19 thoughts on “இரத்தினசபாபதி

  1. இந்த அஞ்சலி நிகழ்வில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஐனநாயக சக்திகள் அனைவரும் கலந்து கொள்வது அவசியம்!
    இது குறித்து நான்…………

    விரைவில்….

  2. உங்களுடன் சேர்ந்து உங்கள் கருத்தைப் பலப்படுத்துகின்றோம்.

  3. தோழா; இரத்தினசபாபதியின் நினைவஞ்சலி சிறப்பாக நடந்துமுடிந்தது. வழமையான ஒப்பாரிகள் இல்லாது ஈழப்போராட்டத்தையும் தோழா; இரத்தினசபாபதியையும் விமா;சனபூர்மாக பலரும் அணுகியிருந்தமை வரவேற்கத்தக்கது. அது தோழருக்கான உண்மையான அஞ்சலியாகவும் இருந்தது.
    அஞ்சலி உரை நிகழ்த்திய ஒவ்வொருவரும் ஒவ்வோருகோணத்தில் தமது உரையை நிகழத்தினா;. முத்தாய்பாக> தோழா; ஞானம் அழைக்கப்பட்டபோது போராட்டத்தை ஆரம்பித்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிவந்து இயற்கை மரணம் அடைபவா;களுக்கு அஞ்சலிசெலுத்த தான் தயாரில்லை என்றார்.
    தோழா; இரத்தினசபாபதியின் ஆளுமை விமா;சனங்களுக்கு மத்தியிலும் பலராலும் விதந்துரைக்கப்பட்டது.

  4. நிராகரித்தல் என்பது ஐனநாயகப்பண்பு! முழுமையாக நிராகரித்தல் என்பது ஐனநாயகத்திற்கு விரோதமானது. ஆனாலும் இது வெறும் சூத்திரமல்ல. ஒரு மனிதரிடம் தவறுகள் இருக்கும்போது குறித்த தவறுகளுக்காக அவரிடமிருக்கும் சமூகசாதகமான கருத்துக்களை நடைமுறைகளை நிராகரித்து விட முடியாது. இதையே மாக்சிய சித்தாந்தத்தின் அடிப்படையும் சுட்டி சிற்கிறது. இது ஒரு பொதுவான கருத்து… அது சரி… இரட்ணா என்ன தவறு செய்திருக்கிறார்?… அவருக்கு அஞ்சலி செலுத்த மறுக்கும் அளவிற்கு அவர் என்னதான் இந்த சமூகத்திற்கு பாதகமாக நடந்திருக்கிறார்?..புலி சார்ந்து இருத்தல் பிழை… அரசு சார்ந்து இருத்தல் பிழை… இரு பக்கமும் சாராது அங்கு நடுநிலை பேணுவது சாத்தியமற்றது என நினைத்து புலம்பெயர்ந்து வந்தாலும் பிழை!… அப்படியாயின் எதை சரி என்று கூறுகிறீர்கள்?…இரட்ணா தனது அரசியல் பாதையில் ஆளுமையோடு நடந்திருக்கறார்.. தத்துவார்த்த சிந்தனைகளை விதைத்திருக்கிறார்… மக்களுக்கான ஒரு அரசியல் கோட்பாட்டினை வகுத்திருக்கிறார்.. அதையே அடுத்தவர்களை பற்றி நடக்கவும் வைத்திருக்கின்றார். அதில் நடைமுறை தவறுகள் இருக்கலாம்.. நடைமுறைப்படத்துவதில் சாத்தியமின்மைகள் இருந்திருக்’கலாம்… முயன்று பார்ப்பதிலும் கரிசனை போதாமல் இருந்திருக்கலாம்… ஆனாலும் இரட்ணா காட்டிய பாதையும் கோட்பாடும் தேடலுக்குரிய திசையும் சரியானது என்பதுதான் உண்மை!….. இரட்ணாவை முழுமையாக நிராகரித்ததனால் ஞானம் தனது சமூகவிஞ்ஞான கோட்பாட்டிலிருந்து தடம் புரண்டு விட்டார். தடம் புரண்டவர்கள் பலர் உண்டு. அதில் ஞானம் தன்னையும் இணைத்துக்கொண்டு விட்டார். ஆனாலும் ஞானத்தின் கருத்து பிழையாயினும் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தமை வரவேற்கத்தக்கது.
    கருத்துக்களோடு சந்திப்போம் தோழர் ஞானம் அவர்களே!…

  5. :போராட்டத்தை ஆரம்பித்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிவந்து இயற்கை மரணம் அடைபவா;களுக்கு அஞ்சலிசெலுத்த தான் தயாரில்லை/

    ஞானம் நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? எப்படி மரணிக்கப் பேுhகிறீர்கள்? அஞ்சலி செலுத்த தயாரற்ற நீங்கள் எதற்கு நிகழ்வில் கலந்துகொண்டீர்கள்? உங்கள் துணவியார்தானே புஸ்பராஜாவின் அஞ்சலிக்கு தலைமை தாங்கினார்.

  6. இயற்கையாய் மரணம் அடைவது இன்று பிரச்சனைக்குரியதாகிவிட்டது. என்னசெய்ய !

  7. இரத்தினசபாபதியின் ஈழவர் இடர்தீர என்ற புத்தகம் படித்திருக்கிறேன்.நினைவுக்கூட்டத்துக்குப் போய்விட்டு நினைக்கமாட்டேன் என்றால் என்ன சின்னப்பிள்ளைத்தனம் இது.
    ஒருவரை ஒருவர் கொல்லும் இராணுவம்கூட கொன்றுவிட்டு மரியாதை செலுத்துகிறது.

  8. தோழர் இரத்தினசபாபதியை மதிப்பிடாமல் எமது ஆயுதப்போராட்டத்தை மதிப்பிட்டுவிட முடியாது. இன்று பின்நவீனத்துவம் வரை போய் வந்த விளக்கங்கள்கூட சுருண்ட வாலை நிமிர்த்தமுடியாமல் ஒருவித எதிர்ப்புவாத மனநோயாக வளர்ந்துவிட்டிருக்கிறது. இந்த மனநோய் தன் அகவிருப்பக் கருத்துகளை மறுப்பவர்களை சகித்துக்கொள்ள முடியாமல் இருப்பதை நாம் வேதனையோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்தளவுக்கு எம் அரசியல் அறிவும் ஆய்வுத்தன்மையும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட இந்த மனநோயின் அளவுகோலால் மதிப்பிடப்படும் நிலை. ஆயுதப்போராட்டத்தின் 30 ஆண்டுகால படிப்பினைகளே எமது அரசியலை புடம்போட முடியாத மூளையறுநிலை.

    ஆயுதமற்ற உலகில் அமைதி நிலவும்… யுத்தம் வேண்டாம்… சமாதானம் சுபீட்சம் தரும்… ஆயுதங்களை கீழே வைத்தால் பிரச்சினை தீரும்… என்ற அரசியல் ஹரே ராமா ஹரேகிருஷ்ணாவை தாண்ட முடியாமல் அவதியுறுகிறது மாற்று அரசியல். இதைச் சொன்னாலே யுத்தத்தை ஆதரிப்பவர்கள் அழிவுகளைக் கோருபவர்கள்… என்று எதிர்ப்புவாத மனோநிலையில் கிளித்தட்டுக்கு வரும் நிலை. இது நிகழ்காலம். இந்த நிலையில் இரத்தினசபாபதி பின்நோக்கிய காலத்தில் கொண்டிருந்த ஆயுதப்போராட்டம் சம்பந்தமான விளக்கம், தத்துவங்களின் மீதான அறிவு, தேடல், செயற்பாட்டின் மீதான தன்முனைப்பு என்பன உயர்ந்ததுதான் என்பதை ஒருவர் ஏற்றுக்கொள்ள முடிகிறதோ இல்லையோ அவை உதாசீனம் செய்யப்பட வேண்டியவையா என்ன? ஆனால் தத்துவத் தேட்டங்களை அதன் அரசியல் அறுவடையை சமூக சாராம்சத்துள் நாம் பெறமுடியாமல் பஜனைக் கோஷ்டியாய்ப் போனதுக்கு புலிகளின் புத்திஜீவிகள் அழிப்பு மட்டும் காரணமில்லை. அதற்கு வெளியில் தப்பிய தோழர் இரத்தினசபாபதி போன்றோரின் தொடர் செயற்பாடின்மையும், சோலிகளிலிருந்து விலகி இருந்த ஒருவித சந்தர்ப்பவாதமும், தனிநபர் பலவீனங்களும் காரணம் என்றே சொல்லத்தோன்றுகிறது. (தோழர் மகா உத்தமனும் இதற்குள் இன்னொரு பரிமாணத்துள் அடக்கம்). அதேபோல் ஈரோஸ் அமைப்பின் நெளிவுசுளிவுப் பாதைக்கான இழையை அல்லது அதன் முனையை தோழர் இரத்தினசபாபதிவரை தேடவேண்டியுமுள்ளது. ஆனால் இதுவே அவர்களை நிராகரிக்கக் காரணம் என்றால் எமது அரசியல் அறிவை நாம் நொந்துகொள்ள வேண்டியதுதான்.

    இன்னும் கீழிறங்கி தப்பியோடி வந்து இயற்கை மரணம் எய்தியவர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தயாரில்லை என்று கலகக்குரல் விடுவதில் பிரயோசனமில்லை. இது சுகனின் பாணியில் குறுக்குவிசாரணை செய்யவே லாயக்காகிறது. தப்பியோடியது பிழை என்கிறானா அல்லது இயற்கை மரணம் அடையக்கூடாது என்கிறானா அல்லது தப்பியோடி இயற்கை மரணம் அடையக்கூடாது என்கிறானா அல்லது இயற்கை மரணம் அடைய தப்பியோடக்கூடாது என்கிறானா… அல்லது தப்பியோடி வந்தவன் இன்னொரு தப்பியோடி வந்தவனுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்கிறானா… என்று எழுத்துகளை விரயம் செய்யவே லாயக்காகிறது. கவிதை விளங்காவிட்டால் கவட்டுக்குள் குனிந்து பார்க்கவும் என்று கவிதைக்கு பின்குறிப்பிட்ட கலகக் குரல்களையும் சமுதாயமே ஒட்டுமொத்தமாக கோமாவில் இருக்கிறது என்று கோமாக் கிரகத்துக்கு வெளியிலிருந்து எழுகின்ற கலகப் பாடல்களையும் கேட்டுக்கொண்டிருக்கும் எவருக்கும் தோழர் ஞானத்தின் குரல் ஒன்றும் புதியதாய்த் தெரிந்துவிடாது. இந்தக் குரலுக்கு குறைந்தபட்சம் அவர் போன்றவர்கள் நேர்மையாக இருக்கக் கடவீர்களாக. தோழர் புஷ்பராசாவை இந்தக் கலகக் குரலுக்குள்ளிருந்து வெளியில் எடுத்து அஞ்சலி செலுத்திய உங்கள் குறிப்புகளை உங்களுக்காக நாம் எரித்துவிடுகிறோம். இனிவரும் காலங்களாவது உங்களின் குரலின் மீதான நேர்மையை காவி வரட்டும்!

  9. தோழர். இரட்ணாவின் நிலை “முகாமுகம் ” எனும் மலையாளப் படத்தின் சிறீதரன் பாத்திரத்தை நினைவுகொள்ள வைத்தது.
    ஜெயமோகனின் ” பின் தொடரும்நிழலின் குரல் ” பாத்திரத்தையும் நினைக்கவைத்தது. எல்லாமே குறும்படமாயும் விபரணமாயும் போகிறது. அன்றைய கூட்டத்தில் தோழர். ஸ்டாலின் போராட்டம் குறித்து நீண்ட நேரம் உரையாற்றினார். கிழக்கின் பிரிவினைநெருக்கடிகள் , தமிழ்த்தேசியத்தின் இரட்டை நிலை,…..இப்படி. போராட்டத்தின் மூலவர்கள் வெளியேறும் அவலம்,,, அவர்கள் மரணிக்கும்போது சமூகத்தின் நிலை குறீத்த பேச்சின் ஒருபகுதியாக தோழர். இரட்ணாவிற்கான அன்சலியின் ஒரு பகுதியாகத்தான் அவரது பன்ச் டயலாக் இருந்தது. அவருக்கான அன்சலியையோ, அன்சலிக்கூட்டத்தையோ நிராகரிக்குமாறு அவர் பேசியதாக நான் புரிந்துகொள்ளவில்லை.
    இரண்டு பிள்ளைகள் , மனைவி என அன்சலிக்கூட்டத்தில் மிக உற்சாகமாகவே அவர்கள் பங்கு பற்றி தமது பங்களீப்பை வழமைபோலவே வழங்கினர்..

  10. கவிஞர் சு.வில்வரத்தினத்துக்கு தேசப்பற்றாளர் எண்ட பட்டத்தை புலியளின்ரை தலைவர் குடுத்திருக்கிறது மிகப்பெரிய கேலிக்கூத்து. வில்வரத்தினம் மக்களுக்கு சொந்தமான கவிஞன். போரின்ரை அவலத்தை குறிப்பாக வெளியிலைவராத தீவுப்பகுதியின்ரை போர் அவலத்தை வெளியிலை கொணர்ந்த கவிஞன். செத்துப்போனவுடனை அல்லது சாக முன்னமே பட்டங்களின்ரை பட்டியல் தயாராகியிடும். இந்தக் கவிஞன் செத்து கிழமைக்கணக்காகினபின் இந்த நாய்தின்னாப் பட்டத்தை வீசியெறிஞ்சதின்ரை காரணம்தான் என்ன? புங்குடுதீவு முதலாளிமாற்றை சிபாரிசு செய்த வேலை எண்டு கதையடிபடுது. இவையளிட்டையிருந்து புலியளுக்கு வாறதை புலியள் தக்கவைச்சுக்கொள்ள செய்த கேலிக்கூத்து இந்த காலம்கடந்த பட்டமளிப்பு. மண்ணாங்கட்டி. சுவியின்ரை கவிதையள் அந்தக் கவிஞனை தாங்கிப்பிடிக்கும். புலியளின்ரை சொத்தில்லை இந்தக் கவிஞன்.

    பாலகுமாரும் புலியளின்ரை விசுவாசமான குரைஞன்தான். ஒருவேளை பாலகுமார் தன்ரை குற்றவுணர்வைத் தணிச்சுக்கொள்ள அல்லது தன்னோடை சமப்படுத்த தேசியத்தலைவரிட்டை சிபாரிசு செய்துகூட இருக்கலாம். ஆனாலும் ரட்னாவுக்கு பட்டம்குடுத்து சொத்தாக்க தேசியத்தலைவருக்கு சரிவராது. அதுக்குள்ளை அடங்காதவர் ரட்னாவும் அவரது அரசியலும். சுவி தேசியப் போராட்டத்தை ஆதரிச்சவர். புலியளைப் பாதிக்காதபடி அவலங்களைப் பாடினவர். புலியளுக்கு மேலை விழுகிற விமர்சனங்களை ஏற்றுக்கொண்டவர் எண்ட விசயம் அவரோட பழகினவையளுக்குத்தான் தெரியும். மயிர்புடுங்கின கவிஞர்மார் சிலர் முடிவில் ஒருபிடி புலியிசமாகிப்போன கதையளுக்கைகூட சுவி அகப்படாதவர் எண்டதை குறிச்சுத்தான் வைச்சிருக்கோணும். எப்பிடியோ பட்டமளிச்சு அசிங்கப்படுத்திப் போட்டாங்கள்.

    எப்பிடியோ ரட்னாவை இந்தப் பட்டமளிச்சு அசிங்கப்படுத்தாதளவுக்கு சந்தோசப்படலாம். அதாவது ரட்னா அவையளின்ரை பட்டத் தகுதியுக்குள்ளை அகப்படாமல் இருக்கிறார் எண்டுதான் சொல்லத் தோணுது. செயற்கை மரணம் அடைஞ்சு இதை ரட்ணா நிரூபிச்சிருந்தால் ஞானத்திட்டையிருந்து அஞ்சலி கிடைத்திருக்குமோ என்னவோ? அல்லது இதுக்கும் யாழ்மேலாதிக்கக் கோவண விளக்கமேதாச்சும் இருக்குமோ என்னவோ??

  11. பூனைக்குத் தோழர்கள்
    ———————-

    (சசி கிருஸ்ணமூர்த்தி 1998 ஒக்தோபரில் விமானவிபத்தில்
    இறந்தபோது வந்த சில இரங்கற்சொற்களின் அருவருப்பாக)

    நீ
    அரசினரின் சித்திரவதை முகாமொன்றில் செத்திருக்கலாமே!

    அவர்கள் முழுகடித்த கலமொன்றில் போயிருக்கலாமே!

    அவர்களது துப்பாக்கி வேட்டொன்றில் விழுந்திருக்கலாமே!

    இல்லை,

    காணாமற் போனோருள் ஒருவனாய்
    புதைகுழியொன்றுள் அமிழ்ந்திருக்கலாமே!

    குண்டு விழுந்து சரிந்த கூரைக்குக் கீழ்

    அல்லது

    சுவரொன்றன் கீழ்

    புதையுண்டு போயிருக்கலாமே!

    போகவில்லை .

    அகதிமுகாமொன்றில்

    பட்டினியோ பெரும்பிணியோ

    உன்னை மெல்ல அரித்திருக்கலாமே!

    இல்லை.

    என்றாலும் போய்விட்டாய்.

    இங்கே உனக்காக ஒருவன் இரங்குகிறான்__

    நண்பனாம்!

    நினைவுகளிற் கொன்சமாய் இரைமீட்டுக் கொள்கிறான்.
    நிலையாமை சாவென்று நிறையவே பேசுகிறான்.
    சொல்லுவன யாவுமே சுடலை யானந்தான்.

    எனினும்

    உன் சாவைக் கொணர்ந்தவர்கள் அவனுக்கு இனியவரோ?

    ஏனோ

    கொலையை , கொலையர்களை ஏசிடவும் முடியாமல்

    கொலைச்செயலை வீரமெனக் கொண்டாட இயலாமல்
    திணறுகிறான் , பாவம்.

    சாவதற்கு எத்தனையோ வழியிருந்தும் நீ அறிந்தும்
    ஏனிந்த விதமாய் உன் ‘ நண்பனது’ வாயடைக்க
    முதலைகளின் விழிகளிலும் வழிகின்ற நீர் வற்ற

    வானவெளியினிலே சாவினை நீ தேடினாய் ?

    ::::::::::::::::::::::::::

    (தோற்றூத்தான் போவோமா….1 ..மே…1999)

    சி .. சிவசேகரம்.

  12. சிவசேகரத்தாற்றை எள்ளல் நடை சுகனை அவற்றை மேற்கோள் தொண்டனாய் பல இடங்களிலை காணவைச்சுக்கொண்டுதான் இருக்கு. இந்தக் கவிதை சசியின்ரை மரணத்துக்கு அஞ்சலிபாடியவனுக்கு சிவசேகரத்தின்ரை சாட்டை. அவன் ஆர் எண்டு சொல்லி வெளிப்படையா விமர்சிக்கிற “சோலியுக்கை” போகாத விமர்சன நாகரிகம் கவிதையை ஆயுதமாக்கின “புத்திசாலித்தனம்தான்“ நம்மளுக்குத் தெரியுது. கனக்க ஏன்… நம்மடை ஆயுதங்கள் செய்த கொலையை கொலையர்களை கண்டிக்கவும் முடியாமல்…. எண்டு ஆரும் சிவசேகரத்தாரைப் பார்த்து கேட்டிடக்கூடாது. அது அவருக்குப் பொருந்தியிடக்கூடாது. புலியள் கொன்றுதுலைச்ச சபாலிங்கத்தின்ரை நினைவாய் விட்ட “தோற்றுத்தான் போவோமா”விலை இப்பிடி கவிதையை போட்டு நிரப்பத்தான் அவராலையும் முடிஞ்சது…அதுவும் அந்த எள்ளல்வரியோடை. (வரி: கொலையை கொலையர்களை ஏசிடவும் முடியாமல்)

    அதுசரி ரட்ணா விசயத்திலை ஞானத்தின்ரை “பஞ்ச் டயலக்” எண்டு வகைசொல்லுறது…. பிறகு அவர் அஞ்சலியை நிராகரிக்கச் சொல்லயில்லை (அவர் அஞ்சலிக்கு குடும்பத்தோடை வந்திருந்தார்) எண்டுறது…..… அஞ்சலியின்ரை ஒரு பகுதியாத்தான் இந்த பஞ்ச் டயலக் எண்டிறது….… அஞ்சலிசெலுத்தத் தயாரில்லை என்று சொன்னார் எண்டு (ஹரி) எழுதிறது…. குழப்புறீங்கடா. பாரீசிலை கூட்டம் கீட்டத்திலை பிரச்சினை ஏதாச்சும் நடந்தால் ஒருமுகமான செய்தியாய் அது வாறதேயில்லை. குழப்பம்தான்…. ஒரே குழப்பம். ஒருவன் அடிக்க வந்தததெண்டுவான் அல்லது அடிச்சதெண்டுவான்… மற்றவன் வாய்த்தர்க்கம்தான் பட்டதெண்டுவான். ஒருவன் கதிரையளைச் சுத்திக்கோண்டு ஓட துரத்தினவன் எண்டுவான்…மற்றவன் அப்பிடியொண்டும் நடக்கயில்லை எண்டுவான்… இப்பிடியே இந்த அஞ்சலி சர்ச்சையிலும் அதே நோயா?… எந்தச் செய்தியை சரியெண்டு எடுத்து கருத்தை எழுத…?? ஞானம் கூட்டதிலை பேசின பேச்சிலை வந்ததா அந்த “பஞ்ச் டயலக்”. அல்லது அந்த பஞ்ச் டயலக்தான் அஞ்சலி உரையா?……. குழம்பித்தான் தெளியவேண்டும் எண்டு சொல்லி வைச்சவனைக் கண்டால் தகவல் தாருங்கள். (ஒண்டுக்குமில்லை…காலிலைவிழ.) நன்றி.

  13. ஆனை ஆயிரம் சொன்னாலும் பூனை எலிபிடிக்கத்தான் செய்யும்.
    பரதேசி! சொல்லுவார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி எங்க போகுது!
    உண்மையை அறியவிரும்பினால் பரதேசிக்கு ஒண்டும் கஸ்ரமில்லை. ஆக மிஞ்சினால் அடி ஞானத்துக்கு ரெலிபோன்.
    ஞானத்தை தெரியாது எண்டுமட்டும் வண்டில்விடாதை.

  14. பரதேசி அவர்கட் கு,
    பரதேசியெனப் பெயர் சுட்டச் சங்கடமாயிருக்கிறது,
    என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்!
    சிவசேகரத்தாற்றை மேற்கோள் ரசிகனென்று!
    தோழர்.சிவசேகரம் எனது ஆசானும் ஆதர்சமுமன்றோ!
    முன்னெடுங்காலத்திற்குமுன்னர் மாற்றுக்கருத்து , பத்திரிகைகள் இப்படிப் புகலிடம் புதிய கலாச்சாரத்தைக் கொண்டிருந்தபோது அதற்காக உழைத்தவர்களுள் சிவசேகரம் முக்கியமானவரன்றோ!
    அவர் எழுத்துக்களும் மொழிபெயர்ப்புகளும் நமக்குப் பெரும் பலமாயிருந்ததன்றோ!
    அந்நாட் தாயகத்தை எடுத்துப் பார்த்தாற் தெரியும் தோழரின் பங்களிப்பு. எறத்தாள புகலிடப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும்
    தன் உழைப்பை ஈந்தவரன்றோ!
    ஒரு சம்பவம் சொல்கிறேன் !
    பனிமலர் பத்திரிகை கேள்விப்பட்டீர்களா! அப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் அவர் இருந்தபோது கிட்டுவிற்கும் அன்சலி செய்து கிட்டு சுட்ட விமலேஸ்வரனிற்கும் அன்சலி செலுத்தினார்கள். சிவசேகரம் இதைக் கண்டித்து வெளியேறியவரன்றோ! கிட்டுவிற்கும் அன்சலி, கிட்டு சுட்ட விமலேஸ்வரனிற்கும் அன்சலி. இந்தப் புள்ளியில் சிவசேகரம் கிட்டுவிற்கான அன்சலியை நிராகரித்தவர். எனது கவிதா ரசனையின்படி ஈழத்தின் கவிதைக்கான அடையாளம் சிவசேகரமே!
    மற்றையோரெல்லாம் அதன்பின்னே!

  15. சி. சிவசேகரத்தின் கவிதைத்தொகுதிகள்,

    1 : தேவி எழுந்தாள்

    2 : நதிக்கரை மூங்கில்

    3:செப்பனிட்ட படிமங்கள்

    4:ஏகலைவ பூமி

    மொழிபெயர்ப்பு:
    பணிதல் மறந்தவர்

    மேலும் தாயகத்திற் பார்க்க:
    இன்னொருகாற் சிவத்தம்பி

  16. இரத்தினசபாபதியின் இரங்கல் கூட்டம் நடைபெற்று அதனமீது சா;ச்சகசகளும் குழப்பங்களும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் முதல் ஈழவிடுதலைப்போராட்டத்தின் முன்னோடிகள் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்ட காலம் போய் இன்னைக்கு 35 வருடமாகிவிட்ட நிலையில் அநேகா; இயற்கை மரணம் அடைகிறார்கள். வயது கேிறது என்பது உண்மை. நாம் ஒன்றை யோசிக்க வேண்டுமல்லவா? இரத்தினசபாபதி போன்றவா;கள் இன்னும் எத்தனை போ; உள்ளார்கள்? எங்கேயுள்ளார்கள்? அவா;கள் கருத்து என்ன? அவா;களுக்கும் நமக்கும் என்னமுரண்பாடு என்று ஆயிரம் கேள்விகளைக் கேட்டுவிட முடியும். இறக்கும் வரையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நாம் விடும் தவறு அது. ஒருவா; இருக்கும் வரையும் இருந்து விட்டு அஞசலஜக் கூட்டம் போடுவததில் புண்ணியமில்லை. கவட்டுக்குள் குனிந்து பார் என்று கலகம் செய்வதாகச் சொல்லும் அண்ணா… அது கவிதை. அதை வாசியுங்கள். அதையுமா விளங்கப்படுத்தோணும்? சின்னப்புள்ளத்தனமாயில்ல.

  17. கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம். தப்புமில்லை.
    ஆனால் கேள்விகள் மட்டும் மிஞ்சிநின்று பயனில்லை.
    இரத்தினசபாபதி போன்றவா;களை குத்திக்கிளறி போஸ்மோட்டம் செய்ய்வேண்டிய அவசியமில்லை. அவா;களையும் சாராசாp மனிதநிலையில் வைத்துக்கொண்டு அணுகுவதே முறையானது. இரத்தினசபாபதிக்கள் மேல குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து நாம் என்ன சாதிக்கப்போகிறோம்? ஒரு சராசாp மனிதனின் பொதுவாழ்வு என்ன? சிறிய காலமென்னாறலும் அவன(ள)து அசைவுகள் எவை?
    அந்த அசைவுகள் பின்னா; மங்கிப்போகலாம். தூர்ந்து போகலாம்.
    அது முக்கிய மல்ல. அந்த அசைவுகளால ஏற்பட்ட அனுகூலங்கள்> பிரதிகூலங்கள் ஆராயப்படவேண்டிவை. அது பொதுவாழ்வு சமூகநோக்கு பற்றி ஒவ்வோருவரும் புடம்போட்டுப்பார்த்துக்கொள்ளவதற்கு
    அவசியமானது. போராளிகள் என்றால் போராட்டம் பற்றிய மீள்பார்வைக்கு அவசியமானது. இத ஒருவாpன் மரணத்தில்தான் சாத்தியம்.
    மாறி மாறி சின்னக்கோடு பெரியகோடு கீறி விளையாடுவது தேவையில்லாத ஒன்று.

  18. இன்று சுவிஸ்ஸில் இரத்தினசபாபதி அவர்கட் கு நினைவுக்கூட்டம்
    நடைபெறுகிறது

  19. சுகன்! உங்களுக்கு சிவசேகரத்தாரின் இப்பேத்தை நிலைப்பாடு தெரியுமோ? சிவத்தம்பியாருக்கு போட்டியா புலிக்கு தூக்கி குடுக்க போட்டி போடுராராம். கேள்விப்பட்டியளோ? கோகர்ணன் எண்ட பேரில தினக்குரல் பேப்பரில ஞாயித்துகிழமையில அவர்தான் எமுதுராராம். கிடைச்சா தொடர்ச்சியா வாசிச்சுபாருங்க. நானும் ஒரு காலத்தில சிவசேகரத்தாரில மதிப்பும் மரியாதையும் வைச்சிருந்தவன்தான். நாள்போகபோக அவருக்கும் மாமனிதன் பட்டத்தில ஆசை வந்திட்டுது எண்டு ஆட்கள் சொல்லுகினம். ஆனாலும் அவற்ர கவிதையொண்டில எழுதியிருந்தார் “அன்றொருநாள் துரோகியென தீர்த்த வெடி…. சும்மா நிண்டவனையும் சுட்டது…சுட்டவனையும்ட சுட்டது” எண்டு. உண்மையிலும் உண்மை. பாவம் மக்கள் எண்டு 1995ல் வந்த சேரனின் கவிதை தொகுதியில வந்ததுபோல இப்ப நினைக்க பாவம் சிவசேகரத்தாரும். நியாயங்களுக்காக போராடி தோற்றுப்போனேன் எண்ட வெறுப்பில மாறி அடிக்கிறார்போல. அவருக்கென்ன புத்திஜீவி எண்ட முத்திரை போதும் அவர் சொன்னா சரியாதானிருக்குமெண்டு விசிலடிச்சாங்குஞ்சுகள் நம்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *