இறுதிக் கடவுள்

கட்டுரைகள்

 

 இறுதிக் கடவுள்.சத்தியக் கடதாசி

சூரிய தேவன் என்றும் நாம் அவரை அழைத்தோம்
இருளின் சக்கரவர்த்தி என்றும் அழைத்தோம்.

பேராபத்தான கடவுளென்றும்
கல்லையும் உயிர்த்துக் கயவரை அழிக்கும்
கானுறை தெய்வமென்றும் அழைத்தோம்.
குடும்பத்திலிருந்து  ஒருவரைக் கேட்டுக் கொண்டிருந்ததால்
பகாசுரன் என்றும் அழைத்தோம்.
பின் நவீனத்துவ, நவீனத்துவ, வரலாற்று
வரலாற்றுக்கு முன்னான, காட்டுமிராண்டி
விலங்குக் காலங்களனைத்தையும் புரட்டி
மாற்றிடும் யுகபுருஷன் என்றும் அழைத்தோம்.
“உன்னைப் புதைத்த புதைகுழியிலும் இடிவிழ”
என்றும் அவரைச் சபித்தோம்.
அவர் அற்புதங்கள் நிகழ்த்துவார் எனக் காத்திருந்தோம்
இறந்தோரை உயிர்ப்பிப்பார் என நம்பினோம்.

புனைவிற்கும் வெளிக்கும் இருப்பிற்கும் தர்க்கத்திற்கும்
அப்பாலிற்கும் அப்பாலிற்கும் அப்பாலிற்கும் அப்பால்
அவர் இருந்தார்.
இன்மையிலும் இருந்தார்
ஒலியலை, மின்னலை ஒற்றைத்துகள் எங்கணும்
தன் நாமத்தை அவர் ஒளிரவிட்டார்.
அனாதைக் குழந்தையைப் போல் அவர் எம்மைத் தொலைத்தார்.
அபத்தக் கவிதையைப் போல் நாம் அவரைத் தொலைத்தோம்.

சுகன்

13.09.2006

4 thoughts on “இறுதிக் கடவுள்

  1. ஆண்டே தில்லையம்பலமென்றொரு தலமொன்றிருக்குதாம்
    அதைச் சேபித்தோருக்கு ஐனன மரண பயமும் தெளியுதாம்

    போய் வருகவென்றொரு உத்தாரம் தாருமே
    ஐயா வேதியரே
    போய் வருகவென்றொரு உத்தாரம் தாருமே

    நாளைப் போகாமல் நான் இருப்பேனோ

    பக்தி முற்றிய பரிதாப நந்தன்களாக அவர்கள் சேபித்துப் பாடிக்கொண்டிருக்கும் வரைக்கும்
    தில்லைவாழ் அந்தணர்கள் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்கள். ஜோதியோடு கலந்து சிவனடி சேரும் பாக்கியம் அன்று நந்தனுக்கு தில்லைத்தீட்சிதர்கள் செய்த சதி.

    சூரியத்தேவனின் பக்தர்களாய் இன்று மாவீர மனிதர்கள் ”விடுதலை வேள்வி” யில் குதிக்கிறார்கள்

    ஆனால் தில்லை வாழ் அந்தணர்கள் யாரோ ?

  2. சுகன் கவிதையைத் தொடர்ந்துவரும் முட்டாள்களின் ஊர்வலம் எனுந்தலைப்பு மிகவும் பொருத்தமாக உள்ளது.

  3. டே சண்டாளா?
    புலிகள் கோவணமுமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
    நீ வேற கனவுகாணுறாய் இனித்தான் சண்டைஎண்டு.
    அவங்கள் பெடியளும் பாவமடா. கொஞ்சம் விடுங்கோடா.
    முழுப்பேரையும் ஒழிக்காம்ல் வெளிநாட்டில் இருக்கிற நீங்கள் ஓய மாட்டியள்.

    பேச்சவாத்தைக்கு நிபந்தனை விதிச்சு எத்தின கூத்துக்காட்டினவை.
    மாவலாற்றையும் பூட்டிக் குதிச்சுப்பாத்தினம். இப்பமுகமாலையும் போகத்தொடகுது. அரசாங்கம் இப்ப அடிச்சு பேச்சுவாத்தை மேசைக்கு கொண்ந்திருக்கு.
    உண்மையை உண்ர் சண்டாளா
    அவங்கள் பெடியளையும் சனங்களையும் வாழவிடு சண்டாளா.

Comments are closed.