சதாம் உசேன்

கட்டுரைகள்

சதாம் உசேன்

(1937-2006)

ஒரு மனிதனைத் தூக்கிலிட்டு அவன் துடித்துத் துடித்துச் சாகும் காட்சியைப் படம் எடுத்து ரசிக்கும் மனவிகாரம் கொண்டவர்கள் உலகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம்!

-வ. அழகலிங்கம்

பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் ஈராக்கை மார்ச் 2003ல் அடாத்தாக ஆக்கிரமித்து 665000 ஈராக்கிய மக்களைக் கொன்று குவித்த ஜோர்ச் புஷ்சின் அமெரிக்க ஏகாதிபத்திய நிர்வாகத்தால் கட்டளையிடப்பட்டு, ஈராக்கின் முன்னை நாள் ஆட்சித் தலைவர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டுள்ளார். ஈராக்கில் உள்ள துஜைல் நகரில் 1982ம் ஆண்டில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் 148 பேரை ‘தன்னைக் கொல்லச் சதிசெய்தார்கள்’ என்று குற்றஞ்சாட்டிச் சதாம் கொலைசெய்த குற்றத்திற்காகவே, சதாமுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கின் பிரகாரம் சதாம் உசேனுக்கு ஈராக் தனி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை கடந்த 26-ந் தேதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது. அத்துடன் 30 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பக்ரீத் பண்டிகைக்கு முன் சதாம் உசேனைத் தூக்கில் போடவேண்டும் என்பதே புஷ்சினதும் அவரது கைப்பொம்மையான ஈராக் பிரதமர் நூரி அல்-மாலிகியினதும் முடிவாகும். அரபுச் சட்டங்களின்படி பக்ரீத் தியாகப் பண்டிகையின் போது தூக்கிலிடுவது சட்ட விரோதமாகும். சதாம் உசேனைத் தூக்கிலிடுவதற்காக அதிகாரிகளை உலங்குவானூர்தி மூலம் நடுராத்திரியில் ஏற்றி இறக்கி, ஈராக்கியச் சட்டத்தையே இரவோடு இரவாக மாற்றி எழுதினார்கள். ஏனெனில் சதாம் உசேனை அமெரிக்க ஏகாதிபத்தியம் கொல்லவில்லை ஈராக் மக்களே கொன்றார்கள் என்று உலகுக்குக் காட்ட வேண்டுமல்லவா! ஈராக் அதிகாரிகளிடம் மிரட்டிக் கையெழுத்துகள் வாங்கப்பட்ட செய்தியையும் ஊடகங்கள் எழுதியுள்ளன.

அமெரிக்காவின் பொறுப்பிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதாம் உசேனை அமெரிக்க ராணுவம் 29 டிசெம்பர் 2006ல் அமெரிக்க ஏகாதிபத்திய நலனுகளுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் ஈராக்கிய பொம்மை அரசிடம் ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து, சதாம் உசேன் முப்பதாம் தேதி காலை பாக்தாத் நகரில் தூக்கில் தொங்கவிடப்பட்டார். சதாம் உசேனைத் தூக்கில் போட்டபோது ஈராக் பிரதமர் நூரி அல்-மாலிகியின் பிரதிநிதிகள், சுன்னி முஸ்லிம் மதகுரு ஒருவர், மற்றும் சதாம் உசேனால் முன்பு பாதிக்கப்பட்ட சிலர் அடங்கலாகப் பதினைந்து பேர்கள்வரை அங்கு இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. அவர் தூக்கில் போடப்பட்ட காட்சி படம் பிடிக்கப்பட்டு அதன் ஒருபகுதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஒரு மனிதனைத் தூக்கிலிட்டுத் துடித்துத் துடித்துச் சாகும் காட்சியை படம் எடுத்து ரசிக்கும் மனஉணர்வு கொண்டவர்கள் உலகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கிரேக்கத் துன்பியல் நாடகங்களோ, நவீன சாடிஸக் கதைகளோ, இந்த அநாகரீகச் செயலுக்கு முன்னால் வெறும் தூசுகளாகும்.

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட செய்தியை ஈராக் அரசின் தொலைக்காட்சி உடனடியாக ஒளிபரப்பியது. “கிரிமினல் சதாம் உசேன் தூக்கில் போடப்பட்டார், இதன்மூலம் ஈராக்கின் இருண்ட சரித்திரம் முடிவுக்கு வந்தது” என்று அந்தத் தெலைக்காட்சி மீண்டும் மீண்டும் கூறியது.மேலும் சதாம் உசேனோடு தொடர்புடைய அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பர்சான் இப்ராகிம், ஈராககின் முன்னாள் தலைமை நீதிபதி அவாத் ஹமீத் அல்-பந்தர் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. சதாம் உசேனுடன் அவர்களும் தூக்கில் போடப்பட்டதாக ஈராக் தொலைக்காட்சி அறிவித்தது. பாக்தாத்தில் முன்பு உளவுத்துறை அலுவலகம் செயற்பட்ட கட்டடத்தில் சதாம் உசேனும் மற்ற 2 பேரும் தூக்கிலடப்பட்டனர். சதாம் உசேன் தூக்கில் போடப்பட்டதை தொடர்ந்து ஈராக்கில் மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

‘சதாம் உசேன் தூக்கில் போடப்பட்டது பற்றிய தகவல் வெளியானதும் ஷியா முஸ்லிம்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்’ என்ற செய்தியை அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன. உண்மையில் சில நூறு ஷியா முஸ்லிம்கள் வாகனங்களில் ஏற்றி இறக்கப்பட்டு ஆர்ப்பாட்ட நாடகம் ஒன்று ஆடப்பட்டது. சதார், நஜாப் உள்ளிட்ட நகரங்களில் அவர்கள் தெருக்களுக்கு வந்து நடனம் ஆடி, கார்களின் ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.

அதேசமயம் சுன்னி முஸ்லிம்கள் சதாம் உசேனை தூக்கில் போட்டதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித்தில் பதட்டம் நிலவுவதால் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் அமெரிக்க படையினரும், ஈராக் ராணுவத்தினரும் அதிகபட்ச ‘உஷார்’ நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு 170 கி.மீ. தெற்கில் குபா என்ற நகரம் உள்ளது. இது சதாம் உசேனுக்கு எதிரான ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் நகரமாகும். அங்குள்ள மீன் மார்க்கெட்டில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மக்கள் மீன் மற்றும் இதர சாமான்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீரென்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதுபோல ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஹரியா என்ற மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று கார் குண்டுகள் வெடித்தன.

இதில் குபா நகரில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 34 பேர்கள் பலியானார்கள். 58 பேர்கள் காயமடைந்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து, குண்டு வைத்த நபர் என்று ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து அவரை ஒரு கும்பல் அடித்து கொன்றது. ஹரியாவில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்புகளில் 15 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது. இக்குண்டுவெடிப்புகளுக்கு சதாம் உசேன் ஆதரவாளர்களான சுன்னி முஸ்லிம்களே காரணம் என்று மேற்குலக ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. உண்மையில் சுன்னி – சியா முஸ்லீங்களிடையே மேலும் பிரிவினையை ஏற்படுத்துவதற்காகப் பிரித்தானிய அமெரிக்க உளவு நிறுவனங்களின் சதிகளின் தொடர்ச்சியே இந்தக் குண்டு வெடிப்புகளாகும். இந்த நெட்டூரர்களின் சதிகார ஆத்திரமூட்டல்களினால் மேலும் வன்முறை வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. இதற்கிடையே வன்முறையைக் கைவிடுமாறு சுன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு அமெரிக்க ஏஜண்டான ஈராக் பிரதமர் நூரி அல்-மாலிகி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈராக்கை மறுசீரமைக்க சுன்னி முஸ்லிம்கள் முன்வரவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சதாம் உசேன்

சதாம் உசேன் கடைசிமட்டும் அந்த நீதிமன்றங்களின் சட்டபூர்வத் தன்மையை நிராகரித்தார். அவரது இறுதி முழக்கம் எதிரிகள் வீழ்க! ஈராக் நீடூழி வாழ்க! ஈராக் முழு அரபுமக்களுக்கும் சொந்தமானது! கடவுளே அனைத்துக்கும் பெரியவன்! என்பதாயிருந்தது.

ஐரோப்பிய யூனியன் உட்பட்ட அநேக மேற்குலக நாடுகள் சதாம் உசேனின் தூக்குச் சம்பந்தமாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை. இத்தாலியப் பிரதமர் தூக்குத் தண்டனை தவறானதென்று கூறியுள்ளார். அதிகமானவர்கள் தூக்குத் தண்டனை தவறு என்று கூறிய போதும் சதாம் உசேனின் தூக்கின்பின் ஈராக்கில் ஜனநாயகம் வரும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூற்றை மீளவும் கூறியுள்ளனர். லிபியா ஜனாதிபதி தூக்குத் தண்டனையைக் கண்டித்ததோடு லிபியாவில் 3 நாட்களுக்குத் துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவும் கண்டித்துள்ளது. இந்திய இடதுசாரிக் கட்சிகள் எல்லாமே வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளன. இலங்கையில் மட்டக்களப்பில் தூக்குக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றதோடு புஷ்சின் கொடும்பாவையும் எரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை, ஈராக் மேன்முறையீட்டு நீதிமன்றத்தைக் கண்டித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கை மீள விசாரிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று அது கூறியது. ஈராக்கிய உயர்நீதி மன்றத்தின் சதாம் உசேன் மீதான மற்றும் அவரோடு சேர்ந்த ஏழுபேர்கள் மீதான விசாரணைகளானது தவறுகள் நிறைந்ததும் பாரபட்சமானதுமாகும். ‘அளவுக்கு மிஞ்சிய அரசியற் தலையீடுகளினால் நீதிமன்றம் சுயாதீனமாக இயங்காததோடு மற்றய குறைபாடுகளையும் கொண்டிருந்தது’ என்று மத்தியகிழக்குப் பிராந்தியத்திற்கான சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி மல்கம் சிமாட் கருத்துக் கூறியுள்ளார்.

ஆனால் டெக்ஸ்சாசில் புஷ் சதாம் உசேன் கொல்லப்பட்டதை போற்றிப் புகழ்ந்திருக்கின்றார். ஒருகாலமும் மற்றய மக்களுக்குப் பாரபட்சமற்ற நீதிவிசாரணையை வழங்காத சதாம் உசேனுக்கு ஒரு பாரபட்சமற்ற நீதியான விசாரணையின் பின்னரே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்று நவீன மனுநீதிச்சோழனான புஷ் கூறியதை உலகம் எவ்வாறு நம்பாதிருக்க முடியும்!

படுபயங்கரங்கள் நடந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டிலே இந்தத் தூக்குத் தண்டனையானது மேலும் காட்டுமிராண்டித்தனத்தையே முடுக்கிவிடும். நீதியான மனிதர்களுக்கு சதாம் உசேனிலும் பார்க்க புஸ்சே பெருத்த கிரிமினல். யுத்தவெறியன் புஷ்சையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினால் சதாம் உசேனைவிட புஷ்சுக்குப் பலமடங்குகள் தண்டனை கிடைக்கும். ஆனால் இந்தக் கைப்பொம்மைக் நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை. இந்த நீதிமன்றம் ஈராக் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதே அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும். இது ஓர் சுயாதீனமான நிறுவனமும் அல்ல. இது நீதியாய் செயற்படாததால் இதற்கு சதாம் உசேனைத் தூக்கிலிட எந்த அருகதையும் கிடையாது. உண்மையிலேயே ஈராக்கை ஆக்கிரமித்து ஈராக் சமூகத்தை அழித்தொழித்து ஆறு இலட்சத்திற்கும் மேலான ஈராகியக் குடிமக்களைக் கொன்று குவித்ததன் தொடர்ச்சியே சதாம் உசேனுக்கும் அவரது சகோதரருக்குமான தூக்குத் தண்டனையாகும்.

உலகத்தின் முதலாவது பிற்போக்குவாதியான புஷ் அவரது அடிவருடிக் கைப்பொம்மைகளின் தயவில் ஈராக் மக்களை நெடுங்காலம் அவதியுறவிடுவதற்காக எடுத்த நடவடிக்கையே சதாம் உசேனின் மரணதண்டனையாகும். அமெரிக்க அரசினது அரசியல் நன்னெறி வங்குரோத்தின் வெளிப்பாடே இந்த நீதிமன்றமும் அதன் தீர்ப்புமாகும். எப்போதுமே பிற்போக்கு ஆட்சியாளர்கள் தாங்கள் நிறைவேற்றும் மரண தண்டனைகள் மக்களைக் குற்றங்களிலிருந்து பாதுகாக்கவே வழங்கப்படுவதாகக் கூறிவருகிறார்கள். ஆனால் உண்மையிலேயே புஷ், ரெனி ப்ளேர் போன்ற கிரிமின்ல்களது அடக்கிச் சுரண்டி ஆளும் கொடுமைகளைப் பாதுகாக்கவே எப்போதும் அவர்கள் நிறைவேற்றும் மரணதண்டனைகள் பயன்பட்டு வந்திருக்கின்றன. சதாம் உசேனைக் கொன்றதால் ஈராக் மக்களின் அவலங்களில் இம்மியத்தனையுங்கூடக் குறையப் போவதில்லை. அது பயங்கரவாதத்தை, பழிவாங்கலை, வன்மம்சாதிப்பதை, பயமுறுத்தல்களை குற்றங்களையே மேலும் பெருக்கி விடும். இது ஈராக் சமூகத்தை சுன்னி முஸ்லீமென்றும் சியா முஸ்லீமென்றும் பிரிவினை செய்து ஆளுபவர்களுக்கு ஏதுவான சூழலை உண்டாக்குவதற்காகத் திட்டமிட்டே செய்யப்பட்டது. குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதாலோ தண்டிப்பதாலோ சமூகத்தில் நீதி நிறைந்து வழிந்தோடுவதில்லை. குற்றங்களைப் படைக்கும் பற்றாக்குறைப் பொருளாதாரத்தை நிவர்த்திசெய்து அத்தியாவசியப் பொருட்களை விலைக்கு வாங்கும் சக்தியற்ற பெரும்பான்மை மக்களுக்கு வாங்கும் சக்தியைக் கொடுத்து ஓரளவுக்காவது சமூகத்தின் உயர்வு தாழ்வைப் போக்கினால் மட்டும்தான் குற்றமற்ற சமூகத்தைச் சாதிக்கக் கூடியதாகயிருக்கும்.

ஜோர்ச் புஷ்சும் அவரோடு சேர்ந்த அமெரிக்க மற்றும் சர்வதேச பிற்போக்குச் சகபாடிகளும் இந்த நீதியற்ற, முன்னமே திட்டமிட்டு நடாத்திய தூக்குக் கொலைக்கான பிரதிவிளைவுகளை அனுபவியாமற் தப்பமாட்டார்கள்.
ஒரு ஆக்கிரமிப்பு ஏகாதிபத்தியத்திற்கு,
ஒரு தேசத்தின் இறைமையை அத்துமீறிய கொடுமைக்காரர்களுக்கு,
ஒர் அரசாங்கத்தைச் சட்டவிரோதமாக அகற்றியவர்களுக்கு
சர்வாதிகாரியான சதாம் உசேனின் மீதுகூடத் தூக்குத்தண்டனையை விதிக்கும் உரிமை கிடையாது.
சதாம் உசேனின் தூக்கானது மானிட விழுமியங்களின் எல்லையை மீறிய ஒரு செயலாகும். புஷ்சால் ஏன் -மிலோசோவிச்சைச் செய்ததுபோல- ஹாக்கிலுள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு சதாமைக் கொண்டுவந்து இந்த விசாரணையை நடாத்த முடியவில்லை? ஏனெனில் ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் ஆக்கிரமித்ததற்காக புஷ்சையே முதலில் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர வேண்டியிருந்திருக்கும். சதாம் உசேனுக்குத் தீர்ப்பிடுவதற்கு ஈராக் தொழிலாளர்களைத் தவிர வேறெந்த ஏகாதிபத்திய நெட்டூரர்களுக்கும் உரிமை கிடையாது.

1982ன் பின்பு சதாம் உசேன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் மேற்கு நாடுகளதும் செல்லப் பிள்ளையாகவே விளங்கினார். 1979ல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி ஏற்படுத்தப்பட்ட ஈரானிய அயொத்துல்லா கொமேனி ஆட்சியை ஸ்திரமடையவிடாமற் தடுப்பதற்காக அமெரிக்கா உட்பட்ட பல மேற்கு நாடுகள் கண்டு கேட்டிராத ஒத்தாசைகளை சதாம் உசேனுக்கு வழங்கின. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளே சதாமுக்கு பெருமளவிலான ஆயுதங்களை வழங்கின.

இது 1987-88ல் Halabajaவில் குர்திஸ் மக்களுக்குமேல் மேற்கு நாடுகள் கொடுத்த நச்சுவாயுக் குண்டுகள் பிரயோகிப்பது வரை சென்றது. சதாம் உசேனேக்கு இப்போது வழங்கப்பட்ட அதே மரண தண்டனையை இந்த மேற்குநாட்டு ஆயத வியாபாரிகளுக்கும் அவர்களுக்கு விற்பனை வழிகளை ஏற்படுத்திக்கொடுத்த அன்றைய மேற்குநாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் வழங்கவேண்டுமா இல்லையா?

சதாம் தன்னை இஸ்லாமிய சோஸலிசவாதி என்று சொல்லிக்கொண்டு கொம்யூனிஸ்டுகளையும் தொழிற்சங்கவாதிகளையும் கொன்ற; உலக ஏகாதிபத்தியங்களின் செல்லப் பிள்ளையாகும். ஆதலாலேயே அமெரிக்க ஏகாதிபத்தியம் சதாம் உசேனைச் சர்வதேச நீதி மன்றத்தில் விசாரியாது ஈராக்கிலேயே விசாரித்தது. குவைத் ஆக்கிரமிப்பையடுத்து ஈராக்மீது ஏகாதிபத்தியங்கள் விதித்த பொருளாதாரத் தடையினால் 1.5 மில்லியன் மக்கள் – பெரும்பான்மையும் குழந்தைகள்- பட்டினியாலும் நோயினாலும் மடிந்தார்கள். குவைத் ஆக்கிரமிப்பை அடுத்து சதாம் உசேனை ஆட்சயிலிருந்து இறக்கினால் ஈரானின் இஸ்லாமிய ஆட்சி பலம்பெற்றுவிடும் என்று கூறியே சதாம் அன்று ஆட்சியிலிருந்து வீழ்த்தப்படாது விட்டுவைக்கப்பட்டார்.

சதாம் உசேன் 16 யூலை 1979ல் ஆட்சிக்கு வந்தார். அவர் ஓரு பின் தங்கிய நாட்டில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஏற்பட்ட முட்டிமோதல்களின் விளைவாகவே ஆட்சிக்கு வந்தார். அவர் ஈராக்கின் எண்ணைக் கிணறுகளில் கட்டுக்கடங்காத வேலை நிறுத்தங்கள் தொடர்ந்து ஏற்பட்டபோது தொழிலாளர்களுக்கு எதிராகவே ஆட்சிக்குக் கொணரப்பட்டார். இருந்தபோதும் அவர் எண்ணைக் கொம்பனிகளை அரசஉடமையாக்கி அதனால் வந்த சமூகச் செல்வத்தால் இலவச வைத்திய வசதி, இலவசக் கல்வி, சமூக சேவைகள்,மற்றும் மேற்கட்டுமானங்களை ஏற்படுத்தினார். வெளிநாடுகளில் படிக்கவிரும்பும் தகுதிவாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அரசின் புலமைப் பரிசில்களைக் கொடுத்தார். அவர் இஸ்லாமிய அடிப்படைவாத நடைமுறைகளை ஈராக்கிலிருந்து அகற்றினார். அவர் ஈராக்கை மதசார்பற்ற மதச் சமத்துவ நாடாகப் பிரகடனப் படுத்தினார். இலங்கையின் அரசமதமாகப் பவுத்தம் இருப்பதோடு ஒப்பிடுமிடத்து இது மேலானதாகும். உண்மையில் ஈரான் – ஈராக் யுத்தத்திற்கு முன்பு ஈராக் ஒரு நவீன நாட்டுக்குரிய அநேக பண்புகளைக் கொண்டிருந்தது. சதாம் அன்றைய சோஸலிச முகாம் நாடுகளோடு பாரிய வர்த்தக ஒப்பங்தங்களைச் செய்திருந்தார். முழு மத்தியகிழக்கு நாடுகளிலும் ஆகக்கூடிய வாழ்க்கைதரம் ஈராக்கிலேயே இருந்தது.

இந்த நீதிவிசாரணையானது நூரென்பெர்க் வழக்கு விசாரணைபோல் நடவாமல் நாசி -ஸ்டாலினிச விசாரணை முறையில் கைப்பொம்மை நீதிபதிகளின் முன் ஏற்கனவே தீர்மானித்த மரணதண்டனை வழங்கப்பட்டது. நூரென்பேர்க் நாசிகளுக்கெதிரான விசாரணையின்போது ஜேர்மனிய நீதிபதிகள் இல்லையென்றும், அன்றைய விசாரணை நிறுவனம் ஜேர்மானிய மக்களால் ஆன நிறுவனமில்லையென்றும் இன்று சதாம் உசேனை விசாரித்த நீதிமன்றம் நூற்றுக்கு நூறுவீதம் ஈராக் மக்களால் ஆனதென்றும் பிற்போக்கு ஊடகங்கள் கூறுகின்றன. எல்லாப் பிற்போக்கு ஊடகங்களும் சதாம் சர்வாதிகாரி, கொலைகாரன், மனித உரிமைகளை மீறியவர் என்றே எழுதித் தமது பிற்போக்குத் தனத்தின் ஏகவினத்தன்மையைப் பிரகடனப்படுத்தியுள்ளன. ஈராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு சொல்லப்பட்ட பேழிவு ஆயுதங்கள் வைத்திருப்பது அல் -கையிதாவுடன் தொடர்பு, செப்டம்பர் 11 உலகவர்த்தகக் கட்டிட அழிப்பில் தொடர்பு போன்ற பொய்க் குற்றச்சாட்டுகளை நாம் ஒருதடவை நினைவு கூரவேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மண்கொள்ளையைத் தடுக்கும் எவருக்கும் எதிர்காலத்தில் இதுதான் நடக்கும் என்று எச்சரிப்பதற்காகவே அந்தத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கில் ஏற்றப்படும் காட்சி படமாக்கப்பட்டு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. சதாமைக் கொன்றதின் மூலம் ஈராக்கில் டிசம்பரில் கொல்லப்பட்ட 100க்கும் அதிகமான அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தினரைக் குறித்தும் ஆக்கிரமிப்புத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை ஈராக்கில் கொல்லப்பட்ட 3000க்கும் அதிகமான அமெரிக்க இராணுவத்தினரைக் குறித்தும் அமெரிக்க மக்களைச் சற்று ஆற்றுப்படுத்தும் ஆயுதமாகவும் சதாமின் கொலை பயன்படுத்தப்படும்.

அமெரிக்காவின் சீனாவுக்கான கடன்கொடுப்பனவு 200 பில்லியன் டொலர்களாகும். சீனாவிடம் உள்ள டொலர் இருப்பு 1000 பில்லியின் டொலர்களாகும். வரலாற்றில் முதன்முதலாக இம்முறைதான் உலக வர்த்தகமானது 70 சதவீதம் யூரோவால் செய்யப்பட்டுள்ளது. இப்படி அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக ஆளுமையை இழக்கும் மரணவலியில் வெந்திருக்கையில் சதாம் உசேனைக் கொல்வதன் மூலம் அற்ப திருப்தியைப் பெற்றுள்ளது. எப்படி மக்களைச் சுரண்டி ஒடுக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன், திப்பு சுல்தான் போன்றவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடியதால் சுதந்திர வீரர்கள் ஆனார்களோ அதுபோலவே சதாம் உசேனும் அமெரிக்க – பிரித்தானிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடியதால் சுதந்திரவீரனாகக் கூடும்.

23 thoughts on “சதாம் உசேன்

  1. தர்மத்தின் வாழ்வு தன்னைச் சூது கெளவும் எனினும் தர்மமே மறுபடியும் வெல்லும்! சதாமுக்கு என் அஞ்சலிகள்!

  2. இது நிச்சயமாக ஒரு அரசாங்கத்தின் கொலை தான்.

    //ஒரு மனிதனைத் தூக்கிலிட்டுத் துடித்துத் துடித்துச் சாகும் காட்சியை படம் எடுத்து ரசிக்கும் மனெளணர்வு கொண்டவர்கள் உலகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.//
    சரி! ஆனா இப்படி படம் பிடிப்பதும், உட்கார்ந்து பார்ப்பதும் (பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள்) வழக்கமாக எல்லா மரண தண்டனையின் பொழுதும் பார்ப்பது தான் (அமெரிக்காவில்). அதே போல், பொது இடத்தில் கல்லால் அடித்து துடிதுடிக்க வைத்து கொல்வதும், அரபு தேசங்களில் நடப்பது தான். நீங்க சொல்வது சதாமுக்காக ஸ்பெஷலாக ஏற்பாடு செய்தார்கள் என்று சொல்வது போல இருக்கு.

    //அதையடுத்து அவரை ஒரு கும்பல் அடித்து கொன்றது.//
    ம்ம்…இப்போ தான் சொன்னேன். இவர்களும் அதே சகாப்தத்தில் தான் வாழ்கிறார்கள்.

    //உண்மையில் சுன்னி – சியா முஸ்லீங்களிடையே மேலும் பிரிவினையை ஏற்படுத்துவதற்காகப் பிரித்தானிய அமெரிக்க உளவு நிறுவனங்களின் சதிகளின் தொடர்ச்சியே இந்தக் குண்டு வெடிப்புகளாகும்.//
    அட்லீஸ்ட், இதையாவது இசுலாமியர்கள் புரிந்துக் கொண்டு ஷியா-சன்னி சண்டை வராமல் பார்த்துக் கொள்ளெவேண்டும். இப்பொழுது அவர்களுக்குத் தேவை அவர்களுக்குள் ஒற்றுமை. இல்லாமல் போனால், அது அமெரிக்காவிற்கே சாதகமான முடியும். மேலும் ஈராக்கில் டேரா போட அருமையான வாய்ப்பாக அமையும். (ஆனா, பூனைக்கு மணி கட்டுவது யாரு?)

    //இந்திய இடதுசாரிக் கட்சிகள் எல்லாமே வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளன.//
    அவங்கள போய் ஏன் மதிக்கரீங்க?

    //அப்படி நிறுத்தினால் சதாம் உசேனைவிட புஷ்சுக்குப் பலமடங்குகள் தண்டனை கிடைக்கும்.//
    இங்க தான் தப்பு பன்னுரீங்க. புஷ் என்ன தான் தவறான முடிவு எடுத்தாலும் அது அமெரிக்கா எடுத்த முடிவு. அதனால் பிற்காலத்தில் அமெரிக்காவை மட்டுமே குறை கூற முடியும். ஆனால், இதைப் போன்றதொரு அபத்தமான முடிவை சதாம் எடுத்திருந்தால், அது ஈராக் எடுத்த முடிவாக அல்லாமல், சதாம் என்னும் சர்வாதிகாரி எடுத்த முடிவாகத்தான் இருக்கும். அதனால், சதாமுக்கு தண்டனை கொடுக்க்கப்படுவதை ஆதரிக்க கொஞ்சம் பேராவது இருப்பார்கள். இது ஜனநாயகத்தின் வரமா? சாபமா??

  3. அ.மார்க்ஸ்

    தலித்தியம், பெரியார், பவுத்தம், மார்க்சியம், மனித உரிமைகள், கட்டுடைத்தல், பின்நவீனம் எனப் பல களங்களில் செயலாற்றி வருபவர் பேராசிரியர். அ.மார்க்ஸ். 90களில் புதிதாய் எழுத வந்த இளைஞர்களின் ஆதர்சமாய் விளங்கியவர். அ.மார்க்ஸை சதாம் தூக்கிலிடப்பட்டதையொட்டி பூங்காவிற்காக சந்தித்து உரையாடினோம்.

    சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    உலகமயமாக்கல் காலத்தில் அறங்களின் காலம் முடிந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
    ஈராக் மீது போர் தொடுப்பதற்கு அமெரிக்கா மூன்றுகாரணங்களைச் சொன்னது.
    1. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன.
    2. செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் ஈராக்கிற்கும் தொடர்பு இருக்கிறது.
    3. அல்கொய்தா அமைப்பிற்கும் சதாமுக்கும் தொடர்பு இருக்கிறது.
    ஆனால் மேற்சொன மூன்று குற்றச்சாட்டுகளையும் அமெரிக்காவால் நிரூபிக்க முடியவில்லை.மேலும்
    சதாம் தூக்கிலிடப்படுவதற்கு பல உலக நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியது. அய்.நாவும் ஒப்புதல் வழங்கவில்லை. நியாயமாகப் பார்த்தால் சதாம் பன்னாட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    சதாமிற்காக வாதாடிய இரண்டு வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டு நீதிபதிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். நியாயமற்று நடந்த விசாரணையின் முடிவில் அநீதியான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
    148 பேரைக் கொன்றதற்காக சதாமுக்குத் தூக்கு என்றால் 60000 சிவிலியன்களை, ராணுவ வீரர்களை அல்ல, சிவிலியன்களைக் கொன்ற புஷ்ஷிற்கு என்னதண்டனை?

    இப்போது நாம் சதாமுக்குத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது கூட நம் குற்ற உணர்வைத் தணித்துக்கொள்ளும் வழியோ என்று தோன்றுகிறது. நாம் கையாலாகாதவர்களாய் நின்று கொண்டிருக்கிறோம்.

    சதாமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதை ஷியா முஸ்லீம்கள் வரவேற்றுள்ளனரே, எனவே இதை ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களுக்கு எதிரான போக்கு என்று கூறமுடியுமா?

    முஸ்லீம்களுக்குள் சன்னி, ஷியா பிரிவுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் இதை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
    இபோது உலக முஸ்லீம் தலைவர்கள் முஸ்லீம்கள் சன்னி, ஷியா பிரிவை மறந்து ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பும் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பும் தியாகத் திருநாளில் சதாம் கொல்லப்பட்டிருபதைக் கண்டிக்கின்றன. இப்போது ‘அரசியல் இஸ்லாம்’ என்கிற கருத்தாக்கம் உருவாகியுள்ளது.
    1992க்கு முன்பு இந்திய முஸ்லீம்கள் பெரிதும் மார்க்க விஷயங்களையே விவாதித்தனர். ஆனால் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்பு முஸ்லீம்கள் அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்து அரசியல் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கினர். அப்படிப்பட்ட சூழல் இப்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

    இந்தப் பிரசினையில் இந்தியாவின் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    இந்தியா சதாம் தூக்கிலிடப்பட்டது ‘துரதிர்ஷ்டவசமானது’ என்று கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் இது போதாது. இந்தியா அமெரிக்காவுடன் செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
    சதாம் தன் ஆட்சியிலிருந்த காலம் முழுவதும் இந்தியாவின் ஆதரவாளராகத்தான் இருந்தார். தான் முஸ்லீமாக இருந்தபோதும் இந்தியா பாகிஸ்தான் போரின்போது இந்தியாவிற்கு ஆதரவாக நின்றவர் சதாம். அத்தகைய மாபெரும் மனிதரின் மரணத்திற்கு வெறுமனே கண்டனங்கள் மட்டுமே போதாது. ஆப்கானை ஆக்கிரமித்த அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவிற்கு இந்தியாவை அடிமை கொள்ள அதிகநேரம் ஆகாது என்பதை இந்தியா உணரவேண்டும்.

    இந்த பிரச்சினையை உலகம் முழுக்க இடதுசாரிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?

    வழக்கம்போல இடதுசாரிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறார்கள். ஆனால் முஸ்லீம்கள் அமெரிக்காவை எதிர்ப்பதற்கும் இடதுசாரிகள் எதிர்ப்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. ஈரானில் ஷா ஆட்சி லிபரலாகத்தான் இருந்தது. ஆனால் மோசமான அமெரிக்க ஆதரவு நிலையை ஷா ஆட்சி கடைப்பிடித்தது. ஆனால் கொமேனியின் ஆட்சிக்காலத்தில் முழுக்க முழுக்க அமெரிக்க எதிர்ப்பு இருந்தது. ஆனால் அது அடிப்படைவாதப் பண்புகளுடனே இயங்கியது. கொமேனியின் ஆட்சிக்காலத்தில்தான் சல்மான் ருஷ்டிக்கு ‘பத்வா’விதிக்கபட்டது உங்களுக்குத் தெரியும்.
    இப்போது சதாமை எடுத்துக்கொண்டாலும் அவர் பல சந்தர்ப்பங்களில் சர்வாதிகாரியாகச் செயல்படார் என்பது உண்மைதான். பாத் கட்சி இடதுசாரி பண்புகளைக் கொண்டிருந்தாலும் சதாம் காலத்தில் அது மாறியது. சதாம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமெரிக்காவின் ஆதரவோடும் பின்னணியோடும்தான் செய்யப்பட்டன. அதேபோலதான் ஒசேமாவும். ஆனல் சதாம் குற்றம் செய்தவர் என்றால் அதைத் தண்டிக்கும் அதிகாரமும் உரிமையும் ஈராக் மக்களுக்கு இருக்கிறதே தவிர அமெரிக்காவிற்கு அல்ல. ஆனால் இப்போது காலம் மாறியிருக்கிறது. இனியும் உலக முஸ்லீம் மக்கள் அமெரிக்காவை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. அவர்கள் ‘ஒன்றுபடட் இஸ்லாம்’ என்னும் கருத்தாக்கத்தோடு அமெரிக்காவிற்கு எதிராக போராடத் தயாராகிவருகிறார்கள்.

    இந்தியாவில் முஸ்லீம் ஆதரவுச் சக்திகள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    சதாம் தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக சென்னையில் அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் போராடியிருகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. த.மு.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் அமைப்பாளர் தோழர்.தொல்.திருமாவளவன் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டார் என்று அந்த அமைப்பினரே தெரிவிப்பது ஆறுதலாக இருக்கிறது. ஆனால் முஸ்லீம் ஆதரவுச் சக்திகள் ஏதோ முஸ்லீம்கள் நடத்தும் கூட்டத்திற்குச் சென்று வாழ்த்துரை வழங்குவது என்றில்லாமல் அவர்களது பிரச்சினைகளைத் தங்கள் பிரச்சினையாக உணர்ந்து அந்தப் பணியைத் தாங்களே மேற்போட்டுக்கொண்டு செயல்பட முன்வரவேண்டும்.

    – சந்திப்பு : சுகுணாதிவாகர்

  4. இதுஅரசாங்கத்தின் கொலைதான் என்று அடித்துச்சொல்லும சீனு அவா;களே!
    ஒரு மணித்தியாலம் அமெரிக்க ஆக்கிரமிப்பப்படைகளின் ஆதரவின்றி ஈராக்கில் உங்கள் அரசாங்கம் ஆட்சிசெய்யமுடியுமா?
    வெறுமனே பொம்மைத்தனமான அரசைநிறுவி தான் நினைத்ததை நடாத்தி அடாவடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் புஸ் அரசாங்கமே கொலைக்கு முழுப்பொறுப்பு.
    சதாம் கொல்லப்பட்ட பின் புஸ்ஸின் வாக்குமூலத்தைப்பாருங்கள்!
    எவ்வளவு விகாரமான கொலைவெறி வாக்குமூலம்.
    கம்யூனிசம் நடைமுறைச்சாத்தியமா இல்லை என்பது ஒருபுறமிருக்க அதைவிளங்கிக்கொள்ளாமலே அரைவேக்காட்டுத்தனமாக எதிர்ப்பவா;கள் பலா;. இவா;களும் தம்மையறியாமலே புஸ்ஸோடு கூட்டுச்சோ;வா;கள். நியாயத்தின் பக்கம்நாட- தேட அ.வா;களால் முடியாது.
    அழகலிங்கம் அவா;களுக்கு நன்றி.

  5. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாமல் சதாம் ஈராக்கிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதன் உள்நோக்கம் தூக்குத் தண்டனைக்குள் தள்ளிவிடுவதற்கு என்றே கொள்ளமுடிகிறது. சதாமின் தூக்குமேடை படம்காட்டலின் மீதான மனித வக்கிரம் சகிப்புக்குரிய ஒன்றல்ல. அதைவிட கொடியது கொலைசெய்வது. மனிதனை மனிதன் கொலைசெய்வது. சதாமும் தூக்குமேடைகளை நிறுவினார். தூக்கினார். விசவாயு உட்பட பல வழிகளிலும் மக்களைக் கொன்றார். அந்தப் படம்காட்டல்களை நாம் பார்க்காமல் விட்டதால் அவை மனிதவக்கிரமாய் இல்லாமல் போய்விடுமா என்ன. அவருக்குரிய மரணதண்டனையும் அதை வழங்கியவர்களும் அந்தக் குழியை வெட்டிவைத்த கொலைச்சட்டமும்தான் பிரச்சினை. சதாமுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு முடிவாக்கப்பட்டபோது அவர் பகிரங்கமாக மைதானமொன்றில் தூக்கிலிடப்படலாம் என்ற செய்திகள் வந்தன. இப்படி பகிரங்கமாக ஒரு குற்றவாளியைத் தூக்கிலிடுவதை அல்லது பகிரங்கமாக எவ்வழியிலேனும் கொல்லப்படுவதை மதத்தின் பெயராலோ அல்லது சட்டத்தின் பெயராலோ நடைமுறைப்படுத்துவதோ அல்லது அனுமதிப்பதோகூட மனித வக்கிரமானதுதான். இந்த வலைக்குள்ளேயே சதாமை சிக்கிவைத்து பழிதீர்க்க அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் வசதியாய்ப் போனது. எனவே சதாமை தூக்கிலிட்டதுக்கு மட்டுமல்லாமல் மரணதண்டனைக்கு எதிராக நிற்கவேண்டியதும் தேவை. ஏகாதிபத்தியங்கள் குறிப்பாக அமெரிக்கா ஈராக்கிய மக்களை இலட்சக் கணக்கில் கொன்று போட்டுக்கொண்டு தனது நாட்டு (ஈராக்) மக்களை கொன்ற குற்றத்திற்காய் சதாமைத் தூக்கிலிடுவதற்கான நீதியை நிலைநாட்டியது கேலிக்குரியது. நீதியை அவமதிப்பது. சொந்த மக்களை மில்லியன் கணக்கில் கொன்று குவித்த இடிஅமீன் சவூதியில் உல்லாசமாய் வாழ்ந்து வருத்தமுற்று செத்துப்போனார். பினோச்சே நாடகம் நடத்தி நீதியை கேலிக்கூத்தாக்கினார். இன்று இலட்சக்கணக்கில் ஈராக்கிய மக்களை கொன்றுகுவிக்கும் புஷ் நீதியின் தூதனாக சரடுவிடுகிறார். 1971 இல் ஒரேநாளில் 10000 இளைஞர்களைக் கொன்ற சிறிமாவோ வருத்தம்வந்து இயற்கை மரணம் எய்தினார். இலங்கையில் 80 களிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கில் மக்களைக் கொலைசெய்து கொண்டிருக்கும -மாறிமாறி வரும்- அரசுத் தலைமைகள்; எதற்குள் அடக்கம்?

    சதாம் மீதான அனுதாபமானது சதாமின் சாதனைகளிலிருந்தோ, மரணதண்டனை பற்றிய மதிப்பீடுகளிலிருந்தோ அல்லது தூக்குத்தண்டனைப் படம்காட்டலிலிருந்தோ வந்தவையல்ல. கேட்பாரற்று உலகப் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா மீதான வெறுப்பு ஒரு கையறுநிலை என்பவற்றிலிருந்து மனசு கட்டமைத்தது. அது புரிந்துகொள்ளப்பட வேண்டியது. செப்11 தாக்குதலும்கூட இந்தவகையிலேயே ஏகாதிபத்திய எதிர்பின் சிலிர்ப்பாக மனதை ஆக்கிரமித்தது. அமெரிகக் இராணுவம் என்றோ ஒருநாள் வெளியேறப்போவது அல்லது வெளியேற்றப்படப் போவதுதான். அதற்கிடையில் முஸ்லிம் மதப் பிரிவுகளை ஆழ அகலமாக்கி தொடர்ந்தும் தமது தலையீட்டுக்கான நலனுக்கான கொந்தளிப்புப் பிரதேசமாக ஆக்கிவிட்டுத்தான் போவார்கள். இதற்கு ஈராக் மக்கள் பலியாகிப்போவது அவலமானதுதான். தமது பொது எதிரியை விட்டுவிட்டு அவன் ஆழப்படுத்திவிடும் முரண்களுக்குள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதிலிருந்து தப்புவது ஒன்றும் இலகுவானதல்ல என்பதற்கு இலங்கைச் சில்லெடுப்பும் ஒரு சாட்சி.

  6. உலகையே உலுக்கும் சதாமின் படுகொலை குறித்து பல்வேறு அரசுத் தலைவர்களும் அமைப்புக்களும் தனிமனிதர்களும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கையில் இப் படுகொலை குறித்து ஒரு விடுதல இயக்கம் என்றளவில் புலிகளின் கருத்து என்ன? மெளனமா? அடப் போங்கடா நீங்களும் உங்கிட அரசியலும்…

  7. ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
    போற்றார்கண் போற்றிச் செயின் (493 )

    வல்லமை இல்லாதவரும் வெல்லும் இடம் தெரிந்து போர்செய்யமுயன்றால் பகைவரை வெல்லுவர்.

  8. சேனன் அசல் கேள்வி. இதுக்கு புலி மட்டுமில்லை எந்த இயக்கம் பதில் சொல்ல வெளிக்கிட்டாலும் அதைவிட பகிடியும் கேலிக்கூத்தும் இருக்கவே இருக்காது. சதாமை நிற்கவைச்சு தூக்கிலிட்டதே அவையளைப் பொறுத்தவரையிலும் மனிதாபிமானமாய்ப் படும். தலைகீழாய் கட்டித்தூக்கி துடிக்கத் துடிக்க ஊஞ்சல்கொலை செய்தவையள் நம்மடை ஆக்கள். ஆடுமாடு கட்டினமாதிரி கழுத்திலை கயிறு கட்டி ஓடஓட அடிச்சுவிரட்டி கயிறை இழுத்து வக்கிரமாடி வரிசையிலை நிக்காட்டி பிறகு தலையிலை கைக்கோடாலியாலை அடிச்சு படுகுழியுக்கை குறைஉயிரோடை தள்ளிவிட்டு மண்மூடின சங்கிலிவதை செய்த இயக்கத்திலை இருக்கிற ஆய்வாளர் ஒருசிலரின்ரை அபிப்பிராயம் ரிபிசி அரசியல்களத்திலை வந்தாலும் வரும். வியாழக்கிழமை அதுதான் இண்டைக்கு சிலவேளை வரும் கேட்டுத் தெளிவடையுங்கோ சேனன்

  9. தோழர் அழகலிங்கம் அவர்களுக்கு நன்றி!
    நானே வேண்டுகோள் விட நினைத்தேன். அதற்குள் சதாம் குறித்த விடயத்தை பதிவாக்கி விட்டீர்கள்!

    கொடுமை!…. கொடுமை!…. கொடுமை!…

    எது?…… விரைவில் எனது கருத்துடன்…

  10. சதாமைத் து}க்கிலிட்டாலும் விடாமல் துரத்தும் அவரது ஆவி

    எஸ். குருமூர்த்தி

    இராக்கையும் அதன் தலைவர் சதாம் {ஹசைனையும் அழித்து ஒழித்துவிட்டது அமெரிக்கா. அதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய்வதற்கு முன்> எவையெல்லாம் அதற்கான காரணமாக இருக்க முடியாது என்பதைப் பார்க்கலாம்.

    முதலாவதாக> சதாமை இஸ்லாமிய அடிப்படைவாதி என்று குற்றம் சாட்டியது. ஆனால்> இன்றைக்கும் உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளுக்கும் தாயாகத் திகழ்வது சவூதி அரேபியாதான். ஆனால்> அதுவோ அமெரிக்காவின் மிக நெருக்கமான கூட்டாளி நாடு. எனவே> இஸ்லாமிய அடிப்படைவாத நாடாக இருந்தாலும் சரி; அது அமெரிக்க நலன்களுக்கு உகந்ததாக இருக்கிறதா> இல்லையா என்பதுவே அமெரிக்காவின் முடிவைத் தீர்மானிக்கும் அளவுகோலாகும். உண்மையில் சதாம்தான் அனைத்து அரபுகளின் மதச்சார்பற்ற ஒரே தலைவர். பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள நாடுகளின் தலைவர்களிலேயே> இஸ்லாமியப் பாரம்பரியக் கொள்கை வழிப்பட்ட ஷரியத் சட்டத்தின்படி ஆட்சி செய்யாமல்> மேற்கத்திய நீதிபரிபாலன முறைப்படி ஆட்சி செய்த ஒரே தலைவர் அவர்தான். தனிநபர்களைத் தாக்கிக் காயப்படுத்தும் குற்றச் செயல்களைத் தண்டிக்க மட்டுமே ஷரியத் நீதிமன்றத்தை அவர் வைத்திருந்தார். இதர அனைத்து ஷரியத் நீதிமன்றங்களையும் ஒழித்துவிட்டிருந்தார். எனவே சாதாரணமாகக் கூறப்படும் பொருளில்> அவர் ஓர் இஸ்லாமியராகக்கூட நடந்துகொள்ளவில்லை.

    இரண்டாவதாக> பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்பதற்காக சதாமை அமெரிக்கா அழித்ததா என்றால்> அதுவும் இல்லை. சொல்லப் போனால்> தான் தாக்கப்படுவதற்கு முன்புவரை> இஸ்லாமியப் பயங்கரவாதத்தைப் பற்றி அமெரிக்கா கவலையே படவில்லை; பாகிஸ்தானைப் போன்ற நாடுகள்> அதற்குக் கூட்டாளி நாடுகளாகத்தான் இருந்தன. இஸ்லாமியப் பயங்கரவாதத்தால் உலகத்துக்கே ஆபத்து என்று கருதி> அதை அமெரிக்கா குறிவைத்திருக்குமேயானால்> பாகிஸ்தானைத்தான் அது முதலில் அழித்திருக்க வேண்டும். ஏனென்றால் பயங்கரவாதத் தத்துவத்தை உருவாக்கி> பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் அமைப்புகளையும் உருவாக்கியதே பாகிஸ்தான்தான்; இராக் அல்ல. எனவே> முஷாரபைத்தான் பதவியிலிருந்து அகற்றியிருக்க வேண்டுமே தவிர> சதாமை அல்ல. சதாம் பயங்கரவாதி அல்ல் பயங்கரவாதத்துக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது; சதாம் ஒரு பயங்கரவாதி என்பதற்கான எள்முனை அளவு ஆதாரத்தைக்கூட அத்தனை பலம் வாய்ந்த அமெரிக்காவால் காட்ட முடியவில்லை. உண்மையில்> இஸ்லாமியர்களேகூட> சதாமை உண்மையான இஸ்லாமியர் என்று ஏற்றுக்கொண்டதில்லை.

    மூன்றாவதாக> இராக்கில் தனது எதிரிகளை தீர்த்துக்கட்டிவந்த சர்வாதிகாரி சதாமைப் பதவியில் இருந்து து}க்கி எறிந்துவிட்டு> அங்கு ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்ற பேரார்வம்தான் அமெரிக்காவின் செயலுக்குக் காரணமா என்றால்> அதுவும் இல்லை. ஏனென்றால்> உலகின் சர்வாதிகார அரசுகளில் பெரும்பாலானவை அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளாவே இருந்துவந்துள்ளன.

    நாலாவதாக> பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து வைத்திருந்ததால்தான் இராக்கையும் சதாமையும் அமெரிக்கா தண்டித்ததா என்றால்> அதுவும் இல்லை. ஏனென்றால்> இராக்கை ஆக்கிரமிப்பதற்கான ஒரு சாக்காகத்தான் அக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து வைத்திருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து 12>000 பக்கங்கள் கொண்ட மறுப்பு அறிக்கையை 2002-ல் அளித்தார் சதாம். இன்று வரையில் அதை அமெரிக்காவால் மறுக்க முடியவில்லை. இருந்தபோதிலும்> இராக்கையும் சதாமையும் அழித்துவிட்டது அமெரிக்கா.

    அப்படியானால்> இராக்கையும் சதாமையும் அமெரிக்கா அழித்தொழிக்கக் காரணம்தான் என்ன? அதைக் கூற ஞானியார் யாரும் தேவையில்லை. எண்ணெய் வளம் மிக்க இராக்கும் அதன் தோழமை நாடுகளும் சேர்ந்துகொண்டு> மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு தனிப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துவிட்டன என்பதுதான் இராக் மீதும் சதாம் மீதும் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கக் காரணமாகும்.

    குவைத் தனக்குக் கொடுத்திருந்த 3000 கோடி டாலர்கள் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று இராக் கோரியது. அதை 1989-ல் குவைத் ஏற்காததால்தான் அதன் மீது சதாம் படையெடுத்தார். குவைத்துக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஆனால் வளைகுடாப் போர் முடிவடைந்தவுடன்> சதாமிடமிருந்து குவைத்தைக் காப்பாற்றியதற்கான கட்டணமாக ஏறக்குறைய அதே அளவு தொகைக்கான “பில்’லை குவைத்துக்கு அனுப்பியது அமெரிக்கா.

    சதாமும் குவைத்தும் பேச்சுவார்த்தை நடத்தி> சமரசமாகப் போயிருந்தால்> உலக எண்ணெய் வளத்தில் கால் பங்கைக் கொண்டிருக்கும் நாடுகளாக அவை இருந்திருக்கும். ஏனென்றால்> உலகின் மிகப் பெரிய எண்ணெய் வள நாடான சவூதி அரேபியாவின் பங்கு உலக எண்ணெய் வளத்தில் 23 சதவீதமே ஆகும். குவைத்துடன் சேர்ந்து சதாமும் உலக எண்ணெய் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக உருவெடுத்திருப்பார். குவைத்தின் மீது படையெடுக்கும் வரையிலும் சதாம்கூட அமெரிக்காவுக்கு உதவிகரமானவராகவே கருதப்பட்டுவந்தார். ஏனென்றால்> அமெரிக்காவின் விரோதியாக மாறிவிட்ட கொமேனியின் ஈரானுக்கு எதிராக கொடூரமான போரை பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்திவந்தவர் சதாம் {ஹசைன். அதனால்> அமெரிக்காவின் அறிவிக்கப்படாத சகாவாகவே சதாம் கருதப்பட்டார்.

    அமெரிக்காவுக்கு அவரால் பயனில்லை என்ற நிலைமை வந்த பொழுதுதான்> சதாம் நல்லவரா> கெட்டவரா என்று ஆராய்ச்சி செய்யப்பட்டது. இப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷின் தந்தையான ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் அதிபராக இருந்த 1990-ல்தான் சதாமையும் இராக்கையும் அழிப்பதற்கான பூர்வாங்கத் திட்டம் முதலாவதாகத் தீட்டப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பின்> 2003-ல்> எச்.டபிள்யூ. புஷ்ஷின் மகனும் அமெரிக்காவின் இப்போதைய அதிபருமான ஜார்ஜ் புஷ் (ஜூனியர்) ஆட்சிக் காலத்தில் அத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதிபர் புஷ்> இராக்கின் மீது படையெடுத்து அதைத் தோற்கடித்தார்; சதாமைக் கைது செய்தார்; அவருக்கு விரோதமான ஓர் அரசை அங்கு ஏற்படுத்தினார்; அவரைத் தீர்த்துக்கட்டத் துடித்துக்கொண்டிருந்த அந்த அரசு அவருக்கு மரண தண்டனை விதித்தது; இறுதியாக> அவர் கடந்த வாரம் து}க்கிலிடப்பட்டார். துஜைல் நகரில் 1982-ல் 160 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு சதாம்தான் காரணம் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அப் படுகொலை நடந்தபோது> சதாமின் ரகசியக் கூட்டாளியாக இருந்தது அமெரிக்கா.

    நவீன இராக்கைப் படைப்பதற்கான ஆதர்சமாக பழமையான மெசபடோமிய பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர் சதாம் {ஹசைன். இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மெசபடோமிய வீரபுருஷனான ஹமுராபி போன்றோரை இராக்கின் பாரம்பரியச் சின்னங்களாக வரித்துக்கொண்டவர் சதாம்.

    சதாம் {ஹசைனை அழித்ததன் மூலம்> கலாசார உணர்வும் பெருமிதமும் கொண்ட ஓர் ஆட்சியாளர் அழிக்கப்பட்டதோடல்லாமல்> ஒரு பண்பாட்டுப் புத்துயிர்ப்பு முயற்சியும் அழிக்கப்பட்டுவிட்டது. தீவிரமான கலாசாரத் தேசியவாதியாகத் திகழ்ந்தவர் சதாம் {ஹசைன். இறையியல் கொள்கைப்படி இஸ்லாத்துக்கு விரோதமானதாகும் அது. பெரும்பான்மை ஷியா முஸ்லிம்களையும்> சிறுபான்மை சன்னி பிரிவினரையும் குர்துகளையும் கொண்ட பகுதிகளை இணைத்து பலமிக்க தேசத்தைக் கட்டியமைத்தார் அவர்.

    சன்னி முஸ்லிம்களும் ஷியா முஸ்லிம்களும் தத்தமது தனிப் படைகளுடன் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை உருவாகி> இப்போது இராக் முற்றாக அழிந்துகொண்டிருக்கிறது. சன்னி பிரதேசம்> ஷியா பிரதேசம்> குருதுகள் பகுதி என இராக் பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இராக்கின் தலைவிதி இப்படியென்றால்> உலகின் கதி என்ன? “குற்றவாளி’யான சதாம் மறைந்துவிட்டார்; அவரது இடத்திலிருந்து> பாவங்களில் இருந்து புனிதப்படுத்தப்பட்ட> அவரது ஆவி விடாமல் துரத்தத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சிறிது காலத்துக்கு இப் பூவுலகில் அமைதி ஏற்பட்டுவிடாமல் அது பார்த்துக்கொள்ளும்.

  11. // இப் படுகொலை குறித்து ஒரு விடுதல இயக்கம் என்றளவில் புலிகளின் கருத்து என்ன? மெளனமா? அடப் போங்கடா நீங்களும் உங்கிட அரசியலும்… /
    //
    அமெரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் புலிகள் இலங்கை ராணுவம் மீது தாக்குதல் நடத்தினால் மிகவும் வேதனையான பவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றபோது ” கழுகுகள் புலிகளுக்கு எச்சரிக்கை” என்று செய்தி போட்டு குதூகலித்தவர்கள் இன்று புலிகளை “வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி” ரீதியில் நீதி கேட்பது வேடிக்கையிலும் வேடிக்கை!!!!

  12. யாருக்கு யார் தண்டனை விதிப்பது என்று தெரியாமல் உலகம் ஓடிக்கொண்டிருக்கின்றது. சதாம் நல்லவரா?… வல்லவரா?… இந்த கேள்விக்கு சதாமை உட்படுத்திப்பார்ப்பதும் தேவையான ஒன்று. வல்லவர் என்பது உண்மை ஆயினும் நல்லவரா என்பது இல்லை என்ற பதிலுக்குத்தான் வழி விட்டிருக்கின்றது. அனாலும் சதாம் மீதான படுகொலைக்கான பழி என்பதை அமெரிக்கா குற்றம் கூறவோ அதற்கு தண்டனை வழங்கவோ முடியாது என்பதுதான் உண்மை நிலை. ஆக்கிரமித்து நின்ற நாடுகளில் அமெரிக்கா பூப்பறித்தக்கொண்டிருந்தது…… புல்லுப்பிடுங்கி சிரமதானம் செய்து கொண்டிருந்தது…. மரம் நட்டு பசுமை வளர்த்தக்கொண்டிருந்தது…. அந்தந்த நாட்டு மக்களை துயில் கொள்ள வைத்து தலைமாட்டில் கரிசனையோடு காவலுக்கு நின்றது… இவ்வாறு தொடரும் மனிதநேயப்பண்பு கொண்ட அமெரிக்காவின் மனித உயிர்கள் மீதான அக்கறைதான் சதாமுக்கு தண்டனை வழங்க நிர்ப்பந்தித்திருக்கிறது! கழுகுக்கும் கரிசனைக்கும் என்ன சம்பந்தமோ தெரியாது. நடக்கட்டும்…. நடக்கட்டும்…. கழுகு முகத்தில் சூடு வாங்கி கருகி ஒழிந்து தோல்வியோடு திரும்பி வர இன்னும் ஒரு வியட்னாம் அல்லது எல்சல்வடோர் உருவாகாது என்ற நமடபிக்கையோ தெரியாது. ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளர்ச்சிகள் நடத்த நம்பிக்கையான தலமைகளும் அதை நம்பிய மக்களும் உலகில் இனி இருக்காது என்ற நம்பிக்கையோ தெரியாது!.. நடக்கட்டும்… நடக்கட்டும்…ஒரு ஈராக் நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு காவு கொடுத்ததுதான் சதாம் செய்த மாபெரும் துரோகம். அதற்காக சதாம் வகுத்த வழிதான் என்ன?… உட்பகை… அயலவன் பகை… நண்பன் பகை… சுற்றிவர எல்லாம் பகை… இந்த பகைகளே சதாமுக்கு ஏற்கனவே தூக்கு மேடையை தயார் செய்து விட்டன. இப்போது தூக்கு கயிற்றில் தொங்கவிட்டது மட்டும்தான்… இது குழப்பம் நிறைந்த கருத்து என்று யாரும் நினைக்கலாம்… ஆனால் இதுதான் தெளிவான கருத்து… தெளிவற்ற அரசியல் அதிகாரங்கள் குறித்து விமர்சனம் எழுப்பும் போது இவ்வாறுதான் கருத்து கூற முடியும். உட்பகை கொண்டவர்கள் உலகில் யாவாவது இருப்பின் உங்களுக்கும் இததான் கதி!…. உட்பகை ஆக்கிரமிப்பை ஊக்கவிக்கும்… எதிரியை பலப்படுத்தும்…. உலகம் பாரத்திருக்க நீங்கள் செய்து முடித்த காட்டு மிராண்டித்தனத்தையும் விட கேவலமாக உங்களை தூக்கில் தொங்கவிடும். ஐ. நா சொன்னாலும் உங்கள் உட்பகையின் வலிமையான விளைவு உங்களை மன்னிக்காது… எது எப்படி இருந்தாலும் ஒரு மனித நேய அடிப்படையில் உங்களை ஆயுட்கைதியாக வைத்திருக்கவும் அனுமதிக்காது… நீங்கள் கேட்டதற்கிணங்க துப்பாக்கியால் சுட்டுக்கொல் என்ற உங்கள் நியாயமான கோரிக்கைக்கும் மரியாதை கொடுக்காது. எவ்வாறெனினும் சதாம் தூக்கிலிடப்பட்ட இந்த கொடிய காட்சி சதாம் மீதான அனுதாபத்தையும் அமரிக்கா மீதான வெறுப்பையும்தான் கொடுத்திருக்கின்றது.

  13. பரன்! மிகச் சரியான உங்கள் கருத்தில் ஒரு லொஜிக் பிழையுண்டு..
    // உங்களுக்கும் இதுதான் கதி!…. உட்பகை ஆக்கிரமிப்பை ஊக்கவிக்கும்… எதிரியை பலப்படுத்தும்…. உலகம் பாரத்திருக்க நீங்கள் செய்து முடித்த காட்டு மிராண்டித்தனத்தையும் விட கேவலமாக உங்களை தூக்கில் தொங்கவிடும்//

    நாமதான் குப்பி கடிச்சிருவம்ல!

  14. /பரன்! மிகச் சரியான உங்கள் கருத்தில் ஒரு லொஜிக் பிழையுண்டு..
    // உங்களுக்கும் இதுதான் கதி!…. உட்பகை ஆக்கிரமிப்பை ஊக்கவிக்கும்… எதிரியை பலப்படுத்தும்…. உலகம் பாரத்திருக்க நீங்கள் செய்து முடித்த காட்டு மிராண்டித்தனத்தையும் விட கேவலமாக உங்களை தூக்கில் தொங்கவிடும்//

    நாமதான் குப்பி கடிச்சிருவம்ல!
    ///

    சீனன்,
    பரனின் கருத்தில் லொஜிக் உதைக்கவில்லை, அவர் புளொட் (PளோT)பற்றிக் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். சந்ததியார், இறைகுமாரன், உமைகுமாரன், சிவனேஸ்வரன் சகோதரர்கள் என்ற நீண்ட பட்டியலையும் கருத்திலெடுத்தால் பரனின் லொஜிக் விளங்கும்!!!!

  15. “……..இவை வெறுமனவே தீர்ப்பு பற்றிய விசனங்கள் மட்டும்தான். தீர்ப்பு நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பாக இன்னும் பல கேள்விகளை எழுப்பலாம், எம்மால் முடிந்ததெல்லாம் அவ்வளவும்தானென கையாலாகாத்தனத்தை நொந்தபடி. மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களில் மதவாதத்திலிருந்து விடுபட்ட தேசியவாதத்துடன், தாம் கொண்ட கொள்கை நெறியினின்றும் இறுதிவரை விலகாதவர்கள் யசீர் அரபாத், சதாம் ஹ¤சேன், கேணல் கடாபி மூவருமே. இருப்பினும், முன்னவர்களின் மரணத்துடன் (யசீர் அரபாத்தின் இறப்பின் பின்னணியில் சதிமுயற்சியொன்றிருப்பதாக ஊகங்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தகுந்தது) கேணல் கடாபி நெகிழத் தொடங்கியுள்ளார்.

    இவையனைத்தும் ஒருபுறமிருக்க, கொழும்புத் தெருக்களில் சில நாட்களாக ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும், கண்டனப் பேரணிகளும், சுவர்களை நிறைக்கும் போஸ்டர்களும்.. உத்தியோகபூர்வமாக அரசாங்கம் கண்டனமெதுவும் தெரிவிக்காத போதும் (இவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையென யாரும் வருந்தவும் போவதில்லைதானெனினும்..) அரசியல் தலைவர்கள் பலர் சதாமின் கொலையைக் கண்டித்திருந்தனர். உண்மைதான், சதாம் இலகுவில் விலைபோகாத, தேசியத்திற்காக எதையும் செய்யத்துணிகின்ற, ஈராக்கின் நலனையே ஒரே இலக்காகக்கொண்ட தேசியத்தலைவர். குர்திஷ் இனப்படுகொலைகளை மேற்கொண்டமைகூட ஈராக்கைக் காப்பாற்ற தனக்கு வேறு தெரிவுகளில்லாமற் போனமையினாலேதானென ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கூறவும் செய்தார். தூரத்திலிருந்த ஒரு தேசியவாதியை எம் தலைவர்களால் புரிந்துகொள்ள முடியும்.., அவரது இழப்புக் குறித்து வருந்தவும் தெரியும்.., அதற்குக் காரணமானவர்களை வசைபாடவும் தெரியும்.. ஆனால், பக்கத்திலேயே இருப்பவர்கள் குறித்து எதுவித சலனமுமில்லை. ஏனெனில், அவர்கள் பயங்கரவாதிகள்!

    வேடிக்கைதான். தினம் தினம் வடகிழக்கில் யுத்தத்தினாலும், பட்டினியினாலும் இறந்து கொண்டிருக்கும் உயிர்கள் குறித்து கண்டனம் தெரிவிக்க யாருமில்லை. இலுப்பைக் கடவையில் இறந்துபோன குழந்தைகள் பற்றிய கரிசனை எவருக்குமில்லை. ஆனால், சதாமின் கொலை மகா அநியாயம். இலுப்பைக் கடவையில் தாம் இலக்குவைத்துத் தாக்கியது விடுதலைப் புலிகளின் நிலைகளை மட்டுமேயென இராணுவப் பேச்சாளர் செய்திவெளியிட்டுள்ளார். தமது தளங்களுக்கு அருகே மக்களையும் அவர்கள் குடியமர்த்தி வைத்திருக்கிறார்களெனவே இழப்புக்கள் தவிர்க்க முடியாதனவாம். தாக்கப்பட்ட மக்களின் குடிசைகளுக்கருகே விடுதலைப் புலிகளின் தளமெதுவுமில்லையென யாழ்.ஆயர் கூறியிருந்தும், அதற்கான பதில் தென்னிலங்கையிடமில்லை. சிலவேளைகளில், மேலேயிருந்து பார்க்கும்போது குடிசைகள் ‘காம்ப்’ கள் போலத் தோற்றமளித்தனவென இராணுவப்
    பேச்சாளர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை………….”

    http://rekupthi.blogspot.com/2007/01/land-like-no-other.html

  16. விமர்சனம் என்று வரும்போது யாரையும் தவிர்க்க முடியாது! யாரையும் நினைத்து நான் இதை பதிவாக்கவும் இல்லை! யார் சார்பிலும் நின்று நான் யாரையும் விமர்சிக்கவும் இல்லை!

  17. //விமர்சனம் என்று வரும்போது யாரையும் …..//
    பரன்,
    உங்கள் கருத்து பொதுவாக எல்லோராலும் கூறப்படும் ஒன்றுதான்.
    முக்கியமாக ‘சிக்கலான’ நிலைமைகளிலிருந்து தப்புவதற்கு இப்படியான ‘நடுநிலமை’ எடுப்பார்கள்.
    ஆனால் இப்படியான நிலைப்பாடுகள் எடுத்தால் உலகத்தில் எல்லாமே பிழையானவை ஆகவும் விமர்சனத்துக்குரியன ஆகவுமே இருக்கும். பிரச்சினைகள் ஒருபோதும் தீர்க்கப்படாது. பிடல் காஸ்ரோ, யாசிர் அரபாத், ஸ்ராலின், மார்க்ஸ், புஷ், ஆபிரகாம் லிங்கன், புகழ் பெற்ற கொலைகாரர்கள், வங்கிக் கொள்ளையர்கள், போதை வஸ்து வியாபாரிகள், எழுத்தாளர்கள், கொடை வள்ளல்கள் மற்றும் ஏனையோரும் உள்ள இந்த பட்டியல் முடிவற்று நீழும்…

  18. பரதேசி அண்ணா!
    அமெரிக்கா, மற்றையநாடுகள், மூண்றாமுலகநாடுகள் முரண்பாடுகள், அமெரிக்க வல்லடி வல்லாண்மை வழக்குகளை அணுகுவது வேறுதளத்திலும் விடுதலை இயக்கங்களை அணுகுவது வேறு தளத்திலும் இருக்க முடியும். அவலைநிணைத்து……உலக்கையை …
    ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அணுகுமுறை.
    நீங் கள் முன்னாள் புளொட் போராளியாயின் எனது புரட்சி வணக்கங் கள். பிரபாகரனுடன் மற்றைய இயக்கத்தலைவர்கள் சேர்ந்திருந்து படம் எடுத்தவையல்லோ!. ஐக்கிய முண்ணணி கட்டினவைதானே!. உமாமகேஸ்வரன் சேரயில்லை! இப்ப இருக்கிற எல்லாத் தலைவரும் பிரபாகரனுடன் சேர்ந்தவைதான், ஆனால் புளொட் சேரயில்லை. புளொட்டிலிருந்து தலைவர் யாரும் புலியோடை சேரயில்லை . அப்ப றெலோ எண்ட இயக்கம் புலியையும் புளொட்டையும் சேர்க்கப்போறதாய்ச் சொல்லி தங் கடை இயக்கத்துக்கு ஆள் சேர்த்தவை.ஆனா புளொட் புலியோடை சேரயில்லை. இண்டைவரைக்கும். சுரேஸ் சேர்ந்தார், செல்லம் சேர்ந்தார், பால குமார் சேர்ந்தார், இப்பவரை அந்த ஐக்கியம் முன்னணி இருக்கு. ஆனா சித்தார்த்தன் சேரயில்லை. அண்டைக்கு புளொட்டை அழிக்க புலியோடைநிண்டவை..இண்டைக்கும்நிக்கினம். டக்க்ளஸ் கூட அண்டைக்கு புலியோடைநிண்டவர். புளொட்டிலிருந்து பிரின்ச டொமினிக் கேசவன் தனது புத்தகம் விக்க புலியோடைநிண்டவர். காந்தன் இப்பவும்நிக்கிறார். கவுரிகாந்தன் போனவர்.தீப்பொரி தமிழீழம் பேப்பர் அடிச்சுநிண்டது. டேவிட் ஐயா போனவர்
    .புளொட்டிலிருந்து பிரின்ச எல்லாரும் ஒவ்வொரு கட்டத்திலும் மறைவாவும் பகிரஙகமாவும் புலியோடைநிண்டிருக்கினம் . எல்லாரும் சேர்ந்து புலியை வளர்த்துவிட்டுட்டு இப்ப ஒதுங் கி விட்டினம். புளொட்டை அழிச்சது சங் கிலிதான். பேபியும் அழிச்சார், அவரும் இப்ப புலியோடைநிக்கிறார். எல்லாரும் புலியோடைநிக்கினம். ஆனா சனம் பயத்திலைநிக்குது. பயத்திலைநிக்கிறது வேறை ., விரும்பிநிக்கிறது வேறை. புலியோடை சேராத புளொட்டுக்கு ஒரு சின்ன கிரெடிட் இருக்கு. அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, வளை குடா அரசியல், தெற்காசிய அரசியல், உலக மயமாக்கம், இவற்றைநாம் தனித்தனியே அணுக வேண்டும்.

  19. தாசன் அண்ணா!
    புலியை இப்பவும் பாதுகாப்பது மற்ற இயக்கக்காறர்தான். ‘————————————————————————-‘  இவர்கள் தாங் கள் இருந்த இயக்கத்தையும் அழிச்சு, இப்ப புலியில் வசதியா இருக்கினம், உண்டியல் செய்யினம், ஆனால் போராட்டம் ,இயக்கம் எண்டுநம்பி புலிகளில் இறந்த கிழக்கு மாகாணப் போராளிகள் பல்லாயிரம். இதனால்தான் யாழ்ப்பாணத்தானை நம்பாமல் கருணா தனி இயக்கம் கண்டவர். இவர்கள் கருணாவைத் துரோகி எண்டு சொல்ல ஏலாது. இவையள் ஏற்கனவே ” துரோகிகள்” .

  20. தாசன் அண்ணா,

    புளொட் பற்றி நீங்கள் சொன்னது உண்மை தான் அண்ணா.
    ஆனால் பாவம் சித்தார்த்தன் அண்ணை, தன்ர தகப்பனைக்கொண்ட டெலோவோட போறதொ இல்லாட்டி அதுக்கு ஓடர் போட்ட இந்தியாவோட போறதோ, மாலைதீவு பிளான் போட்ட கூட்டத்துக்கு காவடி எடுக்கிறதோ, மட்டக்களப்பு சிறையுடைப்பில சுத்துமாத்துப்பட்ட டக்ளஸோட சேர்ரதோ, தோழர் சுந்தரத்தைப் போட்டுத்தள்ளிய புலியின்ர வாலைப்பிடிக்கிறதோ, அப்பர் தர்மலிங்கத்தின்ர வாரிசு சங்கரியின்ர தோளில சாயுறதோ, இது எல்லாத்துக்கும் மேலால ஒறத்தநாடு புகழ் கோஷ்டியோட தொடருறதோ இல்லாட்டி “யாழ்ப்பாணத்தானை நம்பாமல் தனி இயக்கம் கண்ட..” கருணாவோட சேருறதோ, அவரின்ர ஒரிஜினல் ஆள் ‘ராஜ்மாமா’ வை போட்டுத்தள்ளின ‘அரச அதிரடிப்படை’ யோட சேருறதோ எண்டு தவிக்கிறார்.

  21. //யாழ்ப்பாணத்தானை நம்பாமல் கருணா தனியியக்கம் கண்டவர்//
    கண்டவர்……கண்டவர்……கருணா மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எண்ட நினைப்பு அவர் புலியிலையிருந்து விலகினாப்பிறகுதான் ஆக்களுக்கு ஞாபகம் வந்தது. யாழ் மேலாதிக்கத்துக்கு சவால் விடுறவரா நிறுத்தியிருக்கினம் அவையள். எல்லா இயக்கங்களிலையும் கிழக்கு மாகாணப் போராளியள் பெருமளவு இல்லாமல் இருந்த 80 களிலை புலியளுக்கை மட்டும் பெருமளவு கொண்டுவரப்பட்ட கைங்கரியத்தை செய்த ஆக்கள்தான் கரிகாலனும் அதையும் விஞ்சின கருணாவும். வெட்டிவா எண்டால் கட்டி வாற விசுவாசியா இருந்ததாலைதான் மாத்தையா உட்பட எவரையும் சகிக்காத தலைமைக்கு வலதுகரமாய் கருணா இரண்டாம் கட்டத் தலைமைக்கு வரமுடிஞ்சுது. அந்தளவுக்கு புலியளுக்கை நிலவுற யாழ்மேலாதிக்கத்தை மிஞ்சினது அவரின்ரை விசுவாசம் அல்லது யாழ்மேலாதிக்க எடுபிடித்தனம். அப்பிடியெண்டால் யாழ்மேலாதிக்கத்தை கட்டிக்காத்தாரா அல்லது முட்டிமோதினாரா கருணா? மற்ற இயக்கங்கள் செய்யாத அளவுக்கு மட்டக்களப்பிலையிருந்து சிறிசுகளை புலியுக்குள்ளை பிடிச்சுக்கொணந்த மேய்ப்பர் கருணா. மற்ற இயக்கங்களை புலியள் சுட்டு அழிக்கயிக்கை பெருமளவு கிழக்குப் போராளியளை புலியள் சுட்டுக்கொல்லயிக்கை கருணா புலிக்குள்ளைதான் இருந்தார். (சிலவேளை அவரே பங்குபற்றிக்கூட இருக்கலாம்.). காத்தான்குடி பள்ளிவாசல் கொலை நடந்தபோதும் அவர் புலியுக்குள்ளைதான் இருந்தார். தலைவற்றை ஓடரிலைதான் நடந்தது எண்டு விலகினப்போ ரிபிசிக்கு பேட்டி குடுத்த கருணா அது நடக்கயிக்கை தான் வன்னியிலை நிண்டதா இப்பதான் சொல்லுறார். சரி… வன்னியிலை நிண்டால் வேறை நிலைப்பாடு மட்டக்கப்பிலை நிண்டால் வேறை நிலைப்பாடா என்ன? இதுகளுக்குப் பிறகும் கோட் சூட்டோடை உலகவலம் வந்த புலிக் குறூப்பிலை அவரும் அடக்கம். ஐபிசியிலை ஊன்உருக போராளியளின்ரை அனுபவங்களை கதைகதையாச் சொன்னார் புலிக்கு அனுதாபம் ஆதரவு எல்லாம் ஆறாய் ஓடவிட்டார். அவர் கிழக்கு மாகாணம் எண்டதாலை (அவர் புலியளுக்கை இருக்கயிக்கை) புலியள் செய்த அநியாயத்துக்கு பதில்சொல்லாமல் போகேலாது. அப்பிடியெண்டு யாராச்சும் சொன்னால் யாழ்மேலாதிக்க எதிர்ப்பை கேடாய்ப் பயன்படுத்திறதாய்த்தான் இருக்கும். இப்ப மட்டக்களப்பிலை பள்ளிக்கூடங்களுக்கை உள்ளிட்டு பிள்ளைபிடி செய்யிறதிலை கருணா முன்னணியிலைதான் நிக்கிறார். இதுக்கு அடக்கிவாசிக்கிற நிலையிலைதான் யாழ்மேலாதிக்க எதிர்ப்பு புலம்பெயர் தேசத்திலை இருக்கு. போதும்…! தமிழ்மக்களை மீட்கிறதெண்டு சொல்லி இயக்கமெல்லாம் வெளிக்கிட்டு உட்கொலை வெளிக்கொலை எண்டு விசர்பிடிச்சு ஆடிச்சினம். பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்ட நிலை. சரி யாழ்மேலாதிக்கம்தான் ஏமாத்தி போராடச்சொன்னது எண்டு அசுயும் பண்ணினாலும் யாழ்ப்பாணத்தானும்தான் பலியாகிப்போனான். கருணாவின்ரை இப்போதய பிள்ளைபிடியை மறைக்கிறவை தங்கடை பிள்ளையளை புலம்பெயர் தேசத்திலை பொத்திவைச்சுக்கொண்டு அல்லது படிப்பிச்சுக்கொண்டு ஏழைஎளியதுகளின்ரை பிள்ளையளை பலிகொடுக்கிறதை பாராமல் இருந்தினம் எண்டொரு கிழக்கின் குரல் எதிர்காலத்திலை ஒலிக்க சாத்தியமில்லை எண்டு நினைச்சால்… பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்டு (பிள்ளையளை இன்னுமொருமுறை காவு குடுத்துக்கொண்டிருக்கிற) ஒரு கிழக்கின் குரல் ஒலிக்கச் சாத்தியமில்லை எண்டு நினைச்சால்… எங்கடை பட்டறிவிலை இடி வந்து விழ…!

  22. // இதனால்தான் யாழ்ப்பாணத்தானை நம்பாமல் கருணா தனி இயக்கம் கண்டவர்…..//

    பரதேசி அண்ணை,

    நீங்கள் சொன்னதோட கருணா ‘அம்மான்’ சுவிஸிலயும் நோர்வேயிலயும் பேசின பேச்சுக்களின்ர ஒலிப்பதிவு எல்லாரிட்டயும் கிடக்கு. போட்டுக்கேட்டால் தலைவர் சொன்னதாலதான் முஸ்லிமை விட்டுவெச்சதெண்டும் யாழ்ப்பாணத்தை பிடிக்கவேண்டாம் பொறுக்கச்சொல்லி தலைவர்தான் ‘கட்டளை’ இட்டதெண்டும் சொல்லுறதைக் கேதத்தான் விளங்குது இவையள் சொல்லுற ‘யாழ்ப்பாணத்தானின் மேலாதிக்கம் ‘ எண்டால் என்ன எண்டு!!!!!

  23. சித்தாத்தன் அவர்கள் புலியோடை சேரவில்லை என்று யார் சொன்னது?… எல்லா இயக்கங்களும்தான் உறவு வைத்தவை! மற்ற இயக்கங்களை புலிகள் சுட்டுக்கொண்டு திரிய புரிந்துணர்விற்கு பின்பு வவுனியாவில்லை புலிப்பொறுப்பாளரும் சித்தா;தனும் ஒரு மேடையில் இருந்து இரகசியம் பேசியது உறவில்லாமலோ?… உண்மையில் மாணிக்கதாசனை சொன்னால் அது ஏற்கலாம். சித்தாத்தன் நழுவல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *