அவர்கள், மாவீரர்கள்xதுரோகிகள் என்று இருவகைகளில் மட்டுமே பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உரையாடத் துணியும் ஒருவர் இந்த இரு வகைகளில் ஒன்றிற்குள்தான் அடங்குவார். இந்த இருவகைகளுக்கும் அப்பாலும் எவராவது இருந்தால் அவர்களின் இருப்புக்கு அவர்களது சமூகத்தில் அர்த்தம் ஏதுமில்லை.
மாவீரர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாறாயிருக்கிறது. துரோகிகளின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாறாயிருக்கிறது.
அவர்கள் ஒவ்வொரு நாளும் பனான்: அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும் என்ற புத்தகத்தின் 485வது பக்கத்தைச் சிரத்தையுடன் வாசிக்கிறார்கள்:
எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு சமூகத்திற்கும் துரோகிகள் இருப்பார்கள். இவர்கள் தீங்கு விளைவிக்காமல் தடுப்பதற்கு அதிர்ஷ்டவசமாக எங்களிடம் அமிருஷே இருக்கிறார். ஆனால் புரட்சி நீண்ட நாட் களுக்கு நீடிக்கக்கூடாது. அவ்வாறு நீடித்தால், விடுதலை பெறும் நாளன்று அல்ஜீரியாவில் அமிருஷேவும் கடவுளும் மட்டுமே இருப்பார்கள்.
ஒவ்வொரு கொலை விழும்போதும், ஒவ்வொரு குண்டுவீச்சு நிகழும்போதும், ஒரு பட்டினிச்சாவு நிகழும்போதும், நாடுகடத்தல் உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு அகதியைக் காணும்போதும் அவர்கள் குற்ற உணர்வுகளில் மூழ்கடிக்கப்படுகிறார்கள். அந்தக் குற்ற உணர்வே அவர்களை எழுத இடைவிடாமல் தூண்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் மாவீரர்களாக மரணிக்க விரும்பவில்லை, துரோகிகளாக மரணிக்கவும் விரும்பவில்லை.
இந்தக் குற்ற உணர்வு அவர்களின் மரணம்வரை அவர்களைக் கைவிடாதிருக்கட்டும்!
கடந்த ஒருவருட காலத்திற்குள் என்னால் எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்து எட்டுக் கட்டுரைகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.
இந்நூல், உளவாளி என்றும் விபச்சாரி என்றும் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலைப்புலிகளின் எல்லாளன் படையினரால் கடந்த மாவீரர் நாளுக்கு அடுத்த நாளில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் தாயாராகிய ரெஜினா உதயகுமாருக்கு.
ஷோபாசக்தி
07.01.2007
பிரதிகள் பெற்றுக்கொள்ள
கருப்புப் பிரதிகள்,
45ஏ,இஸ்மாயில்மைதானம்,
லாயிட்ஸ் சாலை,சென்னை_5.
செல்:9444272500
Copies can also available at
SUGAN KANAGASABAI, 3EME DT, 1,
RUE HONORE DE BALZAC,
95140 GARGES LES GONESSE, FRANCE
ஷோபாசக்தி அவர்களே,
நீங்கள் எழுதி/தொகுத்து/வெளியிட்டிருக்கும் புத்தகத்தை
பிரபல மனித உரிமைவாதியும், அறிவுஜீவியும், மாற்றுக்கருத்தாளரும், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பின் முக்கிய பிரமுகரும் அவ்வமைப்பின் உயிர்நாடியக இருந்த பெண்ணியவாதி ராஜனி திரிணகமவின் நெருங்கிய நண்பருமான திரு.ராஜன் கூலினால் ‘பாலியல் தொழிலாளி’ என் முத்திரை குத்தப்பட்ட சிறீலங்கா ராணுவத்தால் கற்பழித்துக்கொல்லப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த செல்வி.தர்சினியின் பெயரால் வாசித்து இன்பம் அடைய முயல்வேன்!
மற்றும் மேலே குறிப்பிட்ட திரு.கூலுடன் கனடாவில் வாழும் மாற்றுக்கருத்தாளரும் பத்திரிகையாளருமான் டி.பி.எஸ்.ஜெயராஜினால் ‘புலிகளினால் கொல்லப்பட்டவர்கள்’ எனவும், புலிகளுக்கு மிகநெருங்கியவர்களிடமே தாம் அதை உறுதி செய்துகொண்டனர் எண்றும் ‘சத்தியம்’ செய்ததனால் மறக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழக ஊழியர்கள் மற்றும் அவ்வமைப்பின் பெண் கணக்காளரும் ‘கருணா’ குழுவினரால் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட செல்வி.பிரேமினியினியின் நினைவாகவும் இந்நூலை படித்து பயன் பெறுவேன்!
நன்றி சோபஷக்தி அவர்களே!!!!!!!
நீங்கள் கூறியிருப்பதுபோல் மாவீரர்+துரோகிகள் என இரு வகையறாக்களுள் தான் கருத்துக்கள் அடக்கப்பட்டுவிடுகின்றன என்பதை கவலையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியவனாகிறேன். உண்மையில் சரிபிழைகளை சொல்லகூடியவர்கள் தங்களின் வேசங்களை களைந்து ஒன்றில் மாவீரர் சார்பாக நின்று கொண்டே நியாயங்களை சொல்லும் திராணியை கொண்டிருத்தல் வேண்டும். இல்லையேல் மறுதலையாக துரோகிகள் சார்பாக காட்டிக்கொண்டு நியாயங்களை சொல்லவேண்டும். தங்களை பெரும் அறிஞர்களாக சமூகம் கருதவேண்டும் என்பதற்காக ஒருபக்க நியாயங்களை மட்டுமே மனஉறுத்தல்களுடன் மென்றுவிழுங்கி சொல்லிக்கொண்டு இருக்கும் நிகழ்கால வரலாற்றை எழுதும் அயோக்கியர்கள் தான் உண்மையான சமூகதுரோகிகள். மாவீரனும் துரோகியும் ஒருபோதும் தாங்கள் அறிவாளிகள் என்பதை நிரூபிக்க முனைவதில்லை. அறிவாளிகளென தங்களுக்கு முத்திரை தேடும் ஆத்மாக்கள் விடும் தவறுகள்தான் வரலாற்றை தொலைத்து அப்பாவிகளின் உயிர்களை அர்தமில்லாமல் அழித்துக்கொண்டிருக்கின்றன.
//தங்களை பெரும் அறிஞர்களாக சமூகம் கருதவேண்டும் என்பதற்காக ஒருபக்க நியாயங்களை மட்டுமே மனஉறுத்தல்களுடன் மென்றுவிழுங்கி சொல்லிக்கொண்டு இருக்கும் நிகழ்கால வரலாற்றை எழுதும் அயோக்கியர்கள் தான் உண்மையான சமூகதுரோகிகள். //
நன்று!
ரகு அவர்களின் முதலாவது எதிர்வினைக்கு பதிலாக இது எழுதப்படுகிறது.
ரகு எழுதிய இரண்டு தரவுகளுமே தவறானவைகள். வேண்டுமென்றே பக்கச் சார்பற்ற நடுனிலமையான விமர்சகர்களான கூலையும் ஜெயராஜையும் களங்கப்படுத்த எழுதப்பட்டவை.
புங்குடுதீவு தர்சினியைப்பற்றி ராஜன் ஹ¥ல் தவறாக (2005 டிசம்பர் 27 அறிக்கையில்) எழுதியது உண்மைதான். ஆனால் அது தவறான தகவல் என்பது தெரிந்ததும் அடுத்த பல். ஆசி. சங்க அறிக்கையில் (2006 ஏப்பிரல் 02) அந்த தவறு சுட்டிக்காட்டப்பட்டதோடு மன்னிப்பும் கேட்கப்பட்டது. தவறை ஒப்புக்கொள்ளுவதும் மன்னிப்புக்கேட்பதும் பெருந்தன்மையானதல்லவா. யாழ். பல்.ஆசி. சங்கத்துக்கு தகவல்களை சேகரிப்பதிலும் அவற்றை உறுதிப்படுத்திக்கொள்வதிலும் பல சிரமங்கள் உள்ளன. புலிகள் அவர்களைக் கொல்லத் தேடித்திரிவதால் அவர்களால் சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு செல்லமுடியாதுள்ளது. மேலும் யாழ். பல். ஆசி. சங்கம் ஒரு சில தடவைகளிலேயே தவறான தகவல்களை எழுதியுள்ளது. அவை தவறு என்று தெரிந்ததும் தவறை திருத்தியுள்ளது. ஆனால் ரகு வக்காலத்து வாங்குகிற புலிகளின் ஊதுகுழலான தமிழ் நெற் இணையம் எப்போதும் வேணுமென்றே உண்மையைத்திரித்து பொய்யை எழுதுகிறது.
அந்தத் தவறை தமிழ் நெற் திருத்தப்போவதுமில்லை. மன்னிப்புக்கேட்கப்போவதுமில்லை. ஏனெனில் தூங்குவதுபோல் நடிப்பவனை ஒருபோதுமே எழுப்பமுடியாதல்லவா. இப்போது வாகரையில் அர்ச்சகர் வன்னிப்புலிகளால் கொல்லப்பட இராணுவத்தாலே அவர் கொல்லப்படதாக எழுதி எல்லோர் காதிலும் பூச்சுற்றியது தமிழ் நெற். சுனாமி நடந்தபின்னர் வடமராட்சி கிழக்கு பகுதியில் இலங்கை ராணுவத்தால் பராமரிக்கப்பட்ட ஒரு அகதிமுகாமுக்கு புலிகள் தீ வைக்க தமிழ் நெற்றோ அதற்கு இராணுவத்தினரே தீ வைத்ததாக எழுதியது.
தர்சினி இராணுவத்தால்தான் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை. அவர் புலிகளின் ஏஜண்டுகளான தமிழ் ரவுடிகளாலும் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்.
புனர்வாழ்வுக் கழக கணக்காளர் பிரேமினி கருணா குழுவால் வல்லுறவு செய்யப்பட்டார் என்பது அப்பட்டமான பொய்.
ரகு மற்றவர்களை குற்றஞ்சுமத்தமுதல் அவர்களின் எழுத்துக்களை முழுமையாகப் படியுங்கள்.
-சீலன்.
நல்லது சீலன் அவர்களே,
எனது நிலைப்பாடெல்லாம் மன்னிப்புக் கேட்பதால் செய்த தவறு இல்லை என்றாகிவிடாது. அது மட்டுமல்ல யாழ். பல்.ஆசி. சங்கம் பற்றியும் அதன் நம்பகத்தன்மை பற்றியும் திரு.ஜீவன் கூல் அவர்கள் அண்மையில் ‘வைகறை’ பத்திரிகையில் கூறியுள்ளது கவனிக்கப்படவேண்டியதி. அவர் கூறுகிறார் யாழ். பல்.ஆசி. சங்கமானது எப்போதும் உண்மை பேசுவதால் அதன் கருத்துகள் உலக நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என. தர்சினியின் கொலையின் பின்னர் தமிழ் நாட்டிலும் மற்றும் பிற இடங்களிலும் எழுந்த அனுதாபத்தை தகர்ப்பதற்கு ஸ்ரீலங்கா அமைச்சர் இந்த ‘பாலியல் தொழிலாளி’ கதையை எடுத்துவிட்டார். இதற்கான முழுப்பொறுப்பும் யாழ். பல்.ஆசி. சங்கத்தை சாரும்.
//…தர்சினி இராணுவத்தால்தான் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை…/
இதைச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. இதைப்போலவே வாகரை அர்ச்சகர் விடயத்தையும் ஏன் நோக்கக்கூடடது??
//…அவர் புலிகளின் ஏஜண்டுகளான தமிழ் ரவுடிகளாலும் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்….//
சரியயகவும் இருக்கலாம். ஏனென்றால் இப்படியாக புலிகளில் இருந்து பிரிந்தவர்கள் தானே ‘கருணா’ குழுவினர். புனர்வாழ்வுக் கழக கணக்காளர் பிரேமினியை வல்லுறவு செய்து கொண்றதை ‘பாசிசப் புலி’ தான் கற்றுக்கொடுத்திருக்கும்!!!!!!!
///…புனர்வாழ்வுக் கழக கணக்காளர் பிரேமினி கருணா குழுவால் வல்லுறவு செய்யப்பட்டார் என்பது அப்பட்டமான பொய்…..//
இது பக்கசசர்பற்ற டி.பி.எஸ்.ஜெயராஜ் இனால் சுமத்தப்பட்ட குற்றம். தேவை எனில் அவரது ப்திவில் பார்வையிடவும்.
http://transcurrents.com/tamiliana/archives/284
நீங்கள் கூறுயதுபோல் முழுமையாகப் படிப்பதுடன் அதன் தாக்கங்கள் பின்விளைவுகள் போன்றவற்றையும் சிந்தியுங்கள்.
யாழ். பல். ஆசி. சங்கத்தின் அறிக்கையில் புனர்வாழ்வுக்கழக கடத்தல் ஒரு ‘புலி நாடகம்’ என எழுதியதால் தான் அச்சம்பவம் சர்வதேச கண்களில் இருந்து மறைக்கப்பட்டது. மன்னிப்புக்கேட்பதால் ஒன்றும் நடக்காது!!!! வேண்டுமென்றால் ‘நோபல்’ பரிசு கிடைக்கலாம்!!!!!!!
யு. ரி. ஏச் ஆர் சரியான தகவலை எடுக்க முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட அறிக்கையை வெளியிடரதிருப்பது நல்லது. அடுத்தவன் மீது சேறு பூசி அரசியல் பிழைப்பு நடத்தும் இயலாப்பேர்வழிகளின் பொய்யான தகவலை தமது அறிக்கையில் ஆதரார சுருதியென வெளியிடுவது பொறுப்பான விடயமல்ல.
திருமலை நகரசபைத்தலைவர் சூரியசூர்த்தியை கொன்றது புலிகளல்ல என்றும் அது வேறு சக்திகளின் வேலை என்றும் அறிக்கை வெளியிட்டது எவ்வளவு மோசடியான செய்தி திரிப்பு தெரியுமா? இனியாவது புரிந்து நடந்தால் சரி.
பிரதிகள் என்ன விலை? எவ்வாறு பணம் அனுப்புவது?
திருமலை முன்னாள் நகரபிதா சூரியமூர்த்தி புலிகளால் சுடப்பட்டு ஒரு வாரத்தின் பின்னரே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமானார். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்வரை சுயநினைவுடன் பேசிக்கொண்டேயிருந்தார். தன்மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியவர்கள் புலிகள் தானென்பதை திருமலை வைத்தியசாலையில் வைத்து பொலிசாருக்கு அவர் அளித்திருந்த வாக்குமூலத்தில் தெளிவாகவும் சுடுவதற்கு முன் கொலையாளிகளால் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் விபரமாகவே தெரிவித்திருந்தார். கொலையாளிகள் தவறுதலாக விழுத்திச் சென்ற செல்லிட தொலைபேசியும் அவர்கள் கடைசியாக உரையாடிய தொலைபேசி இலக்கமும் நேரமும் கொலையாளிகள் புலிகளென்பதை நிரூபித்திருந்தது. அவரது கொலையை சிங்கள இனவாதிகளே செய்திருந்தனர் என நம்பவைக்க புலிகள் மிக சாதுரியமாக முயன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட அன்று திருமலையில் புத்தர்சிலை வைக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் புத்தர்சிலை அங்கு வைக்கப்பட நகரசபை அனுமதி இல்லை என நிரூபிக்க அமரர் சூரியமூர்த்தி ஆதாரங்களை திரட்டி சமர்ப்பித்திருந்தார். இதனால் ஆத்திரமுற்ற சிங்களவர்களே அவரை கொலை செய்தார்களென மக்களை நம்ப வைக்கவே அன்றைய தினத்தை புலிகள் தெரிவுசெய்தார்கள். ஆனாலும் உண்மைக் கொலையாளிகள் யாரென்பதை திருமலை நகர மக்கள் உடனேயே உய்த்தறிந்திருந்தார்கள். தங்களின் செயல்களை மக்கள் ஆராய விரும்பாமல் அப்படியே நம்பிவிடுகிறார்கள் என புலிகள் நம்புகிறார்கள். இது புலிகளின் முக்கிய பலவீனம். மக்கள் புத்திசாலிகள். அதனால்தான் மெளனமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் வாய்திறந்தால் தங்களுக்கு என்ன நடக்கும் என்று. மீட்பர்கள் ஒருபோதும் கொலைகளில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கமுடியாது. புலிகள் வழங்கும் மரணதண்டணைகள் யாவும் கொலைகளாகவே வரலாற்றில் பதிவாகின்றன. வரலாறு என்றும் தோல்விகளை சொல்வதில்லை…….
பல காதலர்களையுடைய பெண்
தெருவில் சுடப்பட்டு இறந்தபோது
கொலையாளி கேட்பாரில்லாமல் வெளியேறினான்.
இது சிவசேகரத்தின் மொழிபெயர்ப்புக் கவிதை.
மூலம் எவரதென்று சரியாக நினைவில்லை,
அடோனிஸ் ஆகவிருக்கலாம்.
ஒரே மேடையில் பல நாடகங்கள் நிகழ்வதுபோலும்,
நடிகர் பார்வையோராகவும் பார்ப்போர் பாத்திரமாயும் மாறி மாறி
இயங்கி முடிவற்று நிகழ்த்தும் இத் துன்பியல் நிகழ்த்துதலில்
திரையும் மூடுவதாயில்லை, இறந்த பாத்திரங்களும் எழுவதாயில்லை. அரங்கமே! அரங்கமே!
காலப்பேயே!
அரங்கைக் கலைத்துவிடு!
//..திருமலை நகரசபைத்தலைவர் சூரியசூர்த்தியை கொன்றது புலிகளல்ல என்றும் அது வேறு சக்திகளின் வேலை என்றும் அறிக்கை வெளியிட்டது…..//
பரன்,
தவறு என்று தெரிந்ததும் ‘மன்னிப்பு’க் கோரும் யூ.ரி.எச்.ஆர்(ஜே) இதற்கு மன்னிப்புக் கோரியதா? தயவு செய்து அறியத்தரவும்.
நன்றி.
பிரதிகள் பெற்றுக் கொள்ள அணுகவும்
செல்:9444272500
கருப்புப் பிரதிகள்
45ஏ இஸ்மாயில்மைதானம்
லாயிட்ஸ் சாலை
சென்னை_5.
விலை 64.99 RS india
தமிழீழ பிரகடனம் செய்த பெருமாளும் ஈழம் என்பது இந்தியாவின் இந்து கலாச்சாரக்காலனி எனக்கூறும் சோபாசக்தி – இந்தியாவில் இரகசிய சந்திப்பு.
சனிக்கிழமை 17 பெப்ரவரி 2007
நிதர்சனம்.காம்
வடக்கு கிழக்கு மகாண சபை என்ற ஒன்றை இந்தியா உருவாக்கியதும் அதின் முதலமைச்சராக அண்ணாமலை வரதராஜப் பெருமாள் என்பவரை நியமித்ததையும் எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அன்றையகாலத்தில் தமிழீழத்தை பெறுவேன் என்று புறப்பட்டவர் இந்திய அமைதிப்படையின் காலத்தில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய பின்னாளில் இந்தியாவில் தஞ்சமடைந்ததும் இந்திய மக்களின் வரிப் பணத்தில் தனது குடும்பத்தோடு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் எல்லோரும் அறிந்த விடயம்தான். அடிக்கடி தனது பிழைப்புக்காக தமீழழம் சாத்தியமில்லை என்று விடுதலைப்புலிகள் மீது உள்ள தனது காள்புணர்சிகளை அறிக்கைகளாக வெளியிட்டுருவது பெருமாளுக்கு ஓய்வுநேர பொழுதுபோக்கு. அண்மையில் ஊடகம் ஒன்றிருக்கு பேட்டி கொடுத்து சுய விளம்பரம் தேட முற்பட்டிருந்த பெருமாள் பின்வருமாறு கூறியிருந்தார். இலங்கையில் கொழுந்து விட்டு எரியும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இங்கு சமாதானம் மலர்ந்து அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் ஒருமுகமாக இணைந்து தேச சமூக பொருளாதார முன்னேற்றங்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த உடனடி விருப்பமாகும். ஓர் அரசியற் தீர்வுக்கு உண்மையில் எவையெல்லாம் அவசியமோ அவையெல்லாம் தயாராகவே உள்ளன.
ஆனால் புலிகளின் நிலைப்பாட்டையும் காரணம் காட்டி இலங்கையின் இரு பெரும் கட்சிகளும் அரசியற் தீர்வுக்கான முன்னெடுப்புக்களை பின்தள்ளிப் போட்டு வருகின்றமை அவற்றின் உண்மையான உள்ளார்ந்த நோக்கங்கள் பற்றிய சந்தேகங்களையே வலுப்படுத்தி வருகின்றன. புலிகள் ஏற்கும் ஓர் அரசியற் தீர்வுதான் சாத்தியமென்றால் சிங்களத் தலைவர்கள் புலிகளுக்கு தனி நாடொன்றை வழங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். புலிகள் வேறொரு அரசியற் தீர்வையும் முன்வைக்கவும் மாட்டார்கள் ஏற்கவும் மாட்டார்கள் என்பதுதான் உண்மை. முதலில் பிரதானமான சிங்களக் கட்சிகளின் தலைவர்கள் தமது நியாயங்களையும் நோ;மையையும் இலங்கை மக்களுக்கும் சா;வதேச சமூகங்களுக்கும் நிலைநிறுத்துதல் வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினையின் தோற்றத்துக்கும்அது தொடர்ச்சியாகக் கூர்மையடைந்ததிற்கும்; 1931ம் ஆண்டு இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட சா;வசன வாக்கெடுப்பு தொடங்கி எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்களத் தலைவர்கள் மேற்கொண்ட இனவாத ரீதியான நடவடிக்கைகளும் 1970கள் மற்றும் 1980களில் தமிழா;களுக்கு எதிரான அரச பயங்கரவாதமுமே மூலகாரணங்களாகும். 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை சமாதான உடன்பாடு ஏற்பட்ட போது அதனை வெற்றிகரமாக்குவதற்கு சிறிலங்கா ஆட்சியாளர்களினதும் புலிகளினதும் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இவை இரண்டும் தனித்தனியாகவும் கூட்டாகவும் மேற்கொண்ட சதிகாரத் தனமான நடவடிக்கைகள் இந்தியாவை பெரும் தர்மசங்கடத்தில் மாட்டின.
இவருடைய இந்த அறிக்கையினை பார்க்கும்போது மீண்டும் அந்த கதிரை கிடைக்குமா என்ற ஆதங்கம் அவரின் மனதை உணர்த்துகிறது. இந்தியாவிற்கு தப்பி ஓடி 16 ஆண்டுகள் கடந்த நிலையில் தன்னை நினைவு படுத்துகிறார். கடந்த 16 வருடங்களாக இவரை வைத்து எதையாவது சாதித்து விடுவோம் என்ற இந்திய அரசியன் நப்பாசையும் பலகோடி பணத்தை விரையமாக்கியதுடன் இல்லாம் போயுள்ளது.
இவரையும் இவருடைய ஆசைவார்த்தைகளையும் நம்பிய இந்திய அதிகாரிகளும் இவரை விசாரனைக்கு உட்படுத்திய அதிகாரிகளும் இன்று வேலையில் இருந்து ஓய்வு எடுத்திருக்கலாம் அல்லது இயற்கையின் நியதிக்கு உட்பட்டிருக்கலாம்.
புதிதாக இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்களுக்கோ அல்லது புதிய இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைக்கோ இவருடைய 16 வருடங்களுக்கு முன்னய தப்பி ஓடிய படலம் எந்த ஒரு பாடத்தையும் புகட்டபோவதும் இல்லை.
வரதராஜருக்கு 16 வருடத்திற்கு முந்திய சொட்கன்னுடனும் சரத்துடனும் திரிந்த புலிகளை தெரிந்திருக்குமே தவிர பீரங்கிகாவி போரிடும் புலிகளின் கட்டமைப்பை நிச்சயமாக தெரியாது.
அளவுக்கதிகமாக மது புகைத்தல் என்பவற்றாலும் வயது முதிர்சியாலும் நோய்வாய்பட்டுள்ள இவர் தற்போது இந்தியாவுக்குச் சென்று தங்கி இருக்கும் புலி எதிர்புச் செம்மல் சோபாசக்தியை சந்தித்து விடுதலைப்புலிகளையும் அவர்களது போராட்டம் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் தெரியவருகிறது.
அண்மையில் இவர் குமுதம் சஞ்சிகைக்கு பேட்டி ஒன்றில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
ஈழத்தமிழனுக்கு என்று தனித்த அடையாளம் இருப்பதாக நான் நம்பவில்லை. ஈழம் என்பதே இந்தியாவின் இந்து கலச்சார காலனிதான். தென்கிழக்காசியாவின் பிராந்திய வல்லரசாக இந்தியா இருக்கிறது. அது சிறியநாடுகளை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்றே திட்டம் போடுகிறது. இலங்கையிரச்சினையில் நான் இந்தியாவை நம்பவில்லை. ஆனால் இந்தியாவில் இருக்கிற உலக மயமாக்கலின் எதிர்ப்பு சக்திகள் சாதிய எதிர்ப்பு சக்திகளின் உதவிகளைதான் நம்புகிறேன்.
தமிழீழபிரகடனப்படுத்திவிட்டு கையாலாகாத்தனதாலை தப்பி ஓடி வரிபணத்தில் வாழ்ந்து வருபவரும் இந்தியாவால்தான் எல்லாம் முடியும் என்று சொல்பவரும்
ஈழம் என்பது இந்தியாவின் இந்து கலாச்சார காலனி என்று சொல்பவரும் சந்தித்துகொண்டதன் நோக்கம் என்ன?
புலி எதிர்ப்பு காட்புணர்சியை தவிர வேறு ஒன்றும் இல்லை.
தேசத்தின் குரலை மலிவானமுறையில் ஈழ அரசியலை வழிநடாத்தியதாக கூறிக்கொள்ளும் நவீன தலித்துகளின் பிதாமகனாக தன்னை உருவகபடுத்தும் இவரது அனைத்துப்படைப்புக்களிலும் பாலியல் வக்கிரத்தனமான பாங்கொக் விபச்சார விடுதிகளை பற்றிய வர்ணனைகளும் தொடுப்பு என்ற தலைப்பில் தனது அம்மாவிற்கும் தபால்காரனுக்குமான பாலியல் தொடுப்பின் வர்ணனைகளை அல்லபிட்டி அந்தோனிதாசன் மறந்துவிட்டாரா? அடிக்கடி இலக்கிய விடயம் என்று கூறி இந்தியா வந்து இந்திய இழம்பெண்களை தேடி அலையும் ஊர்வசி சோபா. படைப்பாளி போராளி என்றும் வேறு பட்டம் இவருக்கு. தலித்தெண்டு தொடங்கி தற்போது மதத்தையும் இழுத்துவிட்டார். இலக்கியம் பேச புலி எதிர்ப்பும் தலித்தியமும் மதமும் தேவைபடுகிறது படைப்பாளிக்கு.
ஈழ அரசியலின் மலிவான இலக்கியம் எது? புலி எதிர்ப்பு.
ஆம், ஒரே உலகத்தில் பல காட்சிகள் நிகழ்வது போலும்
கொலை செய்தவர்களும் அதற்கு பக்கத்துணை போனவர்களும் பிரான்ஸ் வந்து அச்சம்பவங்களை கதையாக எழுதி கதாசிரியர்களாகி ‘காசு’ பார்ப்பதும் கவிதைபாடி சத்தியக்கடதாசி படிப்பவர்களுமாகின்ரனர்.
சோசலிசம் பேசிய அரங்கக் காட்சிகள் ஐரோப்பிய நகரங்களாக திடீரென மாறுகின்றன, பார்வையாளர்கள் மாறி மாறிக் குழம்புகிறார்கள். சோசலிசம் பேசிய அரங்கம் ஏன் ரஷ்யாவாகவோ கியூபாவாகவோ வடகொரியாகவோ மாறாமல் ஏன் பிரான்ஸாகவும் ஜேர்மனியாகவும் தெரிகிறதெ என்று.
கொரில்லாவாக இருந்தவர்கள் திடீரென ம் என்றாகிறார்கள். ஆனால் இரண்டிலும் யூரோ தெரிகிறது.
அழகலிங்கம் வருகிறார், சோசலிசம் பொழிகிறார், போகிறார் வருவதும் போவதும் கனடாவாகிறது.
பார்வையாளர்களும் கனடாபோக ஆசைப்படுகிறார்கள்.
இயங்கி முடிவற்று நிகழ்த்தும் இத் துன்பியல் நிகழ்த்துதலில்
திரையும் மூடுவதாயில்லை, இறந்த பாத்திரங்களும் எழுவதாயில்லை. அரங்கமே! அரங்கமே!
காலப்பேயே!
அரங்கைக் கலைத்துவிடு!
நிதர்சனம்.கொம் புலிகளின் பினாமிகளால்(புலிகளால் அல்ல) புலிகளின் வெற்றுவேட்டுக்களை கேட்டு மெய்மறந்து வாய்பிளந்து கட்டிய கோவணமும் கழன்று விழுவது புரியாமல் களிப்புறும் வீரப்பரம்பரையின் விஸ்கி மைந்தர் சேதுபிரானால் பொழுதுபோக்காக இயக்கப்படும் இணைய விபச்சாரம் என்பது உலகறிந்த உண்மை. இதையிட்டு புலிகளே இங்கு நையாண்டி செய்வது புலம்பெயர்ந்தவர்களுக்கு எட்டாதிருக்கலாம். ஆனால் ஈழத்தமிழ் இலக்கியமென்பது புலிசார்ந்து அல்லது புலிஎதிர்ப்பு என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது புலிகளுக்கு வெற்றிதான். தமிழுக்கு வெட்கம். தேடலுக்கு தோல்வி.
சோபாசக்தி அவாகளே!
நீங்கள் எழுதியதுபோல உங்களுக்கு ஓலைi வந்துவிட்டது.
இனி எல்லாளன் படைதான்.
ஒண்டு விளங்கேல்லை. உங்கள புலி புலிஎன்கிறாங்கள் புலம்பெயா; ஜனநாயகவாதிகள். ஆனால் எல்லாளன்படையோ உங்கள் வாசல்வரை வந்துவிட்டது. ….
ஆரொடு நோக..
அதுபோக நீங்கள் வரதராஜப்பெருமாள சந்தித்தீர்களா?
அவா; எப்படி இருக்கிறார்?
கொரில்லா-ம் நாவலாசிரியர் ஷோபாசக்தியைக் குறிவைக்கும் புலிகள்!
(நிதர்சனம் விதைக்கும் வினை.)
“முதலில் ஒத்திகை பின்பு போட்டுத் தள்ளுதல்.”
தமிழ் இலக்கியச் சூழலுக்குள் அதிர்வுகளைச் செய்துகொண்டிருப்பவர் சோபாசக்தி.
தனது கொரில்லா மற்றும் ம் நாவல்களுடாகப் பதிந்து வைத்திருக்கும் ஈழத்து போர்க்கால வாழ்க்கைகள் இன்றைய ஈழப் போராட்டத்தின் பல பரிணாமங்களைப் பேசுபவை.அவரது சிறுகதைகளுடாகப் போராட்டத்தினதும் ஈழமக்களினதும் வாழ்க்கைப் பெருஞ் சுமைகளை விமர்சனரீதியாச் சொல்பவர் சோபா சக்தி.இந்த மனிதனைக் குறிவைத்துப் புலிகளின் உத்தியோபூர்வத் தமிழ் இணையத் தளமான நிதர்சனம்.கொம் அவதூறுச் செய்தி விதைத்துக் கருத்துக்கட்டுவது ஒருவித ஒத்திகையா?
அது ஈ.பீ.ஆர்.எல்.எப் வரதராஜப் பெருமாளோடு இணைத்துப் பேசுவது போட்டுத் தள்ளுவதற்கான ஒத்திகைகளில் ஒன்றாக இருக்குமென்றே நாம் கருதுகிறோம்.
புலிகளின் இத்தகைய ஈனத்தனமான கருத்தியல் மற்றும் வன் முறைசார்ந்த நடவடிக்கைகள்இஇன்னும் அந்த அமைப்பு ஒரு மக்கள் அமைப்பாக முடியாதுஇ வெறும் பாசிசக் கட்டமைப்பாகவே தன்னை நிறுவிக் கொண்டுஇதனது அழிவின் விளிம்பில் ஆப்பிழுத்த குரங்காகச் செயற்பட்டு வருகிறது.இன்றிருக்கும் சூழலில் தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில்இ மாற்றுக் கருத்தாளர்களை-படைப்பாளிகளை-ஊடகவியலாளர்களைத் தமது அரசியலுக்கு இடைஞ்சல் விளைவிப்பதாகக் கருதி போட்டுத் தள்ளும் போர் உத்தியைத் தொடர்ந்து நடை முறைப் படுத்தும் புலிகள்இ ஈழப் போராட்டத்தை எந்தத் திசையில் எடுத்துச் செல்கிறார்களென்பதற்கு இத்தகைய இழி செயல்கள் அருமையான உதாரணம்.
நாய் வலைக்கூட நிமிர்த்தி விடலாம்.ஆனால் புலிகளின் அராஜகத்தையோ அவர்கள் கொண்டுள்ள மக்கள் விரோத அரசியலையோ மாற்றவே முடியாது.
அந்த அமைப்பும்இஅதன் உத்தியோகபூர்வ இணையத் தளங்களும் தமது அரசியல் அழிவுக் காலத்தை விரைந்து செயற்படுத்துவதற்காகவே தமிழ் பேசும் மக்களை உளவியல் மற்றும் உயிர் பறிப்பு ஒடுக்குமுறைகளுடாய்ச் செய்து மக்கள் மத்தியில் தம்மைப் பாசிச வாதிகளாகக் கட்டமைத்துஇபொது மக்களையும் கலைஞர்களையும்இபுத்திஜீவிகளையும்இஜனநாயகவாதிகளையும் ஒடுக்கி வருகிறார்கள்.
சோபா சக்திக்கு இத்தகைய இழி நிலைகளைக் கற்பிக்கும் நிதர்சனமானது அடுத்து இன்னும் எவருக்குக் கைகாட்டிப் போட்டுத் தள்ளவதற்கான கருத்தியலை மக்கள் முன் திணிகப் போகிறதோ தெரியவில்லை.
இந்த அமைப்பும் இதன் வால்களும் எப்போதுமே மனித விரோதிகளாகவே இருக்கிறார்கள்.
இந்தப் புலிகள் அமைப்பு மக்கள் அமைப்பாக மலருமென்று நாம் கற்பனை செய்வது மடமை என்று இவர்களே எமது முகத்தில் அடித்துச் சொல்கிறார்கள்.
சோபா சக்தியையும் போடப் போறாங்கள் புலிகள்.
ஆழ்ந்த வெறுப்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்.
18.02.2007
சோபா சக்தி போன்றவர்களின் வருகை அண்மைய நிகழ்வுகளே. ஆனாலும் தமது கருத்துக்களை எழுத்தில் வெளிக்கொணர போதிய ஆற்றலில்லாமல் பொருதி மடிந்த பலரை இன்றைய சமூகம் துரோகிகளாகவே அறிந்து வைத்துள்ளது. புலிகளின் கொலைக்கலாசராம் ஏற்படுத்திய அச்சவுணர்வே சமூகத்தின் மெளனத்திற்கான காரணி. அச்சத்திலிருந்து விடுவிக்க வேண்டிய கடப்பாடு எழுத்துக்கு உள்ளது. கொலைகளுக்கு பணிந்திருந்தால் உலகின் எத்தனையோ புரட்சிகள் நடந்திராது. உண்மைகள் வெளிவந்திராது. சோபா சக்தி போன்றோரின் துணிவு 1000 துப்பாக்கிகளுக்கு சமனானவை. இந்த வேட்டுக்களின் முன் புலிகளின் புலிகளின் அராஜகம் தோல்வியடையும். மனிதத்தை மறுக்கும் எந்த சக்திக்கும் போராடும் தார்மீகம் இல்லை. சோபா சக்தி புலிகளின் கொலைப்பட்டியலில் இப்போதுதான் சேர்க்கப்படுகிறார் என்று நம்பும் நண்பர்கள் பாவம்: புலிகள் பற்றிய கனவுகள் அவர்களை பிந்தியே சிந்திக்க வைக்கிறது. வ.உ.ஜெயபாலன் பற்றிய கேள்விக்கு கருத்து கூறாமல் விட்ட கணத்திலிருந்தே சோபா 1000 மடங்கு உயர்ந்துவிட்டார். கொலைகளுக்கு பயந்திருந்தால் சோபா எழுதாமலே இருந்திருப்பார். ஆகவே நண்பர்களே சோபாவை உங்கள் கருத்துக்களால் அச்சுறுத்திவிடலாமென நம்பாதிருப்பீர்களாக…
சோபா கக்தி!…
உனக்கும் எனக்கும் முரண்பாடு!
உனக்கும் எனக்கும் சேர்த்து
உனக்கெதிராக கதை புனைந்து
உன் மீது சேறடிப்பவர்களோடு முரண்பாடு.
நீ என் மீது கொண்டதும்
நான் உன் மீது கொண்டதும்
உன்னை நானும்
என்னை நீயும் கொல்வதற்கான
முரண்பாடு அல்ல.
ஆனால் உனக்கும் எனக்கும் சேர்த்து
அவர்களோடு இருக்கும் முரண்பாடு
உன்னையும் என்னையும்
கொல்வதற்கான முரண்பாடு.
நான் உனக்கு நண்பன்
ஆனாலும் நானும் தவறு விடுகின்றேன்.
நீ என்னை திட்டு….
நீ தவறு விடுகின்றாய்
நானும் உன்னை திட்டுவேன்…
நீ என்னை திட்டுவது தவறல்ல
நீ அவர்களை திட்டுவது சரியானது
என்னைப்போல் பலர் உனக்காக…
தொடர்ந்து நீ செய்!….
அச்சமில்லைத்தானே?…
ஆனால் விழிப்புடன் இரு!
வரதராஐப்பெருமாளை சந்தித்தாயா?
சந்தித்தால் ஓம் என்று சொல்லு!
சிவா பசுபதியும்
வ. அ இராசஇரத்தினமும்
அவர்களுக்கு இப்போது நண்பன் என்றால்
நீ வரதராஐப்பொருமாளோடு
ஏன் பேசக்கூடாது?…
நீ எல்லோரையும் திட்டுகிறாய்
என்கிறார்கள் எல்லோரும்.
நீ விமர்சிப்பதாக நான் கருதுகின்றேன்.
திட்டுவது கூட பிழையில்லை
போட்டுத்தள்ளுவதுதான் பிழை
ஆகவே செய்து கொண்டிருப்பது
திட்டுவது…. என்று பழி ஆனாலும்
நீ திட்டிக்கொண்டேயிரு!
எனது பாசறையில் இருப்பவர்களை விட
அவர்களது பாசறையில் இருந்து வந்த
நீதான் எனக்கு நண்பன்.
வா!…..
யு. ரீ. ஏச் ஆர் க்கு சூரியமூர்த்தியின் கொலை குறித்து
தகவல் கொடுத்தவர் யார் என்பது வெளிவந்து விட்டது
பெப்ரவரி-3 டி.பி.எஸ் ஜெயெராஜ் என்ற கடைந்தெடுத்த பிற்போக்குவாதியால் கிழக்குமாகாண மக்களின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மேல் எந்தவித பகுத்தறிவுள்ளவர்கள் ஏற்கக்கூடிய புறநிலை ஆதாரமும் இல்லாமல் ஆரோ அவர் அடையாளப்படுத்த வக்கில்லாத ஒருத்தர் சொன்னதாக துப்பறியும் கதையொன்றைச் சொல்லி சோடனைச் சேறடிப்பைச் செய்திருக்கிறார். கிழக்குமாகாண விடுதலைப் போராளிகள் பாசிசப் பிரபாகரன் புலியில் இருந்து பிரிந்த வரலாற்று நிகழ்வானது பாசிசத்தின் முண்டுகளான மேலாதிக்கம் பிடித்த டி.வி.எஸ். ஜேராஜ் போன்ற மனிதர்களால்இ அரசியற் கற்றுக்குட்டிகளால் ஜீரணிக்க முடியாத விடயமாகும். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முதலாவது வெடியின் சத்த எதிரோலி அடங்கு முன்னம் இவர்களது படித்த தகைமையால் வெளிநாடுகளுக்குப் பறந்தோடி அகதி அந்தஸ்துப் பெற்ற இவர்கள் வெள்ளையர்களின் தமிழீழக் கனவு கண்ணுக்கு முன்னால் தவுடுபொடியான எரிச்சலால்இ அந்தப் போராட்டம் பாசிசப் புலிகளால் எவ்வாறு காட்டிக் கொடுக்கப்பட்டது என்று ஆராய வக்கில்லாத இந்தக் கூட்டம்இ அந்தத் தோல்வியால் எற்பட்ட அத்தனை மன உளைச்சலையும் தமிழ் மக்கள்விடுதலைப் புலிகளின்மேல் சொரிகிறார்கள். இந்தக் கூட்டத்தின் அண்மைய சத்தியெடுப்புத்தான் இந்த டீ.பீ.எஸ் ஜெயராஜின் சேறடிப்பும் சோடனை வழக்குத் தொடர்தலும் ஆகும்.
யார் இந்த டீ.பீ எஸ்.ஜெயராயா? இவர் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரியின் மகனாகும். இவரின் தந்தையார் 1959 பண்டாரநாயக்கா கொலையோடு சம்பந்தப்பட்டவர். பண்டாரநாயக்கா கொல்லப்பட்டதை அடுத்துவந்து தகனாயக்கா அரசாங்கம் அந்தக் கொலையின் புலன்விசாரணையை செய்யவிடாது சதிசெய்ததால் தப்பியவராகும். இவரது குடும்பம் இவரது பக்கத்து ஊரிலுள்ள சாதிபார்த்து ஓடுக்கப் பட்ட கன்பொல்லைச் சனங்களை வெட்டித் தள்ளிஅந்த ஏழைச் சனங்களின் கொட்டில் குடிசைளை நெருப்புவைத்து நெட்டூரம் செய்த குடும்பமாகும். இவர் கிறீஸ்தவ மேட்டுக் குடியினர்இ எதிர்ப்புரட்சிக்குப் பயிற்றுவிக்கப்படும் வட்டுக்கோட்டை ஜவ்னா(துயககயெ) தனியார் கல்லூரியில்இ வெள்ளிக் கறண்டி முள்ளால் சாப்பிடும் விடுதியில் இருந்து கல்வி கற்றவராகும். இவர் இந்தியாவுக்கு (துழரசயெடளைஅ) எழுத்துத் தொழில் கலை படிக்கச் சென்று அங்கு மட்டையடித்து சித்தியெய்தாமற் திரும்பியவராகும்.
இவர் இலங்கையின் படுபிற்போக்குப் பத்திரிகை குழுவொன்றின் செய்தியாளராகப் பணிபுரிந்து ஒடுக்குமுறைக் கெதிரான தமிழ் மக்கள் போராட்டத்தைச் சேறடித்துஇ தொழிலாளர் விவசாயிகள் மாணவர்கள் உரிமைப் போராட்டங்களைச் சேறடித்து எழுதியவராகும். இவரதுமனவியல் எப்பொழுதும் வெகுஜனமக்கள் விரோதத் திசையிலேயே செல்லும். இவர் வீரகேசரியில் வேலைசெய்ததால் தனக்கு பாசிசப் புலியின் மறைந்த அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தோடு தான் நேரடியாகப் பேசுவதாகவும்இ இன்றைய தமிழர்விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி தனது மரணசாசனத்தையும் தனது முக்கிய ஆவணங்களையும் தன்னிடம் தந்துள்ளதாகவும்இ ஈபிடீபி செய்த கொலைகளை இன்றய ஈபிஆர் எல் எப்பின் தலைவனான சுகு என்றழைக்கப்படும் சிறீதரன் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்குச் சொல்லஇ யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தனக்குச் சொல்வதாகவும் மது போதையில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தனது குடிநண்பனான வர்மாவுக்கு சொல்லியிருக்கிறார். இவருக்கு இராணுவத்தின் ஒரு பிற்போக்குப் பகுதியோடு தொடர்பு உண்டு. இவர் அடிக்கடி இராணுவப் புலன்விசாரணைச் செய்திகளை எழுதுவார்.
இவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின்மேல் வைத்த சேறடிப்பு ஐnஎநளவபையவழைn துழரசயெடளைஅ ஆராய்ச்சித்துறை எழுத்தியலைச் சேர்ந்ததல்ல. பத்திரிகைச் செய்தி சேகரிப்போர் அதிகமான சம்பவங்கள் நடைபெறும் தருணத்தில் அங்கு நிற்பதில்லை. ஆனால் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பலரகப் பட்ட மக்கள் கூட்டத்திடமும் சம்பந்தப்பட்ட செய்தியின் நெருங்கிய உறவினரிடமும் மற்றும் நண்பர்களிடமும் எண்ணற்ற விசாரணைகளை நடாத்திப் பொதுமைப்படுத்திய முடிவுக்கு வருவார்கள். அப்படியான பத்திரிகைச் செய்திகளைத் தாங்கி வரும் பத்திரிகைகளையும் மக்கள் தமது சொந்தப் பத்திரிகையாக உணருவார்கள்.
இவரது எழுத்தானது கருணாதரப்பில் விட்டோடிய ஓ என்பவர் தனது Phழவழபசயகiஉ ஆநஅழசல யால் நடந்த சம்பவத்தை தேதி பிறளாமல்இ நேரம் பிறளாமல்இ ஊர் தகப்பன்பேர் பிறளாமல் இராசயனத் தூய்மையோடு கூறியிருக்கிறார். இவருக்கு ஒரு தடவை புலி அடித்ததைக் காரணங்காட்டி தான் புலியில்லை என்று உலகுக்கப் பாசாங்கு செய்கிறார். போன தேர்தலில் புலி தேர்தலைப் பகிஸ்கரிக்க அறைகூவல் விட்டபோது புலியின் மனத்தை மாற்றத் தலையாலே கிடங்கு கிண்டினார். புலியால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தமிழ்த் தேசிய வாஞ்சையால் புலிக்கு வக்காளத்து வாங்குவது ஏதும் புதுமையல்ல. செல்வம் அடைக்கலனாதன் சுரேஸ் பிரேமச் சந்திரன் மாவை சேனாதிராசா என்று நூற்றுக்கணக்கில் பேர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று அபிவிருத்தியை நாம் ஒருதடவை யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் தமிழர்களைப் பொலீஸ் இராணுவத்தினர் சுட்டுக் கொன்று ஒடுக்கிய சம்பவங்கள் உண்டு. அதனால் விடுதலை இயக்கங்களும் வளர்ந்தன. இலங்கைப் பொலீஸ் இராணுவம் தமிழர்களைச் சுட்டுக் கொன்று சித்திரவதைசெய்து களைத்துத் தமிழர்களைக் கொல்லாது விட்ட சம்பவங்களும் தமிழர்மேல் இரக்கப்பட்ட அனேக சம்hவங்களும் உண்டு. பொலீஸ் ஒடுக்காமல் விட்டபின் புலி தானே கொன்று பொலீசின்மேல் பழியைச் சுமத்திய ஆயிரக் கணக்கான சம்பவங்கள் உண்டு. இந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகக் கடத்தல் நாடகமும் புலியாலே மேற்குலகப் பிற்போக்குவாதிகளின் புத்திமதியின் பேரிலே புலியாலேயே நடாத்தப் பட்டது. ஏன் இந்தக் கடத்தல் நாடகம் நடாத்தப்பட்டது.
வெகு சீக்கிரத்திலே பாசிசப் புலி கிழக்கிலிருந்து அகற்றப்படுவது கண்முன்னே தெரிகிறது. ஆனால் கிழக்கிலே புலி தோற்றபின்பு வரலாற்றாற் செல்லாக்காசாகப் போன தமிழர்விடுதலைக் கூட்டணி உட்பட்ட எந்த அரசியல் கட்சிகளையோ இயக்கங்களையோ மக்கள் ஏற்கப் போறதில்லை. புலியின் தோல்வியின் பின்பு சிலவேளை தற்காலிகமான படைகளின் ஒடுக்கு முறை இருந்தாலும் வெகுசீக்கிரத்திலே மக்கள் பழைய இனவாத அரசியலைவிட்டு த.ம.வி.பு போன்று சிங்கள முஸ்லீம் மக்களோடு மிக அன்னியோன்னியமான இலங்கைதழுவிய அரசியற் கட்சியிலையே சேருவார்கள். இன்றய உலகமயமான சூழலில் தமிழ் கட்சி முஸ்லீம் கட்சி என்பது மேலும் பிரச்சனைகளைக் கூட்டுமேயொழிய குறைக்காது என்பதைத் தமிழ்பேசும் மக்கள் தமது கசப்பான அனுபவத்தால் விளங்கிவிட்டார்கள். சிங்கள தமிழ் முஸ்லீம் ஐக்கியமேற்பட்டால் சமுதாயப் பிரச்சனைகளை மிக விசுவாசமாக அரசாங்கம் தீர்க்காதவிடத்து சமுதாயப் புரட்சிகள் வருவது தடுக்க முடியாதது. அதை முன்கூட்டியே ஊகித்த பிற்போக்குவாதிகள் அதைக் கட்டுப்படுத்துவதற்காக 3000 பேுழு இலங்கை முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கெயிட்டிஇ பிலிப்பையின்இ செச்சினியன் போன்ற எண்ணற்ற நாடுகளில் இந்த பேுழு கள் எதிர்ப் புரட்சி செய்த வரலாறு மிகப் பசுமையானது. ஏற்கனவே இந்தத் தன்னார்வ நிறுவனங்கள் சம்பந்தமாக தனது அதிருப்தியை ஜேவி பியும் மற்றும் முற்போக்கு அரசியற் சக்திகளும் வெளியிட்டு வருகின்றன. இந்தத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற தன்னார்வ நிறுவனம் கடத்தப்பட்டபோது உலக ஏகாதிபத்தியங்கள் ஒட்டுமொத்த தன்னார்வ நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என்று இடைவிடாமற் கூறின. இன்றும் என்ஜி ஓ க்களின் பாதுகாப்பு பற்றி ஓலமிடுகின்றன. சுனாமி ஏற்பட்டு தாய் தந்தையர் இழந்த கிழக்குக் குழந்தைகளை இந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கடத்திக் குழந்தைகள் பிரபா குழுவின் இராணுவத்திற் சேர்த்த கதையொன்றும் உலகுக்குப் புதிதல்ல. தமது வாழ்வையே தமிழ் மக்கள் விடுதலைக்காகத் தத்தம் செய்த த.ம.வி.பு களைக் காமுகர்ளாகக் கூறும் இந்த அயோக்கியனது பொய்களை விமர்சனக் கண்கொண்டு பார்க்கும்படி எம்மை விழிக்கவைத்துள்ளது. “பிறேமினிக்கு ஏற்பட்ட கதி மிகக் கொடூரமானது. பிறேமினி கதறக் கதற சிந்துயனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பிறகு மற்றய கருணா தரப்பு உறுப்பினர்களாலும் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டார். 14 கருணா தரப்பு உறுப்பினர்கள் இந்தக் கொடிய வல்லுறவில் ஈடுபட்டனர்.”என்ற அபாண்டப் பொய்யைக் கூறுகின்றார். மக்களை மலினமான கற்பனையால் உணர்ச்சிவசப் படுத்தும் மேலாதிக்கவாதம் கொண்ட டி.வி. எஸ். இன் அரசியல் இது. பிரபாகரனும் தொடக்கத்தில் பெண்ணொரு போதை கல்யாணம் செய்யக்கூடாதென்று சட்டம்போட்டு மனவியல் விகாரமடைந்த மனிதர். அனர்ன் பாலசிங்கமும் வீரகேசரியில் சிக்மன் பிறாய்டின் ஊயுளுநு டீழுழுமு ஐ மொழி பெயர்த்து வெளியிட்ட பழக்க தோஷத்தால் பிரசித்த மேடைகளில் பாலியில் வக்கிரம் பேசுவார். பிரபாபுலி ஆதரவளர்களும் அதற்குக் கைதட்டும் மலின உணர்வு படைத்தவர்கள். புலிப் பத்திரிகைகள் கடந்த மூன்று தசாப்தமாக எழுதிக்குவித்த பாலியல் வல்லுறவு கொஞ்சநஞ்சமல்ல. அரசியல்பொருளாதாரமோஇ தத்துவமே மானிடவியலோ வரலாறோ தெரியாத கூட்டம் எதற்கெடுத்தாலும் பாலியல் வல்லுறவு என்று பிதற்றிய கூட்டம். 1983 தின்னவேலியில் 13 இராணுவத்தை ஏன் கொன்றீர்கள் என்று லண்டன் பத்திரிகைகள் அன்று அங்கு இயங்கிக் கொண்டிருந்த வுயஅடை கைெழசஅயவழைn உநவெநச ஐ க் கேட்க இராணுவம் மாணவிகளைக் கடத்திக் கற்பழித்தார்கள் என்று கூறினார்கள். லண்டன் ஆங்கிலப் பத்திரிகைகளும் அதை நம்பி அப்படியே
ஈபிடீபி செய்த கொலைகளை இன்றய ஈபிஆர் எல் எப்பின் தலைவனான சுகு என்றழைக்கப்படும் சிறீதரன் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்குச் சொல்லஇ யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தனக்குச் சொல்வதாகவும் மது போதையில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தனது குடிநண்பனான வர்மாவுக்கு சொல்லியிருக்கிறார்.
இவர்தான் அந்த சூத்திரதாரி
எனக்கு இலக்கியம் பற்றி அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை.
ஆனால் அது உந்த ஆட்டு ஆட்டுகிறதென்பதை நினைக்க அதியசமாய்த்தான் இருக்கிறது. ஒரு பொடிப்பயல் சோபாசக்தி புலிவாலுகளப்போட்டு உந்த ஆட்டு ஆட்டுகிறான். சோபாசக்திய விலத்திப்போட்டு அவா;களால் போகமுடியாது. நித்ர்சனமும் கோமாளிகளும் என்னகூத்தாடினாலும் சோபாசகத்திகள்தான் நிலைக்கத்தான் போகிறார்கள். அவா;களது படைப்பு காலங்காலமாய் வாழத்தான்போகிறது.
எதிர்த்த குலைப்பு ஒவ்வொன்றும் சோபாசக்திகளின் எழுத்துக்களை அர்த்தமாக்கும். இன்னம் வீரியமாக்கும்.
அடேய் பாவி ஜெயராஜ் நாசமாய் போவாய்.சனத்தை இனியெண்டாலும் விடுங்கோடா.
டீ.பி.எஸ். ஜெயராஜின் ஆங்கில கட்டுரைகள் பல அவரது கற்பனையின் வெளிப்பாடு என்பதற்கு இன்னுமொரு உதாரணம்: சிவராமின் கொலையை கருணா தரப்பே செய்தது என தனது சொந்த கற்பனையில் காரண காரியங்களோடு புனைந்திருந்தார். ஆனால் புளொட் தான் சிவராமை கொலை செய்தது என்பது நிரூபணமாகியபோது அதனை மறுக்க புளொட் தேடும் (புளொட் சிவராமைக் கொலை செய்ததற்கு பல காரணங்கள் இருப்பது உண்மை. தமிழ்நெற் இணையத்தளத்தை தமிழ்மக்களின் உண்மையான பிரச்சனைகளை வெளிக்கொணர சிவராமைப் பாவித்து ஆரம்பித்து அதற்காக பெரும்தொகைப்பணத்தையும் சிவராமிற்கு புளொட் வழங்கியிருந்தது. அது ஒரு நடுநிலை தகவல் மையமாக இருக்கவேண்டுமென்ற நிபந்தனை மட்டுமே புளொட் ஆல் விடுக்கப்பட்டதாக சிவராம் தனது நெருங்கிய நண்பர்களுக்கு கூறியிருந்தார். ஆனால் காலப்போக்கில் தனது சுயநலன்களையும் புகழையும் விரும்பிய சிவராம் அதனை புலிசார்பான ஊடகமாக மாற்றியிருந்தார். 2001 ம் ஆண்டிற்கு பின்னர் அது புலிகளின் உத்தியோகபூர்வ தளமாக மாறுமளவிற்கு சிவராம் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டார். அதேபோன்றே நோர்த்ஈஸ்ட் ஹெரால்ட் என்ற ஆங்கில சஞ்சிகையை புளொட் இன் பின்னணியில் 1993 ல் ஆரம்பித்து வெளிவிடப்பட்டது. பின்னர் அது நோர்த்ஈஸ்ரேன் ஹெரால்ட் என பெயர் மாற்றப்பட்டு புலிகள் செய்தி சஞ்சிகையாக சிவராமால் 2003ல் மீள வெளியிடப்பட்டது. இதனைவிட சிவராம் புளொட ல் இருந்தபோது செய்த உட்கொலைகள்; இந்திய அரசிற்கு காட்டிக்கொடுத்தவைகள் உட்பட பல காரணங்கள் உள்ளன)காரணங்கள் பல. ஆனால் புளொட் இக் கொலையை செய்திருக்காதென ஜெயராஜ் எழுதிய விளக்கங்கள் விசித்திர கற்பனைகள். மறுதலையாக பத்திரிகைகளுக்கு ஜெயராஜ் போன்ற கற்பனைவளமிக்க எழுத்தர்களே தேவைப்படுகின்றனர். ஜெயராஜின் பிழைப்புவாதம் எதனையும் எப்படியும் மாற்றி எழுதச் செய்யும். அவர்களுக்கு சுவாரஜியம் தான் முக்கியமேயொழிய உண்மைகள் அல்ல. சோபாசக்திகளின் உண்மைகளுக்கு முன்னால் ஜெயாராஜூகளின் புளுகுகள் மலிவானவை. சர்வாதிகாரத்தின் உச்சகட்டம் சரணாகதி தான். சாவேளாண்மைக்கு ஜெயராஜூகள் வேலிகட்ட முயல்கிறார்கள். பாவம் என்று சொல்லிவிட முடியாது இவர்களை தெரிந்து கொண்டே தவறு செய்பவர்கள்>பிழையை சரியாக்க முயலபவர்கள் வரலாற்றின் துரோகிகள்.
தேசத்தின் இண்டு இடுக்குகள் எல்லாம் சதிகளும் துரோகங்களுமே மலிந்துள்ள நிலையில் சமுதாயம் எவ்வாறு இவற்றை வெல்லுவது?
இண்டைய மாற்று எண்டது நிலவுற அரசியலின்ரை கண்ணாடியிலை தெரியிற விம்பம்தான் எண்டார் நண்பர் ஒருவர். (எனக்கென்னவோ சொல்லாடல்களும் அப்பிடித்தான் தெரியுது.) இது இரண்டையும் விலத்திக்கொண்டு டீபிஎஸ் செய்தி விவகாரத்தின்ரை உண்மையளைக் கண்டறிய வெளிக்கிடுறதும் கண்ணாடியுக்குள்ளை புகுந்து பார்க்கிற கடின முயற்சிதான். அரங்கமே… அரங்கமே…. தான்.
அதுசரி சோபாசக்தியின்ரை விவகாரத்திலை நாங்கள் அய்யோ ஆத்தையிரோ குய்யோ முறையோ… எண்டு ஓடிக்கொண்டிருக்கிறதை விட்டிட்டு எதிர்த்திசையிலை நடக்கிறதுதானே நல்லது. வரதராசப்பெருமாளை ஏன் சந்திக்கக்கூடாது? எண்டு கேட்பமே. இதை கருத்துரீதியா நிதர்சனம் விளங்கப்படுத்தட்டும் பார்க்கலாம். புலியளின்ரை நிதர்சனம் தன்ரை வழமையான பாணியிலை (“துரோகி“யைச் சந்திக்கிறவனும் „”துரோகி“தான் எண்ட) அந்தக் காரணத்தை எழுதவேயில்லையே. ஆக தமிழ் அடையாளம் பற்றிய சோபாசக்தியின்ரை கருத்தையும் வரதராசப்பெருமாளின்ரை கருத்தையும் முரண்பாடாய்க் காட்டி எப்பிடி சந்திக்க முடியும் எண்டுதான் கேட்குது. „”புலியெதிர்ப்பு…” இதுதான் காரணம் எண்டு சொல்லுது. புலியெதிர்ப்புத்தான் காரணம் எண்டால் எத்தனைபேர் புலியின்ரை பட்டியலிலை சேர்க்கப்பட்டிருக்கிறம் எண்டதையும் வளர்ந்துவாற புலியெதிர்ப்பை இப்பிடி எவ்வளவுகாலம் அவை எதிர்கொள்ளப் போயினம் எண்டதையும் அவையள் அறியாமல் இருக்கலாம்………நாங்களுமா?. „”துரோகிகள்“ எண்டால் ஓலை வந்திட்டுது எண்டு கொள்ளுறதிலை ஒரு ஊகநியாயம் இருக்கு……… புலியெதிர்ப்பு எண்டால் நிதர்சனத்தின்ரை ஊளைநியாயம்தான் இருக்கு. அதேநேரம் ஒண்டு….. கருத்துகளை நாம் ஆதர்சிக்கலாம். கருத்துச் சொல்லுற எவரையும் ஆதர்சிக்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. “சோபாசக்திகள்” எண்டு எழுதிற பொதுமையள் எமக்கு வேண்டவே வேண்டாம். அத்தோடை ஒரு கேள்வி. இந்தச் செய்தி பற்றி இதுவரையான சோபாசக்தியின் மவுனம் ஏன்…?
சோபா சக்தி அற்புதமான ஒரு தமிழ் எழுத்தாளர். ஜெயகாந்தனை அடுத்து தமிழில் கிடைத்துள்ள ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் கூட. புலிகளின் பினாமிகளுக்கு இது புரிந்திருக்கும் என எதிர்பார்ப்பது மடமை.
அது ஒருபுறமிருக்க.
வரதராஜப்பெருமாளை சந்திப்பதில் என்ன தவறு? இப்ப எல்லோரும் இந்தியாதானே ? எல்லோருக்கும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சிதானே ?
“சோபாசக்திகள்” என குறிப்பிட்டது துணிந்து கருத்துகளை சொல்பவர்களை பொதுமைப்படுத்தவேயொழிய அவரது கருத்துகளையே பிரதிபலிப்பவர்கள் என்கிற வகைக்குள் அல்ல. நன்றி.
தக்சனின் கருத்துகள் காய்த்ல உவத்தல் இல்லாது நேராக இருக்கின்றன.
நன்றி நண்பரே.
வாழ்வை நேசிக்க தெரிந்தவர்களே வாழ்வின் உன்னதங்களுக்காக போராடும் தகுதியுடையவர்கள். கொலைகளிலும் மரணதண்டணைகளிலும் நம்பிக்கையுடையவர்களிடமிருந்து விடுதலை பெறவேண்டுமென்ற நிலையை உருவாக்கும் களமாக எங்கள் போராட்டம் திசை மாறி போகும் நாட்கள் தொலைவில் இல்லையென்றே யதார்தங்கள் உணர்த்தி நிற்கின்றன.