாது என்கிற நம்பிக்கையோடும் தங்களின் கொள்கைளோடு உறுதியாய் நிற்கும்ஒருசில சின்னக்கட்சிகளை அடையாளப்படுத்துவதும் ஆதரப்பதுவுமே முறையானது. இரண்டவது சுற்றில் பிரான்சிலுள்ள பிரச்சினைகளுள் ஒரு பிரச்சினையான வெளிநாட்டவா; பிரச்சினைபற்றிய ஒரு முடிவுக்கு வரலாம். இல்லயேல் காலங்காலமாக இரெண்டு கட்சிதான்.
இன்று லுப்பென் 17வீதமான வாக்கு வங்கியை வைத்திருப்பதும் அதையே குறிவைத்து சாக்கோசி இன்னுமொருபடிமேலே போய் இனவாதம் பேசுவதையும் பாருங்கள்!
சாக்கோசி வாக்ககளைகுறிவைத்து ‘எங்களுக்கு பிழையெனப்படுகிற’ ஒரு கருத்தை விதைப்பதை வளா;ப்பதை பாருங்கள். இதை மறுதலையாக யோசித்துப்பாருங்கள்! வெல்லமுடியாத கட்சிகளாக இருந்தலலென்ன– இந்தக்கட்சிகள் வாக்குவங்களைக் கருத்திற்கொண்டு வேறுபாதையைத்தேட நிர்ப்பந்திககப்படுகிறார்கள் அல்லவா? இதற்கு சத்தியக்கடதாசியும் ஆப்பு வைக்கிறது.
தம்பி சுகன் வசதிக்குவாச்சமாதிரி அலட்டக்கூடாது.ஆழமாக பிரெஞசு அரசியலுக்க போகமுடியேல்ல எண்டு சொல்லுங்கோ பரவாயில்லை. அதுக்காக முதற்சுற்றிலேயே சோசலிசக்கட்சிக்கு வாக்களிக்கவேணும் என்று சொல்வது உங்களையே நீங்கள் மறுதலிப்பதுபோல. வெல்லமுடியாது என்கிற நம்பிக்கையோடும் தங்களின் கொள்கைளோடு உறுதியாய் நிற்கும்ஒருசில சின்னக்கட்சிகளை அடையாளப்படுத்துவதும் ஆதரப்பதுவுமே முறையானது. இரண்டவது சுற்றில் பிரான்சிலுள்ள பிரச்சினைகளுள் ஒரு பிரச்சினையான வெளிநாட்டவா; பிரச்சினைபற்றிய ஒரு முடிவுக்கு வரலாம். இல்லயேல் காலங்காலமாக இரெண்டு கட்சிதான்.
இன்று லுப்பென் 17வீதமான வாக்கு வங்கியை வைத்திருப்பதும் அதையே குறிவைத்து சாக்கோசி இன்னுமொருபடிமேலே போய் இனவாதம் பேசுவதையும் பாருங்கள்!
சாக்கோசி வாக்ககளைகுறிவைத்து ‘எங்களுக்கு பிழையெனப்படுகிற’ ஒரு கருத்தை விதைப்பதை வளா;ப்பதை பாருங்கள். இதை மறுதலையாக யோசித்துப்பாருங்கள்! வெல்லமுடியாத கட்சிகளாக இருந்தலலென்ன– இந்தக்கட்சிகள் வாக்குவங்களைக் கருத்திற்கொண்டு வேறுபாதையைத்தேட நிர்ப்பந்திககப்படுகிறார்கள் அல்லவா? இதற்கு சத்தியக்கடதாசியும் ஆப்பு வைக்கிறது.
கோழி மேய்ச்சாலும் கோர்ணமேந்திலை மேய்க்கவேணும் என்ற எங்கடை யாழ்ப்பாணத்தாற்ற கதையைத்தான் சுகன் சொல்லிறார் போலை. கோவணத்தோடை நிண்டாலும் வெள்ளைக்கார நாட்டிலை நல்ல வாழ்க்கைதான் சுகன்.
எங்கடை சனத்தின்றை அழிவு………அதுதான் எழிதிறமே…………….
வாழ்க கமியுனிசம்……………..வாழ்க ஜனநாயகம்……………வாழ்க பின் நவீனத்துவம்…………………..
மோசஸ்
விசயம் தெரிஞ்ச யாருமிருந்தா ஒருக்கா கேட்ட சொல்லுங்க… ஒரு வீரத் தமிழனை வேட்பாளாரா போட சான்ஸ் இருக்கா? அருமந்த வாய்ப்பை மானத் தமிழன் இழக்கப் போறான். பிரஞ்சு பொலிசுக்கு ஒரு நல்ல ஆப்பு வைக்க வேணும்> உவங்கள் தமிழனை பற்றி என்ன நினைச்சு கொண்டு வாலாட்டுறான்கள்? பொட்டம்மானை உச்ச பிரான்ஸில இனி ஒருத்தன் பிறந்துதான் வரவேணும் எண்டதை ஆணித்தரமா நிரூபிக்க இதைவிட சந்தர்ப்பம் வராது. பிரெஞ்சு தமிழனே உனது உணர்வுகள் என்ன குளிரில் உறைஞ்சா போயிட்டுது? விடாதை! சூடேத்த இங்க சூசைட் குரூப் ரெடியாகிட்டுது. பாப்பரசர் என்ன சொல்லுறது…? பாப்பாக்களின் அரசன் வன்னிகொண்டான் நினைத்ததை முடிப்பான். அடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி அசல் தமிழ் வித்தாக இருக்க வேணும்…. வை.கோ.வுக்கும் திருமாவளவனுக்கும் குடுத்த காசை இதுக்கு முதலீடா வைச்சதா நினைச்சு அவங்களையும் கூப்பிடலாம் பிரச்சாரத்துக்கு. அவங்கட பருப்பு இந்தியாவில வேகாட்டிலும் வெள்ளைகாரனிட்ட ரை பண்ணலாம். இப் படை தோற்கின் எப் படை வெல்லும்…
இஸ்மயில், நீ வோட் போடப்போகயில்லையா?
சாயந்தரம் போய்ப் போடுவேன்.
வெளிநாட்டவர் இம்முறை மிக உற்சாகமாகவே வாக்களிப்பில் கலந்துகொள்கிறார்கள்.
எதிர்ப்படும் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவரும் வாக்களிப்பதை நினைவுறுத்தியே அநேகமாக கடந்துசெல்கிறார்கள்.
வாக்களித்துவிட்டுத் திரும்பிவரும் வயதான அம்மாவைக் கேட்டேன்.யாருக்கு வாக்களித்தீர்கள்.
“அந்தப் பொம்பிளைக்குத்தான்”
வெளிநாட்டவர்கள் இம்முறை யாருக்கு வாக்களிப்பதென்பதில் பெரும்பாலும் குழப்பமில்லாமற்தான் இருக்கிறார்கள்.
தேர்தலிற்காக வைக்கப்பட்டிருந்த தட்டிகளில் சார்க்கோசியினதும் லு பென் இனதும் முகங்கள் கற்களாற் கீறிச் சிதைக்கப்பட்டிருந்தன.
சுகன்_
சுகன்,
இவ்வறுதான் தமது அரசியல் நலஙள்/இருப்புகளுக்காக ஈழத்தமிழர் (உங்கள் மொழியில் சொல்வதானால் வெள்ளாள சாதியினர்) வெள்ளைக்காரனுக்கு நக்கினார்கள் என்று சிங்களவர் சொல்கிறார்கள். இதுவே நீங்கள் ஈழத்தமிழரை குற்றம் சொல்ல எடுக்கும் ஆயுதங்களில் ஒன்று என நான் சொல்லத்தேவை இல்லை. பிரான்சில் புலிகள் ஈழத்தமிழரை தமது தேவைகளுக்கு பயன் படுத்தி நடுத்தெருவில் நிற்கவைக்கிறார்கள் என்ற விவாதத்தை ‘அவிழ்த்துவிடும்’ கூட்டம் இன்று தமது இருப்பை தக்கவைக்க ஈழத்தமிழரை பெரும்பான்மை பிரான்சியருக்கெதிராக திருப்பி விட்டு அவர்களின் வெறுப்பை சம்பாதிக்க வைக்கிறார்கள் என நான் சொல்ல விழைந்தால் என்ன சொல்வீர்கள்?
இவாறே கடந்த 10 ஆண்டுகளின் முன்னர் நடந்த கனடியத்தேர்தலில் கியூபெக் பிரிவினை கோரும் கட்சியினர் புதிதாக குடியேறியவர்களை தமது தோல்விக்காக குற்றம் சொன்னார்கள். இன்றும்கூட பலர் அவ்வாதம் சரியானது தான் என நினைக்கிறார்கள். கீயூபெக் தனி நாடாக பிரிவதில் இருந்தது வெறும் 50,000 வாக்குகளே!!!!
செகோலென் ரோயால் ஒன்றும் சமூக சனநாயகவாதி கிடையாது. அவர் தொழிலாளர்களுக்கோ அகதிகளுக்கோ வதிவிட அனுமதியற்றவர்களிற்கோ தனது தேர்தல் வாக்குறுதிகளில் எந்த நம்பிக்கையை அளிக்கவுமில்லை. அவர் பிரஞ்சு முதலாளி வர்க்கத்தின் ஆதரவாளராயும் உலகமயமாக்கலின் ஆதரவாளராயுமிருக்கிறார். வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை அவரின் கொள்கைகளும் ஆளும் ருஆPயின் கொள்கைகளும் ஒரேவகையானவையே.
வெளிநாட்டவர்கள் இம்முறை யாருக்கு வாக்களிப்பதென்பதில் பெரும்பாலும் குழப்பமில்லாமற்தான் இருக்கிறார்கள்.
-சுகன்
யுpசடை 23இ2007
இஇ தமிழர் விடுதலைக் கூட்டணியின் எஞ்சிய தலைவர் என்ற பெருமையுடன் தமிழர்கள் வாழும் நாடுகளில் சுற்றித் திரிந்த ஆனந்தசங்கரி தனது பரம எதிரியென கூறிவந்த டக்ளஸ் தேவானந்தேயுடன் தென்னாப்பிரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார்.
ஆனந்தசங்கரியை வீரமுள்ள தன்மானம் மிக்க தலைவர் என்று கனடாஇ லண்டன்இ ஜெர்மனிஇ பிரான்சு போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் போற்றி பெருமைப்பட்டுக்கொண்டனர் கடந்த நாட்களில்.
புலிகள் இயக்கத்தை எதிர்த்து நிற்கிறார்இ அதனால் அவரைப் பாராட்ட வேண்டும் என்ற இவர்களுக்கு தோன்றியிருக்கலாம். ஆனால்இ இவர் மொத்தத் தமிழினத்தையும் ஏமாற்றுகிறார் என்பதுஇ என்போன்ற பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே வெளி;ச்சம்.
ஆனந்த சங்கரி பாராளுமன்ற உறுப்பினரான 1970 ஆம் ஆண்டு முதல் உலகம் சுற்றுவதில் வல்லவர். விமானச் சீட்டுக்கு காசு கிடைத்தால் போதும் எந்தநாட்டுக்காவது சென்று யாராவது தெரிந்தவர்கள் வீடுகளில் தங்கி உண்டு உறங்கிஇ செலவுக்கு காசும் வாங்கிக் கொண்டு இலங்கை திரும்பிவிடுவார். எவரது வீட்டுக் கதவையாவது தட்டி நுளைந்து தங்கிவிடுவார். அப்படி ஓர் சூடு சொரனையுள்ள ஆள்.
இந்தியாவின் அண்ணாநகரில் முடங்கிக் கிடந்த சங்கரி பிரபாகரனது புன்னியத்தில் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்றோர் இறந்து போகஇ அந்த வெற்றிடத்தில் தன்னை நுளைத்துக்கொண்டு கொழும்பு வந்து சேர்ந்தார்.
கொழும்பில் லக்சுமன் கதிர்காமரது தொடர்பு இவருக்கக் கிடைத்தது. இலங்கை அரசு சார்பில் கதிர்காமர் உலக நாடுகளுக்குச் சென்று புலி எதிர்ப்புப் பிரசாரம் செய்துவிட்டு நாடுதிரும்புவது வழக்கம். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் என்ற பட்டத்துடன் கதிர்காமரது பிரசாரத்துக்கு வலுவூட்ட அந்தந்த நாடுகளுக்கு அரசின் காசில் சங்கரி அனுப்பிவைக்கப்பட்டார். இது இலங்கை அரசுக்கு பெரும் நன்மையாக அமைந்தது.
சங்கரி நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றதால் அவரது கடவுச் சீட்டு சாதாரன நிலையை அடைந்தது. இதனால்இ எந்தநாட்டுக்குச் சென்றாலும் சாதாரண குடிமகனைப் போன்று வரிசையில் நின்று விசா வாங்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இங்கேதான் லக்சுமன் கதிர்காமர் உதவினார். சங்கரிக்கு ராஜ தந்திரக் கடவுச் சீட்டு (னுஐPடுழுஆயுவுஐஊ PயுளுளுPழுசுவு) வழங்கப்பட்டது. கதிர்காமருக்குத் துணையாக இவர் செயல்படத் தொடங்கினார். கதிர்காமரே மகிந்தாவுக்கும் இவரை அறிமுகப்படுத்திஇ நல்ல பயனுள்ள ஆசாமிஇ புலிகளை முறியடிக்க ஆயுதமும் ஆள்பலமும் போதாதுஇ வெளிநாட்டு உதவிகளைத் தடுத்து நிறுத்த தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரை நாங்கள் பயன் படுத்த இவர் சரியான கூலியாள் என்று கதிர்காமர் எடுத்துரைக்கஇ சங்கரி நிரந்தர தமிழினத்துரோகியானார்.
சங்கரி கொழும்புக்கு வந்தால்இ கவச வாகனப் பாதுகாப்பு எதற்காக வழங்கப்படுகிறது.? லக்சுமன் கதிர் காமர் செய்த பணியினைஇ அவர் மறைவுக்குப் பின்னர்இ ஆனந்தசங்கரி செய்கிறார் என்பதால்தானே அவருக்கு அரசாங்கம் கவச வாகனப் பாதுகாப்பு வழங்குகிறது.
டக்ளஸ் பற்றி பிறநாடுகளில் யாரைக்கண்டாலும்இ அவன் கெட்ட வடுவா என்று கூறி வந்த சங்கரி இன்று கூட்டாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். எஜமானின் கட்டளையை மீற முடியவில்லை. படியளப்பவன் உத்தரவுக்குப் பணிந்து புலி எதிர்ப்புப் பிரசாரம் செய்யப் புறப்பட்ட மாவீரன் தனது பெயரையும் லக்சுமன் சங்கரி அல்லது ஆனந்த கதிர்காமர் என்று மாற்றிக்கொண்டால் நன்றியுள்ளவராகத் தோன்றுவார்.
கடந்த பெப்ரவரி மாதம் பதினொறாம் திகதி சிங்கள இனம்பற்றி தமிழர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார் சங்கரி. அதில்இ பேக்கர் மாமாவின் பனிஸ் சாப்பிட்டதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
தமிழ் இனம் பட்ட மற்றும் சந்தித்தக் கொடுமைகள் அனைத்தையும் மறந்து பேக்கர் மாமா கதை சொல்லப் புறப்பட்ட சங்கரிஇ 1977ஆம் ஆண்டு தனிநாடு கோரி கிளிநொச்சி மாவட்டம்; முழுவதும் தொன்டை கிழிய வாக்குக் கேட்டதை நினைத்துப் பார்க்க வேண்டும். பேக்கர் மாமாவின் பனிஸ் அன்று என்ன ஆனது.? எம்.பி. பதவிக்காகப் போட்ட ஆட்டம்தானே அது!
இன்று எம்.பி. பதவி இல்லை என்றதும் அரசின் கைக்கூலியாக மாறி புலி எதிர்ப்புப் பிரசாரம் செய்கிறார். புலிகள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள்தான் ஆனால்இ அது அரசின் கூலியாக அல்ல. புலி எதிர்ப்பு என்று கூறி அரசின் சலுகைகளை அனுபவிக்கும் செயலானது துரோகச் செயலாகும். டக்ளஸ் தேவானந்தே இதைத்தான் பிரேமதாசா காலத்திலிருந்து செய்து வருகிறார். கதிர்காமர் மறைவுக்குப் பின் சங்கரியும் இதைச் செய்கிறார். கதிர்காமருக்கு வெளிநாட்டு மந்திரிப்பதவி இருந்தது. சங்கரிக்கு அது இன்னமும் இல்லை. மற்றபடி இரண்டுபேரின் வேலையும் ஒன்றுதான்.
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து களிநொச்சியைத் தனி மாவட்டமாகப் பிரித்தது இந்தச் சங்கரிதான். ஜெயவர்த்தனா கட்சியில் சங்கரி அப்போதே இணைந்திருப்பார். சங்கரியின் கோரிக்கையை ஏற்று ஜெயவர்த்தனா கிளிநொச்சியைப் பிரித்தது அந்த நோக்கத்தில்தான். 1982ஆம் ஆண்டு கிளிநொச்சி தனிமாவட்டமாக்கப்பட்டது. இச்செயல் அமிர்தலிங்கத்தின் மீதிருந்த பகையினால்இ தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்ததாக சங்கரி அப்போது கூறினார். ஆனால் இச்செயல் செல்வாக்கினால் ஏற்பட்டதல்ல. சங்கரி யூ.என்.பி.யில் இணையும் எண்ணத்தை ஊக்குவிப்பதற்காக ஜெயவர்த்தனா செய்தது.
அதீஸ்டவசமாக தமிழீழத்துக்கான விடுதலை முழக்கம் உச்சக் கட்டத்தை அடைந்ததும்இ 1983ல் இனக்கலவரம் வெடித்ததும் சங்கரி அந்த எண்ணத்தைக் கைவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் தன்னையும் இணைத்துக்கொண்டு தமிழ் நாட்டில் தஞ்சமடைந்தார். அன்று முதல் அமிர்தலிங்கம் இருக்கும் வரை ஆனந்த சங்கரி தனது தலையை எங்கும் காட்டவில்லை. இது அரசியல் அவதானிகளுக்குத் தெரியும்.
சங்கரி ஒன்றும் விடுதலையை வென்றெடுத்துத் தந்துவிடப்போவதில்லை. கனடாஇ இலண்டன் போன்ற இடங்களில் இவருடைய பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களுடன் வயதான காலத்தைக் கழிக்கலாம். அவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்இ கனடாவில் அரசாங்கமே இவர்போன்ற வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும்.
அதை விடுத்து டக்கிளசுக்குப் போட்டியாக நானும் துரோகம் செய்கிறேன் என்று தன்நிலை மறந்து காசுக்காகவும்இ கடவுச் சீட்டுக்காகவும்இ கவச வாகனத்துக்காகவும் இனத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.
தான் போடும் வேசம் தனக்கு மட்டுமே தெரியும் என்று சங்கரி எண்ணக்கூடாது. தமிழ் இனத்தின் பிரச்சினை என்பது அதிகம் காசு கொழிக்கும் தொழில் என்று சங்கரி நினைக்கிறார். முன்னரே தெரிந்திருந்தால் டக்ளசை ஓரம் கட்டியிருக்கலாம் என்றும் எண்ணுகிறார். சிங்கள அரசுக்குச் சேவை செய்வதை புலி எதிர்ப்பு மூலம் நியாயப்படுத்துகிறார் வெளிநாடுகளில். யுனஸ்கோ விருது என்பதும் இலங்கை அரசால்இ ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதே தவிர இவர் செய்துவிட்ட சேவைக்காக அல்ல என்பது சிங்கள ஆட்சியாளகளுக்கு மட்டுமே தெரிந்தது.
விருதில் ஒரு லட்சம் டொலர் வழங்கப்பட்டது. இனவிடுதலையில் எள்ளளவு கூட ஈடுபடாத தனது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் பிரித்துக்கொடுத்துவிட்டார் சங்கரி. வெளிநாடுகளுக்குச் செல்லும் போதோ இவர் தங்குவது இன உண்ர்வுகொண்ட தமிழர்களது வீடுகளில். இவரது பிள்ளைகள் கூட இவரை அரவணைப்பது கிடையாது. ஆனால்இ காசு என்று கிடைத்ததும் பங்கு போட்டது பிள்ளைகளுக்கு என்றால் இவரது சுயநலம் வெளிப்படவில்லையா?
இனஉணர்வுள்ள எவரும் இந்த சங்கரியை இனிமேலும் ஏமாந்து ஊக்குவிக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஜுனியர் கதிர்காமரை விலக்கி வைப்பது வெளிநாடுவாழ் தமிழர்களது கடமையாக இருக்க வேண்டும்.
நன்றியுடன்.
பருத்தி வேந்தன்
பத்திரிகையாளன்இ
கொழும்பு.
ஈழத்தமிழர் நிலை இப்படியிருக்க நீங்கள் எங்கோ……
சுகன்,
உண்மையில் நீங்கள் எல்லோரும் சாக்கோசிக்குத்தான் வோட் பண்ண வேணும். ஏனென்றால் அவர்தான் இந்த பாசிசப்புலிகளை கையாள சரியான ஆள். பாசிசபுலி அழிந்தால் தான் ஈழமக்கள் நிம்மதியாக வாழலாம். ஏன் உங்களின் நலஙளிலேயே அக்கரையாக இருக்கிறீர்கள். சிறிது அக்கறையை எம்மிலும் காட்டுங்களேன். உங்கள் பாணியில் சொல்வதானால் குறுகிய நோக்கங்களான வதிவிட, அகதி அந்தஸ்து போன்றவற்றை கரையில் போட்டுவிட்டு கொஞ்சம் பொறுமை காத்து பாசிசப்புலியை பிரான்சில் அடித்துவிரட்டுங்கள். தேவை எனின் லக்சுமி கலைச்செல்வனையும் துணைக்கு அழையுங்கள்!!!!!!!
பிரான்சின் அதிபர் தேர்தலையொட்டி கருத்தறிந்து எழுதுவதற்காக ஆனந்தவிகடன் நிருபர் பாரிசில் வசிக்கும் ஷோபாசக்தி அவர்களோடு தொடர்புகொண்டார்:
ஆனந்தவிகடன் நிருபர்:
பிரான்ஸின் அதிபர் தேர்தலில் முதலாவது கட்ட வாக்கெடுப்பில் யு.எம்.பி. கட்சியைச் நிகோலஸ் சார்கோசி அவர்கள் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருப்பதாகவும் சோசலிஷ கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் செகோயினி ராயல் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார் என்றும் அறிகிறோம். இறுதிக் கட்டவாக்க்கெடுப்பில் யார் வெல்லுவார்கள் என்று கருதுகின்றீர்கள்?
ஷோபாசக்தி:
நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஆனால் இதற்குப் பதிலளிக்க தமிழர்கள் இங்கே கிடையாது.மிகச் சரியான கணிப்பீட்டைப் பெற்று நீங்கள் அசத்த வேண்டுமானால் உங்கள் சென்னையிலேயே இருக்கிறார் நண்பர் சாருநிவேதிதா. அவரிடம் கேளுங்கள். அவருக்கே இங்கு நடப்பவை அதிகம் தெரியும். நன்றி வணக்கம்.
ஆச்சர்யம்! ஆனால் உண்மை.
நான் சந்தித்தத்த இலங்கைத்தமிழா;களுள் 50வீதத்திற்கும் மேற்பட்டவா;கள் சாக்கோசி ஜனாதிபதியாக வருவதையே விரும்பகிறார்கள். அதில் இன்னும் ஆச்சாpயம் வதிவிட அனுமதி மறுக்கப்பட்டவா;கள் உட்பட.
காரணம் கறுவல> அடையிட்ட இருந்து நாட்ட வேறு வழியில் காப்பாத்த முடியாதாம். மற்றம் சாக்கோசி நல்ல பொருளாதாரதிட்டங்கள் வைத்திருக்கிறாராம்.
தூ இணையச் சஞ்சிகை கூட இலங்கைத்தமிழா;கள் ஜோன் மரி லுப்பனுக்கு வாக்களிப்பதே நியாயம் என எழுதியிருந்தது.
தமிழ்சேர்க்கிள் ரயாகரன் ஏதோ எழுதியிருக்கிறார். முடிந்தால் யாராவது தமிழில் மொழிபெயர்த்து உதவுங்கள்…
சத்தியக்கடதாசி ரோயலுக்கு வாக்களிக்ககோரிநிற்கும் காரணம் போதுமானதாய் இல்லை.
முதலளித்துவமானது தனது முட்டுச்சந்துக்குள் சிக்கித்திளறுகிறது. அதை இன்னம் கூர்மைப்படுத்துலதே மார்க்கியர்களின் பணியாக இருக்கமுடியும். அரைகுறைத்தீர்வுகள்> சமரசங்களைவிட முதலாளித்துவத்தை மேலும் கூர்மையாக்குவதே சிறந்ததது.
இன்றைய பிரெஞ்சுத்தோ;தலில்> லுப்பன் சாக்கோசிக்கு வாக்களிப்பதே சாpயானதாய் இருக்கமுடியும்.
எங்களது குறுகிய நலன்கள் முக்கியமல்ல.