வண்ணான் குளத்தைத் துறந்து…
_________________________________________
______________தொலைவில்
________________________________ கவிதைகள்
________________________________வாசுதேவன்
_____வெளியீடு:காலச்சுவடு-நாகர்கோவில்-இந்தியா
சிறிது குற்றவுணர்ச்சியோடு அன்றேல் குற்றவுணர்ச்சி கொள்வதான பாவனையோடும் மாய்மாலத்தோடும் புகலிடத்தின் இலக்கிய வெளியில் அலைந்துழலும் வெள்ளாள வெள்ளைப் பிரதிகளிற்கு நம்மிடையே பஞ்சமில்லை.
‘புகலிடத்தின் புலவர் பெருமக்களிடம் விஞ்சி நிற்பது கவிமனமா? சாதிமனமா?’ என ஓர் வழக்காடு மன்றமோ பட்டிமன்றமோ ஏற்பின் வழக்குரைஞர்களும் நீதிமான்களும் வெள்ளாளர்களாயிருக்குமிடத்து நியாயத் தீர்ப்பிற்குமிடமில்லை.நீங்கள் புலம் பெயர்ந்து வந்து இருபது, முப்பது வருடமானாலென்ன முப்பது, நாற்பது வருடமானாலெனன உங்கள் நினைவடுக்கில் வண்ணான் குளம், பறையனாலங்குளம், கரும்பனை,சீவற்தொழில், கள்ளு, கோயிற்தேர், பள்ளிக்கூடம், கொள்ளிக்குடம், முதலாவது இரண்டாவது மூன்றாவது துளைகள், கொத்துவதற்குக் குடிமகன் இவற்றை அடுக்கி இடுக்கி விரித்து விருத்தி செய்து கவனமாகப் பெயர்த்து வந்து உங்கள் கவிதைப் பக்கத்தில் விரவிட வேண்டும். மண்மணமும் ‘CHANEL 5’ சென்ற் மணமும் உங்கள் கவிதைக்கு வந்து விடும். ஒரு புலம்பெயர்ந்தோர் கவிதையைப் படைத்திடலாம்.
‘மன்னவனும் நீயோ! வளநாடும் உன்னதோ?’
‘பேயரசுசெய்தாற் பிணந்தின்னுஞ் சாத்திரங்கள்’
போன்ற கவி அறச்சீற்றமெல்லாம் கவனமாகத் தவிர்க்கப்பட்டுத் தொற்று நீக்கப்பட்டு இனியவை இருபது கவிதைகளைத் தொகுத்தீர்களெனில் இரத்தமும் சதையும் சொட்டச் சொட்ட அச்சு அசலான புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இதோ சுடச் சுடத் தயார்.
போர் என்றால் என்ன? சமாதானம் என்றால் என்ன? இலக்கியம் என்றால் என்ன? – கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார் மன்னிக்க, டால்ஸ்டாயும் மன்னிக்க!– ‘போர் இலக்கியம்’ என்றால் என்ன? புலம் பெயர்வு என்றால் என்ன? புகலிடம் என்றால் என்ன? இப்படியான என்ன என்ன என்னவைகள் எதுவும் குறித்து நீங்கள் கேள்வியெழுப்பக் கூடாது! ஆமெனில், போர் இலக்கியத்தின் தொடர்ச்சியாக நீங்கள் ஏந்தப்படுவீர்கள்… ‘இம்போட்டன்’ நீங்கள் வண்ணான் குளத்தையும் கொள்ளிக்குடத்தையும் கட்டையில் போகும் வரை மறக்கக் கூடாது. இந்தப் பாட்டையிலே இறுதியாக வந்து சேர்ந்திருக்கிறது – தொலைவில்- வாசுதேவன் கவிதைகள்- கா.சு வெளியீடு.
நீங்கள் வண்ணானாக இருந்தால் உங்களுக்கு ‘வண்ணான் குளம்’ என்று பேசவும் எழுதவும் முடியுமா? வருமா? என்று கவிஞோரைப் பார்த்துக் கேட்கக்கூடாது. வண்ணானாக இருந்தாற் கேட்க வேண்டும் போல தோன்றுந்தான், ஆனால் எல்லோரும் தமிழர், இங்கு எல்லோரும் அகதிகள், கறுப்பர் என்று உங்கள் வாய் அடைக்கப்பட்டிருக்கும்.
ஒரு குளம் வண்ணானுக்கு மட்டுமானதா? எல்லோருக்குமானது தானே என்றோ, வண்ணானிற்கு மட்டுமானதாக ஒதுக்கிவைத்திருப்பதைப் பற்றியோ, சமூகத்தின் கூட்டுச் சாதி மனம் தன்னை மேல் நிறுத்திக் கொள்வதைப் பற்றியோ, ஏன் தலைமுறையாக அத் தொழிலைச் செய்ய வேண்டுமென்றோ நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள்! கோப்பை கழுவ, கக்கூசு கழுவ இங்கு விதிக்கப்பட்டோமே என விதிவிதிர்த்துப் போவீர்கள். அவற்றை இலக்கியமாக்கி எழுதவும் செய்வீர்கள்.
என் குலமென்ன? கோத்திரமென்ன? ஊர்ப் பெருமையென்ன? இப்படியாக வந்து விழுந்ததே என்று ஊர் அடையாளம் பேசுவீர்கள். ஊரைக் கவனமாகக் குறித்தும் கொள்வீர்கள். நீட்சே (பக்: 69) ஹெர்மன் ஹெஸ்ஸ (பக்:62) டியுபூசி (பக்:36) ஹெமிங்வே (பக்: 32) இவர்களிற்கு மேலும் பிரெஞ்சு இலக்கியப் பரிச்சயமும் தத்துவப் பரிச்சயமும் தர்க்கமும் இருக்கும் உங்களுக்கு. ஆனால் வண்ணான் குளதையும் (பக் :59) கொள்ளிக் குடத்தையும் (பக் :23 ) உங்கள் சாதிய நினைவடுக்கிலிருந்து அகற்றக்கூடாது. இலக்கிய வெளியில் வாசிப்பிற்காக வரும் தலித்துக்களை மிரட்டுவதற்க்கும் விரட்டுவதற்கும் இரண்டு சொற்கள் போதும்… வேண்டாம் ஒரு சொல்லே போதும்.அது வண்ணான் குளம்.
15.06.2006
சுகன்,வணக்கம்!
நியாயமான கட்டுடைப்பு!
இத்தகைய எதிர்க் கேள்விகள்,கருத்துகளின்றி எந்தப் படைப்பும் முன்னேறமுடியாது!எந்தப்படைப்பு எவர் பக்கஞ்சார்ந்து அதிகாரங்களைக் காத்து வருவதென்பதை அப்பட்டமாகக் கட்டுடைக்கும் தங்கள் பார்வையும்,தார்மீக ஆவேசமும் மிகவும் நியாயமானது.
தமிழ் மனதுக்குள் ஒழிந்திருக்கும் உயர் வேளாளச் சாதியத் தடிப்புக்கு ஒத்திசைவாகக் கட்டியமைக்கப்பட்ட மொழிக்”குறிப்பான்கள்”பற்பல சமயத்துள் மிகவும் ஒப்புவமைக்குக் “கவிஞர்கள் வாய் வழி” வந்து தொலைக்கிறது.இது காலாகாலமாகக் கட்டியொழுப்பப்பட்ட தமிழ்-இந்துத்துவ ஆதிக்கப்பண்பாட்டையொட்டி எழுப்பப்பட்ட அதிகாரமே!இதை உடைக்கும் தங்கள் எழுத்து மிகவும் அவசியமான தேவையே.
குறிப்புக்கு-பதிவுக்கு நன்றி, சுகன்.
aha.
aha.
atputham.
தோழர் சுகன்,
இந்தக்கவிதைத்தொகுப்பு இன்னும் என்கைகளிற் கிடைக்கவில்லை. வாசிக்காமல் கருத்துச்சொல்வது தர்மீகமானதோ அண்றி நீதியானதோ அல்லவெண்றாலும் உங்கள் கோபம் நியாயமானதே.
இன்றும்கூட நீங்கள் கூறியதுபோல் தமது போலிப்பெருமைகளை(தற்காலிகமாக!!) இழந்தது குறித்து ஆதங்கப்படுவோர் தாம் இழைத்த அநீதிகளையோ அன்றி தொடர்ந்து இழைத்துவருவது பற்றியோ பேசார்.
இக்கூட்டத்துள் போலி புலி-எதிர்ப்பு வாதிகளும் அடக்கம். அதேபோல் அண்மையில் எழுதப்பட்ட ‘காலை எழுந்தவுடன் புலி-எதிர்ப்பு’ வகை ‘பிணக் கூத்து’ கவிதையும் அடக்கம்.
சொபாசக்தி வாழ்க! சுகன் வாழ்க.
ரயாகரன்இ சோபசக்தி> மற்றும் சிறீரங்கனுக்கு
உங்களிடம் ஒரே கேள்வி சுற்றிவளைக்காது பதில்தரவும்.
ரி.பி.சி. வானொலியின் அவசியம் இன்றுஉள்ளதாக கருதுகறீர்களா?
(பதில் விளக்த்திற்காக மேலும் சில துணைக்கேள்விகள்..
நிதா;சத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே கருதுகறீர்களா?ஐ
இலலையென்றால் வேறுபாட்டை விளக்குக.
.அய்.பி.சியையும்> ரிபிசியையுயம் நீஙீீீீங்கள் ஒன்றாகவே கருதுகறீர்களா? இல்லையென்றால் வேறுபாட்டை விளக்குக.
(சோபா சக்திக்கு> பதில் தராவிட்டால் பரவாயில்லை. ஆனால் தயவுசெய்து நக்கல் நளினங்களைத் தவிர்க்கவும்)
ரயாகரன்இ சோபசக்தி> மற்றும் சிறீரங்கனுக்கு
உங்களிடம் ஒரே கேள்வி சுற்றிவளைக்காது பதில்தரவும்.
ரி.பி.சி. வானொலியின் அவசியம் இன்றுஉள்ளதாக கருதுகறீர்களா?
(பதில் விளக்த்திற்காக மேலும் சில துணைக்கேள்விகள்..
நிதா;சத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே கருதுகறீர்களா?ஐ
இலலையென்றால் வேறுபாட்டை விளக்குக.
.அய்.பி.சியையும்> ரிபிசியையுயம் நீஙீீீீங்கள் ஒன்றாகவே கருதுகறீர்களா? இல்லையென்றால் வேறுபாட்டை விளக்குக.
(சோபா சக்திக்கு> பதில் தராவிட்டால் பரவாயில்லை. ஆனால் தயவுசெய்து நக்கல் நளினங்களைத் தவிர்க்கவும்)
‘ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா?
நிதர்சத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?
ஐ.பி.சியையும், ரிபிசியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?”
பி.இரயாகரன்
18.06.2006
இது எம்மிடம் எமது இணையத்தின் ஊடாக கேட்கப்பட்ட கேள்வி. அதில் ஒரு ஈமெயில் தந்த போது, அவர்களுகான பதில் திரும்பிவிட்டது. இதே கேள்வியை சத்தியக்கடாதிசியலும் பதிவிடப்பட்டுள்ளது.
முழுமையான கேள்வி
‘இரயாகரன், சோபசக்தி, மற்றும் சிறீரங்கனுக்கு
உங்களிடம் ஒரே கேள்வி சுற்றிவளைக்காது பதில்தரவும். ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா? (பதில் விளக்த்திற்காக மேலும் சில துணைக்கேள்விகள்.
நிதர்சனத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா? இலலையென்றால் வேறுபாட்டை விளக்குக. ஐ.பி.சியையும், ரிபிசியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா? இல்லையென்றால் வேறுபாட்டை விளக்குக. (சோபா சக்திக்கு, பதில் தராவிட்டால் பரவாயில்லை. ஆனால் தயவுசெய்து நக்கல் நளினங்களைத் தவிர்க்கவும்)”
1.உங்கள் ஆரோக்கியமான அவசியமான கேள்விக்கு நாங்களும் கடமைப்பட்டுள்ளோம்.
2.நாம் சுற்றி வளைத்து சமாளித்து பதிலளிப்பது கிடையாது.
3.சோபாசக்தியின் நக்கல் நளினங்கள் அரசியல் ரீதியானவை. அவரின் கருத்தின் ஆழம் மேலும் அரசியல் செறிவுடன் வளரும் போது, இந்த நக்கல் நளினங்கள் கருத்தை மேலும் வளப்படுத்தும். அதை அவர் செய்வார் என்று நம்புகின்றோம்.
இனி உள்கள் கேள்விக்கு வருவோம்.
‘ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா?
நிதர்சத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?
ஐ.பி.சியையும், ரிபிசியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?”
இந்த கேள்வியை எம்மை நோக்கி கேட்க முன்னம், மக்கள் நலன் என இவர்கள் எதை முன்னெடுக்கின்றனர் என்று நீங்களே உங்களிடம் கேட்டு பார்த்திருக்கலாம்.
ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொண்டு பதில் தருவது அவசியம். ‘இல்லையென்றால் வேறுபாட்டை விளக்குக” என்று கூறுவதை ஒரு பக்கத்துக்கு மட்டும் கேட்பதை தாண்டியதே எமது பதில்.
மக்கள் நலனை ஒழித்துக்கட்டுவதில் இரண்டு ஒன்று தான். ஆனால் வேறுபாடு அவர்கள் சொல்லிகின்ற உள்ளடகத்தில் உண்டு. அவர்கள் கையில் எடுத்துள்ள தேசியம், ஜனநாயகம் இரண்டிலும், நேர்மையாக மக்களுக்காக செயல்படுவதில்லை. இரண்டையும் முரணாக நிறுத்தி வைத்துள்ள இவர்கள், படுபிற்போக்கு வாதிகள். இவை இரண்டையும் ஒன்றில் இருந்த ஒன்றை பிரிக்கவே முடியாது. உண்மையில் மக்களை எமாற்றி, அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.
மக்கள் நலனைக் கடந்த எதையும் நாங்கள் ஆதாரிப்பதில்லை. மக்களை நலனை முன்னிறுத்தாத எதையும் நாம் ஆதாரிக்க முடியாது. இதை அவர்கள் எதிர்தரப்பில் நின்று சொன்னாலும், இந்த உண்மையை நாம் தெளிவாக கொண்டு வருகின்றோம்;. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை உண்மையாக பிரதிநித்துவம் செய்யாத அனைத்தும் படுபிற்போகனவை, எதிர் புரட்சிகரமானவை. அதில் ஒன்றை முன்னிறுத்தி மற்றொன்றை பின்னால் நிறுத்துவதில்லை. இது பொதுவான கருத்துத் தளத்தில்.
மறுபக்கத்தில் அரசு மற்றும் புலிகளை எடுத்தால், அரசு தான் தமிழ் மக்களின் பிரதான எதிரி. இதில் புலிகள் அல்ல. அரசை ஆதாரிக்கும் அனைத்தும் பிரதான எதிரியாக இருப்பதில், ஏன் புலியை விட முதன்மை எதிரியாக இருப்பதில் வியப்பேதுமில்லை. இதை ஒட்டி விரிவான கட்டுரை எழுதி முடித்துள்ளேன்;, சரி பார்த்த பின் இரண்டொரு நாளில் பிரசுரமாகவுள்ளது. அது இதை மேலும் துல்லியமாக தெளிவாக்கும்.
சிங்கள் பேரினவாதிகள் தமிழ் மக்களை ஒடுக்குவதாகச் சொல்லி புலிகள் போராடுகின்றனர் என்றால், புலி எதிர்ப்பு அணி புலிகள் தமிழ் மக்களை ஒடுக்குவதாகச் சொல்லி போராடுகின்றனர். ஆனால் மக்களுடன் இணைத்து, அந்த மக்களின் சொந்த விடுதலை நடத்த முனைவதில்லை. அதை தெளிவாக அரசில் அடிப்படையில் எதிர்க்கின்றனர். இவை அனைத்தும் பிற்போகானவை எதிர்புரட்கிகரமானவை.
எங்கே குழப்பம் மயக்கம் எற்படுகின்றது என்றால், நாங்கள் புலியுடன் நண்பர்களாக இருக்க முடிவதில்லை. மறாக அவர்களால் கொலை அச்சறுத்தலுக்கு சாத உள்ளாகி வாழ்பவர்கள்;. மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு அணியுடன் நாம் நட்பாக இருக்க முடிகின்றது. இது பலரை அரசியலுக்கு அப்பால் உறவாட வைக்கின்றது. இவர்களால் உடனடியாக கொலை அச்சுறுத்தல் இருப்பதில்லை. இந்த எதார்த்தம் சார்ந்த சூழலில் இருந்து, நாம் எமது தனிமனித உணர்வில் இருந்து சிந்திக்கும் போது, அங்கு அரசியலை மறந்து போகின்றோம்;. 1983 முதல் 1986 வரை ஒரே இயக்கத்தில் அரசிலை பேசியவர்களை வேட்டையாடி கொன்ற உண்மை, சொல்லும் செய்தி என்றும் தெளிவானது. இன்று புலியெதிர்ப்பு அணியில் உள்ள பலர் கடந்த இந்தக் கொலைகளில் பங்கு கொண்டவர்கள் அல்லது அதை ஆதாரித்தவர்கள். அதை இன்றும் அரசியல் ரீதியாக விமர்சிக்காதவர்கள். அதே அரசில் வெறுப்புடன், அரசில் பேசுவர்களையும் அந்த மக்கள் அரசிலையும் வெறுக்கின்றனர். மக்கள் அரசில் பேசுவர்கள், மக்கள் நலனை உயர்த்த கோருவது மட்டும் தான் கோருகின்றனர்.
எம்மிடம் கேள்வி கேட்க முன் அவர்களிடம் கேட்கலாமே, மக்கள் நலனை முன்னெடுக்க சொல்லி. நாங்கள் சொல்வது தவறு என்றால், நேரடியாக கருத்தை இட்டு விமர்சியுங்கள் என்ற கோரிப்பாருங்கள். அவர்களிடம் அந்த அரசியல் நேர்மை துளியாளவும் கிடையாது. மக்களுக்கு உண்மையாக இருந்தால், அது தானாக வெளிப்படும்.
நாளை புலிகள் இல்லாத இடத்தில் அரசியல் அதிகாரத்துக்கு இவர்கள் வந்தால், அரசில் ரீதியாக அவர்களும் மற்றொரு புலிகள் தான். இல்லையென்;று யாரும் இதை நிறுவமுடியாது. அவர்கள் மக்கள் பற்றி கொண்டுள்ள அரசியல் தான்;, எமது முடிவை தீர்மானிக்கின்றது.
ரி.பி.சி தேவையா என்றால் மக்கள் நலனின் அடிப்படையில் அவசியமற்றது. ஆனால் அதை புலிகள் ஒழித்துகட்டும் முயற்சியை நாம் அங்கிகரிப்பதில்லை. இந்த வகையில் நாம் முன்பு கருத்துரைத்துள்ளோம். இதேநிலை தான் புலிகளின் வனோலிக்கும் பொருந்தும். நாளை ஏகாதிபத்தியம் அதை தடை செய்தால், நாம் அதை அங்கிகரிப்பதில்லை. இது போன்ற தடைகள் குறித்ததை மட்டுமல்ல, அது மொத்த மக்களையும் அடக்கியொடுக்கும் அரசியலை அடிப்படையைக் கொண்டதே.
;
//ரி.பி.சி. வானொலியின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா?//
ஓம்
//நிதர்சனத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?//
ஓம்
//அய்.பி.சியையும் ரிபிசியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?//
ஓம்!
சரி நான் எல்லாத்துக்கும் ஓம்… இதுக்கு இப்ப நீங்க என்னண்டுறீங்க?
ரயா கன காலத்துக்குப் பிறகு உங்களிடமிருந்து மனதைத் தொடும் ஒரு பதில்.உங்கள் பதிலுடன் என்னால் உடன்பட முடிகிறது
சோபாசக்தி :)))
ரறாகரனுக்கு சுத்திவளைக்காமல் பதில் சொல்லத்தெரியவில்லை.
சோபாசக்திக்க நக்கல்நளினத்தை விடவேறு தெரியவில்லi.
திரு. றஜாகரன் அவர்களே!
சோபாசக்தியின் ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருள் என்னவோ?
அதன் அரசியல் ஆழம் தான் எவ்வளவோ?
சோபாசகத்தி அவர்களே!
தேனீயும், நிதர்சனமும் ஒன்றென்றால்
நெஞ்சு துடிக்குது துடிக்குது சேது சேது என்றும் கடிதம் வரைவீர்களா!
ஜெமினியின் பதிலுக்காக காத்திருப்பதுபோல சேதுவின் பதிலுக்கும் காத்திருப்பீர்கள்.
மனம் திறந்து உரையுங்கள்.!
அன்பான இணைய வலையர்களுக்கு
உங்கள் பதில்களின் நேர்மை உண்மை உள்ளதா அல்லது எல்லாம் வெட்டிப் பேச்பேச்சுத்தானா நேரங்கள் உண்மையானது ஆனதழூhல் உங்கள் பேச்சுக்கள் எல்லாம் போட்ப்பேச்சாகவே உள்ளது.
துடிந்தால் நாட்டையும் நாட்டு மக்களையுமு; உண்மையாக நேசியுங்கள். இல்லாவிட்டால் வேலை எவட்டியைப்பாருங்கள்
நன்றி
வாய்ப்பான கேள்விகள் யாராவது கேட்கமாட்டார்களா எனத்தவம்கிடக்கும் ஜாம்பவான்களே!
சிலகேள்விகளை நீங்கள் தட்டிக்கழித்து சுற்றிவளைத்தாலும் இணையவாசகர்களிடம் நீங்கள் மாட்டத்தான் செய்கிறீர்கள்
சோபாசக்தி முதல் நண்பர்கேட்டகேள்வி நியாமானதுதான்.
தேனீயும், நிர்சனமும் ஒன்றென்றால் நீங்கள் சேதுவுக்கும் கடிதம் எழுதிவிட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருப்பீர்களா?
ஏதோ நாட்டு மக்கள்மேல் நீங்கள் உண்மையான அக்கறையுள்ளவர்கள்போல் நாடகமாடுகிறீர்கள்…மக்கள் நலன் மக்கள் நலன் என்று கூப்பாடுபோட்டால் போதுமா?
உங்கள் செயல் என்ன?
ரி.பி.சி, தேனீ போன்றவை போட்டுவிட்ட தளத்தில் தைரியமாக புலம்புகிறீர்கள்.
தூ ! வெட்கமாயில்லை.. இதற்கு இனி முந்தி அப்பிடி எழுதினே; அங்கே எழுதினேன். இங்கே எழுதினேன என்று புலம்பவேண்டாம். யார் படித்தார்கள் அதை.
நீங்கள் மாற்றுக்கருத்தின் மூலவர் என்பதுபோல கனவுகண்டுகொண்டிருக்கறீர்கள்.
உங்கள் கோமணத்திற்க உலைவைக்கப்படும்போது குரல் கொடுக்க்பபோவது ரிபி.சி. மட்டுமே.
மற்வர்களை காணக்கிடைக்காது.
Aha! Aha!
very nice game.
You have lot of time to spend for useless purposes.
Go to Vanni.
That will make sens for your stupid life.