>” வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையையிட்டு அச்சமாயிருங்கள்! “
-அல் குர் ஆன்
என்னைப் புதியவர்கள் சந்திக்கும் போது சிலர் “ஊரில எவ்விடம்?” எனக் கேட்பதுண்டு. நான் “அல்லைப்பிட்டி” என்பேன். அநேகமாக அவர்களில் பெரும்பாலானோருக்கு அல்லைப்பிட்டியைத் தெரிந்திருக்காது. அந்தச் சின்னஞ் சிறிய மணற் கிராமத்தின் பெயரைக் கடந்த சில தினங்களாகச் சர்வதேச ஊடகங்கள் விடாமல் உச்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. இணையத்தளங்களின் முகப்பில் என் கிராமத்தின் இரத்தம் வடிந்துகொண்டேயிருக்கிறது. யாழ் நிலப்பரப்பையும் லைடன் தீவையும் பண்ணைத் தாம்போதி இணைக்கிறது. பரவைக் கடலுக்குள்ளால் போடப்பட்ட இப் பாதை அண்ணளவாக மூன்றரைக் கிலோ மீற்றர்கள் நீளமுடையது. இத் தாம்போதியின் அந்தலையில் அல்லைப்பிட்டிக் கிராமம் ஆரம்பிக்கிறது. அல்லைப்பிட்டி வரண்ட பூமி. நன்னீர் சில குறிச்சிகளில் மட்டுமே கிடைக்கும். கிராமத்தின் பெரும் பகுதி மணற் திட்டிகளைக் கொண்டது. அல்லைப்பிட்டியின் மேற்குத் திசையில் மண்கும்பான் கிராமம் இருக்க, கிராமத்தின் மற்றைய மூன்று திசைகளையும் கடல் சூழ்ந்திருக்கும்.
யுத்தத்திற்கு முன்பாக அல்லைப்பிட்டியில் 220 குடும்பங்கள் வரையில் வாழ்ந்தார்கள்.1977 பொதுத்தேர்தலின் போது கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் தொகை 940 ஆக இருந்தது. கிராமத்தில் சரி பாதித் தொகையினர் தலித்துக்கள். பதினைந்து குடும்பங்கள் முக்குவ சாதியினர். இரு முசுலீம் குடும்பங்கள் புலிகளால் துரத்தப்படும் வரை கிராமத்தின் ஓரமாக வயல் வெளிகளுக்குள் வசித்தார்கள். கிராமத்தின் மிகுதிப் பேர் வெள்ளாளர்கள்.
வெள்ளாளக் குடியிருப்பையும் தலித்துக்களின் குடியிருப்புப் பகுதியையும் கிராமத்தின் ஒரேயொரு தார்ச்சாலை நிரந்தரமாகப் பிரித்து வைத்திருந்தது. தலித்துக்களின் குடியிருப்பில் ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் அய்ந்தாம் வகுப்புவரை நடந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் மூடப்பட்டு விட்டது. வெள்ளாளக் குடியிருப்பில் “பராசக்தி வித்தியாலயம்” என்றொரு பாடசாலையுள்ளது. அங்கே பத்தாம் வகுப்புக்கள் வரை நடைபெறுகின்றன. அதற்கு மேல் படிக்கவேண்டுமெனில் வேலணைக்கோ அல்லது யாழ்ப்பாணத்திற்கோ தான் போகவேண்டும்.
கிராமத்தின் 90 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வாழ்ந்தார்கள். தலித் மக்களின் தொழிலாகக் கள்ளிறக்குதலும் மீன்பிடியும் இருந்தன. வெள்ளாளர்கள் பெரும்பாலும் சிறு விவசாயிகளாகவோ மண் அள்ளும் கூலிகளாகவோ இருந்தார்கள். ஒரு பெயர் சொல்லக்கூடிய கல்வியாளரையோ, தொழில் முனைவரையோ தன்னும் தந்திராத சபிக்கப்பட்ட கிராமமது.
அல்லைப்பிட்டிக்குள் 1978ல் தான் பேருந்து வந்தது (350 வழித்தடம்). 1981 ல் தான் அல்லைப்பிட்டிக்கு மின்சாரம் வந்தது. வறுமையிலும் அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த அந்த மக்களிடையே 1984ல் முதலாவது வெடி விழுந்தது. மீனவரான அருமைநாயகம் கடற்கரையில் நின்றிருந்த போது சிறிலங்காப் படையினர் உலங்கு வானுர்தியிலிருந்து சுட்டனர். அருமைநாயகம் அவ்விடத்திலேயே மரணமானார். 1986ல் அல்லைப்பிட்டியில் சிறிலங்கா விமானம் குண்டு வீசியதில் ஞானமலர் அந்தோனி என்ற இளம்பெண் கொல்லப்பட்டார். இவை இரண்டும் வான்வழித் தாக்குதல்கள். சிறிலங்காப் படையினரின் கொலைப் பாதங்கள் 1990வரை அல்லைப்பிட்டி மண்ணிற் படவில்லை. முதன்முதலாகப் படையினரின் பாதங்கள் அங்கே பட்டபோது அவை என் கிராமத்து மனிதர்களின் உதிரச்சகதியில் நடந்தே வந்தன.
1990 யூன் மாதம் யாழ் கோட்டையிலிருந்த பெருந்தொகையான இராணுவத்தினரும் பொலிஸாரும் விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிக்கொண்டனர்.இக் கடுமையான முற்றுகை மாதக் கணக்கில் நீடித்தது. கோட்டைக்குள் சிக்கியிருந்த படையினருக்கு உணவோ, மருந்துகளோ, ஆயுதங்களோ வழங்க முடியாமல் சிறிலங்கா அரசு தவித்துக்கொண்டிருந்தது. கோட்டையைக் கைப்பற்றப் புலிகள் உக்கிரத்துடன் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். எக்கணத்திலும் கோட்டை புலிகளின் கைகளில் வீழ்ந்து விடலாம் என்ற நிலையில், ஓகஸ்ட் மாதம் 21ம் நாள் சிறிலங்கா அரசு பெருமளவு மீட்புப்படையினரை ஆகாய மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் லைடன் தீவில் தரையிறக்கம் செய்தது.
லைடன் தீவின் ஊறாத்துறையில் தரையிறக்கப்பட்ட மீட்புப் படையினர் கரம்பன், நாரந்தனை, சரவணை, வேலணை, சாட்டி, மண்கும்பான் வழியாக அல்லைப்பிட்டியை நோக்கி அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்க, லைடன் தீவில் நிலைகொண்டிருந்த புலிகள் பின்வாங்கிக் கொண்டிரு ந்தார்கள். மீட்புப் படையினர் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றிவிட்டால் பின் அவர்களுக்கும் கோட்டைக்கும் இடையில் மூன்றரைக் கிலோ மீற்றர்கள் நீளம் மட்டுமேயுள்ள -புலிகளின் ஆதிக்கமற்ற- ஆழங்குறைந்த பரவைக் கடற்பரப்பு மட்டுமேயிருக்கும்.
வரும் வழியெல்லாம் பெரும் மனித சங்காரத்திலும் பாலியல் வல்லுறவுகளிலும் கொள்ளையிலும் தீவைப்பிலும் ஈடுபட்டுக்கொண்டே வந்த மீட்புப் படையினர் எதிர்ப்பேயின்றி 22ம் திகதி காலையில் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றினார்கள். தரைப்படையினருக்கு ஆதரவு வழங்குமுகமாக விமானப்படையினர் கிராமம் முழுவதும் குண்டு வீசிக்கொண்டிருக்கக் கடற் படையினர் கடல் மார்க்கமாகவும் அல்லைப்பிட்டியைச் சுற்றிவளைத்தனர். அப்போது அல்லைப்பிட்டியிலிருந்து அருகிலிருந்த மண்டைதீவுக்குப் பின்வாங்கிச் சென்ற முப்பதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிப் போராளிகள் மண்டைதீவுக் கடற்படுகையில் கூட்டாகச் சயனைட் அருந்தி இறந்தனர்.
அல்லைப்பிட்டியைக் கைப்பற்றிய படையினர் முதற் காரியமாகப் பராசக்தி வித்தியாலயத்தைக் குண்டு வைத்துத் தரைமட்டமாக்கினார்கள்.படையினர் கண்ணில் அகப்பட்ட மனிதர்களையெல்லாம் சுட்டும் வெட்டியும் கொலை செய்தார்கள். சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் வதை செய்தார்கள். இப்போது போலவே அப்போதும் கிராம மக்கள் பிலிப்புநேரியார் ஆலயத்திலும், அங்கிருந்த பாதிரியார் நிக்கொலஸ் குருஸ் சந்திரபோஸிடமும் தஞ்சம் புகுந்தார்கள். ஆலயத்துக்குள் புகுந்த படையினர் அங்கு தஞ்சம் புகுந்திருந்த இளைஞர்களில் முப்பத்தைந்து அப்பாவிகளைக் கைது செய்து மண்டைதீவிற்கு கொண்டு சென்றனர். பின் அவர்களைக் கொன்று உடல்களை ஒரு கிணறுக்குள் ஒன்றாகப்போட்டு மண்ணால் நிரவினர். இந்த அரசபயங்கரவாத மனித சங்காரம் நிகழ்ந்துகொண்டிருந்த போது அப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன அல்லைப்பிட்டிக்கு நேரிலேயே வந்திருந்து படையினரை உற்சாகமூட்டினார். மீட்புப் படையினருடன் வந்திருந்த EPDPயினரும் PLOTE உறுப்பினர்களும் கொலைகார அரச படைகளுக்கு வழிகாட்டிகளாகவும் ஆட்காட்டிகளாகவும் செயற்பட்டார்கள். அவர்கள், அல்லைப்பிட்டியின் இரத்தத்தில் தமது கைகளையும் நனைத்துக்கொண்டார்கள்.
இறுதியில் மீட்பு படையினர் அல்லைப்பிட்டியிலிருந்தும், மண்டைதீவிலிருந்தும் கடல் மார்க்கமாகச் சென்று கோட்டை முற்றுகைக்குள் சிக்கியிருந்த படையினரை மீட்டுக்கொண்டு தீவாரின் பிணங்களுக்கு மேலால் அணிவகுத்து நடந்து “வெற்றிகரமாகத்” தளம் திரும்பினர்.
1991ல் மீண்டும் அரச படையினர் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றினார்கள். இம்முறை அவர்கள் முழுத் தீவுப்பகுதியையுமே தமது பூரண கட்டப்பாட்டின் கீழே கொண்டு வந்தார்கள்.அப்போது யாழ் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. தீவுப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டதைக் குறித்துப் புலிகள் “தீவகம் முக்கியமற்ற நிலப்பரப்பு. தீவகத்தை இழந்தது எமக்கு ஒரு பொருட்படுத்தத்தக்க இழப்பேயல்ல.” என ஒரு “புத்திசாலித்தனமான” புவியியல் அறிக்கையை விடுத்துத் தீவாரின் தலையில் தண்ணீர் தெளித்து விட்டார்கள்.
ஆனால் இம்முறை படையினர் வெறும் அல்லைப்பிட்டியைத் தான் கைப்பற்றினார்கள். படையினர் வந்துகொண்டிருப்பதை அறிந்தவுடனேயே ஒட்டுமொத்தக் கிராம மக்களும் கிராமத்தை விட்டுக் கட்டிய துணிகளுடன் பண்ணைத் தாம்போதியால் நடந்தும், தோணிகள் மூலமும் யாழ் குடாநாட்டுக்குச் சென்றுவிட்டார்கள். பின் அய்ந்து வருடங்களாக அல்லைப்பிட்டியில் மக்களே இருக்கவில்லை. அங்கே கடற்படையினரும் EPDPயினரும் மட்டுமேயிருந்தார்கள்.
1995-1996ல் யாழ் குடாநாடு மீண்டும் அரச படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து வன்னிக்கும் கொழும்புக்கும் வெளிநாடுகளிற்கும் இடம், புலம் பெயர்ந்தவர்கள் போக மிகுதிப்பேர் அல்லைப்பிட்டியில் மீளவும் குடியேறினார்கள். அவர்கள் தமது கிராமத்திற்குத் திரும்பியபோது கிராமத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கடற்படையினர் நிலைகொண்டிருந்தனர். தீவகத்துள் நுழைவதற்கான படையினரின் பிரதான சோதனைச் சாவடி அல்லைப்பிட்டியிலேயே அமைக்கப்பட்டிருந்தது. கைகளுக்கும் கால்களுக்கும் இடையில் நித்தமும் “நேவி” திரிந்துகொண்டிருக்க, ஒரு பெரும் படைமுகாமையொத்த நிலப்பரப்பில் மக்கள் “வாழ” முற்பட்டனர்.
அப்போது பயிற்செய்கை நிலங்கள் காடுபற்றிக் கிடந்தன. மீன்பிடித் தோணிகள் காணாமற் போயிருந்தன. வீடுகள், பாடசாலைகள் எல்லாம் தரைமட்டமாகக் கிடந்தன. மக்கள் முதலிலிருந்து தமது வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. அவர்கள் அரச நிவாரணப் பொருட்களிலேயே தங்கியிருந்தார்கள். மெல்ல மெல்லக் கிராமம் மறுபடியும் துளிர்த்தெழத் தொடங்கும் போது கடந்த 13.05.2006 அன்று அல்லைப்பிட்டியில் நான்கு மாதச் சிசுவிவிலிருந்து அறுபத்தொரு வயது முதியவர் வரையாக ஒன்பது அப்பாவிப் பொதுமக்கள் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.
‘இக் கொலைகளை EPDPயினரும் சேர்ந்தே செய்தார்கள்’ எனச் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கிறது. அல்லைப்பிட்டி மக்களிடமிருந்து கிடைத்த நேரடித் தொலைபேசிச் செய்திகளும் இத் தகவலை உறுதி செய்கின்றன. EPDP இதை மறுத்திருக்கிறது. அவர்கள் செய்தார்களோ இல்லையோ, அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும், பேரினவாத அரசின் அமைச்சரவையில் பங்கெடுக்கும் EPDPயினரும் இக் கொலைகளுக்கான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
விடுதலைப் புலிகளால் சமூக விரோதிகளென்றும் துரோகிகள் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டு மக்கள் கொல்லப்படும் போதும், புலிகள் உரிமை கோராமலேயே மாற்றுக் கருத்தாளர்களைக் கொன்றொழித்த போதும், புலிகள் அப்பாவி முசுலீம் மக்களையும் சிங்கள மக்களையும் படுகொலை செய்த போதும், அதை நியாயப்படுத்திக்கொண்டிருந்த புலிகளின் ஊடகங்களும் புலி ரசிகர்களும் அல்லைப்பிட்டிக் கொலைகளையிட்டு ‘அறச்’சீற்றம் கொண்டார்கள். பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிக்கொண்டிருக்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இதற்கு நீதி விசாரணை வேண்டும் என்கிறார்கள். EPDP இறந்தவர்களையிட்டு வருத்தம் தெரிவிக்கிறது. கடற்படைத் தளபதியோ கடற்படையினர் இக் கொலைகளைச் செய்யவில்லை என மறுப்புத் தெரிவித்திருக்கிறார். புகலிடத்திலிருக்கும் கோயில் முதலாளி ஜெயதேவன் போன்ற திடீர் சனநாயகவாதிகள் “புலிகள் படையினரை ஆத்திரமூட்டுவதாலேயே இத்தகைய சம்பவங்கள் நிகழுகின்றன” என ‘அரசியல் ஆய்வு’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அல்லைப்பிட்டி மக்களோ அவலமும் துயரும் பெருக மறுபடியும் ஒரு முறை ஒட்டுமொத்தமாக அல்லைப்பிட்டியை விட்டு ஏதிலிகளாக வெளியேறிவிட்டார்கள்.
II
அல்லைப்பிட்டியின் கதை தான் கடந்த இருபத்தைந்து வருடங்களாகத் தமிழீழத்தின் அநேக கிராமங்களின் கதையாகவிருக்கிறது. இன்பம் -செல்வம் கொலையிலிருந்து வெலிகடச் சிறைப் படுகொலைகள் கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலை, குமுதினி, நவாலி போன்ற எண்ணுக்கணக்கற்ற படுகொலைச் சம்பவங்களில் இதுவரை எந்தவொரு சம்பவத்துக்கும் நீதி வழங்கப்படவில்லை. இனப் படுகொலைக் குற்றவாளிகள் எவரும் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. பொதுமக்கள் மீதும் அகதிமுகாம்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், தேவாலயங்கள் மீதும் தாக்குதல்களை நிகழ்த்திவிட்டுப் ‘புலிகளைத் தாக்கி அழித்தோம்’ என்றே அரசு சொல்லி வந்தது, வருகிறது. இந்த அல்லைப்பிட்டிப் படுகொலைக்கும் யாரும் நீதி வழங்கிவிடப்போவதில்லை.
சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் சிறிலங்கா அரசுகள் –அது அய்க்கிய தேசியக் கட்சியாக இருந்தாலென்ன சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலென்ன– தமிழின அழிப்பை முடுக்கிவிடுகிறார்கள். இந்த அடிப்படைக் காரணம்தான் ஒரு தொகை மக்களும் சர்வதேசத் தமிழ் உணர்வாளர்களும் கண்ணை மூடிக்கொண்டு முன்பு விடுதலை இயக்கங்களை ஆதரித்ததற்கும் இப்போது விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்கும் அடிப்படைக் காரணியாயாக அமைந்திருக்கிறது. தமது பொருளியல், வியாபாரம், பதவி போன்றவற்றுக்காகப் பஞ்சத்துக்குப் புலிகளை ஆதரிக்கும் ஒரு கூட்டத்தை விட்டுவிட்டால் மறுபுறத்தில் ஒரு தொகை இளைஞர்களும் மாணவர்களும் மக்களும் புலிகளை உண்மையிலேயே விசுவாசிக்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் புலிகளின் சனநாயக மறுப்பையும் பாஸிசச் செயற்பாடுகளையும் ஏற்க மறுத்தாற் கூட அவர்கள் சிறிலங்கா அரசின் பேரினவாதச் செயற்பாடுகள் ஊடாகப் ‘புலிகள் ஆதரவு’ என்ற நிலையை வந்தடைகிறார்கள்.அரச பயங்கரவாதத்திலிருந்து புலிகள் தமிழ் மக்களைப் பாதுகாப்பார்கள் என இவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள்.இவர்களின் விசுவாசமும் ஆதரவும் எவ்வளவுக்கு எவ்வளவு தூரம் உண்மையானதோ அவ்வளவுக்கு அவ்வளவு தூரம் முட்டாள்தனமானது. அரசியல் சமூக அறிவுபூர்வமற்றது.
இன்று சர்வதேச அளவில் விடுதலைப் புலிகள் பெரும் கண்டனங்களைப் பெற்றுவருகிறார்கள்.எதிர்வரும் 29ம் திகதி அய்ரோப்பிய யூனியனும் புலிகளைத் தடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதவுரிமைகளின் பெயராலும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயராலும்தான் மேற்கு நாடுகள் புலிகளைத் தடைசெய்கின்றன என்பது உண்மையாயின், 1983 இனப் படுகொலையின் போதோ, 1989ல் பிரேமதாஸ அரசு பல்லாயிரக்கணக்கான JVP உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொன்றொழிக்கும் போதோ இம் மேற்கு நாடுகள் சிறிலங்காவுடன் தமது இராஜரீக உறவுகளைத் துண்டித்திருக்க வேண்டும். தமது நாடுகளிலிருந்த சிறிலங்காத் தூதுவரகங்களை மூடியிருக்க வேண்டும். இலங்கை அரசு புலிகளைவிடப் பன்மடங்கு பயங்கரமானது. மேற்கு நாடுகள் கியூபா மீதும், ஈராக் மீதும் விதித்த தடைகள் மேற்கு நாடுகளின் மனித உரிமைகள் மீதான கரிசனையிலிருந்து பிறந்தவை எனச் சொன்னால் எந்த முட்டாளாவது நம்புவானா? புலிகளை இப்போதைக்கு மேற்கு நாடுகள் தடைசெய்வதிற்கு வேறு காரணங்கள் உள்ளன.
இந்தக் காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு முதலில் மேற்கு நாடுகள்– இந்தியாவும் கூட– தமிழ் மக்களின் பிரச்சனைப்பாடுகளை மனித உரிமைகள், இறைமை, சமாதானம் போன்ற தார்மீகங்களால் அணுகாமல் ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியப் போட்டிகள், உலகமயமாக்குதல், உலக முதலாளியத்தின் வரலாற்று நெருக்கடி போன்றவற்றின் ஒரு பாகமாகத்தான் அணுகுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசுக்கும் புலிகளுக்கும் விதவிதமான அழுத்தங்களைக் கொடுத்து ஒவ்வொரு பலம் வாய்ந்த நாடும் முழு இலங்கையையும் தனது வல்லாண்மையின் கீழ் கொண்டுவரக் காய்களை நகர்த்துகின்றது. இதில் அய்ரோப்பிய யூனியன் கூட்டுக் கொள்ளையில் வேறு இறங்கியிருகிறது. கடந்த பெப்ரவரி மாதம் ஜெனிவாவிற்கு சமாதானப் பேச்சுவார்த்தைளுக்காகச் சென்றிருந்த அரசுத் தரப்பில் இடம் பெற்றிருந்த அமைச்ர் ரோஹித போகல்லாகம “வொய்ஸ் ஓப் அமெரிக்காவின்” முன்னாள் அதிகாரி என்பதுவும், கடந்த 15.05.2006 அன்று சிறிலங்கா நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக சிறிலங்காவுக்கு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான முதன்மைப் பிரதிச் செயலர் டொனால்ட் காம்ப் “அய்ரோப்பிய யூனியன் புலிகளைத் தடைசெய்வதை அமெரிக்கா வரவேற்கும்.” எனக் கூறிவிட்டுச் சொன்ன கையுடனேயே, தொழிலதிபர்களைச் சந்தித்து அமெரிக்க இலங்கை வர்த்தக உறவுகளைக் குறித்து விவாதித்துவிட்டுப் போயிருப்பதையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதே.
விடுதலைப்புலிகள் ஓர் அதிபயங்கரமான அரசியல் முட்டுச்சந்துக்குள் சிக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களே உணர்ந்திருக்கும் ஓர் உண்மை. புலிகளின் இந்த வீழ்ச்சிக்குக் காரணங்களாகத் தேனி இணையத்தளமும், TBC வானொலியும் தமது மேட்டுக்குடி மதிப்பீடுகளால் சுட்டும் காரணங்களான, புலிகளின் தலைவர் படித்த எட்டாம் வகுப்போ, அன்ரன் பாலசிங்கம் அருந்தும் மதுவோ, சுப.தமிழ்ச்செல்வனுக்கு ஆங்கிலம் தெரியாததோ இருக்க முடியாது. புலிகளின் தனிமனிதப் பலவீனங்களிலிருந்து அல்லாமல் புலிகளின் வலதுசாரிக் குறுந்தேசியவாதப் பிற்போக்கு வேலைத்திட்டத்திலிருந்தே இந்த வீழ்ச்சி நேரிட்டது. அவர்கள் மக்களை வரி செலுத்தும், பவுண் வழங்கும், கப்பங் கட்டும் மந்தைகளாக மதிப்பிட்டார்களே தவிர, மக்களை அரசியற் சக்திகளாக மதிக்கவில்லை. அவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுச் சாகச நாயகர்களாகத் தம்மை நிறுத்திக்கொண்டார்கள். பிரபாகரன் குறித்த பிரமைகளையும் தனிமனிதத் துதியையும் கட்டியெழுப்புவதற்கு செலவு செய்த சக்தியில் இலட்சத்தில் ஒரு மடங்கைத் தன்னும் புலிகள் மக்களுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும், சமூக நீதியையும் சொல்லிக் கொடுப்பதற்கு செலவு செய்தார்களில்லை. தமது இயக்க உறுப்பினர்களுக்குப் புரட்சிகரக் கோட்பாடுகளைக் கடைப் பிடிப்பதற்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாகப் புலிகள் யாழ் இந்து மரபில் பேணக் கூடிய பிற்போக்குக் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுத்து அமைப்புக்குள் அதைக் கறாராகக் கடைப்பிடித்தார்கள் (பார்க்க: அன்ரன் பாலசிங்கம், நேர்காணல்:ஆனந்த விகடன் – 23.04.2006). வெறும் உணர்ச்சிக் கவிஞர்களையும் உலைக்களக் கவிஞர்களையும் பரப்புரையில் இறக்கிவிட்டு எமது இளைஞர்களினதும் மாணவர்களினதும் சிந்தனையை அரசியல் நீக்கம் செய்தார்கள். புலிகள் தமது முப்பது வருட வரலாற்றில் எப்போதாவது எங்காவது ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டத்தைப் போட்டது பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
இன்னொரு புறத்தில் புலிகளை எதிர்பவர்களில் ஒரு சாராரும் புலிகளைத் தாண்டிய, ஏகாதிபத்திய அதிவிசுவாசிகளாக இருக்கிறார்கள்.அவர்கள் மேற்கு நாடுகளின் சனநாயக முகமூடிகளைக் காட்டி மக்களை அதை நம்பவும் சொல்கிறார்கள். TBC வானொலியில் இப்படி நிறைய முதிர் முட்டாள்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் TBC க்கும் ENDLFக்கும் சிறிலங்காப் பேரினவாத அரசுக்கும் உள்ள கள்ள உறவுகள் குறித்துக் கேள்விகளை எழுப்புவதில்லை. இவர்களின் திடீர்த் தலைவரான “சிவநெறிச் செல்வன்” ஜெயதேவன் அங்கம் வகிக்கும் பிரிட்டன் தொழிற்கட்சியின் ஈராக் நிலைப்பாடு பற்றித் திடீர்த் தலைவர் மறந்தும் வாய் திறப்பதில்லை. இந்தப் பன்னாடைகள் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்களாம். “அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?” என்ற பாரதிதாசனின் நக்கல் பாட்டொன்றுதான் ஞாபகத்தில் வருகிறது.
இந்த நானாவித கொலைகாரர்களிடையே கொள்ளைக்காரர்களிடையே ஏமாற்றுக்காரர்களிடையே மக்கள் அல்லைப்பிட்டியைப் போல அநாதையாகக் கைவிடப்பட்டவர்களாக நிற்கிறார்கள்.
மக்களுக்கு நீதியையும் சமாதானத்தையும் ஒரு தேவதூதனோ அல்லது ஒரு பிசாசோ வானத்திலிருந்து கொண்டுவரப் போவதில்லை. இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தம் மக்களின் யுத்தமல்ல! இப்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையும் மக்களின் பேச்சுவார்த்தையல்ல! தங்கள் அரசியல் வழிகளையும், தேவைகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பேசும் உரிமையும், எழுதும் உரிமையும், கூட்டங் கூடும் உரிமையும், இயக்கம் நடத்தும் உரிமையும், கட்சி கட்டும் உரிமையும் அனைத்து ஈழத்தமிழ் மக்களுக்கும் வேண்டும். இந்த அடிப்படை மனித உரிமைகள் கூட மக்களிடமிருந்து அரசாலும் புலிகளாலும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த உரிமைகளைப் பறிகொடுத்த உணர்வேயின்றி ஒடுக்கப்பட்ட மக்கள் இரத்தத்துள்ளும் அச்சத்துள்ளும் அறியாமையுள்ளும் புதைந்திருக்கிறார்கள்…அல்லைப்பிட்டியைப் போல. ஒடுக்குமுறையாளர்களே! வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையையிட்டு அச்சமாயிருங்கள்
ஷோபாசக்தி
“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்…..”
அல்லைப்பிட்டி மக்களின் பெரும்பாலரின் வன்னி நோக்கிய இடம் பெயர்வு, தமக்கு யார்பாதுகாப்பு என்பதை தெளிவாக உலகத்துக்கு உரத்து சொல்லிவிட்டார்கள்.
அழுத்தமான பதிவு…மனது கனமாகிறது…
இங்கே தமிழகத்துக்கு கிளம்பி வந்துவிடுங்கள் என்று அந்த மக்களிடம் சொல்லுங்கள்…..உங்களால் முடிந்தால்..
ரவி
மிகவும் தரமான அரசியல் ரீதியான கட்டுரை. தொடர வாழ்த்துகள்.
இக்கட்டுரை எமது http://www.tamilcircle.net இணையத்தில் போட்டுள்ளோம்.
பி.இரயாகரன்
A perfectly crafted monograph on the Hamlet( Although technically we can’t call it a Hamlet as it has
a church) Allaipiddy.
“ஒரு பெயர் சொல்லக்கூடிய கல்வியாளரையோ, தொழில் முனைவரையோ தன்னும் தந்திராத சபிக்கப்பட்ட கிராமமது.”
It can now be extremely proud for producing a world class orature( Oral+Literature)Novelist Anthony shobasakthy.
Congratulations.
A Former Member of PLOTE.
ஷோபா சக்தியிடமிருந்து இத்தகையதொரு எழுத்து வர வேண்டுமென நினைத்த வண்ணமிருந்தேன்.உண்மையில் தமிழர் ஏதிலிகள்தான்..!தமிழர்கள் அரசியல் மயப் படுத்தப்படவில்லைதான்…
தமிழீழம் ஒரு தொகை அல்லைப்பிட்டிகளை சுமந்து கொண்டிருகிறது.உலகமெல்லாம் பரந்து வாழும் நமது சர்வதேச சக்திகளான தமிழர்கள் தன்னுடைய நாடு எப்போது புலிகளை தடை செய்யுமோ அப்போது வரை புலிகளின் பிரச்சாரகர்களாகவும் தமிழர் உரிமைக்கானவர்களாகவும் இருந்துவிட்டு இப்போது எதுவும் பேசமுடியாத நிலையில் இருப்பதற்கு பதில் உங்களை போல் எப்போதுமே நடுநிலை என்னும் சட்டையை போர்த்தியபடி மனித உரிமை(?)வாதிகள் ஈழ தலித்துக்களின் காவலர்கள்(!) என்பது போன்ற அடை மொழிகளை பெற்றுவிடும் முயற்சியில் இறங்கியிருக்கலாம்.
புலிகள் மோசமான கொலைகளை புரிந்தவர்கள் என்ற உங்களை போன்றவர்களின் விமர்சனங்களை தமக்கான கேடயமாக்கிக் கொண்டே …… அரச பயங்கரவாதம் இன்னமும் தன் கொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.உங்களை போன்றவர்கள் இந்தியாவில் புலிகள் குறித்து வைக்கும் விமர்சனக்களில் இந்திய படை உருவாக்கிக் கொடுத்த அல்லைபிட்டிகளைப் பற்றி சொல்லுவதைக் காணோம்.எல்லா தமிழின மனித படுகொலையாளர்களும் உங்களின் “நடுநிலயான” விமர்சனத்தின் மறைவில் தங்களை ஒழித்துக் கொள்கிறார்கள்.
கொல்லப்படும் உங்கள் கிராமத்து மனிதர்கள் குறித்த இந்தப்பதிவு எவ்வளவு முக்கியமானதோ அதே போல முக்கியமானதுதான் தமிழரின் இன்றைய வாழ்வுரிமைப் பிரச்சனையும்.
விடுதலைப் புலிகள் இன்று தவிர்க்க முடியாத சக்திகள் அவர்கள் அன்றி தீர்வும் இல்லை தமிழருக்கு விடிவும் இல்லை… அது புரியாத மிக கடை நிலை அறிவிலியல்ல நீங்கள்.
நண்பர் புஸ்பராஜா இறப்பதுக்கு சில நாட்கள் முன் என்னிடம் பேசும் போது சொன்னது இந்த வாசகங்கள் இதை நீங்கள் எவ்வாறு அர்த்தப் படுத்தி கொள்கிறீர்களோ தெரியவில்லை ஆனால், ஒன்று நிச்சயம் தமிழர்களை ஒடுக்குகிற சக்திகள் உங்களை பயன்படுதிக்கொண்டே நீங்கள் எதிர்க்கிற சகல மனித உரிமை மீறல் களையும் செய்வற்கு தாயாராக இருக்கிறது இலன்ங்கை அரசு அதைத்தான் செய்து வருகிறது.
அரசியல் மயப்படுதப்படாத தமிழர்
களை உங்களை போன்றவர்களால் எத்தனை தூரம் அறிவூட்ட முடிந்திருகிறது.
உண்மையில் எங்கள் எல்லோரின் எழுத்துகளிலும் தமிழனின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட சிவந்த இரத்தமேவழிகிறது…
எல்லாக் கொலைகளையும் நிறூத்துவோம் அதற்கு முதலில் போரை நிறூத்துவோம்.என் அண்ணன்கள் ஆரம்பித்தார்கள் ஆரம்பித்தவர் நிறைய பேர் உயிருடன் இல்லை நிறையப் பேரைக் காணவில்லை…இருப்பவர்களூம் விமர்சனம் என்றால்..?
உண்மையில் எங்களுக்கு போர் நடப்பதுதான் சமாதான படுகொலைகளைவிட நல்லதாக இருக்கிறது.எமக்கு புலிகள்தான் எல்லாரிலும் பிடித்தமானவ்ர்களாக இருகிறார்கள்.
அழுத்தமான பதிவு…மனது கனமாகிறது…
இங்கே தமிழகத்துக்கு கிளம்பி வந்துவிடுங்கள் என்று அந்த மக்களிடம் சொல்லுங்கள்…..உங்களால் முடிந்தால்..
ரவி
இந்தியா சென்றால் நடுக்கடலில் வைத்து சுடப்படுவீகள் என்று ராணுவம் எச்சரித்துஇருக்கிறது, இதற்கான ஆணையை அரசு வழங்கியிருப்பதாக ராணுவம் கூறுகிறது.
ஷோபா சக்தி, உங்கள் கட்டுரை குறித்து பிறிதொரு சமயம். ஆனால், செய்தியிலே முதலில் அல்லைப்பிட்டி நிகழ்வினைக் குறித்து வாசித்தபோது, உடனே ஞாபகத்துக்கு வந்தது நீங்கள்தான்.
-/பெயரிலி.
///இந்தியா சென்றால் நடுக்கடலில் வைத்து சுடப்படுவீகள் என்று ராணுவம் எச்சரித்துஇருக்கிறது, இதற்கான ஆணையை அரசு வழங்கியிருப்பதாக ராணுவம் கூறுகிறது.////
அடப்பாவிங்களா…
வணக்கம் ஷோபா சக்தி
நமது நாட்டிக்குளேயே அகதியாய் இருப்பதும் நமது இனத்தாலேயே
புறக்கனிக்கப் படுவதும் மிக்க கொடுமை அந்தகொடுமையை அல்லைபிட்டி
மக்கள் பல தடவை அனுபவித்து விட்டார்கள். புலிகளால் தண்ணீர் தெளித்து அப்போது விடப்பட்டவர்கள் இப்போது வன்னியிலும் கைவிடப்படுவார்கள்….
மிக நல்ல தெளிவான பதிவு இந்த தீவக மக்களின் இன்றைய அவல நிலைக்கு சம்பந்தபட்ட எல்லோருமே பொறுப்பானவர்கள் இதை உணர்வார்களா….?
நன்றி
ரவி
எதைச்சொல்வது..?
Anonymous மொழிந்தது…
வணக்கம் ஷோபா சக்தி
நமது நாட்டிக்குளேயே அகதியாய் இருப்பதும் நமது இனத்தாலேயே
புறக்கனிக்கப் படுவதும் மிக்க கொடுமை அந்தகொடுமையை அல்லைபிட்டி
மக்கள் பல தடவை அனுபவித்து விட்டார்கள். புலிகளால் தண்ணீர் தெளித்து அப்போது விடப்பட்டவர்கள் இப்போது வன்னியிலும் கைவிடப்படுவார்கள்….
வன்னிக்கு இடம்பெயர்ந்த அல்லைபிட்டி மக்களை புணர்வாழ்வுக்கழகம், அழைத்துச்சென்று உணவு கொடுப்பதையும், அவர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்படுவதையும் நீர் இணையங்களில் பார்க்கவில்லையா? அல்லது எதிர்க்கவேண்டும் என்பதற்காக பொய்கூறுகிறீரா, முதலில் ஒன்றை புரிந்து கொள்ளும் அல்லைப்பிட்டி மக்கள், கண்காணிப்பு குழுவின் உதவிபெற்று ஏன் வன்னிக்கு இடம்பெயர்ந்தார்கள், சிறீதர் தியேட்டருக்குள் போய் இருக்கலாம்தானே, ஏனென்றால் கடற்படையுடன் சேர்ந்து படுகொலையை செய்த ஈபிடிபி அங்குதான் இருக்கிறது, ஈபிடிபிக்கு இதில் தொடர்பிருக்கென்று unhcr கூறுகிறது.
உங்கள் உணர்வுகளுடனும் (அனேக) அலசல்களுனும் ஒத்து போகின்றேன்.
தம்பி ஈழபாரதி
ஷோபாசக்தியின் இந்த பதிவை மிக நல்ல பதிவு என்ற பாரட்டி இருக்கிறீர்
ஷோபா புலிகளையும் இந்த பதிவில் விமர்சித்து இருக்கிறார். இப்
பதிவின் முன் பகுதி அல்லைபிட்டி மக்களின் அவலநிலையும் பின்பகுதி
புலிகளாலும் அரச இராணுவத்தாலும் நிகழ்ந்த கொடுமைகள்.
இதை நீர் ஆதரித்தால் நான் குறிப்பிடுவதும் சரியே. அல்லை பிட்டியில்
உள்ள குடும்பங்கள் மொத்தம். 220 என ஷோபாசக்தியே குறிப்பிட்டுள்ளார்
ஆனால் வன்னிக்கு இடம் பெயர்ந்தவர்கள் 15 குடும்பங்கள்தான்…!மிகுதி
எங்கே…..?
வணக்கம் திரு ஷோபாசக்தி
வீடு என்பது விடுதலையான இடம் நம் அந்தரங்கள் (பாலகுமாரன்)
நமது ஊர் மிகச் சுதந்திரம்மிக்கது நம் ஊரை விட்டோ வீட்டை விட்டோ
எங்கு போனாலும் உடனே வந்து விட வேண்டும் என்று எமது மனம் துடிக்கும். இந்த ஊரை விட்டு தங்கள் உடமைகளோடு குடிபெயர்ந்த இந்த
மக்களின் மனநிலை எப்படி துடித்திருக்கும். இன்னொரு இடத்தில்
யாரோ தரும் ஆதரவால் இவர்களின் மனத்துடிப்பை நிரப்ப முடியுமா?
புலிஆதரவாளர்களுக்கும் புலிவிளம்பரங்களுக்கும் இந்த மக்களின் வெளியேற்றம் என்பது மிகப் பெரிய செய்தி. சர்தேசத்துக்கு ஒரு சம்பவம்
இலங்கை அரசுக்கு இது ஒரு விசாரணை.அவ்வளவுதான்.
ரவி
It is a very goed article. I have read some other writings of you. your articles are objective and they are free from the indivual (hateness)feeling and they exibit an intellectual politicalstand which is really needed. keep it up.
Please tranlate this.I dont have tamil fonts in the computer.
Thevaabira.
நல்ல கட்டுரை. உங்களின் அரசியலோடு பெருமளவு உடன்படுகிற நான் எனது பின்வரும் விமர்சனங்களை
முன்வைக்கிறேன்.
1. அல்லைப்பிட்டிக் கிராமத்தில் மீன்பிடித்தொழில் செய்பவர்கள் கரையார் சாதியினர் இல்லையா? நீங்கள்
கரையார் சாதியினரையும் தலித் அல்லது பஞ்சமர் என்ற பிரிவுக்குள் போடுகிறீர்கள் போலுள்ளது.
கரையார் சாதியை தலித்துக்குள் உள்ளடக்குவது சாதியியல் பற்றிய சரியான விஞ்ஞான ஆய்வாகாது.
இலங்கைத்தமிழ் பகுதிகளில் சாதி அடக்குமுறை கூடிய யாழ்ப்பாணத்தின் அநேகமான கோயில்களில் நுழைவதற்கான “உரிமையும்” திருவிழா நடத்துவதற்கான “உரிமையும்” கரையார் சாதியினருக்கு உண்டு. இச்சாதியினர் தீண்டத்தகாதவர்களாக அடக்குமுறைக்கு உட்படுத்தப் படுவதும் இல்லை. இச்சாதியினர் அடிமை குடிமை முறைக்குள் வராத அதற்கு வெளியில் உள்ள சுயாதீனமான சாதி. உயர்த்தப்பட்ட சாதியினர் தலித்துகளை அடக்குமுறைக்கு உட்படுத்துகிறபோதெல்லாம் கரையார் சாதியினர் உயர்த்தப்பட்ட சாதியினரோடே சேர்ந்தே தலித்துகளை அடக்கியிருக்கிறார்கள். சுகன் முன்னர் ஒரு தடவை பாரிசில் கரையார் சாதியினரை தலித் என்று வகைப்படுத்திய போது தமிழ்நெற் சிவராம் அதனைக்கேள்விக்குட்படுத்தியிருந்தார். வடமாகாணத்தில் கரையார் சாதியினருக்கு இருந்த இருந்த ஒரு பாரபட்சம் என்னவென்றால் சொந்தமாக நிலம் வைத்துக்கொள்வதற்கான “உரிமை” அவர்களுக்கு இருந்ததில்லை. கிழக்கு மாகாண குறிப்பாக மட்டக்களப்பு கரையார் சாதியினருக்கு சொந்தமாக நிலம் வைத்துக்கொள்வதற்கான “உரிமை” இருந்ததோடு அச்சாதியை சேர்ந்தவர்கள் பலர் போடியாராக (நிலச்சுவாந்தார்) இருந்திருக்கிறார்கள்.
2. அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பை ஆதரித்தது பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் தீர்மானம் அல்ல. ரொனி பிளயரினதும் தொழிற்கட்சியின் ஒரு சிறுபான்மையோரினதும் தீர்மானமே அது. தொழிற்கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் இப்படையெடுப்பை எதிர்க்கிறார்கள் என்பதோடு இதன்காரணமாகவே இப்போது வேறு பிரச்சனைகளிலும் மாட்டுப்பட்டுள்ள பிளயர் தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள திண்டாடுகிறார். இதில் ஜெயதேவன் தனது நிலைப்பாடு எந்தப்பக்கம் என்பதை அறிவித்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தியபின்னரே சோபாசக்தி அவர்மீது விமர்சனத்தை வைக்கவேண்டும்.
– வல்றம் சுரேஷ்.
//அல்லைப்பிட்டிக் கிராமத்தில் மீன்பிடித்தொழில் செய்பவர்கள் கரையார் சாதியினர் இல்லையா?//
இல்லை.அல்லைப்பிட்டியில் கரையார்களே இல்லை.அல்லைப்பிட்டியில் பெருமளவில் பள்ளர் சாதியினரும் ஒரு சில முக்குவ சாதியினருமே மீன்பிடித் தொழிலைச் செய்தார்கள்.
//உங்களை போன்றவர்களின் விமர்சனங்களை தமக்கான கேடயமாக்கிக் கொண்டே …… அரச பயங்கரவாதம் இன்னமும் தன் கொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது//
//கொல்லப்படும் உங்கள் கிராமத்து மனிதர்கள் குறித்த இந்தப்பதிவு எவ்வளவு முக்கியமானதோ அதே போல முக்கியமானதுதான் தமிழரின் இன்றைய வாழ்வுரிமைப் பிரச்சனையும்.//
நன்றாகச் சொன்னீர்கள் தமிழவன்!!
//விடுதலைப் புலிகள் இன்று தவிர்க்க முடியாத சக்திகள் அவர்கள் அன்றி தீர்வும் இல்லை தமிழருக்கு விடிவும் இல்லை… அது புரியாத மிக கடை நிலை அறிவிலியல்ல//
“Might does not equal Right”
/உங்கள் உணர்வுகளுடனும் (அனேக) அலசல்களுனும் ஒத்து போகின்றேன்./
நற்கீரன் சொன்ன அதேதான் நானும் கூற விளைவது :-(.
அல்லை பிட்டியில் மனித வாழ்வு நசுக்கப்படுகிறது இங்கு சாதி
விமர்சிக்கப்படுகிறது. இது தான் யாழ்ப்பாணியின் குணம் என்பது.
எத்தனை ஆண்டுகள் அல்லல் பட்டுஅலைக்களிந்தாலும் இவர்களின்
குணங்களை வளித்து எறியமுடியாது.
நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன. இதுக்குள்ளையும் ஓடி ஓடி நக்கிறதுதான் புலி ரசிகர்களின்ரை வேலையாய்ப் போய்ச்சு. இளையபாரதிக்கு சோபாசக்தி சொல்லிறது விளங்கயில்லையா? அல்லைப்பிட்டி அவலத்தை ஒரு ரத்த சாட்சியாய் எடுத்து சோபா வந்திருக்கிற இடம்வரை ரத்தம் வழிஞ்சபடிதான் இருக்கு. இனியும்தான்… ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒரு கல்லெறியிலை தன்னும் வெளிப்படாத நோகாத அரசியல் நடத்தி இண்டைக்கு அந்த ஏகாதிபத்தியமே பிசாசுகள்மாதிரி வரயிக்கை… இப்பவும் பவுணைத் தா காசைத் தா பிள்ளையைத் தா எண்டு பறிச்சுக்கொண்டிருக்க வேண்டியதுதான். புலியெதிர்ப்பு நடத்துற ரிபிசிக்காரர் ஏகாதிபத்தியத்துக்கு கம்பளம் விரிச்சு வரவேற்கவேண்டியதுதான்.
தாராளமயமாக்கலை ஏற்றுக்கொள்ளுற எவனும் ஒரு போராளியா இருக்க முடியாது…ஏற்றுக்கொள்ளுற எந்த அமைப்பும் விடுதலை அமைப்பா இருக்க முடியாது எண்டான் மெக்சிக்க சப்பிஸ்ரா இயக்கத் தளபதி மார்க்கோஸ். நாங்கள்…??
அல்லைப்பிட்டி குடும்பங்கள் அல்லல்பட்டு வன்னிக்கு வாறதைவைச்சு யார் பாதுகாப்புக் குடுக்கமுடியும் எண்டதை கணிக்கிறார் நிறுவுறார் இளையபாரதி. இந்தியன் ஆமி அடிக்க இலங்கை ஆமியின்ரை காம்புக்குள்ளை ஓடிச்சுது சனம். இலங்கை ஆமி அடிக்க இந்தியன் ஆமியட்டை ஓடிச்சுது சனம். எங்கை உங்கடை தத்துவத்தை இங்கை பொருத்துங்க பார்ப்பம் இளையபாரதி அவர்களே. ரிபிசி புகழ் ஜெகநாதன் ஜெமினி வகையறாக்களும் இப்பிடிக் கதைச்சுத்தான் ஆய்வாளர் பட்டம் எடுத்தினம். தமிழ்ச் சனம் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பாவப்பட்ட சனம் எண்டதுக்கு இதைவிட என்ன உதாரணங்கள் தேவை?
அநாமதேய நண்பரே,விடுதலைப்புலிகளுக்குள்ளேயே இருந்த சாதி அடக்குமு¨… அநாமதேய நண்பரே,
விடுதலைப்புலிகளுக்குள்ளேயே இருந்த சாதி அடக்குமுறைகள் பலருக்கு தெரிய வருவதில்லை. 1990 களின் ஆரம்பத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வடமராட்சியைச் சேர்ந்த செங்கதிர் என்ற தலித் விடுதலைப்புலி உறுப்பினர் அவரது சாதி காரணமாக விடுதலைப்புலிகளாலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என
செங்கதிரின் சாதியைச்சேர்ந்தவர்களால் இன்றுவரையும் சந்தேகிக்கப்படுகிறது. இதே செங்கதிர் இந்திய
ராணுவத்தினர் இலங்கையில் இருந்த காலத்தில் சில காலம் வடமராட்சியில் சில ஊர்களுக்கு பொறுப்பாளராக
இருந்து பல சிவிலியன்களை மண்டையில் போட்டுத்தள்ளியவர். அவருக்கு புலித்தலைமைப்பீடம் வழங்கிய கண்டிப்பான உத்தரவுகளில் ஒன்று “எக்காரணம் கொண்டும் உன் சாதியினர் அனுமதிக்கப்படாத கோயில்
உட்பிரகாரத்துக்குள் இந்தியராணுவத்தினரின் தேடுதல் வேட்டைகளிலிருந்து தப்புவதற்காக சென்று ஒழித்திருக்கக்கூடாது” என்பதாகும்.
கேணல் கிட்டு கரையாருக்குள்ளேயே “செம்பு” கூடின மேலோங்கிக்கரையார் சாதி எனப்படுகிறது. இதே கிட்டுவே கரையாரில் “செம்பு” குறைந்த கரையாரப்பொடிகள் விடுதலைப்புலிகளில் இருந்தபோது அவர்களை
இளக்ககாரமாக நடத்தியது எல்லோருக்கும் தெரியும். பல தடவைகள் புலிகளின் “செம்பு” குறைந்த கரையாரப் பொடிகள் கிட்டுவினால் கடுமையாக உடல்ரீதியாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
– வல்றம் சுரேஷ்.
மன்னிக்கவேணும். மேலையுள்ள என்ரை குறிப்பிலை ஈழபாரதி எண்டு வரவேண்டியது இளையபாரதி எண்டு தவறாக வந்திட்டுது.
வணக்கம் சோபாசக்தி,
உந்த மக்கள் போராட்டம்,ஏகாதிபத்திய எதிர்ப்பு,தலித்தியம்,மனிதம் என்கிற புரட்ச்சிகரமான சொல்லாடல்களைக் கேட்டு அலுத்துவிட்டது.புலி எதிர்ப்பும் இந்திய விசுவாசமும் தமிழில் எழுதுவதில் திறமையும் மட்டுமே மக்கள் விடுதலைப் போரகாது, புரட்சி ஆகாது.வெறும் சொற்சிலம்பம் போராட்டம் ஆகாது.
புலிகளை மக்கள் விரோத ஜன நாயக விரோத சக்தியாக் காட்ட விரும்பும் அனைத்துச் சக்திகளுக்கும் தேவயான பிரச்சாரத்தை முன் நடத்தி, தனிப்பட்ட ரீதியாக தம்மை அரசியற் பாண்டித்தியம் பெற்றவர்களாக, புனிதர்களாக காட்டுவதே உமது மேற்குறிப்பிட்ட எழுத்தின் நோக்கமாக இருக்கிறது.
உண்மையாக மக்களயோ அன்றி மண்ணயோ நேசிப்பவரின் உண்மை உமது எழுத்தில் இல்லை.
மக்கள் போராட்டம் மக்கள் போராட்டம் என்கிறீர்களே அதற்காக நீங்கள் ஒரு துளி வியர்வையைச் சிந்தியது உண்டா?தங்களின் உதிரத்தால் போராடுபவர்களையும் மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துன்பத்திலும் துயரிலும் தோள்கொடுப்பவர்களையும் பார்த்து நீங்கள் செய்யும் எழுத்து விபச்சாரம் உங்கள் மனங்களைக் கொல்ல வில்லயா?
உங்களைப் போன்ற போலிகளை மக்கள் நிராகரித்த வரலாறே எமது போராட்டாத்தின் வரலாறு.மக்கள் போராட்டம் என்பது உதட்டால் உச்சரிக்கப் படுவதால் ஏற்படப் போவதில்லை நண்பரே.அது உணர்வால்,உதிரத்தால்,உண்மையான உழைப்பால் ஏற்படுவது.ஏனெனில் எம்மக்கள் உங்களை விட அரசியலில் தெளிந்தவர்கள், அதனாலேயே உங்களின் போலித்தனங்களை அவர்கள் நிராகரித்துள்ளனர்.
வெகு விரைவில் மக்கள் போராட்டம் வெடிக்கும்,எம் தேசம் சகல அடக்கு முறைகளையும் தகர்த்து விடியும் நண்பரே. அப்போது உடையும் உங்கள் பொய்மை.
புலிகள் என்ன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேவது+தர்களா…?
மக்களிடம் வட்டி வரி பிட்டி பிறை வசூலித்து போராட்டம் நடத்துபவர்கள்தானே.
சமாதானம்.
காட்சி.1 நாம் உலகின் மாற்றங்களுக்கு உட்பட்டவர்கள்தான். மாற்றங்களை
ஏற்று அதற்கு ஏற்றவாறு நமது போரட்டத்தை கைவிட்டு சமானத்துக்கு
வருகிறோம். நடந்தவற்றை மறப்போம் மன்னிப்போம். (ராஜீவ் காந்தி)
அது ஒரு துன்பகரமான நிழ்வு…
காட்சி.2 கருணா அது நமது உள்வீட்டு பிரச்சனை அதில் யாரும் தலையிடத் தேவையில்லை.
காட்சி.3 கருணா நமக்கு ஒரு பிரச்சனையே இல்லை…
காட்சி.4 சுனாமி பொது கட்டமைப்பு எம்முடன்தான் ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் நாம்தான்.
காட்சி.5 கருணாவின் தடிகம்புகளை (ஆயுதம்) களையவேண்டும்
இல்லையேல் யுத்தம் தொடங்கப்படும் பேச்சுவார்த்தைக்கு செல்ல மாட்டோம்.
காட்சி.6 ஏறப்பிளேன்தா ஹெலிதா கப்பல்தா பாதுகாப்புதா தன்தால் தான்
பேச்சு வார்த்தைக்கு வருவோம்..
காட்சி.7 கிளிநொச்சியில் சமாதானம் மயக்கத்தில் கிடக்குது நோர்வே வா வந்து தணிணீர் தெளித்து மயக்கம்தெளி.
காட்சி.8 அல்லை பிட்டி மக்களே ஓடி வாங்கோ வன்னிக்கு உங்களுக்கு
பாதுகாப்பு வன்னிதான் எங்கட தலைவர்தான் உங்கட பாதுகாப்பு
அவர்தான் தமிழ் மக்களின்ர பாதுகாவலர்..
எல்லாம் சரி இந்த புலித் தலைவரும். அவரின்ர தளபதிகளும். தங்களுக்கும்
தங்களின்ர பிள்ளைகுட்டிகளுக்கும். இலங்கை ஜனநாயகக் குடியரசின் கடவுசீட்டு எடுத்து தங்கள் உறவுகளை பாதுகாப்பாக வெளிநாடு அனுப்பிவிட்டு அல்லை பிட்டு தமிழ் மக்களே வன்னி காட்டுக்கு வாங்கோ
யாழ்ப்பாணத்து மக்களே வன்னிக்காட்டுக்கு வாங்கோ என்று எதற்கு அழைக்கிறார்கள்..?
அப்ப தலைவருக்கு பாதுகப்பு தமிழ் மக்கள்தானா..?
இரானுவத் தளபதிக்கு தற்கொலைதாக்குதல் நடத்தியவுடன் திருமலையில்
இரானுவம் விமனத்தாக்குதல் நடத்துகிறது. அப்படியானால் வெற்றிலைக்
கேனியில் புலிகள் தாக்குதல் நடத்தும் போது (கடல்படைக்கு) புலிகளின்
கட்டுப்பாட்டு பகுதியில் இரானுவம் விமான தக்குதல் நடத்தும் என்பது
புலிகளுக்கு தெரியாதா..? அப்ப புலிகளின் வான் படை எங்கே…?
முதலில் புலிகளின் கட்டுபாட்டு பகுதியில் என்ன நடக்கிறது என்று
வெளி உலகத்துக்கு தெரியட்டும் (மக்களுக்கு) புலிசொல்வதையே எமுதவேணும் புலிசொல்வதேயே பேசவேணும் என்றால் நாம் எல்லோரும்
இன்னும் அடிமைகளே..
ரவி
DAI RAVI
UNNAKKUU EPDP KULLLE KASUU VARUKUTHOOO THUROOKEEE
உணர்ச்சிவசப் படாதீர்கள் நண்பர்களே,
இவர்கள் இப்படித் தான் எங்கே குருதி வடியும் அதனை எவ்வாறு புலிகளை விமர்சிக்க பயன் படுத்தலாம் எண்டு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் ஓ நாய்கள்.
இவர்களுக்கு மின்சியது இவ்வளவு தான்.
ரவி அவர்களே தாங்கள் இப்போது புலிகள் என்ன செய்யவேணும் எண்டு நினக்கிறீர்கள், தமிழரின் பிரச்சினைக்கு நீங்கள் கூறும் தீர்வு தான் என்ன?உங்கள் மக்கள் போரட்டத்தை ஆரம்பியுங்களே?உங்கள் பின்னால் எத்தினை பேர் அணிதிரளுகிறார்கள் என்று பார்ப்போம்.புலிகள் ஆயிதத்தால் அடக்குகிறார்கள் கொல்லுவார் கள் என்று சொன்னால்,எப்படி இந்திய இராணுவ ஆதரவுடன் அமைக்கப் பட்ட உங்கள் தேசிய இராணுவம் ஓடியது?தமிழ் மக்கள் உங்களை அல்லவா ஆதரித்து ஒராட்டி இருக்க வேண்டும்? என்ன நடந்தது?
மக்களுக்குத் தெளிவில்லயா ?அப்போ புலிகள் ஆயுததால் அடக்கி ஒடுக்குகிறார்கள் என்றால் ஏன் மக்கள் இன்னும் அவர்களுக்கு எதிராகக் கிளம்பவில்லை?சிரிலங்காவின் இராணுவத்தின் ஆயுத தயவில் இயங்கும் இயக்கங்களை ஏன் மக்கள் ஆதரிக்கவில்லை?
புலிகளின் பலம் எங்கிருந்து வந்தது?ஆயுதம் மட்டும் தான் பலம் என்றால் சிரிலங்கா இராணுவம்,இத்திய இராணுவம், ஒட்டுப் படைகளை அல்லவா மக்கள் ஆதரிக்க வேணும்?சிரிலங்காவில் நடக்கும் தேர்தலிகளில் எல்லாம் ஏன் மக்கள் புலிகளை தமது பிரதினிதிகள் என்று மீண்டும் மீண்டும் ஆதரவாக வாக்களிக்கின்றனர்? கொழும்பில் கூட தமிழ் மக்களிடம் புலிகளைச் சொல்லித் தானே வாக்குக் கேட்கின்றனர்?
உங்களின் புலிக் காச்சலுக்கு ஒரு உளவியல் மருத்துவரை அணுகி சுகம் காணுவது மிகச் சிறந்தது.
ஓம் ஓம் அனமோதயங்கள் எங்களுக்கு ஈபிடிபியும் சிறி லங்காவும்
படி அளக்குது என்றால். புலிகளுக்கு யார் படியளப்பதாம் நோர்வையும்
அமெரிக்காவுமா…?கூடவே சிறிலங்காவும் அல்லே (உங்கட மொழியிலேயே)புலிஎதிர்பாளர்களின்ர கேள்விகளுக்கு முதலில் பதில்
சொல்லுங்கோவன். ..
ரவி
மாண்புமிகு எழுத்தாள பெருந்தகை |திருவாளர்| சோபா சக்தி அவர்களுக்கு
உங்களின் அல்லைப்பிட்டியின் கதை ஒன்றை நீங்கள் முன்பு கல்வெட்டு அடித்து வெளியிட்ட ஒருவரின் இணையத்தளமொன்றில் படித்தேன். உங்களின் வழமையான குள்ளநரி மற்றும் புலிக்குண அரசியலோடு நகர்த்தி செல்லும் அக்கட்டுரையானது உங்களிடம் நிரம்பிக் கிடக்கும் அயோக்கியதனமான புனைவுகளைக் கொண்டு அழகாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. கொஞ்ச காலத்திற்கு முன்னர் உங்களின் நயவஞ்சக வார்த்தை ஜாலங்கள் இலக்கியம் என்ற பெயரில் பணம் கொடுத்து தமிழக எழுத்து வியாபாரிகளால் பார்ப்பன சஞ்சிகைகளில் புகழப்பட்டு நீங்;கள் கதாநாயக விம்பம் பெற முயன்றும் அதில் ப+ரண வெற்றி பெற முடியாவிட்டாலும் ஒரளவு வெற்றி பெற்று வீட்டீர்கள் என்று சொல்ல வேண்டும.; சந்தோசம் எனினும் உங்களின் ப+ரண வெற்றிகிடைக்காமைக்கு உங்களின் பழைய பின்புல அரசியல் நடவடிக்கைகள் தெரிந்ததே காரணம் எனக் கேள்விப்பட்டேன். சோபா சக்தி என்ற புனை பெயரில் எழுதுபவர். 1984 ஆம் ஆண்டிலிருந்து 1992ஆம் ஆண்டு வரை அல்லைப்பிட்டி பிரதேச மக்களை கொடுமைப்படுத்தி அடாவடித்தனங்களைக் காட்டி புலிகளின் அனைத்து வன்முறைகளின் கருவியாக இருந்து செயற்பட்ட அல்லைப்பிட்டி |வக்கல்;| என்பது நீங்களே என்றறிந்த போது புகலிட இலக்கிய சூழலில் உங்களின் கதாநாயக விம்பம் ஆட்டம் காணத் தொடங்;கியிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். புலிகளின் தீவுப் பகுதி பொறுப்பாளார் ஊத்தை ஞானத்தோடு நீங்கள் நடாத்திய தர்பார் அல்லைப்பிட்டியின் ஒடுக்கப்பட்ட தலித் மக்களிடம் அந்த வயல் வெளியில் வாழ்ந்த முஸ்லீம் குடும்பம் இரண்டிடம் கேட்டால் கதை கதையாய் சொல்வார்கள்.
அல்லைப்பிட்டி கிராமம் மண் மேடுகளைக் கொண்ட வரண்ட ப+மியாகும். அக்கிராமத்தில் மண் ஏற்றும் கூலிகளாக வறிய ஒடுக்கப்பட்ட அந்த தலித் மக்களின் வயிற்றில் அடித்து நீங்கள் நடாத்திய மண்; கொள்ளை வியாபாரங்களை அறிந்தவர்கள் அநேகம். உங்களால் கொடுமைப்படுத்தப்பட்டு சவுக்கடி வாங்கிய தலித் சகோதாரர் ராசப்புவின் மகன் இன்று இங்கு யேர்மனில் தான் வாழ்கின்றார். நீங்கள் அடிக்கடி வந்து போகும் உங்கள் மூத்த சகோதரர் வாழும் நகரத்திற்கு பக்கத்தில் தான் அவர் இப்போது வசிக்கின்றார். யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் நீங்கள் உறுப்பினராய் இருந்த புலிகள் அமைப்பினால் விரட்டப்பட்ட போது நீங்களும் ஊத்தை ஞானமும் சேர்ந்து அல்லைப்பிட்டியில்; வயல் வெளி ஒரத்தில் குடியிருந்த அந்த இரண்டு முஸ்லீம் குடும்பங்களை இரவோடு இரவாக விரட்ட முற்பட்ட போது அந்த குடும்பங்களுக்கு பக்கத் துணையாக நின்றவர்கள் தலித் மக்கள் தான் எனினும் அவர்களை அடித்து உதைத்து இரவோடு இரவாக வெளியேற்றிய நீங்கள் போக மறுத்த ஒரு முஸ்லீம் சகோதரரை ஊத்தை ஞானம் துப்பாக்கியால் விரட்ட நீங்கள் உங்கள் காலால் உதைத்து வெளியேற்றிய போது அதைப் பார்த்திருந்த சாட்சியங்களில் நானும் ஒருவன். இந்த முஸ்லீம் மக்களுக்கு பக்க பலமாக நின்றார் என்பதற்காக தலித் மக்களின் குடியிருப்பில் இருந்த ஐந்தாம்; வகுப்பு வரை நடந்து கொண்டிருந்த கத்தோலிக்க பாடசாலையை உங்கள் கும்பல் இரவொடு இரவாக அடித்து நொறுக்கியதை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை. இன்று நீங்;கள் முஸ்லீம் மக்களுக்காவும் தலித் மக்களுக்காவும் அல்லைப்பிட்டி மக்களுக்காகவும் எழுதும் உங்கள் கைகளினால் எத்தனை கொடுமைகளை இந்த மக்கள் மீது புரிந்திருப்பீர்கள் என்பதை எப்போதாவது உணர்ந்து நீங்கள் வேதனை கொண்டதுண்டா? உங்களோடு இக் கொடுமைகளில் பங்கு கொண்ட புலிகளில் இருந்த சாந்திலிங்கம் (யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவன்) இன்று பக்கத்து நாடான பிரான்சில் மனநிலை பாதிக்கப்பட்டவராய் மதுவுக்கு அடிமையாய் வாழ்வதை நீங்கள் தினம் தினம் கண்டிருப்பீர்கள். மனச்சாட்சி கொண்டவர்களின் மனஉறுத்தலின் வேகம் இவ்வாறுதான் அமையும். உங்;களுக்கு இவ்வாறு நடப்பதற்கு சந்தாப்பமே இல்லை. ஏனெனில் உங்கள் கொடூரங்களின் கொலை வெறிகளின் உச்சங்களை கண்டவர்கள் நாங்கள்.
இதற்கு ஒர் உதாரணத்தை நான் சொல்லலாம் என நினைக்கிறேன் அநுராதபுர எல்லைப்புற சிங்கள கிராமம் ஒன்றில் புலிகளால் நடாத்தப்பட்ட அப்பாவி சிங்கள மக்கள்; மீதான படுகொலைக்கு அக் கொலைகாரர்களை உருவாக்கி பயிற்சி கொடுத்த இடத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அல்லைப்பிட்டியின் முக்குவ சாதியினர் வாழும் பக்கத்திலுள்ள நீர் வற்றிய கிணறுகளில் பிடித்து கொண்ட வரப்பட்ட நாய்களை கிணற்றுக்குள் இறக்கி உங்களின் கொலைகார போராளிகளை கூர்மையான வாள்களோடு கிணற்றுக்குள் இறக்கி நாய்கள் கதறக் கதறக் வெட்டிக் கொல்லும் பயிற்சியை கொடுத்த உத்தமசீலர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் எப்படி மறப்பேன.; அநுராதபுர படுகொலைக்கு புலிக் கும்பல் ஒன்றிற்கு தலைமைத் தாங்கிச் சென்ற அந்தகால சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளில் ஐரோப்பிய நாடு ஒன்றில் உயிரோடு இருப்பவர்களில் நானும் ஒருவன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் இப்பொழுது நான் யார் என்பதை நீங்;கள் உணர்ந்திருப்பீர்கள் என நான் நினக்கிறேன்.
கடந்த காலங்களில் தவறு செய்தவர்கள், கொடுமை செய்தவர்கள், வன்முறையாளர்கள், கொலைகாரர்கள் திருந்தக் கூடாது என்பதல்ல. கொலைக்கார கிட்டுவே கடைசி காலத்தில் ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகம் தன்னை பலவாறு சிந்திக் தூண்டியதாக இறுதிக் காலத்தில் வாக்குமூலம் கொடுத்தாகக் கூறப்படுகிறது. அது உண்மையாகவும் இருக்கலாம் ஆனால் நீங்கள் இன்னும் உங்களின் கடந்தகால தவறுகளை, அயோக்கியதனங்களை மறைத்து கள்ள மௌனம் காட்டி புலிகளின் வன்முறையை எதிர்ப்பது போல பாசாங்கு செய்து புலிகளுக்கு எழுத்துச் சேவகம் செய்யும் புலனாய்வு வேலைகளையே செய்கின்றீர்கள். புலிகளின் வன்முறை அரசியலை எதிர்க்கும், மனிதஉரிமை மீறல்களை, விமர்சிக்கும் தனிநபர்களையும், மாற்றுசக்திகளையும் நீங்கள் நயவஞ்சகத்தனமாக புலித்தன அரசியலோடு கொச்சைப் படுத்துகுகின்றீர்கள். அவர்களை புலிகளுக்கு காட்டிக் கொடுக்கும் உங்கள் விசுவாச சேவையை மிகச் சிறப்புற நீங்கள் புரிகின்றீர்கள். ஐரோப்பாவில் நடக்கும் இலக்கியசந்திப்பை இல்லாமல் ஒழிப்பதற்கு நீங்களும் கி.பி அரவிந்தன் கும்பலும் புலிகளும் சேர்ந்து செய்த சதிகளையும், குழிபறிப்புக்களையும் புகலிட இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள். இன்று வன்முறைக்கு எதிரான மாற்று சக்திகளாக செயற்படும் ரிபிசி, தேனீ, நெருப்பு போன்ற ஊடகங்களை அம்பலப்;படுத்தி இல்லாமல் ஆக்கப் போவதாக எடுத்திருக்கும் உங்கள் சபதம் சந்தோசமாக நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள். இதே சபத்தை உங்களோடு புலிகளில் இருந்;து அன்று செயற்பட்ட லண்டனில் தற்போது வாசிக்கும் வாசுதேவன் (கண்ணன்) அவர்களும் நிதர்சனத்துடன் சேர்ந்து சபதம் கொண்டிருப்பதாக அறிகின்றேன.; உங்களின் இந்த அயோக்கிய கூட்டுப்பணி தொடர என் வாழ்த்துக்கள்.
-மரியசீலன்
Anonymous said…
தம்பி ஈழபாரதி
ஷோபாசக்தியின் இந்த பதிவை மிக நல்ல பதிவு என்ற பாரட்டி இருக்கிறீர்
ஷோபா புலிகளையும் இந்த பதிவில் விமர்சித்து இருக்கிறார். இப்
பதிவின் முன் பகுதி அல்லைபிட்டி மக்களின் அவலநிலையும் பின்பகுதி
புலிகளாலும் அரச இராணுவத்தாலும் நிகழ்ந்த கொடுமைகள்.
இதை நீர் ஆதரித்தால் நான் குறிப்பிடுவதும் சரியே. அல்லை பிட்டியில்
உள்ள குடும்பங்கள் மொத்தம். 220 என ஷோபாசக்தியே குறிப்பிட்டுள்ளார்
ஆனால் வன்னிக்கு இடம் பெயர்ந்தவர்கள் 15 குடும்பங்கள்தான்…!மிகுதி
எங்கே…..?
தம்பி ரவி
எனது முதலாவது பின்னூட்டத்தை பாரும், சோபாசக்தியின் கட்டுரையை எங்கு நான் நல்லபதிவு என பாராட்டி இருக்கிறேன் பாராட்டுபவன் முதலாவது பின்னூட்டத்தில் பாராட்டாது இரண்டாவது, மூண்றாவது பின்னூட்டத்திலா பாராட்டுவார்கள், அவை அனானிக்கு இடப்பட்ட பின்னூட்டங்கள், இதைக்கூட பிரித்து உணர முடியாதவரா நீர்?
மக்கள் போராட்டம் மக்கள் போராட்டம் என்கிறீர்களே அதை ஆரம்மிப்பதுதானே எத்தனை பேர் உங்கள் பின்னால் வருவார்கள், முதலில் உமது மகன் உம்பின்னால் வருவான என்று கேழும்.
இவ்வளவு இழப்பிகளுக்கு பின்னும் ஒரு தேசிய ராணுவமாக எழுந்து நிற்கும் அமைப்பின் பின் அணிதிரள்வதை விட்டு விட்டு, கணணியின் முன் அமர்ந்து வாய் சவடால் விடும் உம்போன்றவர்களின் பின்னால் வர உன் மகனே விரும்பமாட்டான், சரியான சமுதாய பிரக்ஞை இருந்தால்.
ஈழபாரதி,
சரியாகச் சொன்னீர்கள். இந்தக்கூட்டம் ‘ஒட்சிசன்’ இல்லாமல் உயிர் வாழ்ந்தாலும் ‘மக்கள் போராட்டம்’ ‘மாற்றுக்கருத்து”வர்க்கம்’ போன்ற சொல்லுகள் இல்லாமல் வாழமாட்டாங்கள். சும்மா இந்த 4, 5 சொல்லுகளை வச்சு ஒவ்வொருநாளும் பினாத்துவாங்கள்.
இந்த ஷோபா ஷக்தியின்ற வண்டவாளத்த தேனி இணையத்தளத்தில தண்டவாளத்தில ஏற்றியிருக்கினம். இவர் என்னடான்னா இதில வந்து ரீல் விட்டுக்கொண்டு இருக்கிறார்.
வணக்கம் தம்பியவை. றண:டும் தெறப்போறதில்லை. ஒவ்வருதற்ற எழுத்துக்குப்பின்னாலையம் இருக்கிற உளைச்சல்கள் தெரியுது. கருத்துச்சொல்லமுதல் ஏன் நான் இதைச்சொல்லறன் எண்டு யோசிச்சுப்போட்டுச் சொன்னால் ஓரளவுக்கு ஓரளவுக்காவது சரியா வரும்.
தேவா அண்ணை (டக்ளஸ் தோழர்) பாதிக்கப்பட்ட மக்களைப் போய் அல்லைப்பிட்டியில சந்தித்திருக்கிறார். படங்களை ஈ.பீ.டீ.பி இணையத்தளத்தில பார்க்கலாம். நானும் இங்கு படங்களை இணைத்திருக்கிறேன். தேவா அண்ணையில என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் அவரின்ரை துணிவை யாரும் மெச்சாமல் இருக்கமுடியாது.
http://www.epdpnews.com/Tholar/SG%20Meets%20Allaipity%20peoples%2007.06.2006.html
-வல்றம் சுரேஷ்.